அப்பா என்கிற – கருப்பண்ணசாமி …!!!

…………………

………………..

என்னப்பா, மகள் பிறந்திருக்காளா???
ஆமான்னே, அதான் புது பேன் வாங்கிட்டு
போறேன், வீட்ல பழைய Fan சத்தம் கேட்கும்.
பிள்ளை தூங்கக் கஷ்டபடுவா…

என்னப்பா கோவிலுக்குப் போறேம்னு பணம்
கேட்டியே எதுக்கு??
மவளுக்குக் காது
குத்தி மொட்டை
போடுறேன்… கையில
காசு இல்ல…

என்ன செருப்புக்
கடைல நிக்கறே??
மகளைக் கான்வென்டுல சேர்த்தேன்.
புது ஷூ வாங்க
வந்தேன்…

என்னடே பத்திரிக்கை …???
மகள் ஆளாயிட்டான்னே,
வீட்டுக்காரியும் மச்சானும் சடங்கு நடத்த
சொல்லிட்டாங்க உள்ளூர் மண்டபத்துல
வாடகை கம்மி… வந்திருங்கண்ணே.

என்னடே செல் கடை பக்கம்??
மவ கூட படிக்க புள்ள செல்லு வச்சிருக்காம்,
அவளுக்கும் வாங்கிட்டேன்…

என்னடா மெடிக்கல் பக்கம் வந்திருக்க??
மவளுக்கு வயித்த வலி, வீட்டுக்குத் தூரமாம்,
வீட்ல போன் பண்ணி செவன் அப்பும்,
நாப்கினும் வாங்கச் சொன்னா வந்தேன்…

ராத்திரி ஒரு மணிக்கு என்னடே இரயில்வே
ஸ்டேஷன்ல நிக்க???

என் மவ காலேஜ்ல டூரு போயிட்டு வாரா.
கூப்பிட நிக்கேன்.

என்னடே ஆசாரி கிட்ட ரொம்ப நேரம்
பேசிட்டு இருக்க??
என் வீட்டுக்காரி இறந்த பிறகு அவள் நகை
பத்து பவுன் இருந்தது. அதுல மவளுக்கு ஒரு
காசுமாலை பண்ண வந்தேன்…

மகள் கல்யாணம் முடிச்சு போயிட்டாளே,
மனைவியும் இல்லையே.
சாப்பாட்டுக்கு என்னடே
பண்ற??

அந்த ஐயரு ஓட்டல்ல வாட்ச்மேனா இருக்கேன்,
மூணு நேரம் அங்க சாப்டுவேன்…

என்னடே ஓட்டல் வேலைக்கு போவலையா??
நகைக் கடைல நிக்க??
பேத்திக்கு திருச்செந்தூர்ல முடி எடுக்காங்க,
கம்மல் வாங்க வந்தேன்…

என்ன வாட்ச்மேன், எதுக்கு நாளைக்கு லீவு???
பேத்தி பெரியமனுஷி ஆகிட்டா, நாளைக்கு
சடங்குக்குப் போறேன்…

இது தான் பெண் பிள்ளைகளைப் பெற்ற
அப்பாக்களின் வாழ்க்கை…

பெண் பிள்ளைகள் ஒரு வீட்டின் தெய்வம்…
அப்பாக்கள் வீட்டுக்குக் கருப்பண்ணசாமி
மாதிரி காவலுக்கும்…. வேட்டைக்கும்…
எப்போதும் தயார் –
(நன்றி -ஒளிபரவட்டும்…)

.
………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to அப்பா என்கிற – கருப்பண்ணசாமி …!!!

  1. Shaik Azeezuddin சொல்கிறார்:

    அருமை
    உண்மை
    கடமை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s