……………………………………

மிக முக்கியமானதொரு காலகட்டத்தில் ஜம்மு,காஷ்மீர்
மாநிலத்தின் கவர்னராக பணியாற்றியவர்….
(பாஜக அரசால் நியமிக்கப்பட்டவர்…)
சத்யபால் மாலிக், இந்த தொலைக்காட்சி நேர்காணலில், பல குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்….
ஏற்கெனவே இவர் மேகாலயாவில் கவர்னர் பொறுப்பில் இருந்தபோதே
கூட, பாஜக மத்திய தலைமையைப்பற்றி ஓரளவு விமரிசனம்
செய்திருக்கிறார்….
ஆனால், இப்போது அவர் பொதுவெளியில் கூறும் குற்றச்சாட்டுகள்
கடுமையானவை.
அவர் சொல்கின்ற விஷயங்கள் எந்த அளவிற்கு
உண்மையானவையோ, எந்த அளவு மிகைபடுத்தலோ – எந்த அளவுக்கு பொய்யோ – தெரியவில்லை.
ஆனால், பெரிய பொறுப்புகளை வகித்த ஒரு நபர் இந்தவாறெல்லாம்
பொதுவெளியில் பேசுவது சரியல்ல….
அதைக்கூட உணர முடியாத அவரை பாஜக தலைமை எப்படி இத்தனைக்காலம், அதுவும் மிகவும் நெருக்கடியான ஒரு சந்தர்ப்பத்தில்,
காஷ்மீர் கவர்னராக வைத்தது என்பதும் புரியவில்லை; இத்தகைய
ஒரு நபரிடம் அத்தகைய பெரும் பொறுப்பை கொடுக்கின்ற அளவிற்கு
பாஜக தலைமைக்கு என்ன அவசியம் நேர்ந்தது…? கவர்னர் பதவிக்கு வேறு பொருத்தமான நபர்களே கிடைக்கவில்லையா….அல்லது வெளியில் சொல்ல முடியாத வேறு காரணங்கள் ஏதேனும் இருக்கின்றனவா …?
ஆனால், அரசிலிருந்து இது குறித்து உரிய மறுப்போ,
விளக்கங்களோ எதுவும் வரவில்லை…
ஒன்று – அவர் கூறுவது தவறு என்று மறுக்கப்பட வேண்டும்…
அல்லது தகுந்த பின்னணியை, காரணங்களை வெளியிட வேண்டும்…
இதை அப்படியே விடுவது நல்லதல்ல….
இது அரசுக்கு கெட்ட பெயரைத்தான் தேடித்தரும்….
…………………………………..
.
………………………………………………………………………………………………………………………………………………..
…
ரமலான் வாழ்த்துகள் ….
ரம்ஜான் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய நண்பர்கள்
மற்றும் அவர்களது இல்லத்தினர் அனைவருக்கும் எனது
வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
-அன்புடன்
காவிரிமைந்தன்
..
வாழ்த்திய ஐயா அவர்களுக்கும் இறைவன் நோயற்ற நிம்மதியடைந்த சந்தோஷமான வாழ்வை தந்தருள்வானாக
…
…
சிபிஐ விசாரணை போட்டாச்சே!
அப்படீன்னா அவர் சொன்னது உண்மைதான் போலவே ஐயா?
சைதை அஜீஸ்,
உங்கள் மறுமொழிக்கு மேலே
ராஜ்தீப் சர்தேசாயின் ஒரு காணொலி
இருக்கிறதே…. அதன் கடைசி இரண்டு மூன்று வரிகளை
இப்போது மீண்டும் ஒரு முறை கேட்டுப் பாருங்கள்….
விடை கிடைக்கலாம்….!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
…
THIS IS NOTHING BUT NEWS …😊😊😊
…………..
In its four-year tenure from July 2019
to April 2023, the BJP government in
Karnataka issued seven separate orders
to drop prosecution in 385 criminal cases,
including 182 cases of hate speech,
cow vigilantism and communal violence,
shows a response by the state Home
department to an RTI application by T
he Indian Express.
…..
https://indianexpress.com/article/political-pulse/karnataka-hate-speech-communal-violence-cases-8569893/
Hate Speechல் மதத்தைக் கொண்டுவந்தால் (means இந்துக்கள், இந்து சார்பானவர்கள் பேசினால் அது தனி, முஸ்லீம்கள் பேசினால் தனி என்று பிரித்துப்பார்ப்பது) மிகத் தவறான முறை. கர்நாடகா பாஜக அரசு, தேர்தல் முடிவில் தெரிந்துகொள்ளும்.
முஸ்லீம்களின் நம்பிக்கையைப் பெறவேண்டுமானால், எந்தக் கிரிமினல் குற்றத்திலும் ‘மதம்’ ஒரு factorஆக வரக்கூடாது. இதனால்தான் முஸ்லீம்கள் பாஜக என்றாலே அலர்ஜி ஆகிறார்கள்.
திமுக அரசு (கருணாநிதி காலத்தில்) சிறையில் இருந்த சீரியஸ் குற்றவாளிகளைத் தப்புவிக்க (அழகிரிக்காக மற்றும் வாக்குகளுக்காக) அண்ணா பெயரால் மன்னிப்பு கொடுத்ததற்கும், முஸ்லீம்கள், கிறித்துவர்கள், தன் கட்சிக்காரர்கள் hate பேச்சுக்களைக், பாலியல் கொடுமைகளை, மைனாரிட்டி institutes செய்கின்ற பாலியல் தவறுகளைக் கண்டுகொள்ளாமல், இந்து மதத்தைப் பற்றிப் பேசினாலே, இந்து institutionsல் சிறிய பிரச்சனை வந்தாலும் பூதாகரமாக பாலியல் என்றெல்லாம் பொய் சொல்லி, நடவடிக்கை எடுக்கும் தற்போதைய திமுக அரசுக்கும், கர்நாடகா பாஜக அரசுக்கும் என்ன வித்தியாசம்?
.
மேலே சத்யபால் மாலிக் பேசிக்கொண்டிருந்த
போதும், ராஜ்தீப் சர்தேசாய் பேசிக்கொண்டிருந்த
போதும்….. ஆளையே காணோமே….!!!
ரொம்ப சங்கடமாக இருந்ததோ –
என்ன சொல்லுவதோ என்று….!!!
…
இரண்டு நாட்கள் சென்னை பயணம். இன்று இரவு வந்தேன். கரன்தாப்பர் காணொளி பார்த்தேன்.