BACK with a BANG – அண்ணாமலை …..!!!

……………………………………….

…………………………………………

.

……………………………………………………………………………………………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல். Bookmark the permalink.

7 Responses to BACK with a BANG – அண்ணாமலை …..!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  இந்தக் காணொளி நான் இன்னும் பார்க்கவில்லை. அண்ணாமலை இங்கு (பெங்களூர்/கர்நாடகா) தேர்தல் வேலை பார்த்தது, பலரை பாஜகவை நோக்கித் திருப்பியிருக்கும். என் assessment correct என்றால், கர்நாடகாவில் அவர் நின்றால் வெகு நிச்சயமாக எம்.எல்.ஏவோ இல்லை எம்.பியாகவோ ஆவர் (கட்சி மற்றும் அவருக்கான வாக்குகள் நிறைய இருக்கும்). இந்தத் தடவை அவர் மற்றும் மோடி அவர்களின் நெடிய சாலைப் பயணங்கள் மக்களை மிகவும் ஈர்த்தது. அதனாலான impact எவ்வளவு என்று அறுதியிட கஷ்டமாக இருக்கிறது. (மோடிக்கு இருக்கும் ஆகர்ஷண சக்தி பிரமிப்பை எனக்குத் தந்தது. இதுபோலத்தான் தமிழகத்தில் அண்ணாமலையின் கூட்டங்களிலும் ஒரு எழுச்சியைக் காண முடிகிறது) 60க்கு மேல் வரும் ஒவ்வொரு சீட்டும் அவர்களால்தான் வந்திருக்கும் என்று தோன்றுகிறது. இந்த இரண்டு factors இல்லையென்றால் இன்னும் நிலைமை படுமோசமாக ஆகியிருக்கும். நாளை பார்க்கலாம், நான் நினைத்தது சரியா என்று.

 2. கணபதி சொல்கிறார்:

  https://www.hindutamil.in/news/india/989583-how-ex-ias-officer-sasikanth-senthil-s-war-room-took-congress-to-victory-in-karnataka.html

  I have not been following up the Karnataka elections, and hence this is the first time I am hearing about this person…..

  • புதியவன் சொல்கிறார்:

   இந்து பத்திரிகைக்கு கர்நாடகாவில் நடப்பது எப்படித் தெரியும்? சும்மா அடிச்சு விட்டிருக்காங்க.

   இந்தத் தடவை யாருமே கர்நாடகாவில் எட்டிப்பார்க்காமல் இருந்திருந்தாலும், காங்கிரஸ் வெற்றிபெற்றிருக்கும். லோகல் பாஜக அரசு நன்றாகச் செயல்படவில்லை. காங்கிரஸ் அறிவித்த 2000 ரூ, 200 யூனிட், 20 கிலோ அரிசி, மக்களைக் கவர்ந்தது (ஏழைகளை). நகரத்தை மாத்திரமே ஓரளவு பாஜக கவனித்திருந்தாலும், பாஜக அரசு செயல்படாமல் இருந்தது மாத்திரமல்ல, தேவையில்லாமல் ஹிஜாப் மற்றும் முஸ்லீம் இடஒதுக்கீட்டுக்குத் தடை என்று முற்றிலும் முஸ்லீம் வாக்குகளை இழந்தது. காங்கிரஸ் வெற்றிபெறக்கூடாது என்ற நோக்கத்தில்தான், பரமேஸ்வர் போன்ற தலைவர்கள் குழுவில் இருந்தும் பஜ்ரங்க்தள் தடை என்ற வாக்குறுதி தவறுதலாகச் சேர்க்கப்பட்டது என்று பிரதேச தலைவர் சிவகுமார் மற்றும் பலர் சொல்லினர். இதன் காரணமாகவே பிரியங்கா வதேரா, ஹனுமான் கோவில்களுக்குச் செல்லுமாறு பிரயாணத் திட்டங்களும், சிவகுமார், கர்நாடகாவின் அனுமார் கோவில்கள் புனரமைக்கப்படும், பலவித சலுகைகள் வழங்கப்படும் என்று damage control செய்ய முனைந்தன. இதெல்லாம் இந்து தமிழ் பத்திரிகைக்குக் தெரியாததால் அவர்கள் உளறியிருக்கின்றனர். வாங்கின காசுக்கு ஏற்றபடி எழுதவேண்டாமா?

   நல்ல அதிகாரிகளை அரசியல் கட்சிகள் மாத்திரமல்ல, மக்களும் கர்நாடகாவில் மதிக்கின்றனர். தமிழகத்தில் அவ்வாறான போக்கு கிடையாது (எந்த ஜாதி, எந்த மதம், எந்தக் கட்சிக்குச் சார்பானவர் என்றெல்லாம் யோசிப்பர் தமிழர்கள்). அண்ணாமலை ராஜினாமா செய்தபோது, குமாரசாமி அவர்கள் எவ்வளவோ அண்ணாமலையைக் கேட்டுக்கொண்டார், ராஜினாமா செய்யாதீர்கள், நல்ல அலுவலரை அரசு இழக்க விரும்பவில்லை என்று (தமிழகத்தில் இதெல்லாம் கனவிலும் நடக்காது). அண்ணாமலை அவர்கள் எந்தத் தொகுதியில் நின்றாலும் (பெரும்பாலான) நிச்சயம் எம்.எல்.ஏ ஆகிவிடுவார்.. எம்.பி. ஆவதற்கு பாஜக என்ற படகின் உதவி அவசியம்.

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  ..
  புதியவன்,

  // இந்து பத்திரிகைக்கு கர்நாடகாவில்
  நடப்பது எப்படித் தெரியும்?
  சும்மா அடிச்சு விட்டிருக்காங்க.//

  – நீங்கள் சொல்வது அபத்தம்; வெறும்
  காழ்ப்புணர்ச்சி என்று உங்களுக்கே
  தெரியவில்லை….?

  பங்களூரில் வசிக்கும் உங்களுக்கு
  தமிழ்நாட்டில் நடப்பது எப்படி தெரியும்
  என்று பதிலுக்கு கேட்டால் – எப்படி இருக்கும் …?

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்
  ..

  • புதியவன் சொல்கிறார்:

   இந்து பத்திரிகை, யார் சார்பாக, எந்தக் கட்சிக்காகப் பாடுபடறாங்க என்பது உங்களுக்கே தெரியும். கட்டுரை என்ன சொல்லுது, அது சரியா என்று கூடத் தெரியாமல் ஒரு கருத்தை வெளியிட்டால், அவங்க ரூமுக்குள்ள உட்கார்ந்துகொண்டு பத்திகைச் செய்திகளைத் தயாரிக்கறாங்க என்றுதான் சொல்லமுடியும்.

   ஒரு common sense கூட வேண்டாமா? பிடிஐ, மற்ற பத்திரிகைகள் தரும் செய்திகள், பல்வேறுபட்ட கருத்துக்களைப் படிக்கக்கூடத் தெரியாத ஸ்டாஃப்கள் இந்துவில். அப்புறம் ஏன் நான் அவங்க செய்தியைத் தயாரிக்கறாங்க என்று சொல்லமாட்டேன்? இப்படித்தானே ஒரு கட்சிக்காக, நீட் தேர்வைப்பற்றி பொய்க் கட்டுரை எழுதி, மதுரை யாதவா பள்ளியில் இலவச விநியோகம் செய்து அடி வாங்கினார்கள் (சில நாட்கள் முன்பு)

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  ..

  // இந்து பத்திரிகைக்கு கர்நாடகாவில்
  நடப்பது எப்படித் தெரியும்? //

  இதற்கு விளக்கம் உங்கள் பதிலில் இருப்பதாகத்
  தெரியவில்லையே… !!!

  ..

  • புதியவன் சொல்கிறார்:

   I wrote it out of frustration of Hindu deviating from their yester years ethics and doing what pleases DMK allies. கொஞ்சம்கூட அறம் இல்லாமல் நடந்துகொள்ளும் இந்துப் பத்திரிகை மேல் மனதில் இருந்த வெறுப்புதான் வார்த்தையாக வெளிவந்தது.

   எதை எழுதினால், உள்ளூர் அரசிடமிருந்து விளம்பரமாக கோடி கோடியாக வருவாய் ஈட்டலாம் என்பதே அவர்களது priority ஆகிவிட்டது. May 7ம் தேதி மாத்திரம் திமுக அரசின் ஈராண்டு சாதனை விளம்பரம் வெளியிட்ட வகையில் இந்து ஆங்கிலப் பத்திரிகைக்கு 99.5 லட்சம் ரூபாயும், இந்து தமிழ் பத்திரிகைக்கு சுமார் 27 லட்சமும் (ஒரு நாளுக்கு) வருவாய் என்று ஒரு தகவலைப் படித்தேன். அவங்க எப்படி உண்மையை எழுதத் துணிவாங்க?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s