மீண்டும் எங்கே, எப்போது – காண்பது ….???

………………………..

……………………….

அற்புதமான தகவல் ஒன்றை படித்தேன்…
வாசக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிகவும் விரும்பி
இங்கே பதிப்பிக்கிறேன்…

இத்தகைய ” உண்மையான மனிதர்களை ” நாம் மீண்டும்
எப்போது பார்க்கப் போகிறோம்…???

நாளுக்கு நாள், ஆளுக்கு ஆள் போட்டி போட்டுக்கொண்டு,
தரை அளவிற்கு கீழேயும் தாழ்ந்து போய் விட்ட இந்தகாலத்து
“தறு” “தலை” களைப் பார்க்கும்போது –
சுத்தமாக நம்பிக்கையே இல்லை….

இருந்தாலும், இதைப் படிக்கும்போதுபோது, மனதில்
நம் காலத்தில் – இப்பேற்பட்ட மனிதர்களும், இருந்திருக்கிறார்களே
என்று சந்தோஷம் கொள்வோம்…

……………………………………..

FIRST PART

When Dr.Abdul Kalam
Was The President ,
He Visited Coonoor.

On Reaching ,
He Came To Know That
Field Marshall Sir Sam
Manekshaw Was
In The Military Hospital there.

Dr.Kalam Wanted
To visit Sam ,
Which Was Unscheduled.
Arrangements Were Made.

At The Bedside ,
Kalam Spent About
15 Minutes..
Talking To Sam &
Enquiring About
His Health.

Just Before Leaving,
Kalam Asked Sam
‘ Are You Comfortable ?
Is There Anything
I Could Do ?
Do You Have
Any Grievance ?
Or Any Requirement
That Would Make You
More Comfortable ?’

  SEC0ND PART

Sam Said ‘Yes ..
Your Excellency ,
I Have 0ne Grievance ‘

Shocked With Concern
& Anguish ,
Kalam Asked Him
What It Was.

Sam Replied
‘ Sir , My Grievance
Is That
I Am Not Able To
Get Up & Salute
My Most Respected
President of
My Beloved Country’…!!!

Kalam Held
Sam’s Hand
As Both Were In Tears.

   THIRD PART

But
The Remaining Part
Of The Tale
With Regarding
This Meeting Is That
Sam Did Tell APJ
That
He Was Not Paid
The Pension
Of the
Field Marshall’s Rank
Till Then ,
For Nearly Twenty
Years.

  FOURTH PART

An Aghast
President Went To Delhi
And Passed The
Pension With Arrears
Within A Week
And
Sent The Cheque
Of Nearly
Rs.1.25 Crores
Through The
Defence Secretary
By A Special Plane
To Wellington , Ooty ,
Where Sam Was Ailing.

That Is The
Greatness Of
APJ.

  FIFTH PART

But..
Then Sam Received
The Cheque
And Promptly Donated It
To The Army Relief Fund.

Whom Will You Salute Now..?

Indeed those real Heroes are missing today…

.
………………………………………………………………………………………….………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to மீண்டும் எங்கே, எப்போது – காண்பது ….???

 1. புதியவன் சொல்கிறார்:

  பல வருடங்களாக வாட்சப்பில் சுற்றிய செய்தி இது. ஒவ்வொரு தடவை படிக்கும்போதும், அல்லது அவ்வப்போது கலாம் அவர்களின் ஏதாவது ஒரு காணொளி பார்க்க நேரிடும் (பசங்கள்ட கேள்வி கேட்கச் சொல்லி அவர் பதில் சொல்வது). கலாம் அவர்களைப்போன்ற குடியரசுத் தலைவரையோ (அல்லது குடிமகனையோ), ஃபீல்ட் மார்ஷல் போன்றவர்களையோ காண்பது என்பது அபூர்வத்திலும் அபூர்வம்.

  இதை எழுதும்போது சம்பந்தமில்லாத ஒன்றையும் சொல்ல விரும்புகிறேன். இன்று எங்கள் வளாகத்தின் வாயிலாக பிரதம மந்திரி மோடி அவர்கள் திறந்த வேனில் சென்றார். இருபுறமும் கூடியிருந்த மக்கள் (கூட்டப்பட்ட மக்கள் இல்லை) மிகுந்த உற்சாகத்துடன் குரல் எழுப்பிக்கொண்டிருந்தனர். சுமார் 1 1/2 மணி நேரம் காத்திருந்தது சாலையின் இரு புறமும் கூடியிருந்த கூட்டம். ஒரு மனிதருக்கு எப்படி இவ்வளவு ஆகர்ஷ சக்தி ஏற்படுகிறது என்று எனக்கு வியப்பு. அவர் மீதான விமர்சனங்கள் எப்படி இருந்தாலும், ஒரு சாதாரண மனிதரின் மேல் இவ்வளவு மக்கள் நம்பிக்கையும் அன்பும் வைத்திருப்பது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது (பெங்களூரில் அண்ணாமலையின் கூட்டத்திற்கும், அவரைப் பார்க்கவும், கேட்கவும் நிறையபேர் குழுமினர்)

  (இருந்தாலும் இந்த முறை காங்கிரஸ்தான் வெல்லும். பாஜக 50-60 சீட் பெறுவதே கடினம் என்பது என் கணிப்பு. இதில் ஒரு நகைச்சுவை. காங்கிரஸ் தன் தேர்தல் அறிவிப்பில், PFIஐயைத் தடை செய்தமாதிரி பஜ்ரங்தள்ளையும் தடைசெய்வோம் என்று அறிவித்திருக்கின்றனர். இது இங்குள்ள முஸ்லீம் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக. இதனால் ஏற்பட்ட சலசலப்பால், பிரதேச காங்கிரஸ் தலைவர் சிவகுமார், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன், கர்நாடகாவில் நிறைய இடங்களில் அனுமார் கோவில்கள் கட்டப்படும். இருக்கும் ஹனுமார் கோவில்கள் அனைத்தும் மேம்படுத்தப்படும் என்று உறுதி சொல்லியிருக்கிறார்)

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  புதியவன்,

  // இருந்தாலும் இந்த முறை காங்கிரஸ்தான் வெல்லும்.
  பாஜக 50-60 சீட் பெறுவதே கடினம் என்பது என் கணிப்பு. //

  பிரதமரே நேரடியாக களத்தில் இறங்கி மிகத் தீவிரமாக
  செயல்படுவதை நீங்களே நேரில் பார்க்கிறீர்கள்.

  வசமாக பஜ்ரங் தள் பிரச்சினை வேறு சிக்கி விட்ட சூழ்நிலையில் –

  இனியும் நீங்கள் பாஜக தோற்கும் என்று எப்படி
  சொல்கிறீர்கள் ….???


  வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  ..

  • புதியவன் சொல்கிறார்:

   பாஜக சரியாக perform பண்ணவில்லை கர்நாடகத்தில். ஏற்கனவே 40 சதம் கமிஷன் என்ற பெயர் வேறு வந்துவிட்டது. Damage controlக்காகத்தான் மோடி அவர்கள் 20 முறை கர்நாடகா வந்துள்ளார். பாராளுமன்றத் தேர்தல் என்றால் நிச்சயம் மோடி/பாஜகதான் வெற்றிபெறும் கர்நாடகாவில். (அவருக்கு உணர்ச்சி பூர்வமான ஆதரவு இருக்கிறது, ஹிந்துக்களிடையே.. Hypothetically நான் முதல் மந்திரி என்று சொன்னால் பாஜக நிச்சயம் வெல்லும். அந்த அளவு அவர் ஒரு கரிஷ்மாடிக் லீடராக இருக்கிறார்).

   ஆனால் நடப்பது மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல். அதனால் பாஜக தோற்கும் என்றே நான் நம்புகிறேன். (50-60 என்பது என் அபிப்ராயம். குறையலாம் அல்லது மார்ஜினலாகக் கூடலாம்). முஸ்லீம்கள் இருக்கும் இடங்களில் பெரும்பாலும் காங்கிரஸும், ஒரு சில இடங்களில் குமாரசாமியும் வெல்வார்கள். அண்ணாமலைக்கு கர்நாடகாவில் ஆதரவு இருக்கிறது. அவர் அகில இந்திய materialஆக எதிர்காலத்தில் வருவார். (RG, மற்றும் சிவகுமார் இருவரும் தள்ளாடுவதை இரு வேறு பிரச்சார காணொளிகளில் பார்த்தேன். சிறுபிள்ளைத்தனமானது)

  • புதியவன் சொல்கிறார்:

   I hate Khangress strategy on Bajrang Dal. சிறுபான்மையினர் appeasement என்பதை எடுத்து காங்கிரஸ், பாஜகவை மேலும் மேலும் வளர வைக்கிறது. என்னதான் இங்கு பிரியங்கா, ஹனுமார் கோவில் வழியாக ஊர்வலம், சிவகுமார்-ஹனுமாருக்கு இன்னும் பல கோவில்கள் கட்டுவோம் என்று damage control செய்தாலும், காங்கிரஸின், முஸ்லீம் வாக்குகளுக்காக இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுதல் என்பது அதன் தலைவர்களுக்கான இந்து ஆதரவைக் குறைத்துக்கொண்டே செல்லும்.

   Popular Front of Indiaவை தடை செய்தது தவறு, அதனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்தத் தடையை நீக்கப் பாடுபடுவோம் என்று சொன்னால் அது ஒரு விதம். PFIஐ தடை செய்ததுபோல Bajrang Dalஐயும் தடை செய்வோம் என்று முடியாததை, முஸ்லீம் வாக்குகளுக்காகச் செய்வது, வட இந்தியாவில் காங்கிரஸை இன்னமுமே காணாமல்போக வைக்கும்.

 3. Tamil சொல்கிறார்:

  //Popular Front of Indiaவை தடை செய்தது தவறு, அதனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்தத் தடையை நீக்கப் பாடுபடுவோம் என்று சொன்னால் அது ஒரு விதம். PFIஐ தடை செய்ததுபோல Bajrang Dalஐயும் தடை செய்வோம் என்று முடியாததை, முஸ்லீம் வாக்குகளுக்காகச் செய்வது, வட இந்தியாவில் காங்கிரஸை இன்னமுமே காணாமல்போக வைக்கும்.
  //

  உண்மை.

 4. Tamil சொல்கிறார்:

  கடந்த காலத்தில் ஒருவரின் ஒருவரை விட சிறப்பானவராக இருந்தார். இன்றைய காலத்தில் ஒருவர் இன்னொருவரை விட கேவலமாக எப்படி இருப்பது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s