நிலக்கரி எடுத்து வரும்போது சாப்பிட்ட கணக்கு -1028 கோடி ரூபாய் …!!!

……………………………….

…………………………………

தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் நிலக்கரி
இறக்குமதி ஒப்பந்த நிறுவனத்தில் நடத்திய ரெய்டில் 360 கோடி
பணத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

இந்த ஊழல் குறித்து கடந்த 2018ம் ஆண்டு அறப்போர் இயக்கம் வெளியிட்ட அறிக்கையில்,

‘‘மகாநதி நிலக்கரி சுரங்கம், ஈஸ்டேர்ன் நிலக்கரி சுரங்கம் போன்ற
நிலக்கரி சுரங்களிலிருந்து நமது அனல் மின் நிலையங்களுக்கு
தேவைப்படும் நிலக்கரி விசாகபட்டினம் துறைமுகம் வழியாக கொண்டுவரப்படுகிறது. இந்த சூழலில் ஏப்ரல் 2011 முதல் மார்ச் 2016
வரை ஒவ்வொரு ஆண்டும் 25 லட்சம் மெட்ரிக் டன் முதல் 35 மெட்ரிக்
டன் வரை நிலக்கரி விசாகபட்டினம் துறைமுகம் வழியாக கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட நிலக்கரிக்கு நிலக்கரி இறக்குமதி
கூலி மற்றும் அதன் மீதான வரியாக ஒப்பந்ததாரர் விசாகபட்டினம் துறைமுகத்தில் கட்டிய பணம் ரூ 239.56 கோடி மட்டுமே.

ஆனால் ஒப்பந்ததாரர் சவுத் இந்தியா கார்பிரேஷன் லிமிடெட் நிலக்கரி இறக்குமதி கூலியாக ரூ 1267.6 கோடி விசாகபட்டினம் துறைமுகத்தில் கட்டியதாக கூறி நமது மின்சார வாரியத்திடமிருந்து ரூ 1267.6 கோடி பெற்றுள்ளார்….

மோசடி செய்து ரூ 1028 கோடி (ரூ 1267.6 கோடி ரூ 239.56 கோடி)
பணத்தை சுருட்டியுள்ளனர். ஏப்ரல் 2011 முதல் மார்ச் 2016 வரை மட்டுமே
ரூ 1028 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஊழல் குறித்து
மின்சார வாரியத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்தும் இன்று வரை
அந்த நிறுவனத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஒப்பந்ததாரர்களிடமிருந்து அந்த பணத்தை மீட்க மின்சார வாரியம்
எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த நிறுவனத்தை மின்சார
வாரியம் தடை செய்யவும் இல்லை. இதற்கு காரணம் மின்சார
வாரியத்தில் உள்ள தலைமை இடத்தில் இருந்தவர்கள் தொடர்ந்து ஒப்பந்ததாரருடன் சேர்ந்து செய்து வந்த கூட்டு சதி’’ என்று
குற்றம்சாட்டி இருந்தது.

இந்தசூழலில் அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டை அடுத்து,
இந்த வருடம் மார்ச் மாதம் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை
FIR பதிவு செய்தது. அந்த FIRன் அடிப்படையில் கடந்த 24ம் தேதி அமலாக்கத்துறை, ஊழலில் ஈடுபட்ட தமிழக மின்சார வாரிய
ஊழியர்கள் மற்றும் South India Corporation நிறுவனத்தில்
சோதனை நடத்தியது. அதையடுத்து அந்த சவுத் இந்தியா கார்ப்பரேசன் நிறுவனத்தின் நிரந்தர வைப்புத் தொகையான 360 கோடி ரூபாயை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. மேலும் பல ஆவணங்கள் சிக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இதைத் தனது ட்விட்டரில் பகிர்ந்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வெங்கடேசன், ‘‘அறப்போர்
இயக்கத்தின் புகாரை இழுத்து மூடி இந்த நிறுவனத்தை காப்பாற்றி,
அவர்களின் டெபாசிட் தொகையான 300 கோடியை திருப்பி
கொடுக்க 2022ம் ஆண்டு மின்சார வாரியத்தில் குழு அமைத்து
முடிவெடுக்க போட்ட திட்டத்தை தகுந்த சமயத்தில் அறப்போர்
புகார் கொடுத்து தடுத்து FIR போட வைத்தது’’
என்று தெரிவித்துள்ளார்.

https://tamil.samayam.com/latest-news/state-news/enforcement-directorate-has-seized-the-assets-of-a-company-involved-in-corruption-in-the-electricity-board/articleshow/99818965.cms
……………………………………………..
நிலக்கரி போக்குவரத்து ஊழல் Source யாரு? –
அறப்போர் இயக்கத்தின் காணொலி கீழே –
………….

………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s