……………………………………….

…………………………………………………………………………………………………………………
பொறுப்பு துறப்பு ….
இதில் எது நிஜம், எத்தனை நிஜம் என்பதையெல்லாம்
நம்மால் உறுதி செய்ய இயலாது…. செய்தித்தளத்தில்
வந்திருப்பதை நாம் இங்கு அப்படியே சொல்கிறோம்…அவ்வளவே….!!! என் விமரிசனம் இதில் ஏதுமில்லை என்பதால் நான் இதை இங்கே தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது…
……………………………………………………………………………………………………..…

( சண்முகராஜா – பாலா )
ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர், சபரீசனோடு
தொடர்புடைய இடங்கள்… இரண்டுக்கும் சேர்த்தேதான் ஏப்ரல் 24-ம்
தேதி காலை 6 மணிக்கு ரெய்டு தொடங்கியது.
தொடக்கத்தில், 40 இடங்களில் நடந்த ரெய்டு,
அடுத்த 48 மணி நேரத்தில் 90 இடங்களாக விரிந்து,
கடைசியில் 140 இடங்களில் நடைபெற்றிருக்கிறது.
40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இயக்குநராகவும் பங்குதாரராகவும் இருக்கிறார் ஜி ஸ்கொயர் பாலா. அந்த நிறுவனங்கள் அனைத்தும்
வருமான வரித்துறை ரெய்டுக்கு உள்ளாக்கப்பட்டன.
இந்த நிறுவனங்களில், சிலவற்றில் அண்ணாநகர் கார்த்திக்கின்
மனைவி ஸ்ருதி கார்த்திக்கும், அவரின் தாயார் கீதா மோகனும் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். அதனால், கார்த்திக்கின்
ஈ.சி.ஆர் இல்லம், அவர் தந்தையும் தி.மு.க எம்.எல்.ஏ-வுமான
மோகனின் அண்ணாநகர் இல்லத்திலும் ரெய்டுகள் பரபரத்தன.
“1,200 கோடி வரி ஏய்ப்பு…?”
ஜி ஸ்கொயரோடு வர்த்தகத்திலிருந்த மைலாப்பூர் கிரானைட்
நிறுவனத்திலும், தேனாம்பேட்டை ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும்
ரெய்டு நடத்தப்பட்டது.
கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை ஆணையத்திலுள்ள
தரவுகளின்படி, 2017 – 2020 காலகட்டங்களில், ஜி ஸ்கொயர் பெரிதாகத்
தொழில் எதுவும் செய்யவில்லை. ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், அவர்களின் தொழில் 2,000 கோடியாக வெகுசில மாதங்களிலேயே உயர்ந்திருக்கிறது.
திடீரென இவ்வளவு பெரிய தொழில் வளர்ச்சி ஏற்பட என்ன காரணம்… சமீபத்தில் ‘30,000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புடைய சொத்துகளை
ஜி ஸ்கொயர் வைத்திருப்பதாக’ சர்ச்சை கிளம்பியது.
ஜி ஸ்கொயரிடம் நிலம் வாங்கியவர்கள், விற்றவர்களின் இடங்களிலும்
ரெய்டு நடத்தப்பட்டது. இந்த நிறுவனம் தொடர்பாக மட்டுமே
73 இடங்களில் சோதனையிடப்பட்டது. அங்கிருந்து கிடைத்த
தரவுகளின்படி, ஏறத்தாழ 1,200 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதற்கான முகாந்திரங்கள் சிக்கியிருக்கின்றனவாம்.
இந்தச் சோதனையில், ஹார்டு டிஸ்க்குகள், லேப்டாப்கள் உட்பட
பல ஆவணங்கள் சிக்கியிருக்கின்றன. சட்டவிரோத பணப் பரிமாற்றத்
தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருக்கிறதா
என்பதையெல்லாம் விசாரித்து வருகிறது டீம்.
இந்த ரெய்டில், வருமான வரித்துறைக்கு ஜாக்பாட்டாகச் சிக்கியவர்
ஆடிட்டர் சண்முகராஜாதான். சபரீசனின் ஆடிட்டரான இவரின் மேற்பார்வையில்தான், பல்வேறு தொழில்களும் பரிவர்த்தனைகளும் நடந்ததாகச் சந்தேகிக்கிறது வருமான வரித்துறை.
சென்னை அண்ணாநகரிலுள்ள அவரின் அலுவலகத்தில் ரெய்டு தொடங்கியபோது, சண்முகராஜா பெங்களூரில் இருந்திருக்கிறார்.
விமான நிலையத்தில் வைத்து அவரை மடக்கியது ‘ஸ்பெஷல் டீம்.’
பின்னர், சென்னையிலுள்ள அலுவலகத்துக்கு அழைத்து வந்து
அவரிடம் இரண்டு நாள்களுக்கும் மேலாக விசாரித்திருக்கிறார்கள்.
“சண்முகராஜாதான் சபரீசனுக்கு ஆல் இன் ஆல். 2014 நாடாளுமன்றத்
தேர்தல் முடிந்த பிறகு, சபரீசனிடம் பணிக்குச் சேர்ந்திருக்கிறார் அவர்.
சுனில், பிரசாந்த் கிஷோர் டீம்கள் தி.மு.க-வுக்குத் தேர்தல் ஆலோசனைகள் வழங்கியபோது, அவர்களுக்குக் கணக்கு வழக்கு பார்த்திருக்கிறார்.
தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், சண்முகராஜாவின் தொடர்புகளும்
அதிகாரமும் உயர்ந்திருக்கின்றன. அரசின் ஒவ்வொரு துறையிலும் திரட்டப்பட்ட ‘பி.எஃப்’-ஐ – ( அப்படியென்றால் என்ன சார் …??? !!! )
- அவர்தான் நிர்வகித்திருக்கிறார். சென்னை அண்ணாநகர் சாந்தி
காலனியில், பல கோடி ரூபாய் மதிப்பில் வீடு ஒன்றைக் கட்டிவருகிறார் சண்முகராஜா. சமீபத்தில் இரண்டு உயர் ரக கார்களை வாங்கி
யிருக்கிறார். இதற்கான நிதி எங்கேயிருந்து வந்தது என்பதை
விசாரித்தோம்.
முதல்வர் ஸ்டாலின் துபாய்க்குப் பயணம் சென்றிருந்தபோது,
அவருக்கு முன்னதாகவே சபரீசனுடன் துபாய்க்குச் சென்று லூலூ
நிறுவன அதிபர் யூசுப் அலியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்
சண்முகராஜா. இந்தப் பயணத்தில்தான், 3,000 கோடி ரூபாயைத்
தமிழகத்தில் முதலீடு செய்வதாக, தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம்
போட்டது லூலூ. அரசு ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தில்,
சண்முகராஜாவின் பங்கு என்ன… அந்த 3,000 கோடி ரூபாய் யாருடையது… என்பதையெல்லாம் விசாரித்தோம்.
- எகிறிய அம்மன் பெண்மணி!
‘பி.எஃப்’( …..??? ) நிர்வாகத்தில் ஆடிட்டர் சண்முகராஜாவுக்கு
உறுதுணையாக இருந்தவர், அம்மன் பெயர்கொண்ட பெண்மணி.
அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தொடக்கத்தில்,
‘நான் யார் தெரியுமா… என்கிட்டயே விசாரிக்குறீங்களா, உங்களுக்கு
என்ன ரைட்ஸ் இருக்கு?’ என்றெல்லாம் எகிறினார் அவர்.
‘ஒரு கார் வரும். உங்க கட்டைப்பைகளை கார் டிக்கில வெய்யுங்க.
மத்ததை நான் பார்த்துக்குறேன்…’ தொழிலதிபர்களிடம் இந்த
டயலாக்கைச் சொன்னது யார் மேடம்… ??? ‘ – என்றோம்.
சப்த நாடியும் ஒடுங்கிப்போனவர் பின்னர் பல விவகாரங்களைக்
கொட்டினார். ஒவ்வொரு மாதமும் துறைவாரியாக வந்த ‘பி.எஃப்’(???? ) விவரங்களை புட்டுப் புட்டு வைத்தார்.
‘லண்டன்’ அடைமொழி பிரமுகர் இடங்களிலும் சோதனையிட்டு
சில ஆவணங்களை எடுத்திருக்கிறோம். ‘ஈசன்’ பிரமுகர் வீட்டில்
நடந்த ரெய்டில், ஐரோப்பிய முதலீட்டு விவரங்கள் சிக்கியிருக்கின்றன.
இந்த ரெய்டு இத்துடன் முடியாது. ரெய்டில் கிடைத்த தரவுகள்,
ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்திருக்கிறதா என்பதை
விசாரித்து வருகிறோம். நாமக்கல்லைச் சேர்ந்த ‘சந்திர’
தொழிலதிபர், மேலிடத்துக்கு நெருக்கமாக இருந்திருக்கிறார்.
அவர் மூலமாகப் பல முதலீடுகள் வெளிநாடுகளில் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. அவரையும் விசாரணை வளையத்தில் எடுத்திருக்கிறோம். விரைவிலேயே அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்” என்றனர் விரிவாக.
ஐரோப்பிய நாடுகளில் மேலிடப் பிரமுகர் தொழில் தொடங்க,
சென்னை ராயப்பேட்டையிலுள்ள இரண்டெழுத்து ஆடிட்டர் நிறுவனம் உதவியதாகத் தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு ரெய்டு
நடத்தியிருக்கிறது வருமான வரித்துறை.
வெளிநாடுகளில் தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு
‘பேப்பர் வொர்க்’ செய்து தந்ததைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
மேலிடப் பிரமுகருக்கு விலையுயர்ந்த வாட்சுகளை வாங்கிக் கொடுத்த
பெண் பிரமுகரும் சோதனையில் தப்பவில்லை. அவரும் விசாரிக்கப்பட்டிருக்கிறார். சபரீசன் தொடர்புடைய மயிலாப்பூர் நிறுவனம்தான், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக தி.மு.க-வுக்கு
வியூகம் வகுத்துத் தருகிறது. அந்த நிறுவனத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இப்படி சபரீசன் தொடர்புடைய 13 பேரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து, கேள்விகளால் துளைத்தெடுத்திருக்கிறது வருமான
வரித்துறை. அடுத்தகட்டமாக தமிழ் மாதத்தின் பெயர்கொண்டவர்,
வழக்கறிஞர் ஒருவர், காற்றாலை நிறுவன உரிமையாளர் ஒருவர் என அடுத்தடுத்து சபரீசனுக்கு நெருக்கமானவர்களை நெருங்கத் திட்டமிட்டிருக்கிறது வருமான வரித்துறை. திருநெல்வேலி, வேலூர் மாவட்டங்களில் அடுத்தகட்ட ‘ஷோ’ இருக்கலாம் என்கிறார்கள்…
இந்த ரெய்டுகள் பெருத்த சலசலப்புகளை உருவாக்கியிருக்கின்றன. ஏப்ரல் 21- தேதியே ‘ரெய்டு வரப்போகிறது’ என்கிற தகவல் ‘லீக்’ ஆகி,
அறிவாலயத்தை அனலாக்கியிருக்கிறது. வட மாவட்டத்தைச் சேர்ந்த
தி.மு.க எம்.பி ஒருவர் குறிவைக்கப்படுகிறார் என்கிற தகவலால் பதற்றம் ஏற்பட்டது நிஜம். உடனே மேலிடக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், அமைச்சர்களும் உஷாரானார்கள். ஜி ஸ்கொயரும் உஷாரானது.
அப்படி இருந்தும்கூட, 1,200 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்புக்கான முகாந்திரங்கள் இந்த ரெய்டில் சிக்கியிருப்பதாக வரும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
‘ஜி ஸ்கொயருக்கும் சபரீசனுக்கும் எந்தத் தொடர்புமில்லை’ என
சபரீசனுக்கு நெருக்கமானவர்கள், அந்த நிறுவனத்தின் பங்குதாரர் ஆவணங்களைக் காட்டி வாதாடுகிறார்கள். ஆனால், ஜி ஸ்கொயர் உரிமையாளர் பாலாவின் பிற நிறுவனங்களில் தி.மு.க எம்.எல்.ஏ
மோகனின் குடும்பத்துக்கு இருக்கும் பங்கு குறித்த கேள்விக்கும், இரண்டாண்டுகளில் ஜி ஸ்கொயர் எப்படி இவ்வளவு அபரிமிதமாக
வளர்ந்தது என்கிற கேள்விக்கும் அவர்களிடம் பதிலில்லை.
இந்த ரெய்டுகளுக்கும், தங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாததுபோல தி.மு.க காட்டிக்கொள்கிறது. ஆனால், அடியாழத்தில் இரண்டுக்குமான
வேர்கள் ஊடாடியிருப்பதற்கான தடயங்கள் கிடைத்திருப்பதாகக் சொல்லப்படுகிறது.
(நன்றி – ஜூனியர் விகடன்….)
……………………………………………..
//பொறுப்பு துறப்பு ….// – ஹா ஹா ஹா.
BF – என்றால் Black Funds or Black Finance. 1200 கோடி வரி ஏய்ப்பு என்பது மிக மிகக் குறைவான தொகை. உண்மையில் ஜூவி , இரு ஆண்டுகளில் வரவு வைத்த கறுப்புப் பணத்தைக் குறைவாகச் சொல்ல முயல்கிறது. 12,000 கோடி வரி ஏய்ப்பு என்பது சரியாக இருக்குமோ? ஜூவி ஒரு சைபரை விட்டிருக்குமோ? யார் இதனை clarify பண்ணுவார்கள்?
…
பொறுப்பு …… தி ற ப் பு …?
(துறப்பு அல்ல திறப்பு….!!!)
……………….
இது எப்படி …?
…
பொறுப்பு திறப்பு : இந்த செய்தியில் இடம்பெற்ற
தகவல்கள் முழுக்க முழுக்க பத்திரிகையாளர்
குபேந்திரன் தெரிவித்த தனிப்பட்ட கருத்துக்கள்.
இதற்கும் ஒன்இந்தியா தமிழுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
https://tamil.oneindia.com/news/chennai/cm-stalin-talked-about-ptr-palanivel-thigarajan-to-duraimurugan-on-the-explosive-alleged-audio-509592.html?story=2
Tamil One Indiaவின் தட்டச்சு தரம் மிகவும் மோசம். அவங்க டீமில் தமிழ் சரியாகத் தெரிந்தவர்களும் கிடையாது. நிறைய தட்டச்சுப் பிழை வரும். பொறுப்பு துறப்புதான். இனிமே செய்திகளுக்கும் அவங்களும் மின்னம்பலமும் போட வேண்டியதுதான் (இரண்டிலும் திமுக ஜால்ரா செய்திகள்தானே வருது. இந்த இரண்டின் ஓனர்களைப் பற்றியும் முன்னம் எங்கோ படித்திருக்கிறேன்…..)
குபேந்திரன், மணி, லட்சுமணன், தராசு ஷ்யாம்…. என்று மிகப் பெரிய லிஸ்ட் உண்டு…. இவங்கள்லாம் கொஞ்சம்கூட அறம் என்பதே இல்லாமல், இஷ்டப்படி அடிச்சுவிடுவாங்க, அதிலும் ஜால்ரா போடுவதில் இவங்களை ஒருவரை ஒருவர் மிஞ்ச முடியாது என்ற அளவில் சொல்லுவாங்க. இந்த இரண்டு பத்திரிகைகளில் யாருடைய பேட்டி, கட்டுரை வருகிறதோ.. அவங்கள்லாம் ஜால்ரா கோஷ்டி என்பதை உடனே புரிந்துகொள்ளலாம்.
மணி நேற்று ஒரு பேட்டியில், திமுக கொள்ளையடித்ததைப் பற்றியோ அல்லது சொத்து சேர்த்ததோ பெரிய விஷயம் அல்ல. அண்ணாமலை அதை எப்படி வெளியிடப்போனது, அறமே இல்லை, மிக மோசமான செயல், இது அவர்களைத் திருப்பித் தாக்கப்போகிறது, இப்படி திமுகவுக்கு எதிராகச் செயல்படறாங்களே, நியாயமா? மக்களிடம் திமுகவின் பெயரைக் கெடுக்கிறார்களே என்றெல்லாம் வயிறெரிகிறார். இந்த மாதிரி ஆட்கள்லாம் பத்திரிகைத் துறையில் இருப்பதால்தான், மக்கள் வாட்சப் செய்திகளை மாத்திரம் நம்பும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் (தாங்கள் நம்பும் தலைவர் க்ரூப் போன்று), அல்லது தினமலர் போன்ற ஓரளவு அறம் உள்ள பத்திரிகைகள்.
…………..
பாஜகவின் செய்தி தொடர்பாளரே நான் தான்-திமுகவினரை கலாய்த்த சவுக்கு –
…
…
…………..
Interesting ….
………………………………….
…………………………………………………………………………………
………………
……………..
1. அண்ணாமலை இது பற்றிப் (தில்லி சந்திப்பில் நடந்தது) பேசியிருக்கிறார். 2024 மோடி பிரதமர் என்ற நோக்கம். அந்தப் புள்ளியில் அதிமுகவுடன் கூட்டு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ரோட் மேப் பற்றிப் பேசியிருக்கிறார். அதனால் ஊழல் என்பதில் சமரசம் இல்லை, தொடர்ந்து நான் அதுபற்றிப் பேசுவதைக் காண்பீர்கள் என்று சொல்லியிருக்கிறார். அதாவது, அதிமுக ஃபைல்ஸ் வராது என்று சொல்லவில்லை. I feel this is a strategy to get max seats and may be, after 2024, BJP may go alone.
2. பாஜகவுக்கு, தமிழக எம்பிக்கள் என்பது இதுவரை இல்லை, அதனால் அவர்களுக்கு பெரிய பாதிப்பு இருந்ததில்லை. அண்ணாமலை தனித்த தலைவர் என்பதால், 2026ல் கூட்டணி பொருந்தாக் கூட்டணியாக இருக்கும். அதிமுகவிற்குத்தான் பாஜக தேவை என்பது என் எண்ணம். காரணம், திமுக, காங்கிரஸை முன்னிறுத்தினால், அதிமுக பாஜகவைத்தான் முன்னிறுத்தவேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால், அவர்களுக்குத்தான் பாதிப்பு என்று நினைக்கிறேன்.
3. அதிமுக, முக்குலத்தோர்கள் வாக்கை இழக்கிறது என்று தோன்றுகிறது (தங்கச் செல்வன், ஓபிஎஸ், தினகரன்…..). முக்குலத்தோர்கள், ஆண்ட பரம்பரை என்று நினைப்பதால் (தாங்கள் ஜெ காலத்தில் முக்கியத்துவம் பெற்றோம் என்று நினைப்பதால்), தற்போதுள்ள அதிமுக தங்களை முன்னிறுத்தவில்லை என்று நினைப்பார்கள். இப்போதுள்ள அதிமுகவிற்கு (எடப்பாடி தலைமையில்) எத்தனை சதம் வாக்குகள் வருகிறது என்று தெரியவில்லை. இந்த விஷயத்தில் அதிமுக, திமுக போன்றே இருக்கிறது. அதனால் பாஜக அதிமுகவுடன் சேர்ந்து 2024 தேர்தலைச் சந்தித்தால், தோல்வியடைந்தால் பாஜக தான் காரணம், அதிமுகவிற்கு சிறுபான்மையினர் வாக்களிக்கவில்லை, பாஜகவினால் 3 சதம் வாக்குகள் அதிமுகவிற்கு வந்தது, சிறுபான்மையினர் வாக்கிழப்பு 15 சதம் என்று அதிமுக பேசும். சில இடங்களில் பாஜக, வெற்றிபெற்றாலும், தங்களால்தான் ஒரு சில எம்பிக்கள் வந்தது என்ற பேச்சும் வரும். பாஜகவின் நன்மைக்கு, இருவரும் தனித்தனியாக நிற்கவேண்டும்.
4. என் assessment, பாஜக 10 சதம், அதிமுக 20 சதம், திமுக 24 சதம் (?), காங்கிரஸ் 5 சதம், தினகரன் 2 சதம், ஓபிஎஸ் 2 சதம், கம்யூனிஸ்ட்கள் 2 சதம், தேதிமுக 2 சதம், விசிக 2 சதம், பாமக 5 சதம், முஸ்லீம் கிறித்துவர்கள் வாக்குகள் (ஆடுபோல கண்ணை மூடிக்கொண்டு தங்கள் ஜமாத்/பாதிரிகள் சொல்வதுபோல் வாக்களிப்பவர்கள்) 8-10 சதம், பொதுமக்கள் 15-20 சதம் இருக்கலாம். இந்த அனுமானத்தில் சிறிய தவறுகள் இருக்கலாம்.
அதிமுக பாஜக இல்லாமல் இருந்தால், மேலும் சில பல கட்சிகள் அதனை நோக்கி வரும். அதிமுகவின் சரியான ஸ்ட்ராடஜி, ஓபிஎஸ் அல்லது தினகரன் சேர வந்தால், அதனை வரவேற்பதுதான். எடப்பாடி அதிமுக என்ற கட்சியை நீர்த்துப்போகாமல் இருக்கச் செய்யவேண்டும். மூன்று அணியாக தேர்தலைச் சந்தித்தால், பாஜகவின் வாக்கு வங்கி, மக்கள் எண்ணம் போன்றவை தேர்தலில் மிகச் சரியாகத் தெரியும். அப்படிப்பட்ட நிலைதான் பாஜக வளர்ச்சிக்கு நல்லது என்று அண்ணாமலை மனதார நம்புகிறார். பாஜகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களில் சிலர், அதிமுகவுடன் கூட்டணி வைத்து 2-3 சீட் வெற்றி பெற்றாலும் தாங்கள் மத்திய அமைச்சராகலாமே என்று யோசிக்கிறார்கள். பாஜக தேசியத் தலைமையின் எண்ணம் ரொம்ப க்ளியராக எனக்குத் தெரியவில்லை.