……………………..

……………………………….
பொதுவாகவே, பெரும்பாலான மாநிலங்களில், பாஜகவுக்கான
எதிர்ப்பு ஓட்டுகளே அதிகமாக இருக்கின்றன…
ஆனாலும், பாஜக தொடர்ந்து மள மளவென்று முன்னேறி
பெரும்பாலான மாநிலங்களிலும், மத்தியிலும் ஆட்சியை பிடித்து
தொடர்ந்து தக்க வைத்துகொள்ளவும் செய்கிறது….!!!
இது எப்படி சாத்தியமாகிறது …?
ஸிம்பிள் மேதமேடிக்ஸ் …
எதிர்ப்பு ஓட்டுகளை, பல கட்சிகளும் சிதறடிக்கின்றன…
மெஜாரிடி ஓட்டர்களின் ஆதரவு இல்லாவிட்டாலும்,
பாஜக ஆட்சியை பிடிக்கிறது…!!!
இதே ஃபார்முலாவை, தெரிந்தே பாஜக, தமிழ்நாட்டிலும்
கடைபிடித்தால் …?
தமிழகத்தில் – பாஜக எதிர்ப்பு ஓட்டுகள் தான் அதிகம்.
இந்த எதிர்ப்பு ஓட்டுகளை, திமுக கூட்டணியும்,
எடப்பாடியார் கூட்டணியும் போட்டி போட்டுகொண்டு
பிரித்துக் கொள்ளும் சூழ்நிலையை –
செயற்கையாகவே உருவாக்கினால்- …
பாஜக தலைமையிலான 3-வது ஜூட்டணிக்கு-
வாய்ப்பு கூடுமல்லவா …?
இந்த புதிய ஃபார்முலா குறித்து, ரவீந்திரன் துரைசாமி அவர்கள் என்ன சொல்கிறார் பார்ப்போமா …?
…………………………………………………………………
எடப்பாடி பழனிசாமி போன்றவர்களிடம் மிக மிக எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி கடைசி நேரத்தில் காலை வாரிவிடுவார். அவர் முந்துவதற்கு முன்பு நாங்கள் பவர்ஃபுல்லாகவே இருக்கிறோம், உள்ளாட்சி தேர்தலிலேயே தனியாக நின்று 5 சதவீத வாக்குகளை எடுத்துவிட்டோம். தமிழிசை காலத்தைப் போல, பாஜக தோற்கும் இடங்களாகப் பார்த்து கொடுத்துவிட்டால் எனன் செய்வது?
அதனால், அண்ணாமலை அலர்ட்டாக இருப்பது சரியானதுதான். அண்ணாமலை டெல்லியில் பாஜக மேலிட தலைவர்களைச் சந்தித்து தனது முடிவைச் சொல்லும்போது, தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவர்கள் அதிமுகவுடன் கூட்டணி வேண்டும் என்ற தங்கள் நிலைப்பாட்டையும் சொல்வார்கள் தான் எனத் தெரிவித்துள்ளார்.
தோற்பதை பற்றி கவலை இல்லை மேலும், கோவை எம்.பி தொகுதியில் நின்று ஜெயிப்பதற்காகவே அண்ணாமலை இவ்வளவு ‘ப்ளே’ செய்கிறார் என்று அண்ணாமலை மீது குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால், அப்படி இல்லை, கட்சி வளர்ச்சிக்குத்தான் நான் மாநில தலைவராக இருக்கிறேன் என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார் அண்ணாமலை.
நேரடி மோதலில் பாஜக தோற்றிருக்கிறது. பாஜக எதிர்ப்பு வாக்குகள் பிரியும்போதுதான் மூன்று சீட்களாவது பாஜகவுக்கு கிடைத்திருக்கின்றன. எது பாஜகவுக்கு சாதகமோ அந்த நிலையை நோக்கி நகர்கின்றனர். தமிழ்நாட்டை நம்பி ஒன்றும் பாஜக 2014, 2019ல் ஆட்சிக்கு வரவில்லை. தமிழ்நாட்டில் பாஜக தாங்கள் தோற்கும் சீட்களைப் பற்றி கவலைப்படவில்லை.
2014ல் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பைக் கொடுத்தது மோடி எதிர்ப்பு வாக்குகள் அதிமுக – திமுக என பிரிந்ததால் தான். அதை கணக்கில் வைத்தே பாஜக தனித்துக் களமிறங்க முடிவு செய்கிறது. எடப்பாடி பழனிசாமியை நம்பிச் சென்றால் கடைசி நேரத்தில் அவர் ஏமாற்றிவிடுவார் என்ற புள்ளியில் அண்ணாமலைக்கு இவ்வளவு பவரையும் கொடுத்துவிட்டதே பாஜக தலைமையாகக் கூட இருக்கலாம்.
ஜெயலலிதா செய்த அரசியல், எடப்பாடி பழனிசாமியின் கடந்த கால செயல்பாடுகளைப் பார்த்து, அலெர்ட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக அண்ணாமலை ஒன்று சொல்லட்டும், வானதி, நயினார் நாகேந்திரன் ஒன்று சொல்லட்டும், கடைசியாக பார்த்துக் கொள்ளலாம் என்று கூட டெல்லி தலைமை திட்டமிட்டிருக்கலாம் என்கிறார் ரவீந்திரன் துரைசாமி.
அதிமுகவுக்கு கண்டிஷன் போட தலைமை தான் முடிவெடுக்கும் என நயினார் நாகேந்திரன் சொல்வது ஒருபக்கம் என்றால், பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என அண்ணாமலை சொல்வது அதிமுகவுக்கு இன்னொரு நெருக்கடிதான்.
பாஜக எடப்பாடி பழனிசாமியை நம்பி இருக்கிறது என்ற தோற்றம் இல்லாமல், அதிமுகவுக்கு கண்டிஷன் போட ஒரு தலைவர் இருக்கிறார் என்ற பிரச்சாரத்தை மேற்கொள்ளவும் இது பயன்படும். எடப்பாடி பழனிசாமி 39 சீட்களிலும் தனித்து நிற்கும் முடிவை எடுக்கவும் வாய்ப்புள்ளது. அதற்கு பாஜகவை இப்போதே தயார் செய்கிறார் அண்ணாமலை
என்கிறார் ரவீந்திரன் துரைசாமி.
மேலும் –
அரசியல் களத்தில் பாஜக தலைமையில், பாஜக இரட்டை இலக்க சீட்களில் போட்டியிட்டு ஓ.பன்னீர்செல்வம் + டிடிவி தினகரன் + பாரிவேந்தர் + ஏ.சி.சண்முகம் என்ற கூட்டணியை அமைக்கவேண்டும்.
ஓபிஎஸ் அதிமுகவின் பலமான தலைவர் என்பதை நிறுவும் வகையில் அவருக்கும் இரட்டை இலக்கத்தில் சீட் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் அதிமுக வாக்குகளைப் பெற முடியும்.
எடப்பாடி பழனிசாமி வைத்திருப்பது மோடி எதிர்ப்பாளர்கள் வாக்குகள்
தான். கட்டுச் சோத்துக்குள் பெருச்சாளியை வைத்துக் கட்டியது போல, அவர்களிடம் இருக்கும் பெரிய அளவிலான வாக்கு வங்கி என்பதே மோடி எதிர்ப்பு ஓட்டுதான். அந்த ஓட்டுகள் அனைத்தும் 2019ல் சென்றது போல
திமுக + காங்கிரஸ் அணிக்குச் செல்லும்.
2014ல் ஐந்தரை சதவீத வாக்குகளை பாஜக பெற்றிருக்கிறது.
பாஜக ஒரு சீட் ஜெயித்திருக்கிறது. பாஜக கூட்டணி மொத்தமாக 3 சீட் ஜெயித்திருக்கிறது.
2019ல் 2.7 சதவீதம் ஓட்டுகளைத் தான் பெற்றிருக்கிறது. ஆனால்,
உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று 5 சதவீத ஓட்டுகளுக்குக் கொண்டு சென்றிருக்கிறார் அண்ணாமலை. மீண்டும் தனியாக நின்றால் 8 சதவீத வாக்குக்கு பாஜகவை கொண்டு செல்வார்.
தேனி, கன்னியாகுமரி, தென்காசி ராமநாதபுரத்தில் ஜெயிக்கும் வாய்ப்பு அமையும். கொங்கு மண்டலத்திலும் எடப்பாடிக்கு சளைத்தவர் இல்லை என்ற நிலைக்கு அண்ணாமலை வருவார். அண்ணாமலையின் இந்த முடிவு மோடிக்கும், பாஜகவுக்கும் நல்லது.
சில வாதங்கள், எந்த முடிவையும் நியாயப்படுத்த உதவுகின்றன….!!!
.
………………………………………………………………………………
இது ஒரு முக்கியமான பதிவு. தேதிமுக தொடர்ந்து தனியாக களத்தில் இருந்திருந்தால் மிக முக்கியமான கட்சியாக (விஜயகாந்திற்கு உடல் நலம் நன்றாக இருந்த பட்சத்தில்) வளர்ந்திருக்கும். அதைக் குடும்பக் கட்சியாக்கி குட்டிச்சுவராக்கிவிட்டனர் அவர் மனைவியும் மச்சானும். திராவிடக் கட்சிகள் தேவையில்லை என்று நினைப்பவர்களுக்கு ஆப்ஷன் இல்லாமல் இருந்தது (அல்லது, அதிமுக ரொம்பவே திராவிடக் கட்சியில்லை என்று நம்பி அதற்கு வாக்களித்தனர்). ஒரு கட்சி தனித்துக் களம் கண்டால் இரண்டு தேர்தல்களில் 20 சதத்தைத் தாண்டுவது உறுதி. காங்கிரஸ் தனித்து மூப்பனார் தலைமையில் களம் கண்டபோது 20 சதத்திற்கும் அதிகமாக வாக்குகள் வாங்கியது நினைவிருக்கும் (சீட்டுகள் அதற்கேற்றவாறு கிடைக்காதபோதும்). தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சிக்கு இடம் உண்டு. அது பாஜகவாக இருக்கவேண்டும் என்று அண்ணாமலை விரும்புகிறார். அவர் எண்ணப்படி தனித்து நிற்குமானால், பாஜக மூன்றாம் கட்சியாக வளரும்.
(அப்போ ஏன் மற்றக் கட்சிகள் வளரவில்லை என்ற கேள்வி வருமானால், நாம் தமிழர் தவிர மற்ற கட்சிகள் ஒட்டுண்ணிகளாக இருக்கவே விரும்புகின்றனர். உறுதியற்ற தன்மையினால்தான் பொதுமக்கள் அவற்றை நம்புவதில்லை. நாம் தமிழர் கொள்கைகள் நடைமுறைக்கு சாத்தியமில்லாத, விசிலடிச்சான் குஞ்சுகளை நம்பிச் செயல்படுகிறது. அதனால்தான் அதன் வாக்கு சதவிகிதம் 6ஐத் தாண்டுவதில்லை)