……………………………………

………………………………………….
……………………………………………..
பிற்சேர்க்கை –
…………………………….
டாக்டர் சுமந்த் சி.ராமன்
அவர்கள் சில கருத்துகளைச் சொல்லும்
ஒரு காணொலியை பார்த்தேன்…
கீழே –
……………
.
…………………………………………………………………………………………………………………………..……..
……………………………………
………………………………………….
……………………………………………..
பிற்சேர்க்கை –
…………………………….
டாக்டர் சுமந்த் சி.ராமன்
அவர்கள் சில கருத்துகளைச் சொல்லும்
ஒரு காணொலியை பார்த்தேன்…
கீழே –
……………
.
…………………………………………………………………………………………………………………………..……..
பெங்களூரில் பேசிய பேச்சுக்கு, மோடி ஜாதியினர் இருக்கும் குஜராத்தில் வழக்குத் தொடரப்பட்டு (2019ல்..நேற்று வழக்குத் தொடுத்து இன்று பெற்ற தீர்ப்பு அல்ல) சில நாட்கள் முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் தற்போது இருக்கும் சட்டப்படி, ராகுலின் எம்.பி பதவி காலாவதியாகிவிட்டது. இந்தத் தீர்ப்பில், ‘habitual offender’ என்று ராகுலைப் பற்றி நீதிபதி சொல்லியிருக்கிறார்.
தற்போது இருக்கும் சட்டத்தை, அப்போது கபில் சிபலும் மன்மோகனும் மாற்றி, 3 மாத நேரம் கொடுக்கும்படியாகச் செய்தனர். ஆனால் சிறுபிள்ளைத்தனமாக ராகுல் காந்தி, ஏதோ ஒரு மீட்டிங்கில் (அஜய் மக்கான் மீட்டிங்கில்), அஜய் மக்கானிடமிருந்து மைக்கை வாங்கி, தங்கள் கட்சி கொண்டுவந்த சட்டத்திற்கு எதிராகப் பேசி, சட்ட நகலை அனைவரின் முன்பும் கிழித்துப்போட்டார். இந்தச் செயல் அதிருப்தியை விளைவித்தாலும், தலையாட்டிப் பொம்மை மன்மோகன் சிங், அந்தச் சட்டத்தைத் திரும்பப்பெற்றுக்கொண்டார். ப.சி. கருத்துப்படி, சட்டம் சொல்வது, ‘குற்றவாளி’ என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டாலே தகுதி இழப்பு வந்துவிடும். இப்போ அதுதானே நடந்துள்ளது? தங்களுக்கு வந்தல் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளிச் சட்னி என்ற காங்கிரஸின் கோட்பாடையே ப.சி. கூறுவதாகத் தோன்றுகிறது.
முன்னாள் அமைச்சர் சொன்னதற்கு, அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது, அதனால் வலிந்து இப்போது கவனம் பெறப் பேசுகிறார் என்று சொல்லும் ப.சிதம்பரம், தன் மகனை தமிழக காங்கிரஸ் தலைவராக்கவேண்டும் என்று விண்ணப்பம் போட்டுள்ளதால், அதற்கு ஆதரவாக இப்போது ராகுலுக்காக பரிந்து பேசுகிறார் என்று சொல்லமுடியுமா?
ப.சி கேட்கும் அதே கேள்வியை நான் கேட்கிறேன். ஜெ வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ். பாரதி. வழக்கு எங்கு நடைபெற்றது? காங்கிரஸ் ஆண்ட கர்நாடகாவில். தீர்ப்பு பல முறை ஜெ வுக்கு எதிராக வந்தது காங்கிரஸ்+திமுக கூட்டணி அரசு இருந்தபோது. என்று இப்படி நீதிமன்றத்திற்கும், கட்சிக்கும் ஆட்சிக்கும் முடிச்சுப் போடுவதற்கா இவர் வக்கீலுக்குப் படித்தார்? இல்லை ஒருவேளை 60 வருட காங்கிரஸ் ஆட்சியில் எல்லாத் தீர்ப்புகளும் காங்கிரஸ் அரசு சொல்படிதான் வந்ததா?
அவதூறுகளுக்கு கிரிமினல் நடவடிக்கை கூடாது என்று இப்போது புதிதாக புத்தி வந்து பேசும் ப.சிதம்பரம், தமிழக அரசு, சல்லி விஷயங்களுக்கெல்லாம் அரசுக்கு எதிராக எழுதிய பேசியவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்தபோது, தங்கள் கட்சி அல்லது கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பேசியவற்றைக் கண்டுகொள்ளாமல் இருந்தபோது என்ன செய்துகொண்டிருந்தார்? ஒருவேளை கார்த்திக் சிதம்பரத்தை தலைவராக ஆக்க ரெக்கமெண்டேஷன் லெட்டர் வாங்கிக்கொண்டிருந்தாரா இல்லை தன்னுடைய எம்பி சீட்டிற்கு பங்கம் வந்துவிடக்கூடாது என்று பயந்துகொண்டிருந்தாரா? சிவில் வழக்காகப் பார்த்தால்தான் ஐம்பது வருடங்களுக்கு இழுத்தடிக்கலாம் என்ற ரீதியில் யோசிக்கிறாரோ?
காங்கிரஸ், மற்ற மாநிலக் கட்சிகளின் தலைமையில் சிறிய பங்காளியாக கூட்டணி அமைக்கணும் என்ற ப.சி.யின் ஆசை சரியானதுதான். அப்போதான் இவரைப் போன்ற மக்கள் செல்வாக்கில்லாதவர்கள் எம்.பி. பதவிகளை, எம்.எல்.ஏ பதவிகளைப் பிறர் தயவில் பெற முடியும். காங்கிரஸ் வலுவிழந்துள்ள மாநிலங்கள் ‘சில’ என்று ப.சி. கூறுகிறார். அந்த சில மாநிலங்கள் உத்திரப் பிரதேசம், மஹாராஷ்டிரா, பீகார், ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்கம், தமிழகம்…. என்று 80 சதவிகித எம்.பி. சீட்டுகளைக் கொண்டுள்ள மாநிலங்கள்.
“அச்சமில்லை அச்சமில்லை என்று எதிர்த்து நின்றால்” – ஒருவேளை, ‘எதிர்த்து நின்றிருந்தால்’ திமுக, காங்கிரஸ் ஏவிவிட்ட சிபிஐக்கு பயந்துகொண்டு 64 சீட்டுகளை வாரி வழங்கியிருக்கவேண்டியதில்லை என்று சொல்ல முயல்கிறாரோ?
//அதிகபட்ச தண்டனையே 2 ஆண்டுகள்தாம்// – இப்படிப் பேசும் பசி, குன்ஹா என்ன சொல்லி அதிக பட்ச தண்டனையை ஜெ.வுக்குக் கொடுத்தார் என்பதை அறியமாட்டாரா? அரசியல் கட்சித் தலைவர் இப்படி நடந்துகொண்டதனால் அதிகபட்ச தண்டனையைக் கொடுக்கிறேன் என்றுதானே குன்ஹா சொன்னார் அப்போது அதை வரவேற்றது மட்டுமல்லாமல் அதைப்பற்றிப் பலமுறை பேசியவர்தானே ப.சி. பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்ட, முக்கியத் தலைவரான ராகுல் இப்படி பொறுப்பற்று மூன்றாம் தர அரசியல்வாதிபோல சாதியைப் பற்றிப் பேசியது மட்டுமல்லாமல், இதற்கு முன்பும், ‘உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு’ கேட்கும்படியாக பல முறை தவளை வாயால் தவறிழைத்திருக்கிறார் என்பதனால், habitual offender என்று கருதி நீதிபதி இந்தத் தீர்ப்பைக் கொடுத்திருக்கிறார். இது பிற உயர்நிலை நீதிமன்றங்களில் மாறலாம் அல்லது நீக்கப்படலாம். ஆனால் தண்டனை கொடுத்தது தவறு என்று சொல்ல ப.சி யார்? ஆளுக்கேற்றபடி, கட்சிக்கேற்றபடி நீதிபதிகள் தீர்ப்பு வழங்கவேண்டும் என்ற காங்கிரஸின் 70 ஆண்டு காலக் குரலை உயர்த்திப்பிடிக்கிறாரா ப.சி?
புதியவன்,
தேடித்தேடி வியாக்கியானம் எழுத
மிகச் சிரமப்பட்டிருக்கிறீர்கள் … !!!
உங்கள் அயராத முயற்சிக்காக
உங்களைப் பாராட்ட நினைத்தால்,
அதற்குள், டாக்டர் சுமந்த் சி.ராமன்
அவர்கள் சில கருத்துகளைச் சொல்லும்
ஒரு காணொலியை பார்த்தேன்…
இதற்கும் எப்படியாவது நியாயம்
சொல்லி விளக்கம் கொடுங்களேன்….😃
இவ்வளவு செய்து விட்டீர்கள் –
இதைச் செய்ய முடியாதா என்ன …!!! 😊😊😊
……………
.
……………………………..
எனக்குத்தான் புரியலையா இல்லை சுமந்த் வியாக்கியானம் அளிக்கிறாரா? ராகுல் காந்தி, சோனியா காந்தி இவர்களின் ஊழல்களைப் பார்த்து (என்ன வியாபாரம் செஞ்சாங்க பிலியன் டாலர் சொத்து சேர்க்க), காந்தி பெயர் கொண்டவர்களே ஊழல்வாதிகள், திருடர்கள், தேசத் துரோகிகள் என்று நான் எழுதினால், கா.மை சார், ‘மகாத்மா காந்தியைப் பற்றி அவதூறாக எழுதும் துணிச்சல் வந்துவிட்டதா?’ என்று பதில் கேள்வி கேட்க முடியாது போலிருக்கே. காந்தியே எழுந்து வந்தாலும் வழக்கு போடமுடியாது என்று சுமந்த் சொல்கிறார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி மக்கள் எல்லோரும் பிச்சைக்காரர்கள், காசு கொடுத்தால் எந்த வித தேசத் துரோகத்தையும் செய்யத் தயங்க மாட்டார்கள், திருமங்கலம் மக்களைப் போல, என்று யாரேனும் எழுதினால், அவர் மீது யாரும் நடவடிக்கை எடுக்க முடியாது, அவதூறு வழக்கு போடமுடியாது என்று சொல்லமுடியுமா? எழுத்தாளர் பெருமாள் முருகன் மீது வழக்குப் போட்டு, அவரை ஓட ஓட விரட்டினார்களே (இந்துக்களைப் பற்றித் தவறாக எழுதியதற்காக வெளிநாட்டிலிருந்து அவருக்கு விருது கிடைத்தது என்பது வேறு விஷயம்)
கொஞ்சம் நியாயமா யோசித்தால் (அது எதுக்கு நாம் நியாயமா யோசிக்கணும்? சகோதரி கணவன் என்பதால் எந்த ஏர்போர்ட்டிலும் செக்கிங் கிடையாது என்று ஆணை பிறப்பித்து லவட்டினவர்கள்தானே இந்தக் கும்பல். சீனாவுடன் தனிப்பட்ட ஒப்பந்தம் போட்டு நாட்டைக் காட்டிக்கொடுத்தவர்கள்தானே. ஏற்கனவே கிரிமினல் குற்றங்களில் ஜாமீனில் இருப்பவர்கள்தானே இவர்கள்), பாஜக இந்த விஷயத்தில் அரசியல் செய்திருக்கிறது. எனக்கு என்னவோ வேறு பிரச்சனையை மறைக்க இந்தப் பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கிறது, பாராளுமன்றத்தை சமீப நாட்களில் முடக்கியிருக்கிறது என்றே தோன்றுகிறது. ஆனால் அதைக் கேள்வி கேட்கும் யோக்கியதை ஒரு பயலுக்கும்-அரசியல்வாதிகளைச் சொன்னேன், கிடையாது.
இன்று ஒரு செய்தி படித்தேன்.
20 டிசம்பர் 1978 அன்று, லக்னோவில் இருந்து 132 பயணிகளை ஏற்றிக்கொண்டு டெல்லி செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானமான ஐசி 410ஐ இரண்டு நண்பர்கள் போலாநாத் பாண்டே மற்றும் தேவேந்திர பாண்டே ஆகியோர் கடத்திச் சென்றனர்
.
அவர்களின் கோரிக்கைகள்?
கடத்தல்காரர்கள் இரண்டு கோரிக்கைகளை வைத்திருந்தனர்
1. எமர்ஜென்சிக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்ட இந்திரா காந்தியை உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும்
2. சஞ்சய் காந்தி மீதான அனைத்து வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்
. கடத்தல்காரர்களுக்கு என்ன ஆனது?
1. 1980ல் இந்திரா காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, போலாநாத் மற்றும் தேவேந்திர பாண்டே ஆகியோருக்கு உ.பி. சட்டமன்றத் தேர்தலில் சீட்டு வழங்கப்பட்டது. இருவரும் தேர்தலில் வெற்றி பெற்றனர்
2. போலாநாத் பாண்டே 1980 இல் தோபா (பல்லியா) தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ ஆனார் மற்றும் 1991 வரை எம்.எல்.ஏ.வாக இருந்தார்
3. தேவேந்திர பாண்டேவும் 1980ல் எம்.எல்.ஏ.வாகி, தொடர்ந்து 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார்
4. போலாநாத் பாண்டே 1991, 1996, 1998, 1999, 2004, 2009 மற்றும் 2014 தேர்தல்களில் சேலம்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக லோக்சபா தேர்தலுக்கான டிக்கெட்டுகளை பரிசாக பெற்றார்
.
விமானத்தை கடத்திய குற்றவாளிகளை காங்கிரஸ் கட்சி இப்படித்தான் நடத்துகிறது. ஆனால் இந்திரா காந்தியை விடுவிக்க விமானம் கடத்தப்பட்டதால், கடத்தல்காரர்கள் சக்திவாய்ந்த சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக்கப்பட்டனர். காங்கிரஸைப் பொறுத்தவரை, குடும்பம் என்பது தேசம், தேசிய நலன் மற்றும் மக்களுக்கு மேலாக உள்ளது
.
விமானம் கடத்துபவர்களுக்கு எம்.எல்.ஏ., எம்.பி., ஆவதற்கு டிக்கெட் பரிசாக வழங்கப்படும் நாடு உலகில் உண்டா?? (https://en.wikipedia.org/wiki/Bholanath_and_Devendra_Pandey). இது போலவே கர்நாடக மாநிலத் தலைவராக இருந்த நிஜலிங்கப்பாவின் கார் டிரைவர் ஜாஃபர் ஷெரீஃப், காரில் நடந்த பேச்சுக்களை ஒட்டுக்கேட்டு இந்திரா காந்திக்குச் சொல்லி, அதனால் எம்பி மற்றும் மத்திய மந்திரியாகும் வாய்ப்புப் பெற்றார். இந்தியாவின் மீதான அக்கறை நேரு குடும்பத்திற்கு இப்படி இருந்திருக்கிறது.
.
புதியவன்,
உங்களுக்கு பிடித்தமான வாட்ஸப் குழுக்களில்
வந்த கதைகளை எல்லாம் இங்கே எடுத்துப்
போட்டிருக்கிறீர்களென்று நினைக்கிறேன்…
சுவாரஸ்யமாக தான் இருக்கின்றன.
ஆனால், அதை சரியான முடிவுரையுடன்
முடிக்காததால், நீங்கள் எதிர்பார்க்காத
கருத்து ஒன்று உருவாக காரணமாகி
விட்டீர்கள்…
“அவர்கள் அன்று செய்யவில்லையா…
அவர்கள் செய்தது தப்பில்லை என்றால் –
இன்று இவர்களும் அதையே தானே
செய்கிறார்கள்… இது மட்டும் எப்படி
தப்பு ஆகும் ..??? ” 😊
நான் சுதந்திரமானவன்…
எதையும் எழுத முடிகிறது.
இரண்டு தரப்பையும் விமரிசிக்க முடிகிறது..
ஆனால், பாவம் நீங்கள் “பாச” வலையில்
சிக்கி – மெல்லவும் முடியாமல்,
விழுங்கவும் முடியாமல் திண்டாடுகிறீர்கள்….!!!
………………..
அதெல்லாம் கிடக்கட்டும்…
நான் உங்களை எந்தக் கதையையாவது சொல்லி
தப்பித்துகொண்டு போக விட மாட்டேன்..
சுமந்த் சி ராமன் விஷயத்துக்கு
வாருங்கள் சார்…
பாயிண்ட் பாயிண்டாக – அவர் சொன்னதற்கு
பதில் தாருங்களேன். ப்ளீஸ் ப்ளீஸ் …. 😉😉😉
.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
…………..
.
அவைகள் கதைகள் அல்ல. நடந்த நிகழ்வுகள். கூகிளிட்டுப் பார்த்தாலே தெரிந்துவிடும். ஜாபர் ஷெரீப்பின் கதையும் பத்திரிகைகளில் வந்ததுதான் (as usual, இந்திரா காலத்திற்குப் பிறகு). இந்தியன் எக்ஸ்ப்ரஸ் பெரிய ஆர்ட்டிகிள் வெளியிட்டது என்று நினைவு.
சுமந்த் சொல்லுவது, நீதிபதிக்கு அடிப்படை சட்டம்கூடத் தெரியவில்லை என்று (அதாவது மூவரைத் தவிர வேறு யாரும் கேஸ் போடக்கூடாது என்று). நிச்சயம் அவரது மனைவியிடம் இதைப்பற்றிக் கேட்டிருப்பார், அதன் அடிப்படையில் அவர் பேசலாம்.
நமக்குச் சட்டத்தின் பல கோணங்கள், பாயிண்டுகள் தெரியாது. அதனால் நமக்கு, ‘அடப்போப்பா…நீங்க செய்யாத அட்டூழியமா. எல்லாவற்றிர்க்கும் ஆதி காரண கர்த்தா நீங்கள்தான். ஏதோ கடவுள் புண்ணியத்தில் கூட்டுக்கொள்ளை இல்லாமல், பாஜக அரசு வந்துள்ளது. அதை நொட்டை நொள்ளை சொல்லும் தகுதி உங்கள் யாருக்கும் கிடையாது. அந்தப் பக்கம் போங்க’ என்றுதான் சொல்லத் தோன்றும். பாஜகவுக்கு ஒரு க்ரெடிபிள் எதிர்கட்சி தேவை என்று தோன்றுகிறது.
பாஜக, அதானி விஷயத்தில் ஏதோ ஒன்றை வெளிப்படையாக விவாதிக்கத் தயங்குகிறது. அது தேர்தல் விஷயமாக ஆகிவிடும் என்ற காரணம் இருக்கலாம். ஏற்கனவே கர்நாடகாவில் பெரும் தோல்வி காத்திருக்கிறது. அதனால் டேமேஜ் கண்ட்ரோல் செய்கிறதோ என்ற ஒரு சந்தேகம் எனக்கு உண்டு.
.
இன்னும் தெளிவாக வெளியே வாருங்கள் …
தப்பு நடந்திருக்கிறது என்று உங்களுக்கே
தோன்றுகிறதல்லவா …?
என்ன அது ..?
வெளி வந்தால் அவ்வளவு பெரிய ஆபத்தா …???
.
This is from TIMES NOW news channel –
…………………..
.
………………………..
– Ayyo Paavam Arasiyalvaathigal -😒😒😒
மகாத்மாவின் மறு உருவம் எடப்பாடி..
சென்னை : ஓபிஎஸ் அணி அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாகவும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வழக்கு தொடர்ந்து இருந்தனர். நிலையில் ஓபிஎஸ் தரப்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.
ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ், எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றதைச் சுட்டிக்காட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,
“கொடநாட்டுல கொலை கொள்ளையே நடக்கல
நாலாயிரத்து ஐநூறு கோடிக்கு டெண்டர்ன்னு ஒன்னே நடத்தல..
எடப்பாடி கட்சியை அபகரிக்கல.. நிலக்கரி காணமல் போகல..
ஊழல்னு ஒன்னு தமிழக எல்லைக்குள்ளேயே இருக்கல..
குட்காவே விற்கல.. எடப்பாடி ஆட்கள் வருமானத்துக்கு அதிகமா
சொத்து ஏதும் சேர்க்கல.. மகாத்மாவின் மறு வடிவமான எடப்பாடி மீது
போடப்பட்ட மற்றும் போடப் போகும் அனைத்து வழக்குகளும் தள்ளுபடி..
குறிப்பு- “பசிக்கு வடை திருடியவருக்கு பத்து மாதம் சிறை”
எனத் தெரிவித்துள்ளார்.
Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/ops-supporter-maruthu-alaguraj-has-criticized-the-verdicts-favoring-eps-505111.html