…………………………..

…………………………….
அந்தக்கால எழுத்தாளர் சிவசங்கரியை இந்த தலைமுறை
இளைஞர்களுக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை…
சிவசங்கரியும், ஜெயலலிதாவும் இளம் வயது தோழிகள்….ஜெயலலிதா அரசியலில் இறங்கும் வரையில் -மிகவும் நெருக்கமாக பழகியவர்கள்.
இந்தப் பேட்டியில், பெரும்பாலும், தனக்கு மிகவும் நெருக்கமாக இருந்த ஜெயலலிதாவைப் பற்றியும்,இந்திரா காந்தியை பற்றியும் – அவர்கள் இருவரின் தனிப்பட்ட வாழ்வு, குணாதிசயங்கள் பற்றியும் அதிகம் பேசி இருக்கிறார்…..
சிவசங்கரி அவர்களை அவர் எழுதத்துவங்கிய காலத்திலிருந்தே நான்
படித்து, பார்த்து வந்திருக்கிறேன். பல வருடங்களுக்கு முன்பு, நான் திருச்சியில் பணிபுரிந்துவந்த சமயத்தில், ஒரு சங்கத்தின் செயலாளராக பொறுப்பேற்றிருந்த சமயத்தில், அவரை ஒரு விழாவிற்கு சிறப்புரையாற்ற அழைத்திருந்தேன். அப்போது, அவருக்கு மிஞ்சி மிஞ்சிப்போனால், 37-38 வயது இருந்திருக்கும். எழுத்துலகில் அவர் அப்போது மிகவும் பிரபலமாக இருந்தார்.அவரை நேரில் கவனிக்கவும், பழகவும் அப்போது வாய்ப்பு கிடைத்தது. மிகவும் திறமையானவர்… சமூகநலத்தில் மிகவும் அக்கறையோடு எழுதக்கூடியவர்.
வயது வித்தியாசமின்றி, பலருக்கும் இந்த பேட்டி பிடிக்கலாம்….!!!
……………………………………………………….
.
…………………………………………………………………………………………………………………………………………..
More Intelligent than human being –