…………….

……………………………………………………………………………………………………………………………………….…….
விமரிசனம் தள நண்பர்கள் அனைவருக்கும், அவர்களது இல்லத்தினர் அனைவருக்கும், எனது உளமார்ந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்….ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா மற்றும் அல்வா-வுடன்….!!!
.
அன்புடன்,
-காவிரிமைந்தன்
………………………………………………………………………………………………………………………………………………….
அல்வா கொடுப்பது தெரியும்….
சாப்பிடவும் தெரியும்….
ஆனால், எவ்வளவு பேருக்கு கிண்டத்தெரியும் …. ?
அதனாலென்ன – தெரிஞ்சுக்கிட்டா போச்சு….!!!
…………….
.
……………………………………………
இந்த அல்வாவினால் நமக்கு உபயோகம். அண்ணாமலை கிண்டிய அல்வாவால் உபயோகம் இருக்குமா?
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.
ஒரு காலத்தில், communication, mode of transport etc. இல்லாதபோது அந்த அந்த இடத்திற்கே உரிய ஸ்பெஷல் ஐட்டம் பிரபலமானது, பெரிதாகப் பேசப்பட்டது. ஆனால் காலங்கள் மாறியபிறகு, அந்த ஸ்பெஷாலிட்டி இல்லை என்றே நான் நினைக்கிறேன். நான் நிறைய இடங்களுக்குப் பயணப்பட்டு உணவைச் சுவைப்பவன், அந்த ஊர் ஸ்பெஷலை சுவை பார்ப்பவன்.
கடந்த 20-30 ஆண்டுகளுக்குள் மிகப்பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
முன்பு, மணப்பாறை முருக்கு, கடம்பூர் போளி, திருநெவேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலைமிட்டாய், ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் பூரிமசால், இடார்ச்சி பூரி பாஜி, சமீப காலத்தில் விருதுநகர் பரோட்டா என்று மிகப் பெரும் லிஸ்ட் உண்டு. அவை எல்லாமே ‘பொய்யாய்ப் பழங்கனவாய்’ என்பது போலத்தான் எனக்குத் தெரிகிறது. இப்போவும் எனக்கு திருநெவேலி சாந்திவிலாஸ் கோதுமை அல்வாவும் மிக்சரும்-கடலை எண்ணெயில் பொரிப்பதால் மிகவும் பிடிக்கும். (ஆனால் கோதுமை அல்வாவுக்கு நெய் சேர்ப்பதில்லை). ஆவின் திரட்டுப்பால் போன்று எல்லாமே எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. சமைப்பவர்கள் மாறிவிட்டதால் பாரம்பர்யமாக அறியப்பட்ட ஹோட்டல்களில் சுவை சுத்தமாக இல்லை. கிட்டத்தட்ட ஊரின் தனித்துவம் போய், எல்லாமே எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருப்பதாக ஒரு அலுப்பு வந்துவிட்டது.
சென்னையில் எந்தக் கடையை எடுத்துக்கொண்டாலும் ‘இருட்டுக்கடை அல்வா’ பாக்கெட் கிடைக்கும். கோவில்பட்டி கடலைமிட்டாய் கிடைக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா கிடைக்கும். கிடைக்காத கடையை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
இந்தத் தடவை ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா வாங்கவில்லை. திருநெல்வேலி சென்றாலும், 10/20 ரூபாய் கொடுத்து வாழை இலையில் அப்போது வந்த அல்வாவைச் சுவைப்பதோடு சரி (திருநெல்வேலி ஜங்க்ஷனில் 3-4 கடைகள் உண்டு, சுவையான அல்வாவுக்கு, மனோஹரத்துக்கு பாளையங்கோட்டையில் ஒரு கடை உண்டு. இருட்டுக்கடை அல்வா சுமார் என்பது என் அனாலிஸிஸ். )