………………………………………………………………………..

……………………………………………………………………….
…………………………………

………………………………………………….

……………………..

……………………

……………….

…………………………..

………………

……………………..

………………………………
என்ன தான் முதல் பாகத்தை பார்த்தது, எப்படி வந்திருக்குமோ – என்கிற
ஆவலை தணித்திருந்தாலும்,
இப்போது மீண்டும் வெளிவரப்போகும் 2-வது பாகம்
இன்னும் அதிகமான ஆவலைத் தூண்டுகிறது….
எங்கெல்லாம் காமிராக்களை வைத்து, எவ்வளவு அழகான கோணங்களையெல்லாம் படம் பிடித்து தந்திருக்கிறார்கள் பாருங்களேன்…
அவற்றிலிருந்து, சில அழகிய படங்களையும், Making of the Film
வீடியோவையும் இங்கே தந்திருக்கிறேன்…
பிரம்மாண்டமான முயற்சிகள்…. !!!
எதிர்காலத்தில் இன்னும் இத்தகைய மாபெரும் சரித்திரப் படங்கள் தமிழில் வெளிவருவது – இந்தப்படத்திற்கு கிடைக்கின்ற வரவேற்பை பொறுத்து தான் அமையும் என்று சொல்லலாம்.
இந்த படக்குழுவினர் எடுத்துக்கொண்ட அற்புதமான
முயற்சிகளுக்காகவும்,
கொரொனா காலத்தில் அவர்கள் பட்ட சிரமங்களுக்காகவுமாவது –
நாளைய தினம் வெளிவரவிருக்கும், இந்த இரண்டாம் பகுதியும்
பெரும் வெற்றியை பெற வேண்டும் என்கிற வேண்டுதலுடனும்,
வாழ்த்துகளுடனும் –
பொன்னியின் செல்வன் – உருவான விதம் காணொலி – கீழே –
………………..
.
…………………………………………………………………………………………………………………………….
மிகுந்த முயற்சி, பொருட்செலவு, திட்டமிடல், ஒத்துழைப்பு என்று பலவும் தேவைப்படும் ப்ராஜக்ட் இது. இதில் பெரிய பிரச்சனை, நாவல் 40+ க்கு நிச்சயமாகத் தெரிந்த, அனுபவித்துப் படித்த கதை. எதை எப்படி எடுத்தாலும், குறை பளிச் என்று தெரியக்கூடிய படம். நெகடிவ் கமெண்ட்ஸ் (பலவிதங்களில்…. ) வரக்கூடிய படம்… மணியின் தைரியத்துக்குப் பாராட்டுகள்.
படத்தின் மிகப் பெரிய குறை (பாகம் 1) – கதை தெரியவில்லை என்றால் கார்ட்டூன் படம் மாதிரி ஒன்றுமே புரியாமல் போய்விடும், அப்படித்தான் பலருக்கு ஆயிற்று. பாத்திரங்களையும் ரசிக்க முடியாது. கதை தெரிந்து, அவர்களின் குணநலன்கள் தெரிந்திருந்தால்தான் மிகவும் ரசிக்க முடியும். பாகம் 2 வும் விதிவிலக்காக இருந்திருக்க முடியாது.
முதல் பாகத்தைக் கைப்பற்ற முயன்றவர்களுக்கு, மணி, NO என்று தயாரிப்பாளர்களுக்கு அனுமதி தரவில்லை. இரண்டாம் பாகத்தை அவர்கள் கைப்பற்றிவிட்டார்களாமே. முதல் பாகத்திலேயே போட்ட முதலுக்கு மேலாகவே எடுத்துவிட்டதால் மணியும் கண்டுகொள்ளவில்லையாமே. இது உண்மையா?
இரண்டாவது பாகம் இன்று பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இரண்டாவது முறை, ஒரு வாரத்துக்குள் பார்ப்பேன். அப்போதுதான் ஏதேனும் குறைகள் கண்ணில் படும்.
மணிரத்னம் மிகப் பெரிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றிருக்கிறார் என்றே நினைக்கிறேன். இத்தனை பெரிய ஸ்டார்கள். ஈகோ இல்லாமல் நன்றாக நடித்திருக்கிறார்கள்.
அருண்மொழி பதவி ஏற்று ராஜ ராஜ சோழனாக, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அவன் பெயர் நிலைத்து நிற்கும்படியான சாதனைகள் செய்யப்போகிறான். அவன் மகன் ராஜேந்திர சோழனோ தந்தை அடையாத மாபெரும் வெற்றிகளை அடையப்போகிறான். அந்த வரலாற்றின் ஆரம்பம் வரை படம் காண்பிக்கிறது. ஆனால் பாருங்க… மக்கள் மனதில் ராஜராஜ சோழன் நிலைபெற்றுவிடுவான். Very interesting dynasty.
ஒரு அரசன், சாகும்வரை பதவியை விடாமல் பிடித்துக்கொண்டிருந்து, பெற்ற பிள்ளைகளைக்கூட அருகில் விடாமல் இருந்து, செத்த பிறகு ஆட்சிக்கு வருபம் இளவரசனுக்கு 72 வயது ஆகிவிடுகிறது. அந்த வயதில் சாம்ராஜ்யத்தை எப்படி ஆளமுடியும்? யாரையும் கண்ட்ரோல் செய்ய முடியாது. முந்தைய அரசனுடன் இருந்த படைகளின் (தளபதிகளின்) உதவியால், எப்படியோ ஆட்சியை ஒப்பேற்றியிருப்பான். அவனுக்கு அடுத்ததாக வந்தவனுக்கு கொஞ்சம்கூட ஆட்சியில் hold இருக்காது. எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்து சாம்ராஜ்யம் அழிவதைப் பார்க்கவேண்டியதுதான். இதுதான் ஔரங்கசீப் வாழ்க்கையில் நடந்தது. (ஹா ஹா ஹா. நீங்க எதிர்பார்த்தது இது இல்லையா?)
ஆனால் ராஜ ராஜன், கடைசி காலங்களில் அரசியலிலிருந்து விலகி மகனிடம் பொறுப்பை ஒப்படைத்து சிவபாத சேகரனாகிவிடுகிறான். ஒரு காவியத்தை திரையில் சாதித்த மணிரத்னமும் நடிகர்களும் பாராட்டப்படவேண்டியவர்கள்.