…………………………………………

…………………………………………..
வீடியோவுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பு – ” சபரீசனை நெருங்கும் அமலாக்கத்துறை ” … அது தான் முதல் பாதி…
ஆனால், அதை விட சுவாரஸ்யம், அடுத்த பாதியில் வரும் செந்தில் பாலாஜி கதை….சுப்ரீம் கோர்ட்டில் காத்திருக்கும் சுவாரஸ்யமான END CARD …!!!
முழு காணொலியையும் தாராளமாகப் பார்க்கலாம். …. !!!
………………………………………………………………
………………………………………………………………..
யாருக்கும் வெட்கமில்லை…..
ஆண்டுக்கணக்கில்,
பத்தாண்டு கணக்கில் இப்படி வழக்குகள்
இழுத்தடிக்கப்படுவதும், அதனால் குற்றவாளிகள்
சுலபமாக சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து,
” மாண்புமிகு ” -களாக சமூகத்தில் தொடர்ந்து உலவி வருவதும்,
மீண்டும் மீண்டும் அதைவிட மோசமான குற்றச்செயல்களில்
ஈடுபடுவதையும் கண்டு –
இந்த குறைபாடுகளையெல்லாம் சரிசெய்ய வேண்டிய,
சட்ட ஓட்டைகளை அடைக்க வேண்டிய – பொறுப்புகளில்
இருக்கும் சம்பந்தப்பட்ட யாருக்குமே இதில் வெட்கமில்லை.
இத்தகைய சமூகத்தில், கையாலாகாத, ஆனால் -உணர்வுள்ள
மனிதர்களாக நாமும் இதையெல்லாம் எத்தனை ஆண்டுகளுக்கு
பார்த்துக் கொண்டிருக்கப்போகிறோமோ …!!!
.
…………………………………………………………………………………………………………………………………………………..
மன்னிக்கவும்…
அதற்கு முதலில் நாம்(என்னையும் சேர்த்து) ஒழுக்கமாக இருக்கவேண்டும் அந்த ஒழுக்கத்தை நமது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். அதை செய்தோமா!! நான் குழந்தையாக இருக்கும் போது எனது பெற்றோர் தவறு செய்தால் சாமி கண்ண குத்தும்ன்னு சொல்லி வளர்த்தார்கள் அதானல் ஒரளவு ஒழுக்கமாக இருக்கின்றேன். எப்ப பகுத்தறிவு பேச ஆரம்பித்தோமோ… தேனை எடுத்தவன் புறங்கையை நக்குவதில் தப்பில்லை என்றோமா அன்றே நாம் நமக்கே குழி பறித்துக் கொண்டோம். இந்த மாதிரியான குடிமக்கள் இருந்தால் இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போவதில் ஆச்சரியமில்லை…
5 ரூவா பிரியாணி சாப்பிட்டா காக்கா குரல் தான் வரும். உன்னிகிருஷ்ணன் குரலா வரும்- இந்த வசனம் கூறும் கருத்து மிக ஆழமானது. இதனை நகைச்சுவையாக கடந்து செல்லயியலவில்லை