…………………………………

…………………………………..

…………………………………….
( இங்கே -முதல் சில பத்திகளில் விவரிக்கப்படும் சம்பவங்கள்
நிகழ்ந்த கால கட்டங்களில் – நான் வடக்கே – டெல்லிக்கு மிக அருகே 25 மைல் தொலைவில், உத்திரப்பிரதேச பார்டரில் தான்
பணிபுரிந்து வந்தேன்… நடந்தவற்றை, மிகவும் அருகிலிருந்து பார்த்த அனுபவம்…எனக்குண்டு…. மிகவும் பரபரப்பான 3-4 வருடங்கள்
அவை… மறக்க முடியாத காலகட்டம் ….. !!! )
நேருவின் மகளும் தோற்பாரா என்றார்கள் மக்கள். நெருக்கடிநிலைக் காட்டாட்சிக்குப் பிறகு நடந்த 1977 பொதுத் தேர்தலில், ஆட்சியை
இழந்ததோடு தன்னுடைய சொந்த தொகுதியையும் இந்திரா காந்தி இழந்திருந்தார்.
மக்களவையின் 542 தொகுதிகளில் 299 இடங்களை வென்று ஜனதா
கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் 153 இடங்களை மட்டுமே
பெற முடிந்ததால், அதன் முப்பதாண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்து
எதிர்க்கட்சி வரிசையில் உட்கார வேண்டியிருந்தது. நாட்டிலேயே
பெரியதும் நேரு குடும்பத்துக்கு நெருக்கமானதுமான உத்தர
பிரதேசத்தின் அத்தனை தொகுதிகளிலும் காங்கிரஸ் தோற்றிருந்தது.
ரே பரேலி தொகுதியில் 55 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில்
தோற்றிருந்தார் பிரதமர் இந்திரா.
முந்தைய ஆட்சியில் சர்வ வல்லமையுடன் திகழ்ந்த அவருடைய மகன்
சஞ்சய் காந்தி 75 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அமேதி
தொகுதியில் தோற்றிருந்தார். சஞ்சய் காந்தி அரசியலிலிருந்தே
விலகுவதாக அறிவித்தார்.
சுதந்திர இந்தியாவின் காங்கிரஸ் அல்லாத முதல் அரசின் புதிய
பிரதமராக மொரார்ஜி தேசாய் அமர்ந்தார். இந்திராவால் இந்தத்
தோல்வியை எதிர்கொள்ள முடியாது; அவர் அரசியலிலிருந்து
ஒதுங்கிவிடுவார்; எங்கேனும் வெளிநாட்டுக்குச் சென்றுவிடுவார்
என்று பலர் எண்ணினார்கள். முன்னதாக நேருவின் மறைவுக்குப் பின்
அப்படி ஒரு யோசனையும் இந்திராவுக்கு இருந்தது. அந்தத் தருணத்தில் பிரிட்டன் சென்றுவிடலாம் என்று எண்ணியவரை அப்போது தடுத்து நிறுத்தியவர் காமராஜர்.
புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றவர்களுக்கு நாட்டை முன்னகர்த்துவதைக் காட்டிலும் காங்கிரஸை முடக்குவதில் பெரும் முனைப்பு இருந்தது.
இந்திரா மீது தாளாத வெறுப்பு பல தலைவர்களுக்கு இருந்தது.
அரசியலிலிருந்து இந்திரா விலக வேண்டும்; அதேசமயம் அவர் வெளிநாட்டுக்கும் சென்றுவிடக் கூடாது; இங்கே தங்கள் முன் குறுகி
நிற்க வேண்டும் என்ற சிந்தை அவர்களை ஆக்கிரமித்திருந்தது.
இந்திராவின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது.
இந்திரா இனி வாழ்வும் சாவும் இந்திய அரசியலில்தான் என்பதில்
இப்போது தீவிர உறுதியோடு இருந்தார். தன்னுடைய தோல்வியை
ஆத்ம பரிசோதனைக்கான வாய்ப்பாகப் பார்த்தார் என்றும் சொல்லலாம். முந்தைய ஆட்சியில் தன்னால் தவறிழைக்கப்பட்டவர்கள் பலரை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார். கட்சிக்காரர்களோடும் மக்களோடும் தன்னுடைய உறவையும் நெருக்கத்தையும் அதிகரித்தார்.
இந்திராவைக் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பதில்
ஜனதா கூட்டணித் தலைவர்கள் இடையே போட்டியே இருந்தது என்று சொல்லலாம். கொஞ்ச காலம் ஆகட்டும்; படிப்படியாக அவரை நிலைக்குலைவுக்கு ஆளாக்கலாம் என்ற அணுகுமுறையை அவர்கள் கையாண்டார்கள்.
இந்திரா அப்போது சப்தர்ஜங் சாலையின் முதலாவது வீட்டில்
வாழ்ந்துவந்தார். வீட்டைக் காலி செய்யச் சொன்னது அரசு. அது
பிரதமருக்கு உரிய இல்லம் இல்லை; அமைச்சர்கள் அல்லது அதிகாரிகள் வாழ்வதற்கான ஒதுக்கீட்டு வரிசையில் இருந்தது. இந்திராவுக்கு
அது பிடித்திருந்ததால் அங்கே வாழ்ந்தார். இப்போது பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு அந்த வீடு பிடித்திருப்பதாகவும் அவர் அங்கே வசிக்க விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்திரா திகைத்துப் போனார்.
இந்திரா வாழ்வின் அசாதாரண தருணம் என்று அதைச் சொல்லலாம்.
இந்திரா தன்னுடைய மகன்கள், மருமகள்கள், பேரப் பிள்ளைகளோடு வாழ்ந்துவந்த வீடு அது. “எனக்கு உடனடியாக எங்கே செல்வது என்று
அந்தத் தருணத்தில் தெரியவில்லை; எனக்கு என்று சொந்த வீடு
என்ற ஒன்றை நான் கற்பனை செய்யவில்லை என்பதைக்கூட
அப்போதுதான் உணர்ந்தேன்” என்றார்.
இந்திய அரசியல் தலைவர்களின் வீடுகளிலேயே பிரசித்தி பெற்ற வீடு அவருக்குச் சொந்தமான ‘ஆனந்த பவன்’. அன்றைய அலகாபாத்தில்
உள்ள அந்த வீடு உள்ளபடி ஒரு மாளிகை. 20 ஏக்கர் பரப்பில் 1871-ல்
கல்வியாளர் சையது அஹம்மது கானுக்காக ‘மஹம்மது மன்ஜில்’
என்ற பெயரில் பிரிட்டிஷ் ஆளுநர் வில்லியம் முய்ர் முன்னெடுப்பில் உருவாக்கப்பட்டு, பின்னர் சிதைந்துவிட்டிருந்த கட்டிடத்தை 1900-ல்
மோதிலால் நேரு வாங்கினார்.
கிழக்கு – மேற்கு இணைந்த பண்பாட்டைப் பிரதிபலிக்கும் மாளிகையாக அதை மீட்டுருவாக்கினார். ‘ஆனந்த பவன்’ என்று பெயரிடப்பட்ட அந்த மாளிகையில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பொருளும் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் தருவிக்கப்பட்டவை.
மோதிலால் நேருவைப் போலவே, மகன் ஜவஹர்லால் நேருவும் பிற்பாடு காங்கிரஸில் தன்னைக் கரைத்துக்கொண்டதால், இந்திய விடுதலைப் போராட்டத்தின் மையங்களில் ஒன்றாக அந்த வீடு மாறியது. காங்கிரஸ் அலுவலகம்போலவே மாறிவிட்டிருந்த வீட்டை 1931இல் ‘சுயராஜ்ய பவன்’ என்ற பெயரில் கட்சிக்கு ஒதுக்கிவிட்டு, அதன் அருகிலேயே இன்னொரு வீட்டைக் கட்டி அதில் குடியேறினர்.
பிரம்மாண்டமான அந்த வீட்டையும் சேர்த்து, சில ஆண்டுகளுக்கு
முன்புதான் – 1970-ல் – நேருவின் நினைவாக நாட்டுக்கு
அர்ப்பணித்திருந்தார் இந்திரா. 42 அறைகளைக் கொண்ட மாளிகையை நாட்டுக்கு அர்ப்பணித்த குடும்பத்தைத்தான் நடுத்தெருவில் கொண்டு
வந்து நிறுத்தியிருந்தனர் ஜனதா கூட்டணியினர்.
இந்திராவின் குடும்ப நண்பரான முஹம்மது யூனூஸ் தன்னுடைய
ஒரு வீட்டை உடனடியாகக் காலி செய்து கொடுக்க அங்கே இந்திராவின் குடும்பம் குடியேறியது. இந்திராவின் உதவியாளர்கள் பலரும்
வெளியேறினர். தனிச் செயலர் ஆர்.கே.தவான் மட்டும், “எனக்கு
ஊதியம் ஏதும் வேண்டாம், நான் வேலையைத் தொடருகிறேன்”
என்று உடன் இருந்தார். இந்திராவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது.
ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்கள் கழிந்த நிலையில் இனியும் பொறுக்க
முடியாது என்று தோன்றியதுபோல, 1977, காந்தி ஜெயந்திக்கு மறுநாள்
(அக்.3) இந்திரா கைதுசெய்யப்பட்டார். தன்னைக் கைதுசெய்ய
வந்தவர்களிடம் “விலங்கு ஏதும் கொண்டுவந்திருக்கிறீர்களா?”
என்று சிரித்தபடியே கைகளை இந்திரா நீட்டினார். மும்பையில் மேற்கொள்ளப்பட்ட பெட்ரோலியத் திட்டம் ஒன்றில் அரசின் முடிவால்
இழப்பு ஏற்பட்டதாகக் கூறி வழக்கு தொடர்ந்திருந்தார்கள்.
முகாந்திரம் இல்லாத குற்றச்சாட்டு என்று கூறி அன்று மாலையே
இந்திராவை நீதிமன்றம் விடுவித்தது.
அடுத்த ஆண்டில் கர்நாடகத்தின் சிக்மகளூர் தொகுதியில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினரை ராஜிநாமா செய்ய வைத்து, அந்தத்
தொகுதியில் போட்டியிட்டு வென்றார் இந்திரா. ஆனாலும், அவர் நாடாளுமன்றத்தில் நுழைவதை விரும்பாத ஜனதா கூட்டணி அரசு
அவர் ‘நாடாளுமன்ற உறுப்பினர்’ பதவியை ஏற்பதற்கு முன்பே நாடாளுமன்ற உரிமை மீறல் குற்றத்தை இந்திரா இழைத்திருப்பதாகச்
சொல்லி அவருடைய பதவியைப் பறிப்பதாக அறிவித்து,
அவரைச் சிறையில் அடைத்தது.
மக்கள் அதிர்ச்சியோடும் கலக்கத்தோடும் எல்லாவற்றையும் பார்த்திருந்தார்கள். இந்திராவையும் காங்கிரஸையும் கடந்த காலத் தவறுகளுக்காக மோசமாக அவர்கள்தான் தண்டித்தவர்கள். ஆனால்,
ஒரு மக்கள் தலைவர் இவ்வளவு மோசமாக நடத்தப்படுவதை
அவர்களால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. இந்திராவை
இழிவுபடுத்தும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றுக்கும் மொரார்ஜி அரசு
கூறிய ஒரே நியாயம், “இந்திரா இப்போது சாதாரண பிரஜைதானே!”
இதன் இடையிலேயே ஜனதா கூட்டணிக்குள் ஏகப்பட்ட கோஷ்டிகள்,
அதிகாரச் சண்டைகள். கடைசியில் இரண்டரை ஆண்டுகளில் ஜனதா
கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது. அடுத்து வந்த 1980 தேர்தலில்
ஜனதா கூட்டணியை வீழ்த்தி, 351 இடங்களில் வென்றது இந்திராவின் காங்கிரஸ். இந்திரா இந்த இரண்டு தொகுதிகளில் நின்று இரண்டிலுமே வென்றிருந்தார்.
ஜனநாயக அரசியலில் –
சாதாரண பிரஜைதான் அதிக சக்தி மிக்கவர்…!
இன்றைக்கு ராகுல் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி
நீக்கப்பட்டு, அவருடைய வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் சூழலைப் பார்க்கும்போது, நாட்டின் முதல் பெண் பிரதமரும் அவருடைய
பாட்டியுமான இந்திராவுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள்
தவிர்க்க இயலாமல் நினைவுக்கு வந்து செல்கின்றன. “அது எப்படி
எல்லாத் திருடர்களின் பெயர்களிலும் மோடி எனும் பெயர் வருகிறது?”
என்று ஒரு கூட்டத்தில் ராகுல் பேசியதைக் கண்டித்து தொடரப்பட்ட
வழக்கில், ஒரு சமூகத்தையே ராகுல் இழிவுபடுத்திவிட்டதாகக் கூறி
அவருக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
இப்படி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டதன் தொடர் நடவடிக்கை
என்ற பெயரில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் அவருடைய
நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த
தொடர் நடவடிக்கையாக அரசு அவருக்கு அளித்த இல்லத்தைக்
காலி செய்ய சொல்லி உத்தரவு பறந்திருக்கிறது.
ராகுல் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவாகக்
குறிப்பிட்டிருந்தாலும் அது கண்டிக்கத்தக்க செயல். ஆனால், இங்கே
ராகுல் குறிப்பிடுவது மோடி எனும் சமூகத்தையா, தனிநபரையா
என்பது வெளிப்படை.
ஒருவர் தன்னுடைய பெயரில் சாதியின் பெயரையும்
சேர்த்துக்கொள்வார்; பெயர் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும்போது
சாதியை இழிவுபடுத்திவிட்டதாக இன்னொருவர் வழக்கு தொடர்வார்; நீதிமன்றமும் அப்படியே சமூகத்தை இழிவுபடுத்திவிட்டதாகக்
கருதும் என்றால், இனியேனும் எவரும் தன்னுடைய பெயரில் சாதியைச் சேர்க்கக் கூடாது என்ற இடம் நோக்கி இந்தச் சமூகம் நகர்வதே
உத்தமமாக இருக்க முடியும்.
பலர் ராகுல் மீதான நடவடிக்கையை முன்வைத்து சட்டபடி
இந்த நடவடிக்கை சரியா என்று விவாதிக்கிறார்கள். உள்ளபடி
அவதூறுச் சட்டம் போன்ற ஜன விரோதச் சட்டங்கள் இனியும்
நீடிப்பது சரியா என்றே நாம் விவாதிக்க வேண்டும்.
மோடி அரசு எந்த விமர்சனத்தையும் துளியும் பொறுத்துக்கொள்ள
முடியாது எனும் நிலை நோக்கி இன்று நகர்ந்திருக்கிறது.
பிபிசி வெளியிட்ட செய்தி அறிக்கைக்கான அரசின் எதிர்வினைகள்
விமர்சனத் தளத்தில் உள்ள ஊடங்கள், கருத்துருவாக்கர்கள், பத்திரிகையாளர்களுக்கான பகிரங்க மிரட்டல். இதற்கு முன்னதாகவே ராகுலைக் குறிவைத்து இந்த அரசு நடத்திவரும் தாக்குதல்கள் எதிர்க்கட்சிகளுக்கான பகிரங்க மிரட்டல்.
எவரும் கண்ணியத்தோடு பேசவும் செயல்படவும் வேண்டும்
என்பதைக் கொள்கையாகக் கொண்டவன் நான். ஆயினும்,
ஜனநாயகம் கொடுந்தாக்குதலுக்கு ஆளாகும் நாட்களில்,
அதற்கு எதிராகக் கூப்பாடு போடுபவர்களின் வார்த்தைகளில்
கண்ணியம் குறைந்திருப்பதே பிரதான குற்றம் என்று ஒருவர்
சொன்னால், அவர் காரியக்கார முட்டாளாகத்தான் இருக்க முடியும்.
நம்முடைய கவனம் ஜனநாயகச் சீர்குலைவின் மீதே
இருக்க வேண்டும்.
ஜனநாயகத்தின் உயிர் சக்தி எதிர்க்குரல்கள்.
ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் இணைந்தே ஆட்சி மன்றத்தை
அர்த்தப்படுத்துகின்றன.
இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவரே இல்லாத நாடாளுமன்றத்தை நடத்திக்கொண்டிருக்கும் பிரதமர் மோடி புதிதாகக் கட்டப்பட்டுவரும் நாடாளுமன்றக் கட்டிடத்தைப் பார்வையிடும் படங்கள் இந்த சமயத்தில் வெளியாகி இருப்பது வரலாற்று முரண்.
தலைவர்களைக் காலம்தான் உருவாக்குகிறது.
அரசியலில் நுழையும்போது, பலரும் விமர்சித்ததுபோல் ஓர்
இளவரசராகத்தான் களத்தில் இறங்கினார் ராகுல்; சரியாக இரு தசாப்தங்களுக்குப் பின் கட்சிப் பதவி, ஆட்சிப் பதவி எதுவும்
இல்லாமல் சாதாரண பிரஜை – சாமானியன் என்ற இடத்தில்
இன்று மக்கள் முன் அவர் நிறுத்தப்பட்டிருக்கிறார்.
பிரதமர் மோடிக்குத் தெரியாதது இல்லை… ஜனநாயகத்திலேயே
சக்தி வாய்ந்த பதவி அதுதான் ….!
(நன்றி – ஆசிரியர் சமஸ்….)
.
………………………………………………..
வந்துவிட்டார் அடுத்த திமுக ஜால்ரா. பத்திரிகையாளர் என்ற போர்வையில் இந்த மாதிரி விலை போனவர்கள் இருப்பதால்தான் அந்தத் துறையில் உள்ள பெரும்பாலானவர்களைப் பற்றியும் சந்தேகப் பார்வையும், “வந்துட்டான்யா யோக்கியன் சொம்பை உள்ளே எடுத்துவை” என்பதுபோலும் தோன்றுகிறது.
இந்திரா மிகவும் அதிகார மமதையோடு அப்போது கட்சியில் இருந்த மூத்தவர்கள் அனைவரையும் ஒடுக்கி, தன் குடும்பம், தன் கொத்தடிமைகள் என்று காங்கிரஸ் கட்சியைத் தன்னுடையதாக மாற்றியிருந்தார். அதனால் மனதளவில் வெறுப்பு கொண்டிருந்த காங்கிரஸ் அரசியல்வாதிகள் அவருக்கு எதிராக அதீதமாகச் செயல்பட்டனர் என்பது உண்மைதான். புதிய அரசை அமைத்ததுவரை சரியாக இருந்தவர்கள் அடுத்து சுயநலத்தில் மூழ்கினர். இதுதான் மொரார்ஜி தேசாய் தலைமையிலான காங்கிரஸ்காரர்களுக்குப் பெரிய பின்னடைவைத் தந்தது. இந்திரா மற்றும் காங்கிரஸ் இல்லாவிட்டால் இந்தியாவை வேறு யாரும் ஆளமுடியாது என்று பொதுமக்கள் எண்ணவைக்கும்படியாக இவர்களது செயல்கள் இருந்தன. தங்கம் விலை குறைப்பு, ஊழல் இல்லாத ஆட்சி என்று மொரார்ஜி தேசாய் செய்தவைகளை இவர்களின் கோமாளித்தனங்கள் பின்னுக்குத் தள்ளி, சரண்சிங் என்றெல்லாம் திசை திரும்பி மொத்தமாக இவர்களது ஆட்சிக்கு முடிவுரை எழுதியது.
//அதற்கு எதிராகக் கூப்பாடு போடுபவர்களின் வார்த்தைகளில்
கண்ணியம் குறைந்திருப்பதே பிரதான குற்றம் என்று ஒருவர்
சொன்னால், அவர் காரியக்கார முட்டாளாகத்தான் இருக்க முடியும்// – சமஸ், உத்திரப் பிரதேசக் காரரா இல்லை அஸாமில் வாழ்கிறாரா? தமிழகத்தில் ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் விதமாக ஒவ்வொரு எதிர்க்குரலையும் சிறையில் திமுக அரசு தள்ளியபோதும், காவல்துறை பெண்மணியிடமே சில்மிஷம் செய்ததற்கு, காவல்துறை பெண்ணிடமே குற்றச்சாட்டை வாபஸ் வாங்கச் சொல்லி, இன்னும் எழுத எழுதத் தீராத குற்றங்கள் இங்கு நடைபெற்றபோது, பாவம் சமஸ் கவனித்திருக்கமாட்டார். தமிழகத்தில் இருந்திருந்தால், நிச்சயம் நியாயமான பத்திரிகையாளராக குரல் எழுப்பியிருப்பார். அவர்தான் அஸாமில் வாழ்ந்துகொண்டிருக்கிறாரே. அவருக்கு பணவரவு, பாஜகவை எதிர்த்து எழுதினால்தானே கிடைக்கும்.
//சரியாக இரு தசாப்தங்களுக்குப் பின் கட்சிப் பதவி, ஆட்சிப் பதவி எதுவும் இல்லாமல் சாதாரண பிரஜை – சாமானியன் என்ற இடத்தில்// – உண்மைதான். இந்தியாவில் இவருக்கு என்று வீடு இல்லை (ஆனால் பில்லியன் டாலர் சொத்துக்களைப் பற்றி பேசக்கூடாது). அவர் சாதாரண பிரஜை. அதனால்தான் கர்நாடக தேர்தலில் ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம், ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் 2000 ரூபாய், 20 கிலோ அரிசி இலவசம் என்று அறிவிக்க முடிகிறது (ஏன் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இதனைக் கொடுக்கமுடியவில்லை என்று கேட்கக்கூடாது. இவர் சாதாரண பிரஜை)
புதியவன்,
உங்கள் பின்னூட்டங்கள் அநேகமாக
ஒருதலைப்பட்சமாகவே இருக்கின்றன. உங்களுக்கு
பிடிக்காததை, அல்லது நீங்கள் விரும்பும் கட்சிக்கு
எதிராக யாராவது எழுதினாலோ, பேசினாலோ – உடனே
அவர் காசு வாங்கி விட்டார் என்று எழுதி விடுகிறீர்கள்.
பத்திரிகையாளர் மணி, திமுகவுக்கு எதிராக பேசினால்
நீங்கள் பாராட்டுவீர்கள்.
ஆனால், அதே மணி திமுகவுக்கு ஆதரவாக பேசினால்,
பெட்டி வாங்கி விட்டார் என்கிறீர்கள்.
அவர் பார்வையோடு நாம் ஒத்துப்போகிறோமோ
இல்லையோ – ஆனாலும், சமஸ் ஓரளவு நிதானமாக,
டீசண்டாக எழுதக்கூடியவர் என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஆனாலும், அவர் ராகுலுக்கு சாதகமாக எழுதி விட்டார் என்பதால்,
அவரையும் கேவலப்படுத்துகிறீர்கள்…
நீங்கள் நினைப்பதைத்தான் எல்லாரும் பேச வேண்டும்…
எழுத வேண்டும் – இல்லையென்றால் அவர்களை
இழிவு படுத்துவீர்கள்…. அப்படித்தானே….?
இது தான் உங்கள் பின்னூட்ட பாலிசியாக
இருக்கிறது….
இங்கே என்ன சொல்கிறீர்கள் பாருங்கள் –
// அவர் சாதாரண பிரஜை. அதனால்தான்
கர்நாடக தேர்தலில் ஒவ்வொரு வீட்டிற்கும்
200 யூனிட் மின்சாரம் இலவசம், ஒவ்வொரு
குடும்பத் தலைவிக்கும் மாதம் 2000 ரூபாய்,
20 கிலோ அரிசி இலவசம் என்று அறிவிக்க
முடிகிறது..//
கர்நாடகாவில் பாஜக ஆட்சி எந்த லட்சணத்தில்
நடக்கிறது…? அத்தனை பேரும் சொல்கிறார்கள்
40 % கமிஷன் ஆட்சி என்று…
தேர்தலில் வேட்பாளர் பட்டியல்
வெளியிட தவியாய்த் தவிக்கிறார்கள்…
வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது…. கர்நாடகாவில்
கட்சியும் சரி; ஆட்சியும் சரி – எந்த லட்சணத்தில்
இருக்கிறதென்று….
பின்னரும் ஏன் நீங்கள் வக்காலத்து வாங்குகிறீர்கள்…?
பாஜக- காரர் லஞ்சம் வாங்கினால், ஊழல் செய்தால்,
உங்கள் நியாயப்படி அவற்றை கண்டுகொள்ளவே
கூடாதா….?
பின்னூட்டம் என்பது உங்கள் மனசாட்சியை
வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
உங்கள் கட்சிக்கான ஜால்ரா ஓசையை அல்ல.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
சமஸ் எந்தக் காலத்தில் நிதானமாக டீசண்டாக எழுதினார்? அவர் திமுகவின் ஜால்ராதான். அவர் எப்படி பவ்யமாக பதுங்கிப் பதுங்கி கருணாநிதியிடம் பேட்டி எடுத்து வெளியிட்டார், அவரது திராவிடச் சிந்தனை பதிவுகள் பலவற்றை நான் படித்திருக்கிறேன். ஓட்டை ஒடிசல் வீட்டுல உள்ளூர்ல இருந்துக்கிட்டு ஒருத்தன், உளுந்தூர்பேட்டை வீட்டில் ஒரு சுவர் இல்லைனு குறை சொல்ற மாதிரி சமஸ் எழுதுவார். திமுகவின் குற்றங்கள் எதுவும் அவருக்குக் கண்ணில் படாது. பட்டால் அவர் வேலைக்கு ஆபத்து அல்லவா? ஒதுக்கப்படவேண்டிய முரசொலி எழுத்து சமஸ்ஸினுடையது, குறைந்தபட்சம் இந்தக் பதிவில்.
மணியை கம்யூனிஸ்ட் மணி என்றே பலர் சொல்வார்கள். அவருடைய காணொளிகளைப் பார்த்தால், ஒரேயடியாக திமுகவின் கால்களின் விழுந்து அவர்கள் சார்பாக ஆவேசமாகக் கொடுத்த பேட்டிகள் அதிகம். திடுக்கென்று திமுக எதிர்ப்புக் குரல் எழுப்ப ஆரம்பித்தார். பிறகு பாஜக எதிர்ப்பு. அதனால் சீசனல் பத்திரிகையாளர் மணி என்று நான் சொல்கிறேன்.
முன்பும் பொருளாதாரப் புளி ஜெயரஞ்சனைப் பற்றி இங்கு எழுதியிருந்தேன். அவர் சொல்வதை நம்பவேண்டாம். அவர் திமுக ஆள் என்று. நான் எழுதியதே சரி என்று அவர் நிரூபித்தார். திமுக தேர்தல் மேடையில் ஏறினார், பதவி வாங்கினார், பதுங்கிப்போனார். பெண்களுக்கு ஓசி பேருந்து பயணம் என்பதால் ஒவ்வொரு குடும்பமும் மாதம் 3000 சேமிக்கிறது என்று கூசாமல் ஜால்ரா போடுகிறார்.
அது சரி..நான் கர்நாடகாவில் பாஜக நன்றாக ஆட்சி செய்தது என்று எங்கேயாவது குறிப்பிட்டிருக்கிறேனா? கர்நாடகாவில் பாஜக இயல்பாக வளர்ந்த கட்சி இல்லை (பாண்டிச்சேரியிலும் அதே கதை). பாப்புலர் லீடர்கள்/ஜாதித் தலைவர்களை வளைத்துப்போட்டு பதவி கொடுத்து அதிலிருந்து வளர்ந்த கட்சி. கர்னாடக ட்ரெடிஷனலாக காங்கிரஸ் சார்பு மாநிலம். பொம்மை அரசில் கமிஷன், செயல்படாமை என்று உச்சத்தில் இருந்தது. மோடி வரும் நேரத்தில் ரோடு வேலைகள், சாலைகளைச் சீர் செய்வது என்று சமீபத்தில் செய்தார்கள். இவை எதுவும் அவர்களுக்குத் தேர்தலில் உதவப்போவதில்லை. இந்தத் தடவை 50 சீட்டுகளைத் தாண்டினாலே எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். காங்கிரஸ் 110ஐத் தாண்டும் என்று நம்புகிறேன். காரணம், முஸ்லீம் வாக்குகள் மற்றும் பாஜகவின் செயலின்மை/ஊழலில் வெறுத்த பொதுமக்கள். எனக்கு குமாரசாமிக்கு நிறைய இடங்கள் கிடைக்குமா அல்லது ஒரேயடியாக காங்கிரஸுக்குச் செல்லுமோ என்ற சந்தேகம். ஆனால் காங்கிரஸும் அதன் தலைவர்களில் ஒருவரான சிவக்குமாரும் ஊழலில் குறைந்தவர்கள் அல்லர். இடங்களையெல்லாம் வளைத்துப்போட்டுள்ளவர் சிவகுமார், சோனியாவின் பினாமி என்றே சொல்கிறார்கள். பாஜக deliver செய்யவில்லை. அதனால் கடுமையாகத் தோற்கப்போகிறார்கள். தனக்கான களமாக இதனை உபயோகிக்க, ராகுல் தானே முன்னின்று இலவசங்களை அறிவிக்கிறார். அவ்ளோதான்.
திமுகவின் அரசியல் எனக்கு ஆச்சரியம் தருகிறது. எப்படி யாரும் யோசிக்காதபோது ஆங்காங்கே ஆள் பிடித்து அதையும் வெளிப்பாயாக தெரியாதவாறு, நன்கு அரசியல் தெரிந்தவர்களுக்கு கூட புலப்பதாவாறு இவ்வளவு நாளாக கட்சி வரலர்கிறார்கள் என்று! திமுக ஆதரவு பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக போராளிகள் யாரும் தாங்கள் திமுக ஆதரவாளர்கள் என்று காட்டிக்கொள்ளாதவர்கள்.
ராகுல்க்கு எதிரான தீர்ப்பு மற்றும் தகுதி இழப்பு எல்லாம் அதிகம். பிஜேபி நடுநிலை போல காட்டிக்கொள்வதே அவர்களுக்கு பயனளிக்கும் என்றே எனக்கு தோன்றுகிறது.
இத்துடன் விளையாட்டுச் செய்திகள் நிறைவடைந்தன – கட்டுரையாளர்
ராகுல் எவ்வளவு கீழ்த்தரமாக பேசினார். அதை நியாயப்படுத்த முனைவது வருத்தப்பட வேண்டியது.
ராகுல் இப்படி பேசுவது இது முதல் முறையல்ல. முன்பு உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
ராகுலை முதலில் தலைவர் என்று கூப்பிடவே உங்களுக்கு கூசவில்லையா ?
110 கோடி மக்களையும் காக்க , அண்டை நாடுகளான சீனா,பாக்கிஸ்தான், மற்றும் ஐரோப்பா,அமெரிக்கா போன்ற நாடுகளையும் , அவர்களின் சுயநலத்தையும் தொடர்ந்து எதிர்த்து இவரை போன்ற குழந்தையால் தீரத்துடன் போரிடமுடியுமா ?
மோடி போன்ற தலைவர் மட்டும், இந்த இக்கட்டான நேரத்தில் நம்மை வழிநடத்தவில்லையெனில், இந்நேரம் அமெரிக்கா,ஐரோப்பா நாடுகளின் நரி தந்திரங்களுக்கு நாம் பலியாகி இருப்போம்.உக்ரைன் பிரச்சினைக்கு நாம் பலியாடாக மாட்ட பட்டிருப்போம் .இந்நேரம் அவர்கள் நம் நாட்டின் மீது, பொருளாதார தடைகளை நிச்சயம் கொண்டு வந்து, நம்மை அடிபணிய வைத்திருப்பார்கள்..இலங்கை, பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட கதி தான் நமக்கும் உறுதியாக ஏற்பட்டிருக்கும்.
மோடி, ஜெய்ஷ்ங்கர் போன்ற பலமான ஆளுமைகளுடன் களத்தில் உள்ள இந்தியாவை அடிபணிய வைக்க, மேற்குலக மீடியாக்களே திணறுகின்றன. அவர்களின் மீடியா தந்திரங்கள் இவர்களின் திறமையினால் பல தடவை மண்ணை கவ்வியிருக்கின்றன .
இப்பொழுது உள்ள பெட்ரோல் சார்ந்த அரசியல் நகர்வுகளில் நாம் பட்டும் படாமலும் தொடந்து பயணிக்க வலுவான தலைமை தேவை.
நடைபயணம் செய்துவிட்டு வந்தாலே, தலைமை பண்பு வந்துவிடும் என்று நான் நம்பவில்லை.
மேடையில் ஒழுங்காக , பிரச்சினை இல்லாமல் பேச தெரியாத கை குழந்தை தான் அவர்.
அவரை நான் குழந்தையாக மட்டுமே ரசிக்க முடியும், அதற்காக தலைமை பதிவுக்கு போட்டியிட்டால் ,
இவரை ரசிப்பதற்கு இதற்க்கு மேலும் என்னால் முடியாது .
…
கர்நாடகாவில் பாஜக ஆட்சி எந்த லட்சணத்தில்
நடக்கிறது…? அத்தனை பேரும் சொல்கிறார்கள்
40 % கமிஷன் ஆட்சி என்று…
வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது…. கர்நாடகாவில்
கட்சியும் சரி; ஆட்சியும் சரி – எந்த லட்சணத்தில்
இருக்கிறதென்று….
பாஜக- காரர் லஞ்சம் வாங்கினால், ஊழல் செய்தால்,
உங்கள் நியாயப்படி அவற்றை கண்டுகொள்ளவே
கூடாதா….?
பின்னரும் ஏன் நீங்கள் கண்களையும், காதுகளையும்
மூடிக்கொண்டு
வக்காலத்து வாங்குகிறீர்கள்…?
..
பிஜேபியில் ஊழல் நிச்சயம் உள்ளது. யாரும் இங்கு மறுக்கவில்லை.மற்றவர்களை போல நானும் பிஜேபிக்கு முட்டு கொடுக்கவில்லை. ஆனாலும், நாம் கெட்டவர்களிலேயே, நல்ல கெட்டவர்களை அடையாளம் காணவேண்டிய நிலையில் தான் உள்ளோம். இங்கு காமராஜரே போட்டியிட்டாலும், நாம் ஒன்றும் அவருக்கு ஓட்டு போட்டு பிரதமராகவோ,முதலமைச்சராகவோ, ஏன் கொன்சிலராகவோ கூட அவரை தேர்ந்தெடுக்க தயாராக இல்லை, என்பதையும் ஒத்துக்கொள்ளவேண்டும்.மக்களே கேடுகெட்ட தனத்தை கொண்டுள்ளார்கள். ஓட்டு போட லஞ்சம் கேட்கிறார்கள் .இந்த இழிநிலை மக்களுக்கு காமராஜர் கிடைப்பாரா ?
ஆனாலும் குறைந்தபட்சம் ஓரளவு நாட்டுப்பற்றை மனதில் கொண்டு, நாம் ஏன் குடுமபம் இல்லாத தலைவனை தேர்ந்தெடுக்க கூடாது ? சிறிதளவும் குடும்ப பற்றே இல்லாத மோடி, நிச்சயம் தனது மனைவிக்கோ, சகோதரருக்கோ, தாய்க்கோ, தந்தைக்கோ எதுவும் கொள்ளையடித்து கொடுத்துவிட போவதில்லை. அவர்களையும் தனது பெயரை கூட பயன்படுத்தி, எங்கும் சலுகைகளை அனுபவிக்க அனுமதிப்பதில்லை . குடும்பமே இல்லாத அவர் நிச்சயம் நமது மாநில கழக குடும்பம் போல, பல தலைமுறைகளுக்கு மேலும் மேலும் ஊழல் செய்து சொத்து சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.இதுவரையிலும் அவர் இந்தனை கோடி சொத்து சேர்த்துள்ளார், ஊழல் செய்கிறார் என்று கை நீட்டி குற்றசாட்டை வைக்க இயலவில்லை. இந்த காரணங்கள் போதுமானவை..சில அமைச்சர்கள் கொள்ளை அடிக்கிறார்கள் ,அமிட்ஸா ,நிதின் கட்கரி என்று சிறிய பட்டியலை தான் தொடர்ந்து பார்க்கிறேன்.
இந்த இடத்தில் ஆலமரம் போன்ற குடும்பத்தின் தலைமையில் கட்சி நடத்தும் காங்கிரஸை வைத்து பாருங்கள்.
அவர்கள் குடுமபத்திற்கே, தாய்,தந்தை,இளவரசர்,அவர் சகோதரி, மாமா , அவர் தம் பிள்ளைகள் என மிக பெரிய கொள்ளைக்கார பட்டியல் உள்ளது. இதனுடன் ஒவ்வொரு அமைச்சர்களும் உள்ளனர். இவர்களை கொள்ளையடிக்க அனுமதித்தால்….நாடு தாங்குமா …
பல்வேறு ஊழல் வழக்குகளில், கட்சியை நடத்தும் குடும்பமே பலமுறை சிக்கியிருக்கிறதே..இவர்களுக்கு ஊழல் பணம் எந்த கட்டத்திலாவது திருப்தி ஏற்படுத்துமா? நிறுத்துவார்களா ?
சாத்தியமே இல்லை…They are waiting …..