………………………………………………………………………..

…………………………………………………………………………
1940-ல் வெளிவந்த ‘சகுந்தலை’ படத்தில் வரும்
இந்த நகைச்சுவை காட்சி திரையுலகில் என்றுமே சாகாவரம் பெற்ற ஒரு காட்சி…….
இரண்டு செம்படவர்கள் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் ஒருவர் மற்றவரை அடிக்க ஆரம்பிக்கிறார்.
அடிபட்டவர் திருப்பித் தாக்காமல் –
“அடிப்பியா, அப்பன் மவனே, சிங்கம்டா..!”
- என்று தனது வீரத்தைப் பறை சாற்றுவார்.
–- முதலாமவர் மறுபடியும் அடிப்பார்.
அப்போதும் பதிலாக இதே வசனம்தான்.
ஆனால் அடிபட்டவரின் குரல்பாவத்தில் வேறுபாடு.
இப்படி அடிப்பவர் அடித்துக்கொண்டே இருக்க
அடிபடுபவர் மறுபடியும், மறுபடியும் இதே பதிலை
வேறுவேறு பாணியில் சொல்ல,
கடைசியில் அது அழுதுகொண்டே சொல்வதுபோல் முடியும்.
……………………
.
………………………………………………………………………………………………..
ஷிண்டேக்களை விட்டுவிட்டு பிறரை பாஜக corner செய்யலாம் அல்லது பிளாக் மெயில் செய்யும். இதுவரை யார் மீதும் எந்த நடவடிக்கை எடுக்காத பாஜக மத்திய அரசு மீது எனக்கு நம்பிக்கை இல்லை. Property ஐ அட்டாச் செய்து, கேஸ் போட்டால்தான் மக்களுக்கு நம்பிக்கை வரும். அல்லக்கைகளாக அடியாட்களாக டிரைவராக இருந்தவர்களெல்லாம் பல்லாயிரம் கோடி சொத்து சேர்த்திருக்கிறார்கள், அதையும் மீறி மக்கள் அவங்களுக்கு வாக்களிக்கிறாங்கன்னா, பிரச்சனை ஊழல் அரசியல்வாதிகள் இல்லை, மக்கள்தாம்.
பாஜக ஒருவேளை expose செய்து, மக்கள் எடைபோடட்டும் என்று நினைக்கிறதோ என்னவோ. அப்படி இருந்தால், அதனால் பிரயோசனமில்லை. வாக்களிக்கும் மக்களில் பெரும்பான்மையினர் corrupt. அதனால் ஊழலை சகிக்கும் தன்மை உண்டு. ஊழல் செய்யவில்லையென்றால், சாதாரணமாக ஒரு அரசியல்வாதி இருந்தால், மக்கள் அவர் மீது மரியாதையோ நம்பிக்கையோ வைக்கமாட்டார்கள்.
அண்ணாமலை, ஓரிரு வழக்குகள் மாத்திரம் போட, சிபிஐ யை அணுகிவிட்டு, மக்களிடம் பிரச்சாரம் மட்டுமே செய்யவேண்டும். கேஸ் போடுவதில் இறங்கினால், இந்த ஜென்மத்திற்கு நம் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்காது. 2ஜி வழக்கிலேயே, தமிழில் மொழிபெயர்த்துத் தரணும், அது வேண்டும், வாய்தா வேண்டும் என்று வழக்கை எப்படி நீர்த்துப்போகச் செய்கிறார்கள் பாருங்கள். 1.75 லட்சம் கோடிக்காரர்களுக்கு இந்த 1.3 லட்சம் கோடியைக் கண்டா பயம் வரும்?
தாங்களும் மீம்ஸ் create பண்ண கற்றுகொண்டிரீர்கள் போலும்.
…
பின் என்ன …?
வழக்கு போடுவேன்…ஆ…ஊ…என்றெல்லாம்
பூச்சாண்டி காட்டி விட்டு, இப்போது
முதுகெலும்பு இருந்தால் வழக்கு போடுங்கள்
பார்க்கலாம் என்று அண்ணாமலையை பார்த்தே
சொன்னால் என்ன அர்த்தம் …
மான நஷ்டம் யாருக்கு …?
மானம் போய் விட்டது என்று சொல்பவர்
தானே வழக்கு போட வேண்டும் …?
வாய்ச்சொல் வீரர் …..
பழைய காமெடி சமயத்தில் நினைவுக்கு வந்தது.
யூட்யூபும் ரெடியாக வைத்திருந்தது …!!!
…
கா.மை. சார்… இவர் கோர்ட்டுக்குப் போனால், இதுதான் என் சொத்து, இவையெல்லாம் இல்லை என்று சொல்லணும். இன்னும் என்ன என்ன புதுப் பிரச்சனைகள் வருமோ. அடுத்து அவரது பசங்களோட பிஸினெஸெல்லாம் வெளிச்சத்துக்கு வரும். சகதில தானே வலிய வந்து இறங்கின மாதிரி ஆகிடும். அதனால் இந்த வெத்து உதார்.