விகடன் செய்தியாளர் ஒளிந்து நின்றுஒட்டுக்கேட்ட அண்ணாமலை செய்திகள் ….!!!

………………………………

(புகைப்படம் – நன்றி -சாணக்யா…!!!)

………………………………

ஆமாம் – விகடனுக்கு ஏன் அண்ணாமலையின் மீது
இந்த அளவு வயிற்றெரிச்சல்….???

விகடன் தளத்தில் வந்திருக்கும் செய்திகளிலிருந்து கொஞ்சம் –

…………………………………………………………………………………………..

” வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்ணாமலையிடம்
முகம் கொடுத்துப் பேசவில்லை என்கிறார்களே?”

“எழுத்தாளர் சிவசங்கரிக்கு நடந்த பாராட்டு விழாவுக்காகவே அவர் சென்னைக்கு வந்தார். அப்படியே, பைபாஸ் சர்ஜரி செய்திருக்கும்
பா.ஜ.க-வைச் சேர்ந்த கே.டி.ராகவனைச் சந்தித்து நலம்
விசாரித்திருக்கிறார்.

அந்தச் சந்திப்பில் தமிழ்நாடு அரசியல் குறித்தும் பேசியிருக்கிறார்கள். அப்போது அண்ணாமலையின் சமீபகால சர்ச்சைப் பேச்சுகள் குறித்து ராகவனிடம் வருத்தப்பட்ட நிர்மலா சீதாராமன்,

‘உங்களைப் போன்ற அனுபவமிக்கவர்கள் தலைமைப் பொறுப்புக்கு
வந்திருக்க வேண்டும்’ என்று சொன்னாராம்.

ஆட்சி மேலிடத்தில் முடிவெடுக்கும் இடத்திலிருப்பவர் நிர்மலா சீதாராமன்.
அவரே தனக்கெதிரான மனநிலையில் இருப்பதை எப்படியோ
தெரிந்துகொண்ட அண்ணாமலை, பெங்களூரிலிருந்து சென்னைக்குத் திரும்பிய கையோடு, விமான நிலையத்தில் வைத்தே நிர்மலா சீதாராமனைச் சந்தித்திருக்கிறார்.

அப்போது, கூட்டணி தொடர்பாகத் தன் நிலைப்பாட்டை அண்ணாமலை
விளக்க, இறுக்கமான முகத்தோடு கேட்டுக்கொண்டாராம் நிர்மலா
சீதாராமன். அண்ணாமலையின் கருத்து குறித்து எதுவும் பேசாமல்,
‘கூட்டணி குறித்து தேசியத் தலைமை முடிவுசெய்யும்’ என்று மட்டும் சொல்லிவிட்டு டெல்லிக்குப் பறந்திருக்கிறார்.”

“அ.தி.மு.க கூட்டணி குறித்து பா.ஜ.க நிர்வாகிகளே முன்னுக்குப் பின்
முரணாகப் பேசிவருகிறார்களே?”

“அண்ணாமலைதான் ஏட்டிக்குப் போட்டியாகப் பேசியிருக்கிறார்.

‘அ.தி.மு.க-வுடன்தான் கூட்டணி. ஒன்பது தொகுதிகளில் பா.ஜ.க கவனம் செலுத்துகிறது’ என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சொன்னதற்கு, ‘கூட்டணி தொடர்பாக அமித் ஷா இன்னும் உறுதிசெய்யவில்லை’ என்றிருக்கிறார் அண்ணாமலை.

`கூட்டணி தொடரும்’ என அமித் ஷாவே அறிவித்த பிறகும் அண்ணாமலையின் இந்தக் குழப்படிப் பேச்சு, கட்சிக்குள்ளும் கூட்டணிக்குள்ளும் களேபரங்களை உருவாக்கியிருக்கிறது.

இது குறித்து அண்ணாமலையிடம் விரிவாகப் பேசினாராம் வானதி சீனிவாசன். ‘சரிங்கக்கா… சரிங்கக்கா…’ எனத் தலையை மட்டும் ஆட்டிய அண்ணாமலை, வானதி சொன்ன எதையும் மூளையில் ஏற்றிக்கொள்ளவில்லை என்கிறார்கள்.
தமிழகத்துக்கு வரும் பிரதமரை வரவேற்பது குறித்து நடந்த கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும்கூட சீனியர்கள் பேச்சு எதையும் அவர் காதில் வாங்கிக்கொள்ளவில்லையாம். கூட்டம் முடிந்து வெளியில் வந்த பிறகும்கூட, அ.தி.மு.க-வைச் சீண்டிப்பார்க்கும் வகையில் வார்த்தைகளை விட்டிருக்கிறார் மலை.”

“ஓஹோ… அதற்குத்தான், ‘கூட்டணி குறித்து மாநிலத் தலைவர்கள் முடிவுசெய்வதில்லை. தேசியத் தலைவர்கள்தான் முடிவெடுப்பார்கள்’
என எடப்பாடி பழனிசாமி வெடித்தாரா?”

“ஆமாம். அண்ணாமலை உருவாக்கிவிட்ட டேமேஜால், எடப்பாடியைச் சமாதானம் செய்யும் இக்கட்டில் மாட்டியிருக்கிறது டெல்லி தலைமை.

அதற்காக, கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கும் சீட்டுகள் கொடுக்கும் அளவுக்கு இறங்கியிருக்கிறார்களாம். பெங்களூரு, கோலார் போன்ற தமிழர் அதிகம் வசிக்கும் ஏரியாக்களில் மூன்று தொகுதிகளை அ.தி.மு.க-வுக்கு ஒதுக்குவது எனப் பேசப்பட்டிருக்கிறது.

‘எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்குப் பிறகு பொதுச்செயலாளர்
எடப்பாடியால் தான் அ.தி.மு.க சார்பில் அண்டை மாநிலத்திலும் வேட்பாளர்களைக் களமிறக்க முடிந்திருக்கிறது என்று அரசியல்
நோக்கர்கள் பாராட்டுவார்கள்’ என்றெல்லாம் சொல்லி எடப்பாடி
தரப்பைச் சமாதானப்படுத்தியிருக்கிறது டெல்லி சமாதானக் குழு.

பிரதமர் தமிழகத்துக்கு வந்து சென்ற பிறகு, எடப்பாடியை பெங்களூருக்கு அழைக்கவும் ஏற்பாடுகள் `தடதட’க்கின்றன.

‘ஒத்தை ஆட்டுக்குட்டிக்காக ஆனையைக் காவு கொடுப்பதா… அண்ணாமலையை எச்சரித்து வாயை மூடவைப்பதை விட்டுவிட்டு,
அதை ஈடுகட்டுவதற்காக ஒரு தேசியக் கட்சி இவ்வளவு இறங்கத்தான் வேண்டுமா?’ எனக் கொந்தளிக்கிறார்கள் பா.ஜ.க சீனியர்கள்.
அதேநேரத்தில், ‘அண்ணாமலை பேசப்பேச நமக்கு லாபம்தான்’
என்று சிரிக்கிறதாம் எடப்பாடி தரப்பு.”

.
………………………………………………………………………………………………………..……..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to விகடன் செய்தியாளர் ஒளிந்து நின்றுஒட்டுக்கேட்ட அண்ணாமலை செய்திகள் ….!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  மாறன்களுக்கு இப்போது அதிமுக+பாஜக கூட்டணியை உடைக்கணும் என்ற அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைச் செய்வதைத் தவிர விகடனுக்கு வேறு வழியில்லை.

  அண்ணாமலை தொடர்ந்து பாஜகவை முன்னெடுப்பதை மாத்திரம் பேசிவருகிறார். உண்மைதான். பாஜக முன்பு இரு வழிகள் இருக்கின்றன.

  1. அதிமுக தலைமையில் சில சீட்டுகளைப் பெற்றுக்கொண்டு 2 எம்பிக்களை வென்றெடுத்து அவர்களை மத்திய அமைச்சராக ஆக்குவது. இதற்குத்தான் சீனியர்கள் சிலர் முட்டிமோதுகின்றனர். ஏனென்றால் பாஜக ஆட்சிக்கு வரும், அதனால் தங்களுக்கு மத்திய அமைச்சர் பதவி நிச்சயம் என்று ஆசைப்படுகின்றனர். பாஜக 7 சதம் வாக்கு வாங்கும் (அல்லது அதற்குக் குறைவாக). அதுவே பாஜகவின் பலம் என்று சொல்லி எப்போதும் பாஜகவை இன்னொரு கட்சியின் அடிமைக்கட்சியாகவே வைத்திருப்பது.

  2. தனியாகப் போட்டியிடுவது. ஒத்த கருத்து இருந்தால் அவர்களைக் கூட்டணியில் சேர்த்துக்கொள்வது. இப்படிச் செய்யும்போது பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிடலாம். பாஜகவின் பலம் ஓரளவுக்கு வெளியில் தெரியும். இது 10 சதமாகவும் இருக்கலாம் 15 சதமாகவும் இருக்கலாம்.

  தமிழக எம்பிக்கள் பலத்தில் பாஜக அரசு மத்தியில் ஆட்சி செய்யவில்லை. அதனால் தமிழக 4 எம்பி சீட்டுகள் பாஜகவுக்கு ஒரு பொருட்டல்ல. அதே நேரத்தில் தமிழகத்தில் இப்படிப் பிரிந்து நிற்பதால் திமுகவிற்கு மொத்த எம்பிக்கள் சீட்டு சென்றாலும் கவலைப்பட ஒன்றும் இல்லை. பாராளுமன்றத்தில் எதிர்ப்புக்குரல் என்று வரும்போது 25 எம்பிக்கள் என்பது sizeable number ஆக இருந்தபோதும், திமுகவின் கொள்கைக்கும் பாஜகவுக்கும் சம்பந்தமே இல்லை. அதனால் திமுகவின் எதிர்ப்புக் குரலைப் பற்றி பாஜக கவலைப்படவேண்டிய அவசியமே இல்லை. திமுகவின் கொள்கைகளில் 75 சதத்திற்கும் தமிழ்நாட்டு எல்லை தாண்டினால் அதற்கு ஆதரவு கிடைக்காது.

  பாஜக மத்தியத் தலைமை, தமிழகத்தில் காங்கிரஸ் போல அடிமைக் கட்சியாக பாஜக இருக்கவேண்டுமா இல்லை, பாஜக தனிக் கட்சியாக வளரவேண்டுமா என்றே முடிவு செய்யவேண்டும். அடிமைக் கட்சியாக இருக்கவேண்டும் என்றால் நிச்சயம் அண்ணாமலை போன்ற தலைவர் பாஜகவுக்குத் தேவையில்லை. அவரால் நிச்சயமாக திருமா, அன்புமணி போன்று (வேல்முருகன், காசுக்குக் கட்சியை விற்கும் கம்யூனிஸ்டுகள் போன்றவர்களைச் சேர்க்கவில்லை. காங்கிரஸில் தலைவர்கள் யாரும் இல்லை. அங்கிருப்பவர்கள் தங்கள் லாபத்திற்காக இருப்பவர்கள், அவர்கள் அஜெண்டா தங்களை வளர்த்துக்கொள்வது, கட்சிக்கு விசுவாசமாக இருப்பது அல்ல) கூட்டணிக் கட்சியின் தலைமை பேசுவதற்கு முன்னால், தாளம் போட முடியாது.

  சுய லாபத்துக்காக பொய்ச் செய்திகளைப் பரப்பும் விகடன் போன்ற விலை போன திமுக ஊடகங்களைப் பொருட்படுத்த வேண்டியதில்லை.

 2. tamilmani சொல்கிறார்:

  Vikatan is following paid journalism. vikatan’s so called sub editors are on the payroll
  of DMK. For a dinner and cocktail party they will write anything against BJP.
  These types of “வந்தாராம் ,போனாராம் , காதில் கிசுகிசுத்தாராம் ,இறுகிய முகத்துடன்
  கேட்டு கொண்டாராம், மேலிடம் ரசிக்கவில்லை dialogues are very common
  in Junior vikatan articles. What a great fall for a magazine
  which had editors like Vaasan, Balan.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s