…………………………………………………..

…………………………………………………..
பல கடுமையான கேள்விகளை கேட்கிறார் ரமேஷ்….
எடப்பாடியாருக்கும், ஸ்டாலினுக்கும் என்ன உடன்பாடு…???
தேர்தல் சமயத்தில், எடப்பாடியார் மீது ஸ்டாலின் சுமத்திய
குற்றச்சாட்டுகள் என்ன ஆயின …???
திமுக ஆட்சிக்கு வந்தால் எடப்பாடியார் உட்பட அநேக
அதிமுகவின் அமைச்சர்கள் சிறைக்கு செல்வது நிச்சயம் என்று
ஸ்டாலின் சொன்னது என்ன ஆச்சு …?
எடப்பாடியார் மீதிருக்கும் கொடநாடு வழக்கு என்ன ஆனது ..?
எடப்பாடியார், தனது சம்பந்திக்கு காண்டிராக்டு கொடுத்த
விஷயம் என்ன ஆனது…?
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் இடங்களின் மீது நடத்தப்பட்ட ரெய்டுகளை தொடர்ந்து வழக்கு தொடுக்கப்படாதது ஏன்….?
திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகியும் ஏன் நடவடிக்கை ஏதுமில்லை…?
…………………………………………………….
………………………………………………………………………………………………………………………………………
நேற்றே இந்தக் காணொளியைக் கண்டேன். துக்ளக் ரமேஷ் ஓரளவு நடுநிலையுடனேயே எதையும் அணுகுகிறார்.
அவர் சொல்லியிருப்பதில் பல மிகச் சரியானது. அண்ணாமலை முதல்வர் மெட்டீரியல்தான். அதனால் எடப்பாடி-அண்ணாமலை கூட்டணி சோபிக்காது. அண்ணாமலை தலைமையில் பாஜக தனித்துப் போட்டியிடும்போதுதான் பாஜக வளரும். அப்படி மூன்று அணியாக நிற்கும்போது எடப்பாடி படுதோல்வியைச் சந்திப்பார் என்றே நான் நினைக்கிறேன் (திமுக ரொம்பவே மோசமான அரசாக இருந்தாலும் சிறுபான்மையினரை எந்தப் பிரச்சனையிலும் ஆதரிப்பதால், அவர்களுக்கு ஆதரவாக நடந்துகொள்வதால், அவர்கள் வாக்கு திமுகவிற்குத்தான் கிடைக்கும், பாஜகவுக்கு எதிராக இருப்பதால். திமுகவிற்கு எதிரான வாக்குகளில் நடுநிலை வாக்குகள் பாஜகவிற்கும் இந்து வாக்கு வங்கி பாஜகவிற்கும் செல்லும். அப்படி ஒரு நிலை வந்தால்தான் (மூன்று அணிகளாக மோதுவது) அதிமுகவின் பலமும் பாஜகவின் பலமும் தெரிய ஆரம்பிக்கும். (திமுகவிற்கு எப்போதுமே பலம் கிடையாது. அவங்க பலம், கூட்டணி பலம்தான்)