……………………
Ray Kurzweil says We’ll Reach IMMORTALITY by 2030
…………….

…………….
இன்னும் 7 ஆண்டுகளில் நானோ ரோபோ உதவியுடன்
மனிதர்கள் சாகா வரம் பெறுவர் என கூகுள் நிறுவன முன்னாள்
விஞ்ஞானி ரே குர்ஸ்வேல் கூறியுள்ளார்.
கூகுள் நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானி ரே குர்ஸ்வேல்(75).
கம்ப்யூட்டர் இன்ஜினீயரான இவர், இதுவரை 147 முன் கணிப்புகளை கூறியுள்ளார். இவற்றில் 86 சதவீதம் சரியாக இருந்துள்ளது.
2000-ம் ஆண்டுக்குள் செஸ் போட்டியில் மனிதர்களை,
கம்ப்யூட்டர் வெல்லும் என இவர் கடந்த 1990-ம் ஆண்டே கூறினார்.
அது சரியாக இருந்தது. அதேபோல் இன்டர்நெட் வளர்ச்சி,
வயர்லெஸ் தொழில்நுட்ப மாற்றம் அதிகளவில் இருக்கும் என
இவர் கூறிய முன் கணிப்புகளும் மிகச்சரியாக இருந்தது.
இவரை தற்போது விளாகர் அடாஜியோ என்பவர் நேர்காணல்
செய்து யூ-டியூப்பில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
(வீடியோ கீழே –
2-ஆம் பாகம் மிக முக்கியம்…..
அது தான் இந்த விஷயங்களைப்பற்றி பேசுகிறது ….)
அதில் ரே குர்ஸ்வேல் கூறியிருப்பதாவது: கடந்த 2005-ம் ஆண்டில்
வெளிவந்த `தி சிங்குலாரிட்டி இஸ் நியர்’ என்ற புத்தகத்தில்
2030-ம் ஆண்டுக்குள் மனிதர்கள் நிரந்தர வாழ்க்கையை அனுபவிக்க தொழில்நுட்பம் அனுமதிக்கும் என கூறியிருந்தேன்.
தற்போது மரபியல், ரோபோடிக்ஸ், மற்றும் நானோ தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள் மற்றும் விரிவாக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
விரைவில் நரம்புகள் வழியாக செலுத்தப்படும் ‘நானோபோட்ஸ்’
எனப்படும் மிக நுண்ணிய ரோபோக்கள் வரப்போகின்றன.
இவை 50 முதல் 100 நானோ மீட்டர் அகலம்தான் இருக்கும்.
தற்போது டிஎன்ஏ ஆய்வு, செல் இமேஜிங் பொருட்கள் போன்றவற்றில் நானோபோட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
முதுமை, உடல்நல பாதிப்பில் இருந்து மனிதர்களை காக்கவும்,
உடலில் உள்ள செல்களை பழுது பார்க்கவும் நானோ ரோபோ உதவும்.
இதன்மூலம் மனிதர்கள் தாங்கள் விரும்பியதை எவ்வளவு
வேண்டுமானாலும் சாப்பிட்டு ஒல்லியாகவும், தெம்புடனும்
இருக்கலாம். நாம் கூடுதலாக சாப்பிட்டாலும், அதை வெளியேற்றும்
வேலையை நானோபோட் செய்யும் என 2003-ல் எனது கட்டுரையில் தெரிவித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….
………………..
………………..
…………………
“நீங்கள் நம்புகிறீர்களா…?” – என்று என்னைக் கேட்டால்,
என் கருத்து –
இந்த விஷயத்தை தலைப்பில் கூறி இருக்கும்
அளவுக்கு சீரியசாக எடுத்து கொள்ளக் கூடாது…
இப்போது ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ்
துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை –
பார்க்கும்போது,
மனித வாழ்க்கையில், உடல் நலம்,
ஆரோக்கியம், மருத்துவத்துறையில் சிகிச்சை முறைகள்,
மேல் ஆராய்ச்சிகள் – போன்றவற்றில் –
கம்ப்யூட்டர் விஞ்ஞானிகள் அக்கறை எடுத்துக்கொண்டால்
பெரிய அளவில் முன்னேற்றங்களை கொண்டுவர
முடியும் என்கிற அளவிற்கு இந்த கருத்தை
ஏற்றுக்கொள்ளலாம்…
.
…………………………………………………………………………………….
இந்தக் கட்டுரை எனக்குச் சிரிப்பை வரவழைக்கிறது.
முதுமையை நிறுத்தப்போகிறார்களாம். ஆளை ஒல்லியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கப்போகிறார்களாம்.
ஏற்கனவே டயபடீஸ், இரத்தக் கொதிப்புக்கு தீர்வைக் கண்டுபிடிக்கக் காணோம், மருந்துக் கம்பெனிகள் மாத்திரம் கொழிக்க வழி கண்டுபிடித்திருக்கிறார்கள். இதுல மனிதனுக்கு சாகா வரமாம்.
இதைவிட more practical solution சீனா கண்டுபிடித்திருக்கிறது. ரோபோ, ஆனால் மனுஷி/மனுஷன் போலவே (தோல் முதல்கொண்டு) இருக்கும், சரியாக ரெஸ்பாண்ட் செய்யும். திருமணத்தில் விருப்பமில்லாதவர்கள் இந்த ரோபோ கம்பேனியனை வாங்கிக்கொள்ளலாம். இருக்கும் காலத்தை நிம்மதியாகக் கழிக்கலாம்.
அது சரி…இந்தத் தளத்திற்கு வரும் வாசகர்களில் (காமை சார் உட்பட) எத்தனைபேர், 100 வயது வரையிலோ அதற்கு மேலோ வாழ ஆசைப்படுகிறீர்கள்? எனக்கெல்லாம் 70 வயதே போதும் என்று தோன்றுகிறது.
//…….(காமை சார் உட்பட) எத்தனைபேர், 100 வயது வரையிலோ அதற்கு மேலோ வாழ ஆசைப்படுகிறீர்கள்…? …. //
புதியவன்,
அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்துவிட்டு,
வாழ்ந்தது போதுமென்ற திருப்தியுடன், நிறைவுடன் –
அழைப்பை எதிர்பார்த்து எந்த நேரமும் –
கிளம்பத் தயாராக காத்திருக்கிறேன்…
என் கணக்கில் மிச்சமிருக்கும் வாழ்நாட்களையும்
எனக்குப் பிடித்த நண்பராகிய உங்களுக்கு மாற்றி விட்டு –
இப்போதே கிளம்ப முடியுமானால் மிகவும்
மகிழ்ச்சி அடைவேன்….!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
என்னுடைய சித்தப்பாவிடம் ஒரு கேள்வி (ஆன்மீகம் சம்பந்தமான) கேட்டிருந்தேன். அவர் தெளிவாகவும் மனத்துக்கு நிறைவாகவும் விளக்கமாக பதில் சொன்னார். அப்போது அவரிடம், உங்களைப் போன்றவர் இல்லைனா, எங்கள் கேள்விக்கு யார் பதில் சொல்வார்கள், இன்னுமொரு நூற்றாண்டிரும் என்று சொன்னேன். அதற்கு அவர், எனக்கு நல்லது நினைத்தால், நான் உடனே போகணும் என்று பகவானிடம் ப்ரார்த்தித்துக்கொள், நூறுக்கு மேல் வாழணும் என்று சொல்லாதே என்றார் (அவர் 83+). இதுல என் வாழ்நாளை அதிகமாக்கணும் என்று நீங்கள் நினைக்கலாமா? நல்லவர்கள் வாக்கு பலித்துவிடுமே என்ற கவலை எனக்கு. 70தே எனக்கு மிக மிக அதிகம்
People should live as long as they want. That is the way it should be .
Pfizer scientists who came up with Covid vaccine expect cancer vaccine by 2030
120 years is possible how India thought
People,
My view is that People should live
ONLY as long as they are HEALTHY and
ABLE TO LOOK AFTER THEMSELF.
It is better to go when they are forced to depend upon
others EVEN for their own routine necessities.
.
-with best wishes,
Kavirimainthan