…………………………………………

………………………….

………………..

………………………………
- கடல் மட்டத்திலிருந்து 16,000 அடி உயரத்தில் அமைந்துள்ள
உலகிலேயே அதிக உயரமான ரெயில் பாலம் –
இதன் நீளம்: 2,156 அடி
உயரம்: 1,178 அடி (செனாப் நதி படுகை)
வளைவு : 1,570 அடி
செனாப் பாலம் (Chenab Bridge) – ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில்
உள்ள செனாப் நதியின் மீது குறுக்காக அமைக்கப்படும் இருப்புப்
பாதை பாலம் .
செனாப் பாலத்தின் நீளம் 17 வளைவுகளுடன், 1,315 மீட்டர் இருக்கும்,
அவற்றில் செனாப் ஆற்றின் குறுக்கே உள்ள பிரதான வளைவின்
பரப்பளவு 467 மீட்டர் ஆகும். இதன் கம்பீரமான வளைவுகள்
நிறைவடைவதன் மூலம், ஆற்றின் படுக்கைக்கு மேலே 359 மீட்டர்
உயரமும் ( பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை விட 30 மீட்டர்
அதிக உயரம்…!!!)
இது வடக்கு இரயில்வேயால் 28,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலம் 8 ரிக்டர் வரை நிலநடுக்கம் மற்றும்
அதிக தீவிரம் கொண்ட குண்டுவெடிப்புகளைத் தாங்கும்.
14 மீட்டர் இரட்டை இருப்புப் பாதை மற்றும் 1.2 மீட்டர் அகலமுள்ள
மத்திய விளிம்பை உள்ளடக்கியது.
…………………………………………………..
2003-லேயே யோசிக்கப்பட்ட இந்த திட்டம், பலவித தடங்கல்களை
துவக்கத்திலேயே சந்தித்து – கடந்து, ஒருவழியாக 2009-ல்
வடக்கு ரெயில்வேயால் இறுதி ஒப்புதல் பெறப்பட்டு,
2009-ல் கட்டுமானப்பணி துவங்கியது.
மிக பிரம்மாண்டமான இந்த திட்டம், பலவித இயற்கை மற்றும்
செயற்கை தடங்கல்களை கடந்து, இப்போது, ஒருவழியாக
முடிவடையும் நிலைக்கு வந்துள்ளது…. இனி, இருப்புப்பாதை
மட்டுமே போடப்பட வேண்டும்… இந்த திட்டம் 2024 டிசம்பரில்
செயல்பாட்டிற்கு வந்து விடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கட்டுமானப்பணியில் பங்குகொண்டவர்களில் சிலர் –

………………………………………………………………………………………..
.
………………………………………
Chenab Bridge – World’s Highest Bridge-
It Happens Only in India – National Geographic
………………
.
………………………………………………………………………………………………………………..………………..