…………………………….

……………………………..
அண்மைய பத்திரிகைச் செய்தி ஒன்று,
வாசக நண்பர்களின் கவனத்திற்காக கீழே தரப்படுகிறது –
…………….
அண்டை மாநிலமான கேரளாவின் ‘மீடியா ஒன்’ என்ற பெயரில்
இயங்கி வந்த தொலைக்காட்சி மீதான் மத்திய
அரசின் தடையை நீக்கவும், ஒளிபரப்பு உரிமத்தை வழங்கவும்
சுப்ரீம் கோர்ட் உத்திரவு இட்டுள்ளது.
கேரளாவில் ‘மீடியா ஒன்’ தொலைக்காட்சியை
மத்யமம் என்ற ஒலிபரப்பு நிறுவனம் நடத்தி வந்தது. இந்த சேனலுக்கு 10 ஆண்டுகளுக்கு உரிமம் வழங்கப்பட்ட நிலையில், 2021 செப்டம்பர் மாதம் இத்தொலைக்காட்சி சேனலின் உரிமம் காலாவதியானது.
இதனால் உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டி சேனல் தரப்பில்
விண்ணப்பித்த போது நாட்டின் பாதுகாப்பு கருதி உரிமத்தை
புதுப்பிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில், ‘மீடியா ஒன்’ மற்றும் கேரளா பத்திரிக்கையாளர்கள் சங்கம் தரப்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டன.
இது தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
சந்திரசூட், நீதிபதி ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு
முன்பு வந்தது.
அப்போது, கேரளாவின் ‘மீடியா ஒன்’ தொலைக்காட்சி மீதான
மத்திய அரசின் தடையை நீக்கி, ஒளிபரப்பு உரிமத்தை வழங்க
சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மேலும், தேசப்பாதுகாப்பு என்ற
பெயரில் குடிமக்களின் அடிப்படை உரிமையை மறுக்கக் கூடாது
என்றும், வலுவான ஜனநாயகத்திற்கு பத்திரிகை சுதந்திரம் அவசியம்
என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
………………………………
இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ள சில கருத்துகள் முக்கிய கவனத்தை பெற்றுள்ளன ….
ஆங்கிலத்தில் அது குறித்து வெளியான விரிவான செய்தி கீழே –
New Delhi: The Supreme Court today revoked
the centre’s ban on Malayalam news channel
‘MediaOne’ and pulled up the government for
denying security clearance to the TV channel.
Here are the top 5 observations from this big
order –
“There is nothing to show terrorist links.
National security claims cannot be made on the
basis of thin air. It is seen that none of the
material is against national security or
threatens public order,” the bench led by
Chief Justice of India DY Chandrachud said.
“National security can’t be raised to deny people
their rights… it was raised by the MHA in a
cavalier manner in this case,” the court added.
“Government cannot be allowed to have a stand
that press must support the government,”
the court said,
adding that criticism of government cannot be
a ground to revoke license of a TV channel.
“An independent press is necessary for the robust functioning of a democratic republic. Its role
in the democratic society is crucial, for it
shines a light on the functioning of the State,”
the court said.
“All investigation reports cannot be termed secret
as these affect the rights and liberty of the
citizens,” the court said, adding that there
cannot be a “blanket immunity” to the government
from disclosing information.
.
……………………………………………
உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு ஏற்கக்கூடியதுதான்.
/An independent press is necessary for the robust functioning of a democratic republic// இது உண்மைதான். அதே நேரத்தில் நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் நீதிபதிகள் கருத்து பற்றிய விமர்சனம், நீதிபதிகள் பற்றிய செய்திகளுக்கும் இதே அளவுகோலை சந்திரசூட் வைத்துள்ளாரா என்பது தெரியவில்லை. ஜனநாயகத்தில் எல்லோருக்கும் ஒரே சட்டம்தானே
// ஜனநாயகத்தில் எல்லோருக்கும் ஒரே சட்டம்தானே …!!! //
…….
…🤣🤣🤣🤣🤣🤣
…
உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் கைப்பாவையில்லையா எப்படி இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பு வந்தது….
நம் ஆசைக்கேற்ப தீர்ப்பு வரலைனா, உடனே மத்திய அரசின் கைப்பாவைன்னு சொல்லணும். எதிர்பார்ப்புக்கேற்றபடி தீர்ப்பு வந்தால், சரியான தீர்ப்புன்னு நீதிபதியைப் புகழணும். இதுதான் டிராவிட மாடள்.
சில நீதியரசர்கள் மோடி சர்க்காரின் அராஜகங்களுக்கு அடிபணியாதவர்கள் என்றும் அடித்து விடலாம் …
மூளை இல்லாதவர்கள் எதையும் கேட்டு கொள்வார்கள்…சிந்திப்பதில்லை.அது நமது ஊடகங்களுக்கு என்றென்றும் சாதகமே…
அப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் பெரும்பான்மையினர் மூளை இல்லாதவர்கள் தான்… குஜராத் கலவரத்திற்கு இன்றும் கோபமாக இருப்பவர்கள் வசதியாக சீக்கியர்கள் மீதான வன்முறையை வசதியாக மறைத்துவிட்டார்கள் 🤣🤣🤣🤣