……………………………………….

……………………………………………
.
…………………………………………………………………………………………………………………………………………………..
…………………….. -பின் சேர்க்கை – …………………………………….. இன்று ஆஸ்கார் விருதைப்பெற்று, ஆனந்தத்தில் திளைக்கும் “ஆர்.ஆர்.ஆர். படத்தின் “நாட்டு-நாட்டு” பாடல், நடனத்தை உருவாக்குவதில் பங்குகொண்ட அனைவருக்கும் விமரிசனம் தளத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம். கீழே – நாட்டு- நாட்டு பாடலும் , நடனமும் இடம்பெற்ற வீடியோவின்- தமிழ் வடிவம் …. …………….. ………………………………….
திங்கள் என்றால், நகைச்சுவைப் பதிவு போடணும்னு ஏதேனும் கட்டாயமா காமை சார்?
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் காட்டுவேன் என்றானாம்….. ‘கடவுள் மறுப்பு’, ‘சமூக நீதி என்ற போர்வையில் இந்துக்கள் எதிர்ப்பு’, ‘பார்ப்பன எதிர்ப்பு’ , ‘இந்து மத எதிர்ப்பு’ போன்றவை, கும்மிடிப்பூண்டி தாண்டினாலேயே வேலைக்கு ஆகாது. இதில் ஸ்டாலினாம், பிரதமராம்.
யாரும் சீண்டாதபோது, ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று முதன் முதலாக மேடை போட்டு அதரவு தந்தார், ராகுல் எம்பி எலெக்ஷனில் தோற்றார். நீட் தேர்வுக்கு 17 மாநில முதல்வர்களுக்கு கடிதம் போட்டார். ஒருவரும் சீண்டவில்லை. அந்தப் பக்கம் தீதி, தானே எதிர்கட்சிகளுக்கு தலைமை தாங்கவேண்டும், காங்கிரஸுக்கு அருகதை இல்லை என்கிறார். இந்தப் பக்கம் ராவ், தானே பிரதமர் பதவிக்குத் தகுதி, அதற்கு ஏற்ற மாதிரி தன் மகளே திகாரைக் குத்தகைக்கு எடுப்பார், என்னிடம் தேசியக் கட்சி இருக்கிறது என்று கொக்கரிக்கிறார், நிதிஷோ, தன்னை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தால் மாநில முதல்வருக்கு தேஜஸ்வி என்று ஒப்பந்தம் போட்டிருக்கிறார். ஏற்கனவே 2ஜி, பிஎஸெனெல், என்று எல்லாவற்றிலும் ஊழல் செய்து அதில் தாங்கள் பெரியவர்கள் என்று காண்பித்ததால், சோனியா வேறு தன் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்துவிட்டது என்று சொல்லிவிட்டதால், அகில இந்தியத் தலைமைப் பொறுப்பும் தன்னிடம் வந்துவிடும் என்று பகல் கனவு காண்கிறார் போலிருக்கிறது.
கனவு காண்பதற்கு அளவு வேண்டாமா? ஆனானப்பட்ட கருணாநிதியே, தன் உயரம் தனக்குத் தெரியும் என்று சொல்லியிருக்கிறார். உயர கிரீடம், பெரிய குதிகால் செருப்பு போட்டுக்கொண்டால் உயரம் அதிகமாகிவிடுமா என்ன?
அது சரி… நல்லா ஜிங் சக், ஜிங் சக் போட்டுக்கொண்டிருந்த ‘மூத்த பத்திரிகையாளர்’ என்று தன்னை அழைத்துக்கொள்ளும் மணிக்கு என்னாச்சு? திமுக எதிர்ப்பு ஸ்டாலின் எதிர்ப்பு என்று போய்க்கொண்டிருக்கிறார்? சவுக்கு சங்கருக்கு உள்ள வாசகர் பரப்பு தனக்கும் கிடைக்கணும், அதுக்கு உண்மையை உரத்துச் சொன்னால்தான் சாத்தியம், காசுக்காக ஜால்ரா தட்டிக்கொண்டிருந்தால் தன்னை மதித்து ஒருவரும் பேட்டிக்கு வரமாட்டார்கள் என்று (லேட்டாக) புரிந்துகொண்டுவிட்டாரோ?
அது சரி…. எந்த தைரியத்துல இந்த மாதிரிலாம் பேட்டி எடுக்கறாங்க, வெளியிடறாங்க? கொஞ்சம் காசு கொடுத்தால், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு ட்ரம்புக்கு டஃப் பைட் கொடுக்கப்போகிறார் என்று கூட இவனுங்க பில்டப் கொடுப்பாங்க போலிருக்கு. ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர்னு சொல்லி முதல்ல காங்கிரஸிடம் பேசிப்பார்க்கட்டுமே.
மணியும், வேலையத்தவர் போல, ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர்னா உடனே மோடி எச்சரிக்கையாயிடுவார், கடுமையா ஸ்டாலின் மீது பழி தீர்ப்பார் என்றெல்லாம் உளறுகிறார்.
இதான் சாக்கு என்று ஆளாளுக்கு பொழுதுபோக்கு காணொளிகள் வெளியிட ஆரம்பித்துவிட்டார்கள். மோடியுடன் டீல் ஏற்பட்டுவிட்டது, ஸ்டாலின் துணை பிரதமர், சபரீசன் எம்பி, உதயநிதி தமிழக முதல்வர் என்று.
கா.மை .. சார். கேள்வி பதில் பகுதிக்கு என் கேள்வி…
அரசு லாபநோக்கத்தில் தொழில்களை நடத்த வேண்டுமா? அம்மா உணவகம் போன்ற உண்மையாகவே ஏழைகளுக்காக நடத்தப்படும் உணவகங்கள் ‘லாபம் இல்லை. நிறைய நஷ்டம் ஆகிறது’ போன்ற காரணங்களால் இப்போது சில அடிப்படை கட்டமைப்புகளை குறைத்திருக்கிறார்கள். இரவில் கோதுமை மாவு கொடுப்பதில்லை என்பதால் சப்பாத்தி இல்லை. ஊழியர்கள் குறைப்பு. போன்றவைகளை சொல்கிறேன்.
bandhu,
பொதுவாக, சமூக நலத்திட்டங்கள் என்பவை
ஒரு கட்சியால், அறிமுகப்படுத்தப்பட்டால்,
ஆட்சி மாறினால், எந்த விதத்திலாவது
அதற்கு மூடுவிழா நடத்துவதிலேயே புதிய அரசு
முயல்வது இங்கே வாடிக்கையாகி விட்டது.
அதுவும், இது முக்கியமாக “அம்மா”வின் பெயரை
தாங்கி இருப்பதாலும், இவற்றின் பெயரை
மாற்ற முடியாது என்பதாலும், எதாவது காரணங்களை
கண்டுபிடித்து அல்லது புதிதாக உருவாக்கி –
இதை மூடும் நோக்கிலேயே இருப்பார்கள்.
ஏற்கெனவே திமுக கவுன்சிலர்கள் சிலர்
இவற்றில் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களை,
தெருவோர கடைகளுக்கு மடை மாற்றம் செய்வதாக
செய்தி வருகிறது – சுய ஆதாயத்துடன் தான்.
எனவே, இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை
என்றே நான் நினைக்கிறேன். ஆனால், இந்த
அம்மா உணவகங்களின் மூலம் உண்மையாகவே
பலன்பெற்று வந்த எளியவர்களின்
சாபம் இவர்களை விடாது.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
காமை சார்… அரசு யாருக்காக அம்மா உணவகம் ஆரம்பித்தது? நோக்கத்தைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் நீங்களும் நானும் அங்கே போய்ச் சாப்பிடலாமா? (நான் ஒரு வேளையாவது சாப்பிட்டுப் பார்க்கணும்னு ஜெ இருந்தபோது நினைத்தேன்) IT வேலை பார்க்கிற ஜென்மங்கள் tie போட்டுக்கிட்டு அம்மா உணவகத்தில் சாப்பிட்டு, தமிழர்களின் (அந்த 60 சதம் ) பிச்சையெடுக்கும், ஊழல் செய்யும், தேசத்துரோக குணத்தினால் ஏழைகளுக்கான திட்டங்களைச் சுரண்டுகிறார்கள் என்று சொன்னால் தவறா?