…………………………………………

…………………………………………..
IVRI எனப்படும் இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம்
பசுக்களின் கோமியம் குறித்து முக்கிய எச்சரிக்கை ஒன்றை
விடுத்துள்ளது …
குடிக்க வேண்டாம் :
மாட்டு சிறுநீரில் தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்கள்
இருக்கலாம் என்றும் இதனால் அவை மனித நுகர்வுக்கு
ஏற்றது இல்லை என்றும் இந்தியக் கால்நடை ஆராய்ச்சி
நிறுவனத்தின் (IVRI) ஆய்வாளர் நடத்திய ஆய்வில்
தெரியவந்துள்ளது.
பசுக்களிடம் ஒரு வகை பாக்டீரியாக்களும் எருமையில்
பாக்டீரியாக்களும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
போஜ் ராஜ் சிங் தலைமையிலான மாணவர்கள் குழு
இந்த விரிவான ஆய்வை நடத்தியுள்ளனர். பசுக்கள் மற்றும்
காளைகளின் சிறுநீர் மாதிரிகளை ஆய்வு செய்ததில்
அதில் குறைந்தது 14 வகையான தீங்கு விளைவிக்கும்
பாக்டீரியாக்கள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
குறிப்பாகக் கடுமையான வயிற்று வலி மற்றும்
வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் Escherichia coli உள்ளிட்ட கடுமையாகப் பாக்டீரியாக்களும் இதில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முடிவுகள் ஆன்லைன் ஆராய்ச்சி இணையதளமான
ரிசர்ச்கேட்டில் வெளியிடப்பட்டுள்ளன….
.
.
……………………………………………..
தலைப்பை பார்ததும் திராவிட மாடல் ஆட்சியில் திராவிட நாட்டில் யாரும் மது குடிப்பதில்லையோ என ஆவலாக வந்தேன்… 😆
…
தொடர்ந்து நண்பர் புதியவன்,
‘குடி’யைப்பற்றியே எழுதியதால்
வந்த வினை இது….!!!
…
ஆமா நீங்க தமிழகம்ன்னு எழுதியிருக்கிங்க அப்ப நீங்க பாஜகவா 🤔😁😆
..
நான் எல்லா கட்சிகளிலும் இருக்கிறேன்…!!!
தொடர்ந்து நான் எழுதுவதை கவனித்து வருகிறீர்களே…
புரிந்திருக்குமே நண்பரே …..!!! 🤳
தங்களை கலாய்க்க முயற்சித்தேன் 😃
இந்த ஆராய்ச்சியெல்லாம் காசுக்குப் பிடித்த கேடு. நேரம் வீணாக்குதல்.
1. கோமியத்தை உட்கொள்வது என்பது (பஞ்சகவ்யத்தின் ஒரு பகுதி), வருடத்தில் ஒரு தடவையோ இல்லை பல வருடங்களுக்கு ஒரு முறையோ நடப்பது. ஒரு ஸ்பூன் பஞ்சகவ்யம் செய்து, 10 பேர் பகிர்ந்துகொள்வது என்று நினைவு. என் வாழ்வில் இரு தடவைகள் சாப்பிட்டிருப்பேன் என்று நினைக்கிறேன்.
2. இதைப் பெரும் வியாபாரமாக்க (கோமியத்தை), இதனை வைத்து சோப்பு மற்றும் பல பொருட்கள் செய்து விற்பது நடந்துவருகிறது. பெங்களூரில் பல பார்க்குகளின் வெளியில் ஞாயிறில், கோமியத்தையும் சேர்த்து (அல்லது பெரும்பங்காக வைத்து) செய்யும் சோப்புகள் 75 ரூபாய்க்கு விற்பார்கள். முன்காலத்தில் கருக்கிய உமி+உப்பு+பச்சைகற்பூரம் கலவையை பல் துலக்க உபயோகித்தோம். அதனால் என்னென்னவோ பிரச்சனைகள் வரும் என்று இதுபோலப் பலர் எழுதி, சொல்லி, மக்கள் அந்தப் பழக்கத்தை விட்டு பேஸ்டுக்கு மாறியபிறகு, கோல்கேட் பிராண்ட், உங்கள் பேஸ்டில் உப்பு இருக்கா, உமி இருக்கா, வேம்பு இருக்கா என்று கேட்டுக்கொண்டிருக்கான்.
3. இதுக்குச் செலவழிக்கும் பணத்தை, மூன்றாம்தர சாராய பிராண்டுகளை ஆராய்ந்து, அதில் என்ன என்ன கெடுதலான பொருட்கள் இருக்கின்றன என்று சொல்லி மக்களை எச்சரிக்கலாம். இல்லை, மைதா மாவு, பராட்டா, பன் போன்றவைகளின் கெடுதலை விளம்பரப்படுத்தலாம்.
நம்ம நாட்டுலதான், எதை ஃபோகஸ் செய்து மக்களுக்கு நன்மை செய்யணும் என்பதைச் செய்யாமல், விளம்பரத்துக்காக வெட்டி ஆராய்ச்சிக்குச் செலவழிப்பாங்க. மாட்டு வண்டி உபயோகிக்கக்கூடாது, குதிரை வண்டி உபயோகிக்கக்கூடாது, மஞ்சுவிரட்டு கூடவே கூடாது, தெரு நாய்களை விரட்டக்கூடாதும்பாங்க. சொல்லிட்டு வீட்டுக்குள் போய், சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, புலால் பொருட்கள் என்று ஒரு வெட்டு வெட்டிட்டு, அடுத்து என்ன ஸ்டேட்மெண்ட் விடலாம் என்று யோசிப்பாங்க.
..
புதியவன்,
// ஒரு ஸ்பூன் பஞ்சகவ்யம் செய்து,
10 பேர் பகிர்ந்துகொள்வது என்று நினைவு. //
கதைக்காதீர்கள்…..
சும்மா கண்டதற்கெல்லாம்
வக்காலத்து வாங்காதீர்கள்….
உங்களுக்காகவென்றே ஆதாரம்
போட்டிருக்கிறேன் பார்க்கவில்லையா…???
மேலே புகைப்படத்தில் நீங்கள் காண்பது,
சுடச்சுட, டைரெக்டாக உற்பத்தி ஸ்தானத்திலேயே
கிளாசில் பிடித்து சாப்பிடுவது உங்களுக்கு
மிகவும் பிடித்தமான யோகிஜியின் மந்திரி தான்… 😊😊😊
.
வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
யாரும் இந்த காமை சாரை கேள்விகள் கேட்பதில்லை போலிருக்கிறது. கேள்வி பதில் செஷன் வரவே இல்லையே…
எனக்கு ஒரு சந்தேகம். ஒரு பொருள் கெடுதல் என்றால், அரசு நேரிடையாக அதைத் தடை செய்ய முடியாதா? எதற்காக அந்தப் பொருள் கெடுதல், சாப்பிட்டால் தொலைந்துவிட்டாய் என்று விளம்பரத்தில் மக்கள் பணத்தை வீணடிக்கணும்? உதாரணமா,
குட்கா போன்ற புகையிலைப் பொருட்கள் உபயோகித்தால் கேன்சர் வரும் அது வரும் இது வரும் என்று நம்மை பயமுறுத்துவதற்குப் பதிலாக, அதனைச் சந்தைப் படுத்தினால் கம்பெனிக்கு ஆயிரம் கோடி ஃபைன், கம்பெனியில் வேலை பார்த்த அனைவருக்கும் 50 வருடம் கடுங்காவல் தண்டனை என்று சட்டம் போட்டுவிட முடியாதா?
எதற்கு குடி குடியைக் கெடுக்கும் என்றெல்லாம் சொல்லிவிட்டு, அரசு டார்கெட் வைத்து விற்கவேண்டும்? இதுக்கு பேசாமல் கஞ்சா கவுண்டர்களையும் அரசு திறக்கக்கூடாதா? இருக்கவே இருக்கு, கஞ்சா உடலுக்கு மிகக் கெடுதி என்று தினம் விளம்பரப்படுத்திவிடலாமே.
புதியவன்,
// எனக்கு ஒரு சந்தேகம். ஒரு பொருள் கெடுதல் என்றால், அரசு நேரிடையாக அதைத் தடை செய்ய முடியாதா? //
இந்த கேள்வியை நீங்கள் மத்திய அரசை
அல்லது
ஒன்றிய அரசை கேட்பதாக எடுத்துக்கொள்கிறேன்…
சரி தானே ….???
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
எதுக்கு அவங்களைக் கேட்டுக்கிட்டு. மாநில அரசைத்தான் கேட்கிறேன். ‘ரம்மி விளையாட்டைப்’ பற்றி மத்திய அரசிடமா கோரிக்கை வைத்தார்கள்? மாநில அரசுதானே நடவடிக்கை எடுக்கவேண்டும்.
..
ONLINE GAMING -ஐ தடை செய்து
அண்மையில் மத்திய அரசு
உத்திரவு பிறப்பித்தது உங்களுக்கு
தெரியாதா …???
..
ஆராய்ச்சியின் லட்சணம் சில சமயம் கிறுகிறுக்க வைக்கிறது.
பூஸ்ட் குடித்தால், சுறுசுறுப்பாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியில் நிரூபணம் ஆகியிருக்கிறது எட்ன்று தான் விளம்பரம் செய்யப்படுகிறது .
பல் தேய்க்காமல் காபி குடித்தால் வயிற்று வலி வருமாம். எங்கள் கிராமத்தில் , விசாரித்த வரையில் காலையில் எழுந்த உடன் பல் தேய்க்கும் வழக்கம் பெரும்பான்மையினரிடம் வழக்கத்தில் இல்லை.அவர்கள் மிகு ஆரோகியமாகத்தான் இருக்கிறார்கள் .
கரியை வைத்து பல் தேய்த்தால் பல் ஆரோக்கியம் இழக்கும் என்று கூவி, பேஸ்ட் வியாபாரம் செய்தார்கள் .
பிறகு அதே கரியை கூச்சமே இல்லமல் , பேஸ்ட்டில் கலந்து வியாபாரம் செய்கிறார்கள்.
பணமுதலாளிகளின் பண்டங்களை மக்களிடையே வியாபாரம் செய்வதற்கு அவர்கள் உபயோகப்படுத்தும் யுக்திதான் இது போன்ற வீணாய் போன ஆராய்ச்சிகள் ..
நாளை இவர்களே, மாட்டின் கோமியத்திலிருந்து மருந்தை தனியாக பிரித்தெடுத்து ,வியாபாரம் செய்யும் காலம் வரும் .
சமீபத்தில் நான் கேள்விப்பட்ட நவீன ஆபரேஷன் முறை என்னை மேலும் கிறுகிறுக்க வைத்தது. IBS எனும் குடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு நவீன மருத்துவத்தில் மருந்துகள் ஏதும் இல்லை. உண்மையில் இதே போன்ற பிரச்சினையில் பாதிக்கப்பட்ட தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு, பழைய சாதம் தொடர்ந்து சாப்பிட்டு , அதிலிருந்து மீண்டு வந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.நவீன் மருத்துவத்தில் இந்த பிரச்சினையை சரி செய்வதற்கு , மருத்துவர்கள் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவரின் மலத்தை ( மலம் தான் !) தானமாக பெற்று(?) , தீவிர குடல் சார்ந்த பாதிப்புள்ள நபரின் குடலில் அந்த மலத்தை உள்ளே வைத்து, ஆபரேஷன் செய்யும் வழிமுறையை கையாளுகிறார்கள் .இதனால் அந்த நோயாளியின் குடலில் ஆரோகியமான பாக்டீரியாக்கள் பெருகி அவரின் குடல் சார்ந்த பிரச்சினை சரியாகிறதாம்..இதற்க்கு மருத்துவர்கள் தானமாக பெற்ற அந்த மலம் , ஆரோகியமான மலம் தானா என்று டெஸ்ட் வேறு செய்வார்களாம் .பிறகு தான் பொறுத்துவார்களாம் .
கடைசியில் போயும் போயும் பசுவின் கோமியத்தில் கிருமிகள் உள்ளது என்று ஆராய்ச்சி வேறு வெளியிடுகிறார்கள் .
எதைதான் கொடுமை என்பதோ
True (to Aadhirayan’s comments). The thinking now, with research supporting it, is that human microbiome plays a much substantive role in our overall health, including nutrition, getting immunity, increasing metabolism, not feeling depressed, etc. It is the microbes in our gastrointestinal system (gut) that helps this process. As a human being, we host a forest of microbes within our body – they say billions and trillions of them live within us and help us to live.
They say that the processed western fast foods destroy the good microbes, while our traditional foods help to enrich them. One of the good food is our simple and tasty Pazhaiya Saatham as fermented foods can increase the good microbiome diversity and also improve the immune responses. Connected with it is the treatment of IBS, which you have indicated.
Interesting research and also proves our Paati Vaithiya sayings.
https://www.theguardian.com/society/2021/jul/11/unlocking-the-gut-microbiome-and-its-massive-significance-to-our-health
நீங்கள் கூறுவதையும் பார்த்தால் , கடைசியில் நமது பழைய சாதத்தையும் , brand கொண்டு வந்து விற்க விளம்பரம் செய்ய ஆரம்பித்து விட போகிறார்கள் …
Already in some hotels, i recollect seeing பழைய சாதம் in the menu.