சென்னை கல்லூரி பெண்கள் பாலியல் தொல்லை புகார் …நிர்வாகம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை….?எந்த கயவனை காப்பாற்றும் முயற்சி….?

………………………………..

Students of Kalakshetra held a protest in Chennai over the institute’s inaction against a dance teacher, against whom several girl students have brought sexual harassment allegations (Photo | Express)

…………………………………

கீழே இருக்கும் செய்தியை படித்தாலே புரியும்…
தவறு நடக்கிறது… தொடர்ந்து நடந்திருக்கிறது…
கல்லூரி நிர்வாகத்திலிருந்து நடவடிக்கை இல்லை…
மூடி மறைக்க, மாணவிகளை அடக்க முயற்சிகள் நடக்கின்றன…
கல்லூரிக்கு விடுமுறை… ஹாஸ்டல்கள் மூடப்படுகின்றன…

ஏன்…? குற்றம் இழைப்பவர் யார்….? அவர்களைக் காப்பாற்ற
கல்லூரி நிர்வாகம் ஏன் இவ்வளவு தீவிரமாக முயற்சிக்கிறது….?

கயவர்களின் பின்னால் அரசியல் தலையீடு இருக்கிறதா….?
இல்லையேல், கல்லூரி முதல்வர் வாய்மூடி மௌனியாக
இருப்பது ஏன்…. ?

…………………………………………..

இது குறித்து -இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளிவந்திருக்கும் செய்தி கீழே –

https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/mar/31/kalakshetra-sexual-harassment-row-students-hold-stir-administration-closes-institute-2561140.html

…………..

Kalakshetra sexual harassment row:
tudents hold stir, administration closes institute
Over 200 students, however, continued their protest
late into the night demanding immediate action
against the accused.

Published: 31st March 2023 06:52 AM |

Students of Kalakshetra held a protest in Chennai
over the institute’s inaction against a dance teacher, against whom several girl students have brought sexual harassment allegations

(Photo | Express)By Binita JaiswalExpress News Service

CHENNAI: After a protest by students at Kalakshetra Foundation on Thursday over the institute’s failure
to initiate action against teachers on sexual harassment allegations, the administration has decided to shut the college till April 6.

Over 200 students, however, continued their protest late into the night demanding immediate action against the accused. Talks between the agitating students and institute director Revathi Ramachandran and other officials in the presence of police failed to break the impasse.

As students demanded that the director give them in writing that she would initiate action against the four accused dance teachers,

Ramachandran complained of uneasiness and left the protest site. The protestors said they would continue their agitation till they get justice.

Earlier in the day, students of Rukmini Devi College of Fine Arts, Kalakshetra Foundation, were informed through a circular issued by principal Pakala Ramadas that the college will remain shut from March 30 to April 6 and all inmates must vacate their hostel rooms within two days. The college also postponed exams and the circular said new exam dates will be announced later. Many students that TNIE spoke to said they won’t leave the campus despite the closure notice.

‘Harassment charges first came in Dec 2022’

“Closing down the college is an attempt to weaken our protest. But we will not leave the campus until we get justice,” said a student.

Some students were upset as it will be difficult for them to leave the campus on such short notice.

Students have been holding protests on the campus since morning and even boycotted their exams on Thursday. When the students saw the accused teacher present in the morning assembly, they walked out following which he left the place. The students then again gathered under a banyan tree, the usual morning prayer spot on the campus, and staged a silent protest demanding immediate suspension of the accused.

Later, the students held a protest march to the main gate of the institute shouting the slogans “we want justice” and later interacted with reporters. The students demanded action against four dance teachers — an assistant professor and three other senior repertory dancers.

“These sexual harassment allegations started coming out in December last year but till now the college administration has not taken any action and is busy denying the allegations. We will not tolerate this anymore,” said another student. Many former students and teachers of the institute also supported the protest.

The students’ protest came a day after the chairperson of the National Commission for Women Rekha Sharma visited the campus on Wednesday to inquire about the sexual harassment allegations. Students alleged that they were not given a chance to air their grievances to the NCW chief. Despite repeated attempts, the institute’s director, Revathi Ramachandran, could not be reached for comments on the issue.

………………………………………………

தற்போது வெளிவந்துள்ள செய்தி –

https://tamil.oneindia.com/news/chennai/kalakshetra-sexual-harassment-issue-cm-stalin-speech-in-tamil-nadu-assembly-505310.html?story=2………………………………….

…………………………………………………..

முதலமைச்சர் உறுதி –

சென்னை: கலாஷேத்ரா பாலியல் புகார் நடைபெற்றுள்ளதாக இதுவரை எழுத்துப்பூர்வமான புகார் வரவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மாணவர்களின் பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை பாயும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவான்மியூரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கலாஷேத்ரா கல்வி அறக்கட்டளை நிறுவனம் உள்ளது. இது 1936ம் ஆண்டு ருக்மணிதேவி அருண்டேல் என்பவரால் தொடங்கப்பட்டது. பின்னர் மத்திய அரசு இதனை தன்னாட்சி அமைப்பாக அறிவித்தது. இதற்கு, மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. இங்கு பேராசிரியர் ஒருவர் நீண்ட நாட்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக அந்நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் அளித்தனர். ஆனால், நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருந்ததால்,சமூக வலைத்தளங்களில் மாணவிகள் குற்றசாட்டுகளை பதிவு செய்தனர்.

இதையடுத்து தேசிய மகளிர் ஆணையம், தமிழ்நாடு காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இது தொடர்பாக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கலாஷேத்ராவை சேர்ந்த பாதிக்கப்பட்ட மாணவி என கூறப்படும் ஒரு பெண், தனது பெயரை தவறாக பயன்படுத்தி இதுபோன்று பேராசிரியர் மீது தவறாக பாலியல் புகார் அளித்துள்ளனர் என மனு அளித்திருந்தார். ( ????? )

இந்த மனுவின் அடிப்படையில், விசாரணை நடத்திய பிறகு, அங்கு பாலியல் தொந்தரவு யாருக்கும் நடக்கவில்லை என்று, தேசிய மகளிர் ஆணையம் காவல்துறை விசாரணைக்கான உத்தரவை வாபஸ் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், பாலியல் தொந்தரவு குறித்து மாணவிகள் தொடர்ந்து புகார் அளித்தும், சமூகவலைத்தளங்களில் பேசப்பட்டும், விசாரணை நடத்த வேண்டிய தேசிய மகளிர் ஆணையம் திடீரென புகாரை வாபஸ் பெற்றது, மாணவிகளிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.

சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்ககோரி நேற்று கலாஷேத்ராவில் பயிலும் மாணவிகள் அனைவரும், கைகளில் பதாகைகளை ஏந்தி, நேற்று 10 மணி நேரத்துக்கும் மேலாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேராசிரியர் மீது முறையான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் உறுதியான பதில் அளிக்காத நிலையில் –

போராட்டம் தொடரும் என மாணவிகள் தரப்பில் நேற்று இரவு தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் கல்லூரி நிர்வாகிகளை பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அழைத்து சென்றனர். இதனையடுத்து கலாஷேத்ரா நிர்வாகம் வரும் 6ம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவித்துள்ளது. இந்நிலையில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் உட்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அரசுக்கு திருவான்மியூர் கலாஷேத்ரா மாணவிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில் ‘கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு 4 பேராசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்து வருகின்றனர். அவர்களை கல்லூரி இயக்குனர்கள் மற்றும் நடன துறை தலைவர் காப்பாற்றி வருகின்றனர். அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் எனவும் மாணவிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் துன்புறுத்தல் விவகாரம் தொடர்பாக மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் குமரி நேரில் விசாரணை நடத்தி வருகிறார். பேராசிரியர்கள் நான்கு பேரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என மாணவிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு சட்டசபையில் கலாஷேத்ரா விவகாரம் குறித்து எதிர்கட்சியினர் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பாலியல் புகாருக்கு ஆளானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

இதற்கு முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பதில் அளித்து பேசினார். கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார் நடைபெற்றுள்ளதாக இதுவரை எழுத்துப்பூர்வமான புகார் வரவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
காவல்துறைக்கு இதுவரை எந்த எழுத்துப்பூர்வ புகாரும் வரவில்லை.
தேசிய மகளிர் ஆணையம் முதலில் தானாக முன்வந்து பாலியல் தொல்லை
என டிவிட்டர் செய்தி போட்டு டிஜிபிக்கு கடிதம் எழுதியது. கலாஷேத்ரா பாலியல் விவகாரம் தொடர்பாக விசாரணையை முடித்துவிட்டதாக தேசிய மகளிர் ஆணையம், டிஜிபிக்கு கடிதம் எழுதியது.

விசாரணையை முடித்துவிட்டதாக கூறிய பின்னர் கலாஷேத்ராவுக்கு தேசிய மகளிர் ஆணைய தலைவர் நேரில் வந்து விசாரணை நடத்தியுள்ளார் என்று தெரிவித்தார்.

கலாஷேத்ரா கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் உறுதியளித்துள்ளார்.

.
………………………………………………………………………………………………….…………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to சென்னை கல்லூரி பெண்கள் பாலியல் தொல்லை புகார் …நிர்வாகம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை….?எந்த கயவனை காப்பாற்றும் முயற்சி….?

  1. புதியவன் சொல்கிறார்:

    திமுக அரசின் நடவடிக்கை இந்துக்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் மாத்திரமே இருக்கும். இதற்கு நமக்குத் தெரிந்த (இங்கு வெளிவந்த) மூன்று உதாரணங்களே உண்டு. பத்மா சேஷாத்ரி, கேளம்பாக்கம் சிவசங்கர் பாபா சம்பந்தப்பட்ட பள்ளி, கலாக்ஷேத்ரா…. கிறித்துவ நிறுவனங்கள், முஸ்லீம் பள்ளிகள் போன்றவற்றைப் பற்றி விவாதித்திருக்கிறார்களா? ஏன் சமீபத்தில் பாதிரியாரின் பாலியல் பலாத்காரங்கள் பற்றிய செய்திகளை விவாதித்திருக்கிறார்களா?

    பலர், எந்த நிறுவனத்தின் இடத்தை அரசு எடுத்துக்கொண்டு (கையகப்படுத்தி) பிற்காலத்தில் தனியாருக்குத் தாரை வார்க்கலாம் என்று எண்ணியிருக்கிறதோ அந்த அந்த நிறுவனங்களைக் குறி வைக்கிறார்கள் என்று இவற்றிர்க்கு தவறுதலான அர்த்தம் வேறு கற்பிக்கிறார்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s