……………………..

……………………….
கூழுக்கும் ஆசை – மீசைக்கும் ஆசை ….!!!
பாஜகவிலும் தொடர்ந்து இருக்க வேண்டும் … ஆனாலும்,
தன் யோசனையை கேட்கக்கூடியவர் அதிகாரத்தில் இருக்க வேண்டும்…
……………..
பா.ஜ.க-வின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி, கடந்த ஆண்டு தன்னுடைய ராஜ்ய சபா எம்.பி பதவிக்காலம் முடிந்ததிலிருந்து, பா.ஜ.க-வுக்கு எதிராகத் தொடர் விமர்சனங்களை முன்வைத்துவருகிறார்.
இந்த நிலையில், 2024-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற இப்போதே எதிர்க்கட்சிகளை சி.பி.ஐ., அமலாக்கத்துறை மூலம் பா.ஜ.க அச்சுறுத்திவருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில்,
`மம்தா பானர்ஜி இந்தியாவின் பிரதமராக வேண்டும்’ என
சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருக்கிறார்.
கொல்கத்தாவில் இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின்
(FICCI) சார்பில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சுப்பிரமணியன் சுவாமி, “அதிகாரத்தில் உள்ளவர்களால் அச்சுறுத்த முடியாத ஓர் உண்மையான எதிர்க்கட்சி
நாட்டுக்குத் தேவை என்று நினைக்கிறேன்.
எனக்கு இன்று நிறைய பேரைத் தெரியும். ஆனால், அவர்கள்
தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக ஒரு கட்டத்துக்கு மேல் செல்லமாட்டார்கள். அமலாக்கத்துறை தங்கள் பக்கம் திரும்பிவிடும்
என்று அச்சப்படுகிறார்கள். இந்திய ஜனநாயகத்துக்கு இது நல்லதல்ல.
எனவே, ஆளுங்கட்சிக்கு நண்பராக அல்லாத எதிர்க்கட்சி தேவை.
அப்படிப்பட்ட பலரை நீங்கள் காணலாம். அதில் சிலர் தங்களின்
வேலையைச் சத்தமாகவும், அமைதியாகவும் செய்கிறார்கள்.
எனவே மம்தா பானர்ஜி இந்தியாவின் பிரதமராக வேண்டும்.
ஏனெனில் அவரை யாரும் பிளாக்மெயில் செய்ய முடியாது.
அவர் ஒரு துணிச்சல் மிகுந்த பெண்மணி. கம்யூனிஸ்ட்டுகளை அவர்
எப்படி எதிர்த்துப் போராடினார் என்பதை நீங்களே பாருங்கள்.
10 நாட்களுக்கு முன்புகூட அவரைச் சந்தித்தேன். ஆனால், அது
யாருக்கும் தெரியாது – என்றார்.
மேலும், மம்தாவை சக்திவாய்ந்த பெண்மணி என்று குறிப்பிட்டதைப்
பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி,
“ஒரு காலத்தில் ஜெயலலிதா அவ்வாறு இருந்தார்.
முன்பு மாயாவதியையும் அவ்வாறு நினைத்தேன்.
தற்போதைய சூழலில் மம்தா அப்படி இருக்கிறார்.
தலைநிமிர்ந்து நிற்கும் துணிவுகொண்ட ஒரே பெண் தலைவர்
அவர்தான்” என்றார்.
(source – India needs oppn that is not afraid of ruling party; Mamata should be PM: Swamy
Story by PTI )
.
……………………………………………….
சுப்ரமண்யம் சுவாமி, கட்டுச்சாதக் கூடையில் இருக்கும் பெருச்சாளி. அவரால் நன்மையை விட, அவர் சார்ந்த கட்சிக்கு தீமையே அதிகம்.
இருந்தாலும், அவரின் இந்தக் கருத்து (ஆளுங்கட்சிக்கு நண்பராக அல்லாத எதிர்க்கட்சி தேவை.) வரவேற்கத்தகுந்தது. எப்போதுமே ஆளும் கட்சித் தலைமை, அல்லக்கைக் கூட்டங்களால், உண்மை நிலையை ஒருபோதும் உணர்வதில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கர்நாடகா பாஜகவில் தலைமை தலையிட்டுச் சரி செய்திருந்தால், இப்போதிருக்கும் நிலைமை வந்திருக்காது. அகில இந்திய அளவிலும், பாஜக செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்ட, நாட்டின் மீது மரியாதையும் பக்தியும் இருக்கும் தேசியத் தலைவர் தேவை. அது யார் என்பதுதான் மிலியன் டாலர் கேள்வி.
..
புதியவன்,
// ஆளும் கட்சித் தலைமை, அல்லக்கைக்
கூட்டங்களால், உண்மை நிலையை
ஒருபோதும் உணர்வதில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே
கர்நாடகா பாஜகவில் – தலைமை
தலையிட்டுச் சரி செய்திருந்தால்,
இப்போதிருக்கும் நிலைமை வந்திருக்காது. //
அய்யோ பாவம்…. தலைமைக்கு
இத்தனை நாட்களாக, கர்நாடகா அரசும்,
கட்சியும் எப்படி செயல்பட்டு வந்தன
என்பதே தெரியாமல் போய் விட்டதே….!!!
ஐ.டி.யும், அமலாக்கத்துறையும்,
புலனாய்வு பிரிவும்
கைவசம் இருந்தும் கூட 40 % விவகாரமும்
தெரியாமல் போய் விட்டதே….!!!
சாதாரண குடிமகனான உங்களுக்கு தெரிந்தது கூட
கட்சித் தலைமைக்கு தெரியாமல் போய் விட்டதே….!!!
இது தெரியாமல், பல அறிவீலிகள்
தலைமையை போய் குறை சொல்கிறார்கள்….
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Sometimes we don’t know what could be the reasons. நாம் வெளியிலிருந்து பார்க்கும் பார்வையாளர்கள் என்பதால் தெரியவில்லையோ என்று நினைக்கிறேன். அரசியல் என்பது corporate company கிடையாதில்லையா. அதனால் நினைத்தவர்களை கழுத்தைப் பிடித்துத் தள்ள முடியவில்லையா என்ன என்று எனக்குப் பிடிபடவில்லை. பெங்களூர்ல ரோடைச் சரிசெய்து புதிதாகப் போட்டது கடைசி ஆறு மாதங்களில். 100+ வேட்பாளர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். முன்னால் முதல்வர் ஷெட்டரும் காங்கிரஸில் சேர்ந்துள்ளார் (சீட் விவகாரங்களினால்). இதைப்போன்ற ஒரு நிலைமை முன்பு எடியூரப்பாவுக்கு வந்தது.
நம்ம ஊர்லயே, கே எஸ் அழகிரி, இதோ மாற்றப்படுவார் இதோ மாற்றப்படுவார் என்று இரண்டு ஆண்டுகளாகப் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ப.சி. அவர் பையனைத் தலைமைக்குப் பரிந்துரை செய்திருப்பதாகவும், ராகுல், ஜோதிமணியைத் தலைமைக்குப் போடலாமா என்று யோசிப்பதாகவும் படித்தே. இடையில் கார்த்திக்கைக் கண்டுகொள்ளாமல் அவமானப்படுத்தியதையும் பார்த்தேன்.
சிலபேருக்கு நிதித்துறையை எடுத்தாலும் வேறு துறை கொடுத்து தக்கவைத்துக்கொள்ளவேண்டிய நிலை போல, சிலரைக் கூடவே வைத்துக்கொண்டு, ஆனால் பதவிகளைத் தராமலிருக்கவேண்டிய நிலைமை. சுப்ரமணிய சுவாமியின் அனுபவத்திற்கு அவர் துணை ஜனாதிபதி அல்லது ஜனாதிபதி பதவிக்கு எப்போதோ வந்திருக்கலாம். தலைமையின் நம்பிக்கையைப் பெறத் தவறிவிடுவதால் பலருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமலேயே போய்விடுகிறது.
..
டாக்டர் சு.சுவாமியை இன்னமும்
பாஜக-விலிருந்து கழுத்தை பிடித்து
வெளியே தள்ளாமல் இருக்க –
அவரிடம் என்ன மாயம் இருக்கிறதோ ….?
அது பற்றி உங்களுக்கு எதாவது தெரியுமா…???
..