கொஞ்சம் கேள்விகள் -சுஜாதாவின் வித்தியாசமான -பதில்கள்….!!!

…………………

கேள்வி: சுஜாதா சார்! கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர்
என்று பேசுகிறீர்களே. கொஞ்சம் சாப்பாட்டைப் பற்றிப்
பேசலாமே. உங்கள் கணிப்பொறி நிறுவனத்தில் கேன்டீன்
எப்படி?

பதில்: கணிப்பொறி, கேன்டீன் இரண்டிற்கும் அடிக்கடி
ஒரே பிரச்சினைதான் : ‘‘சர்வர் ப்ராப்லம்’’.

கேள்வி: திருமணத்திற்கும் மரபுக் கவிதைக்கும்
என்ன சார் தொடர்பு?

பதில்: இரண்டிலும் சீர் உண்டு. திருமணமும்
ஒரு ‘தளை’தானே? இரண்டும் வளமடையத் தேவை
‘பொருள்’தான். இரண்டிலும் வெற்றி பெற நன்கு
யோசித்து ‘அடி’யெடுத்து வைக்க வேண்டும்.
இரண்டிலும் இலக்கணப் பிழைகள் இருக்கக் கூடும்.
மணம் புரிந்து கொண்ட மனைவி ‘வஞ்சிப்பா’ளானால்
வாழ்க்கை ‘வருத்தப்பா’ ஆகிவிடும்.

கேள்வி: ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையாக
இருந்தால் ‘கள்’ சேர்த்துக் கொள்கிறோம். (உம்)
பறவை, பறவைகள்; நூல் நூல்கள் -இப்படி.
ஆனால் 1330 இருந்தும் அதனை திருக்குறள் என்றுதானே
சொல்கிறோம். திருக்குறள்கள் என்று சொல்வதில்லையே.

பதில்: திருக்குறள் கள்ளை அனுமதிப்பதில்லை.

கேள்வி: ‘மானும் மழுவமேந்தி மலர்ப் பாதம்
தூக்கி ஆடும் இறைவன்’ என சிவனை கவிஞர்கள்
பாடுகிறார்களே; ‘மலர்ப் பாதம்’ பெண்களுக்குத் தானே
பொருந்தும். சிவனுக்கு எப்படி?

பதில்: சிவனே என்றிராமல் இப்படியொரு சக்தியுள்ள
கேள்வி கேட்டிருக்கிறீர்கள். மலர்ப்பாதம் என்ற சொல்லுக்கு
மலர் போன்ற பாதம் என்றுதான் பொருள் கொள்ள
வேண்டும் என்பதில்லை. மலர்களால் அர்ச்சிக்கப்படுகிற
பாதம் என்று பொருள் கொள்ளலாமல்லவா?
உவமைத் தொகையை மூன்றாம் வேற்றுமை
உருபும் பயனும் உடன் தொக்க தொகையாகப் புரிந்து கொள்ளுங்களேன்.

கேள்வி: தற்போதைய பட்டிமன்றங்கள் பற்றி
என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: கி.வா.ஜ., குன்றக்குடி அடிகளார், திருச்சி தேசியக்
கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராதாகிருஷ்ணன்
போன்றோர் காலங்களில் பட்டிமன்றங்கள் சிந்தனையைத்
தூண்டின. இப்போது பெரும்பாலான பட்டிமன்றங்கள்
நகைச்சுவை என்ற பெயரில் சிரிப்பாய்ச் சிரிக்கின்றன.

கேள்வி: லால்குடி ஜெயராமனு்க்கும், லால்குடியில் காவேரிக்
கரையில் விவசாயம் செய்யும் விவசாயிக்கும் ஏதேனும்
ஒற்றுமை உண்டா?

பதில்: உண்டே. இவர் ஸ்வரம் பாடுகிறார்;
அவர் உரம் போடுகிறார். இவர் பண் மூலம் பண்படுத்துவது
மனதை; அவர் மண் மூலம் பண்படுத்துவது நிலத்தை.
மொத்தத்தில் இருவருமே வயலி’ன் மேன்மைக்காகப் பாடுபடுகிறார்கள்.*

கேள்வி: சமையலில் மனைவிக்கு உதவி செய்வீர்களா?

பதில்: சமையல் கலை இரண்டு பகுதிகளைக் கொண்டது.
ஒன்று சமைப்பது. இன்னொன்று சாப்பிடுவது.
நான் இரண்டாவது பகுதியில் உதவுவதுண்டு.

கேள்வி: நீங்கள் மரபுக் கவிதைகள் எழுதுவது உண்டா?
உங்களுடைய ஏதாவது ஒரு மரபுக் கவிதை ப்ளீஸ்!

பதில்: உண்டு. எப்போதாவது.
‘வேண்டாம் வரதட்சணை’ என்ற ஈற்றடிக்கு
முன்பு தினமணி கதிரில் ஒரு நேரிசை வெண்பா
எழுதினேன். அது-

பத்து பவுன் தங்கம் பளிச்சென்ற கல்வளையல்..
முத்திலே சின்னதாய் மூக்குத்தி – மத்தபடி
பாண்டு வைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர
வேண்டாம் வரதட்சிணை!

கேள்வி: ‘சிங்களத் தமிழ்’, ‘சிங்கார சென்னைத் தமிழ்’?

பதில்: இலங்கைத் தமிழர்களுடன் கதைக்கும் போது
அவர்கள் பாவிக்கும் சில தமிழ் வார்த்தைகள்
சொக்கிலேற்றுகளாய்த் தித்திக்கும் என்று நம்மால்
அவதானிக்க முடிகிறது. கனகாலமாய் அவற்றைப்
படித்து வருவதால் சென்னைத் தமிழைப் பொறுத்தவரை
அதிக அளவில் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும்
வட்டாரத் தமிழ் அதுதான்.

கேள்வி: காதல் கவிதை எழுதக் காதலித்துத்தான்
ஆக வேண்டுமா?

பதில்: சரிதான்… துப்பறியும் கதை எழுத
கொலை செய்ய வேண்டும் என்பீர்களா?

கேள்வி: ஊழல்பெருச்சாளிகள் எங்கிருந்து வருகிறார்கள்?

பதில்: பெரும்பாலும் அரசியல் சாக்கடையிலிருந்துதான்.

கேள்வி: ஆலய உண்டியலில் பணம் போடுவது,
ஏழையொருவனுககு அறம் செய்வது. –
நற்பயன் தரக் கூடியது…?

பதில்: ‘நடமாடும் கோயில் நம்பர்க்கொன்று ஈந்தால்
அது படமாடும் கோயில் பரமற்கு போய்ச் சேரும்
என்கிறார் திருமூலர். ஏழை சப்-போஸ்ட் ஆபீஸ்,
கடவுள் ஹெட் போஸ்ட் ஆபீஸ். ஏழைக்குக் கொடுத்தால்
கடவுளுக்குப் போகும்.

கேள்வி: தினமும் பூண்டு சாப்பிட்டால் இதய நோய் வராதாமே?

பதில்: தொடர்ந்து அதன் நாற்றத்தைச் சகித்துக்
கொள்வதில் உறுதிபூண்டு செயல்பட்டுப் பாருங்கள்.

கேள்வி: அன்னை ஓர் ஆலயம் என்று கூறுவது ஏன்..?
பதில்: ‘கர்ப்ப’க்கிரகம் அங்கிருப்பதால்…

.
……………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

2 Responses to கொஞ்சம் கேள்விகள் -சுஜாதாவின் வித்தியாசமான -பதில்கள்….!!!

  1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    ………………………

    சென்னை வள்ளளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி உள்பட 600 பேர் மீது நுங்கம் பாக்கம் போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    Read more at: https://tamil.oneindia.com/news/chennai/fir-filled-against-600-congress-members-including-state-chief-ks-alagiri-who-protest-against-pm-modi-506516.html?story=3

    …………………………………

    பச்சைப் பொய்…..!!!

    தமிழ் நாடு காங்கிரசால் போராட்டம் நடத்த
    600 பேரை எப்படி திரட்டி இருக்க முடியும் ….??? 😀😀😀

    .

    • புதியவன் சொல்கிறார்:

      500 பேர்கள், 100 பெண்கள் உட்பட. தங்கபாலு, ஜோதிமணி என்று பலர் வந்திருந்தனர். ஆளுக்கு 50 பேரைக் கூட்டி வந்திருப்பார்கள். (போராட்டங்கள் நடத்தவில்லை என்பதால்தான் கார்த்திக் சிதம்பரத்தை சமீபத்தில் தில்லியில் வைத்து ராகுல் அவமானப்படுத்தினாராம். அந்தக் காணொளி பார்த்திருப்பீங்களே)

      அதைவிட முக்கியச் செய்தி…கொத்தடிமை அழகிரி, தமிழக போலீஸ், தமிழக அரசின் எண்ணங்களுக்கு எதிராக நடந்துகொள்வதாகவும், அதனால்தான் போராட்டத்திற்கு அனுமதி தராமல், தங்களைக் கைது செய்வதாகவும் சொல்லியிருக்கிறார். இதற்கு மேல் கீழே விழமுடியுமா?

      திமுக உறுப்பினர் வேல்முருகன், தமிழ் ஈழ ஆதரவாளர்களான மே 17 ஐச் சேர்ந்த திருமுருகன் காந்தி (இதுவரை இவர் தூங்கிக்கொண்டிருந்தார். பாஜகவுக்கு எதிரானது என்றவுடன் முழித்துக்கொண்டுவிட்டார். அடுத்த திமுக கொத்தடிமை) போன்றவர்களும் தனித்தனியே போராட்டம் நடத்தினார்களாம் (என்று பத்திரிகைச் செய்தி. பேசாமல் 30 நாள் உள்ள வைக்காம செய்திக்காகக் கைது, உடனே விடுவிப்பு என்று இருப்பதால்தான் இப்படி போராட்ட நாடகம் நடத்தறாங்க போலிருக்கு)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s