விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்,
உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற
மேலே உள்ள அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
கர்நாடக தேர்தலில் அண்ணாமலையை தற்போது பாஜக பயன்படுத்துவது சரியானதாக எனக்குத் தோன்றவில்லை. அண்ணாமலையின் வருகை, இங்குள்ள பழம்தின்னு கொட்டை போட்ட அரசியல்வாதிகளுக்கு எரிச்சல். பொடிப்பையன், போட்டியிடும் நம் தலைவிதியை நிர்ணயிக்கிறானே என்று. ஆனால் எதிர்கால பாஜகவுக்கு இது நல்லது.
தற்போது மக்கள் மனநிலை, பாஜகவுக்கு எதிரானதாக இருப்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. பாஜக வாக்கு சதவிகிதம் குறையாது. ஆனால் பொதுமக்கள் இந்த முறை காங்கிரஸுக்கு வாக்களிக்கவே வாய்ப்பு அதிகம். அதனால் பாஜக படுதோல்வியைச் சந்திக்கலாம்.
அண்ணாமலையை அழைத்திருப்பது, தமிழர் வாக்கு மற்றும் அண்ணாமலையால் கன்னடத்திலும் பேசி வாக்கு சேகரிக்கமுடியும் எ, இந்தப் பகுதிகளை அறிந்தவர் என்ற முறையில். ஆனால் பாஜகவின் தோல்வியை, தமிழக விலைபோன மீடியாக்கள், அண்ணாமலையின் தோல்வியாகச் சித்தரிக்கப்பார்க்கும். அதுபோல, நாடாளுமன்றத்தில் காங்கிரசே வெற்றிபெற வாய்ப்பு என்பதுபோல வாய்கூசாமல் எழுதும்.
ஆனால் பாருங்க, ராகுல் காந்தி, குஜராத், வடகிழக்கு மாநிலங்கள் தேர்தல் சமீபத்தில் நடந்தபோது அந்தப் பக்கம் தலைவைத்துக்கூடப் படுக்கவில்லை. ஆனால் கர்நாடகா தேர்தலில் கவனம் செலுத்துகிறார். இயல்பாக காங்கிரஸ் வெற்றிபெற்ற பிறகு, வெற்றிக்குச் சொந்தம் கொண்டாடலாம், அப்போது காங்கிரஸின் வெற்றித் தலைவராக மற்றவர்கள் ஏற்றுக்கொள்வர் என்று எண்ணுகிறார் போலிருக்கிறது.
அண்ணாமலை எழுப்பிய ஊழல்/சொத்துக்குவிப்பு பற்றி எதையுமே பேசாத தமிழக ஊடகங்கள், வெறும் 8 கோடி சொத்தும், சொந்தக் கார் எதுவுமே இல்லாத தமிழக முதல்வருக்கு எப்படி 1 1/2 கோடி வாட்ச் வந்தது, எந்தக் காரணத்துக்காக இரண்டு விலையுயர்ந்த கார்கள் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திலிருந்து செல்கிறது என்பதைப் பற்றி விவாதிக்காத ஊடகங்கள், அண்ணாமலை 3 1/2 லட்சத்துக்கு எப்படி வாட்ச் கட்டலாம் என்று விவாதிக்கின்றன. அண்ணாமலை, தான் நம்பும் கொள்கைக்காக தைரியமாக திமுகவையும் (அதிமுகவையும்) எதிர்க்கும் பாதையில் செல்ல ஆரம்பித்திருக்கிறார். அப்படிச் செய்தால்தான் பாஜக தமிழகத்தில் வளரும். பாஜக தலைமை எந்த அளவு அண்ணாமலையின் பின்னால் நிற்கப்போகிறது என்பதைப் பொறுத்து அண்ணாமலையின் குற்றச்சாட்டும், பின்பு அவர் நடத்தப்போகும் தமிழக யாத்திரை/பரப்புரைக் கூட்டங்களும் எடுபடும் என்று தோன்றுகிறது.
விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்
உடனடியாக மின்னஞ்சல்
மூலம் பெற - மேலே உள்ள
அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய