…………………………………..

……………………………………
நான் நீண்ட நாட்களாகவே விரிவாக எழுத நினைத்த
ஒரு தலைப்பைப் பற்றி அண்மையில், சென்னை இலக்கிய வட்டத்தில்
நிகழ்ந்த உரை ஒன்றை பார்த்தேன்……
கிழக்கு பதிப்பக உரிமையாளர், பத்ரி சேஷாத்ரி மற்றும்
அர்விந்த் சுப்ரமணியன் இருவரும் உரையாடும் நிகழ்வு…..
தலைப்பு – “திராவிடம் மறைத்த/வெறுத்த பாரதி”
நான் எழுத நினைத்தவை, இவற்றையும் தாண்டி, இன்னும் பலவும்
உண்டு…. அவற்றை, பின்னர் நேரம் வரும்போது பார்க்கலாம்.
இப்போது – காணொலி –
……………………
.
………………………………………………..
இந்த பேட்டியை நான் பார்க்கவில்லை. நான் படித்தவரையில் பாரதிதாசனுக்கு கொடுத்த முக்கியத்துவம் சுப்பிரமணி பாரதிக்கு கொடுக்கப்படவில்லை. திராவிட இயக்கத்தின் ஒரே கொள்கையான பிராமண எதிர்ப்பே இதற்கு காரணம் என்று நான் சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை
பெரியார் அப்போ இதைச் சொன்னார் அதைச் சொன்னார் என்று quote பண்ணுவதில் அர்த்தம் இல்லை. பெரியார் என்னன்னவோ, யார் யாரைப் பற்றியெல்லாமோ சொல்லியிருக்கிறார். தமிழ் காட்டுமிராண்டிகளின் மொழி என்று சொன்னார் (அவர் தெலுங்கர்). இந்தியா சுதந்திரமடையக்கூடாது என்று சொன்னார். இதையெல்லாம் தேவைக்கு ஏற்றபடி quote செய்துகொள்ளவேண்டியதுதான். பாரதிதாசன் அண்ணா கருணாநிதி போன்றவர்களின் ஒழுக்கத்தையும் காய்ச்சி எடுத்திருக்கிறார்.
பெரியாரும் தனிமனித ஒழுக்கம் பேண ஆரம்பித்தது காங்கிரஸில் ஒரு பதவிக்கு வந்த பிறகுதான். அதுவரை அவர் ஒழுக்கம் பேணியவரல்லர். திமுக தலைவர்கள், ஆரம்பம் முதலே ஒழுக்கத்தைப் பேணியவர்கள் அல்லர். அதுவும் அரசியல் மற்றும் கட்சி அதிகாரம் வந்தபிறகு, ஒழுக்கம் என்றால் வீசை என்ன விலை என்று கேட்கும் அளவுதான் அவர்களின் ஒழுக்கம் இருந்தது. எதற்கு தலைவர்கள் என்று சொல்வானேன், கருணாநிதி, அன்பழகன் போன்றோர். பல தாரத் திருமணங்கள், அவர்களின் ஒழுக்கக்கேடுகள் போன்றவை செய்தித்தாள்களில் பார்த்திருக்கலாம். மூன்றாம் தாரத்திற்குப் பிறந்த சொந்த மகளையே தன் மகள் என்று சட்டசபையில் சொல்லக் கூசியதே அதற்குச் சாட்சி. ஈவெராவுக்கோ, கடவுள் இல்லை என்றெல்லாம் மற்றவர்களுக்குப் புத்தி கூற முனைந்தவர், தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்க நெறி இல்லாதிருந்தால் அசிங்கம் என்று நினைத்து பிற்காலத்தில் அதனைத் தவிர்த்திருக்கலாம்.
நிற்க…பெரியார், பிராமண எதிர்ப்பையே தனது கொள்கையாகக் கொண்டவர். அப்படி இருக்கும்போது பாரதியாரை ஏற்றுக்கொள்வது திமுக தலைவர்களுக்கு முடியாததாக இருந்தது. அதனால் டூப்ளிகேட்டாக, பாரதிதாசனைப் போற்ற ஆரம்பித்தனர். ஆனால் ‘சரக்கு’ இருந்தால்தானே காலவெள்ளத்தில் அது நிற்கும். காலத்தை மீறி பாரதியாரும் அவர் படைப்புகளும் நிற்பதற்கு அதன் வீர்யம், வீச்சு, மொழி, கருத்து ஆகியவை காரணம். (பாரதிதாசனோ, பாரதியின் சாதி மதமற்ற தன்மை குறித்து நிறைய இடங்களில் certify பண்ணியிருக்கிறார், கூடவே இருந்து அவரைத் தன் தலைவனாகக் கொண்டது வரை)
பாரதியைப் பற்றி பெரியார் சொல்லியிருப்பதில் ஒரு சிறு பகுதி உண்மைதான். பாரதியார் கஞ்சா பழகியிருந்தார் (வடநாட்டில் இருந்ததன் விளைவு). ஒரு கலைஞனை, நாம் கலைஞனாகத்தான் பார்க்கணும். அவர்களை நாம் உலக அளவீடுகளைக் கொண்டு அளக்கக்கூடாது. அவர் உன்மத்தம் பிடித்திருந்தபோதுதான் கவிதைகள் பீறிட்டு எழுந்தது. ஒரு நாள் இரவும் மறுநாள் காலையும் பாரதியோடு எதேச்சையாக இருக்க நேர்ந்த நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளையவர்கள், தான் பார்த்ததை தனது ‘தன் வரலாற்றில்’ பதிவு செய்திருக்கிறார். அந்தப் பக்கங்களைப் படித்தாலே பாரதியின் குணாதிசயம் நமக்குப் புரியவரும்.
அவரின் இந்தப் பழக்கங்கள் (அப்போதைய பிராமணர்களின் அளவீடின்படி) மிகத் தவறாக இருந்ததால், ராஜாஜி பாரதியாருக்கு உதவவில்லை. பாரதியின் உறவினர்கள் யாருமே அவருடைய கஷ்டகாலத்தில் உதவவில்லை. ஆனா பாருங்க, பாரதி நூற்றாண்டு விழாவில் (அப்படி என்று நினைவு) எம்ஜிஆர் கையால் பாரதியின் உறவினர் பெரும் தொகை ஒன்றை அரசு விழாவில் வாங்கிக்கொண்டார். இதுபற்றியும் இணையத்தில் நான் படித்திருக்கிறேன் (ஒரு இளவும் பாரதிக்குச் செய்யாமல் காசை மாத்திரம் அரசிடமிருந்து வாங்கிக்கொண்டோம் என்பதுபோல)
ராமசாமி நாயக்கர் என அழைப்பதே சரி
சென்னைக்கு காந்தி வந்திருந்தபோது, அவரைச் சந்தித்த பாரதியார் (தைரியமாக வேக வேக நடையில் நேராக காந்தியிடம் சென்று), திருவல்லிக்கேணி கடற்கரைக் கூட்டத்திற்கு தலைமை தாங்க வரமுடியுமா என்று கேட்க, அதற்கு காந்தி, தன் இயலாமையைத் தெரிவிக்க, அதனாலென்ன பரவாயில்லை, உங்களுக்கு வாழ்த்துகள் என்று சொல்லி உடனே சென்றுவிட்டாராம். இந்த குணாதிசயத்தைப் பார்த்த காந்தி, இவர் பாதுகாக்கப்படவேண்டியவர் என்று அப்போதே சொன்னாராம்.
நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்? கூனிக் குறுகி சலாம் போட்டு, அசட்டுச் சிரிப்பு சிரித்து, தயவு செய்து……. வரமுடியுமா என்று காலில் விழாத குறையாகக் கேட்டிருப்போம். ஆனால் பாரதி had different personality. அப்படிப்பட்ட ஆன்மாக்களால்தான் பீறிட்டுக் கிளம்பும் கவிதைகளைப் படைக்க முடியும்.
(உடனே உங்கள் கண்களில் வெள்ளைக் குடை, கையை விடாமல் பிடித்துக்கொண்டு அசட்டுச் சிரிப்பு போன்றவையோ, இல்லை சோனியா இல்லத்துக்குச் சென்று அவர் காலில் விழுந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று சொன்னவரோ நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல)