அரசியல்வாதிகள் மதத்தை பயன்படுத்துவதை நிறுத்தினால் போதும் – அனைத்தும் சரியாகி விடும்….. சுப்ரீம் கோர்ட் கருத்து ….

………………………………………………

……………………………………………….

உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும்,
வழக்கு ஒன்றில் நீதிபதிகள் தெரிவித்த கருத்து மார்ச், 29-ல்
வெளிவந்த செய்தி ஒன்றில் விவரமாக வெளிவந்திருக்கிறது.

அந்த செய்தி, அப்படியே, கீழே –

………….

https://www.hindustantimes.com/india-news/fringe-elements-making-hate-speeches-on-tv-state-impotent-supreme-court-101680099112713.html

……………..

Fringe elements making hate speeches on TV,
State impotent: Supreme Court

Mar 29, 2023 07:53 PM IST
………………

” When politicians stop using religion,
all this (hate speeches) will stop,”
Justice Joseph said on Wednesday.

The Supreme Court on Wednesday made some strong observations as it heard a contempt plea seeking directions to regulate hate speech. A bench of
Justice KM Joseph and Justice BV Nagarathna
noted that hate speech is a vicious circle and
the state governments have become ‘impotent’ and
do not act in time.

Hate speeches will end the moment politics and
religion are segregated, the bench observed.

“When politicians stop using religion, all this
will stop. We have said in our recent verdict also
that mixing politics with religion is dangerous
for democracy,” Justice Joseph said.

A bench of Justice KM Joseph and Justice
BV Nagarathna made some strong observations
on hate speech.

“Every day fringe elements are making speeches to
vilify others including on TV and public forums,”
the bench noted.

Citing the examples of speeches of Jawaharlal Nehru, Atal Bihari Vajpayee, Justice Nagarathna said,
“Where are we going…? We had orators like Nehru
and Vajpayee.

People from rural areas used to come to listen
to them. Now fringe elements from all sides are
making these statements and we are now asked to
take contempt action against these people.”

“State is impotent. It does not act in time.
If you want us to react, we will say. Why do we
have State?” Justice Joseph said.

Solicitor General Tushar Mehta in his submission
said the petitioner should add some more hate
speeches made in Tamil Nadu and Kerala to the case.

“Leader of DMK party says that if you want
equality you should butcher all the Brahmins,”
the solicitor general said. “Just because it is
said by someone famous, a hate speech can not be pardoned,” Tushar Mehta said.

The bench referred to those speeches and said
“every action has an equal reaction” and added,
“We are following the Constitution and orders in
every case are bricks in the structure of
rule of law. We are hearing the contempt petition because states are not taking action in time.

This is because the state has become impotent,
powerless and does not act in time.
Why should we have a state at all if it is silent?”

“Can’t say that about any state but Centre is not.
The Centre has banned PFI. Please issue notice
to the state of Kerala so that they can respond to this,” Solicitor General Tushar Mehta said.

(With inputs from PTI, LiveLaw)

.
………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to அரசியல்வாதிகள் மதத்தை பயன்படுத்துவதை நிறுத்தினால் போதும் – அனைத்தும் சரியாகி விடும்….. சுப்ரீம் கோர்ட் கருத்து ….

  1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான டீ கடைகளில் இரட்டைக் குவளை முறை நடைமுறையில் இருந்தது. நாங்களும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் தொடர்ந்து போராடி அகற்றினோம். அதற்கு சற்றுத் தள்ளி போய் பார்த்தால், டாஸ்மாக் மதுபானக் கடை இருக்கும். ஆனால், அங்கு ஒற்றைக் குவளை தான். கொஞ்சம் சாராயம் (மது) உள்ளே போனதும் அருகில் இருப்பவரை பார்த்து பிரதர் என்று தான் சொல்கிறான். அதுவும் ஆங்கிலத்தில். அப்போது சாதி எங்கே போனது. நாங்கள் 50 ஆண்டுகளாக சாதிக்காததை அரை டம்ளர் சாராயம் சாதிக்கிறது. இதற்கு வெட்கப்பட வேண்டாமா? என்று கி.வீரமணி பேசியிருந்தார்.

    மூத்த தலைவர் கி.வீரமணியின் பேச்சுக்கு தமிழக பாஜக எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது..

    சாதி அரசியலில் ஊறித்திளைத்து போன தமிழகத்தில், வால் பிடித்த குடும்ப உறுப்பினராலேயே ஓசி சோறு என்று பட்டம் பெற்ற கி.வீரமணி தான் வெட்கப்பட வேண்டும் என்று, தமிழக பாஜகவின் மூத்த தலைவரும், அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சித்துள்ளார்..

    – இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான டீ கடைகளில் இரட்டைக் குவளை முறை நடைமுறையில் இருந்தது. நாங்களும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் தொடர்ந்து போராடி அகற்றினோம். அதற்கு சற்றுத் தள்ளி போய் பார்த்தால், டாஸ்மாக் மதுபானக் கடை இருக்கும். ஆனால், அங்கு ஒற்றைக் குவளை தான். கொஞ்சம் சாராயம் (மது) உள்ளே போனதும் அருகில் இருப்பவரை பார்த்து பிரதர் என்று தான் சொல்கிறான். அதுவும் ஆங்கிலத்தில். அப்போது சாதி எங்கே போனது. நாங்கள் 50 ஆண்டுகளாக சாதிக்காததை அரை டம்ளர் சாராயம் சாதிக்கிறது. இதற்கு வெட்கப்பட வேண்டாமா? என்று கி.வீரமணி பேசியிருந்தார்.

    வெட்கப்பட வேண்டியது கி.வீரமணி தான். அரும்பாடுபட்டு சாராய சாம்ராஜ்யத்தையும், சாராய ரௌடிகளையும் அடக்கி, ஒடுக்கி மது விலக்கை அமல்படுத்தி, தமிழகத்தை நேர் பாதையில் ராஜாஜி நிறுத்திய நிலையில், 1971 ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்த போது சாராய ஆற்றை தமிழகத்தில் ஓடச் செய்து புளகாங்கிதம் அடைந்த கும்பலை ஆதரித்து கொண்டிருப்பதற்கு வெட்கப்பட வேண்டியது வீரமணி தான்.

    சாராயம் போயிற்றே, வருமானம் எங்கிருந்து வரும்? என்ற கேள்விக்கு பணம் படைத்தவர்களிடம் வரி விதித்து, ஏழை எளியவர்களை காப்பதே அரசின் கடமை என்று சொல்லி மது விலக்கை அமல்படுத்தினார் ராஜாஜி.

    ஆனால் அந்த பணம் படைத்தவர்களுக்கு விதித்த வரியில் சமரசம் செய்து கொண்டு, ஊழல்கள் பல செய்து, டாஸ்மாக் வருமானத்தை அதிகரித்து இந்தியாவிலேயே அதிக இளம் விதவைகள் உருவாக காரணமாக விளங்கி கொண்டிருக்கிறவர்களுக்கு வெண்சாமரம் வீசுவதற்கு வீரமணி போன்றவர்கள் வெட்கப்பட வேண்டும்.

    தமிழகம் முழுவதிலும் தீண்டாமைக்கு எதிராக 1920 லேயே குரல் கொடுத்தவர் ராஜாஜி. ராஜாஜி ஆட்சி காலத்தில் தான் ஆதிக்க சக்திகளால் அடக்கி வைக்கப்பட்டிருந்த பட்டியிலன மக்களை கோவில்களுக்குள் செல்ல சட்டமியற்றப்பட்டது என்பதை அறிந்தும், இன்று வரை ராஜாஜியின் சாதியை குறிப்பிட்டு இழித்தும், பழித்தும் பேசிவருவதற்கு வெட்கப்பட வேண்டியது கி.வீரமணி போன்றவர்கள் தான்.

    கீழவெண்மணி விவகாரத்தில் வாய் மூடி மௌனியாக இருந்து, பணம் படைத்தவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களும், மாதங்கள் பல ஆகியும் இன்று வரை வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த கொடூர அரக்கர்களை கைது செய்ய திராணியற்று இருக்கும் கழக அரசை பாராட்டி கொண்டிருக்கும் கி.வீரமணி தான் வெட்கப்பட வேண்டும்.

    சமூக நீதி காத்தோம் என்று 50 வருடங்களாக மார் தட்டி கொண்டு, சாதி அரசியலில் ஊறித்திளைத்து போன தமிழகத்தில், வால் பிடித்த குடும்ப உறுப்பினராலேயே ஓசி சோறு என்று பட்டம் பெற்ற கி.வீரமணி தான் வெட்கப்பட வேண்டும் என்று காட்டமாக கண்டனத்தை பதிவு செய்துள்ளார் நாராயணன் திருப்பதி.

    Read more at: https://tamil.oneindia.com/news/chennai/bjp-narayanan-thirupathy-slams-diravidar-kazhaga-leader-k-veeramani-and-statement-about-tasmac/articlecontent-pf889580-505433.html
    .

  2. ஆதிரையன் சொல்கிறார்:

    உண்மையில் மத ரீதியினாலான பிரச்சினைகளுக்கு மூல காரணமே, இங்கு இந்துக்களை மட்டம் தட்டுவதும், மதம் மாற்றத்தை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதும் தான்.
    ஆனால் இவர்களுக்கு பிஜேபியை குற்றம் சொல்லி பிழைப்பு நடத்துவது தான் வாடிக்கை.அவர்கள் தான் மத ரீதியினாலான பிரச்சினைகளுக்கு காரணம் என்று நம்ப வைக்க படுகிறார்கள்.

  3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    ஆதிரயன்,

    இங்கு சுப்ரீம் கோர்ட் சொல்லியிருப்பது
    பாஜக-வுக்கு மட்டுமல்ல….

    அனைத்து அரசியல்வாதிகளுக்கும்,
    கட்சிகளுக்கும் சேர்த்து தான்.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s