………………..

………………..
தமிழக அறநிலையத் துறையின் செயலற்ற,
அக்கறையற்ற தன்மையை பார்த்து மக்கள் மட்டுமல்ல…
நீதித்துறையும் நொந்து போகிறது.
அதன் விளைவாக –
” இணை கமிஷனர் பொறுப்பை நீதிபதியிடம் கொடுத்து பாருங்கள் –
ஒரே மாதத்தில் மாற்றம் தெரியும் ” ….
என்று சொல்கிறது ஹைகோர்ட் மதுரை கிளை ….
தமிழக அரசில் – பதவியிலும், பொறுப்பிலும் உள்ளவர்களுக்கு
இது கொஞ்சமாவது உரைக்குமா….?
……………………………………………………
மதுரை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை இணை
ஆணையராக நீதிபதியை நியமித்தால், கோயில்களில் ஒரு மாதத்தில் மாற்றங்களை பார்க்கலாம் என உயர் நீதிமன்ற நீதிபதிகள்
தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த கணேசன்,
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்குச் சொந்தமாக
பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆபரணங்கள், 1600 ஏக்கர் நிலங்கள்
உள்ளன. இதில் பெருமளவு நிலத்தை தனியார் ஆக்கிரமிப்பு
செய்துள்ளனர். இதை மீட்டால் கோயிலுக்கு அதிக அளவில் வருவாய்
ஈட்ட முடியும்.
இந்நிலையில் விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
வருமானம் இல்லாத கோயில் என்று கூறி, திருச்செந்தூர்
சுப்பிரமணியசுவாமி கோயிலுடன் இணைத்து இந்து சமய
அறநிலையத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை
ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன் அமர்வில்
விசாரணைக்கு வந்தது.
அரசு வழக்கறிஞர் வாதிடுகையில்,
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் வருமானம் குறைவாக இருப்பதால், அதனை துணைக் கோயிலாக கருதி திருச்செந்தூர்
சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைக்கப்பட்டுள்ளது.
துணைக்கோயிலின் வருமானங்கள் அனைத்தும் முதன்மை கோயில்
வங்கிக் கணக்கில் வரவு வைக்க முடியும். துணைக் கோயில் திருவிழா, ஊழியர்களின் ஊதியம் ஆகியன முதன்மை கோயிலில் இருந்து
வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் –
‘தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர்
பொறுப்பை நீதிபதி ஒருவரிடம் அளித்தால், ஒரு மாதத்தில் கோயில்களில் ஏற்படும் மாற்றங்களை பார்க்க முடியும்’ என கருத்து தெரிவித்தனர்.
பின்னர் தங்களின் உத்தரவில் -விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலை திருச்செந்தூர் கோயிலுடன் இணைத்து அறநிலையத் துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவுக்கு –
– இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.
ஆக்கிரமிப்பில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்டால் வருவாய் அதிகரிக்கும்
– ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம்
2022 நவம்பரில் உத்தரவிட்டது.
ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற
தூத்துக்குடி ஆட்சியர், விளாத்திகுளம் வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை.
கோயில் நில ஆக்கிரமிப்பாளர்கள் பட்டியல், அந்த நிலத்திலிருந்து
கிடைக்கும் வருமானம் ஆகிய விவரங்களையும், ஆக்கிரமிப்புகளை
அகற்றுவது தொடர்பான திட்ட அறிக்கையையும் அறநிலையத் துறை ஆணையர் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.
லிங்க் –
https://www.hindutamil
.
திமுக அரசு, கோவிலின் வருமானத்தை, அதற்குரிய நிலங்களின் குத்தகையிலிருந்து பெற நினைக்காமல் (யார் ஆக்கிரமித்துள்ளார்கள் என்று பார்த்தால் நிலைமை பல்லிளித்துவிடும் என்பதால்), கோவில்களில் உள்ள சேவைகளுக்குப் பல மடங்கு கட்டணத்தை அதிகரித்துள்ளது. 2000 ரூபாய் இருந்த இடத்தில் 8000 ரூபாய் என்று நான்கு மடங்காக கட்டணத்தை அதிகரித்திருக்கிறது. இதனை வைத்து கோவில் செலவுகளைச் சமாளிக்கப்பார்க்கிறது. இதில் இலவச உணவு என்றெல்லாம் கணக்கெழுதுவதில் குறைச்சலில்லை. கோவில் வேலை பார்ப்பவர்களுக்கு புதுக் கார்கள் வாங்குவதிலும் குறைவில்லை.
பாஜக, கோவில்களை நிச்சயமாக நன்றாக பராமரிக்கும், இந்து உணர்வு இருப்பதால் கோவில்கள் பாஜக அரசின் பிடியில் இருக்கும்போது நன்றாகவே இருக்கும் என்று நம்புகிறேன். அதிமுக அரசு இந்த விஷயத்தில் திமுகவைப் போலத்தான் இருக்கும்.