EPS – ஸ்டாலின் ரகசிய உடன்பாடு…..? உடைக்கும் துக்ளக் ரமேஷ்

…………………………………………………………………………

………………………………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல். Bookmark the permalink.

4 Responses to EPS – ஸ்டாலின் ரகசிய உடன்பாடு…..? உடைக்கும் துக்ளக் ரமேஷ்

  1. புதியவன் சொல்கிறார்:

    பதிவுக்கு அப்புறம் கருத்திடுகிறேன் (காணொளியை நீங்கள் வெளியிடுவதற்கு முன்பே யதேச்சயாகப் பார்த்தேன்). கேள்வி பதில் பகுதி வெளியிடுவதில்லையே.. கேள்விகள் குறைவா? இதோ ஒரு கேள்வி.

    காமராஜரைவிட, தமிழக மக்களை நன்றாகப் புரிந்துகொண்டவர் கருணாநிதி என்று சொல்வது சரியா? காமராஜரால் மக்களை அனுமானிக்க முடியவில்லை. ஆனால் கருணாநிதி தமிழர்களைச் சரியாகப் புரிந்துகொண்டார் என்றே நானும் நினைக்கிறேன். (இது என்ன புதுக்கதை என்று யோசித்து உங்களுக்கு தலைவலி ஏற்படுத்த விரும்பாமல் நானே காரணத்தைச் சொல்லிவிடுகிறேன். தமிழர்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள் என்று கருணாநிதி எப்போதும் சொல்வார். திருமங்கலம், ஈரோடு கிழக்கு மக்கள் தங்கள் வாக்குரிமையை உபயோகித்த விதத்தைப் பார்த்தால் கருணாநிதி இவர்களைச் சரியாகத்தான் புரிந்துவைத்திருக்கிறார் என்று தோன்றியது). உங்கள் கருத்து என்ன?

  2. புதியவன் சொல்கிறார்:

    எடப்பாடி-ஸ்டாலின் உடன்பாடு – இதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு, கட்சிகளுக்கு இடையே சகஜம்தான். உதயநிதி போட்டியிடுவதற்கு வசதியாக மற்ற கட்சிகள் அங்கு போட்டியிடாமல் சொத்தை வேட்பாளர் நிறுத்தப்படவில்லையா? ஏன் தேனியில் ஓபிஎஸ் பையன் வெற்றி பெற என்னவிதமான காம்ப்ரமைஸ் செய்யப்பட்டது என்பது தெரியாதா? அதனால் EPS-STALIN உடன்பாடு பெரிய விஷயமல்ல.

    இப்போது பிரச்சனை எடப்பாடிக்கும், அண்ணாமலைக்கும்தான். தனிப்பட்ட பிரச்சனை இல்லை. எப்படி தங்கள் கட்சியை முன்னிறுத்தி, தங்கள் நோக்கத்தைச் செயல்படுத்துவது என்பது.

    அண்ணாமலைக்கு பாஜகவுக்கு 5-8 எம்.பிக்களாவது தமிழகத்தில் கொண்டுவரவேண்டும். அதிமுகவும் நிறைய எம்பிக்கள் பெறவேண்டும். திமுகவிற்கு குறைந்த அளவுதான் எம்பிக்கள் இருக்கவேண்டும். இது நடைபெற, ஒன்றுபட்ட அதிமுக அவசியம், அதனோடு பாஜக கூட்டணி வைக்கவேண்டும். இன்னும் ஒத்த கருத்துடைய கட்சிகளையும் கூட்டணியில் கொண்டுவரவேண்டும்.

    எடப்பாடிக்கு அதிமுகவை வெற்றிப் பாதையில் செலுத்தியாகவேண்டும். அவர் கட்சியின் இரண்டாம்கட்ட ஆலோசகர்களில் பாதி, பாஜக இல்லையென்றால் சிறுபான்மையினரின் வாக்குகள் மொத்தமாக அதிமுக பக்கம் திரும்பும் என்று பஜனை பாடுகின்றனர். பாதிப்பேர், எப்படியும் பாஜகதான் மத்தியில் ஆட்சியமைக்கும், லோகல் பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதுதான் நமக்கு நல்லது என்று சொல்கின்றனர். எடப்பாடிக்கு எந்த மாதிரியான முடிவு எடுக்கவேண்டும் என்று யோசனை. வலிமை குறைவாக இருப்பதாலும், அவசரம் அவசியமில்லை என்பதாலும் தாமதப்படுத்துகிறார்.

    இதில் நான் பார்க்கும் விஷயம்…. காங்கிரஸ் கட்சி போன்று, தமிழகத்தில் யார் தலைவராக இருக்கவேண்டும் என்று மாநில கூட்டணிக் கட்சி சொல்வதை, பாஜக கேட்காது. பாஜகவிற்கு இன்னும் 3-4 வருடங்களுக்கு அண்ணாமலைதான் கட்சியின் தமிழக முகமாக இருக்கும். காங்கிரஸ் போன்று, கொத்தடிமைத் தலைவர், பாஜகவிற்கு இப்போது இல்லை. அண்ணாமலைக்கு வெற்றிபெற வேண்டும் என்ற தாகம் உண்டு. அதனால் தமிழக அரசியலில், எடப்பாடி, ஸ்டாலின்/உதயநிதி, அண்ணாமலை என்ற மும்முனை தவிர்க்க முடியாதது. விஜயகாந்த் இடத்தைத் தாண்டி அண்ணாமலை குறுகிய காலத்தில் பயணிப்பார் என்று நம்புகிறேன். இதனால், பாஜக வை கூட்டணியாக திமுக, அதிமுக – எந்தக் கட்சி சேர்த்துக்கொண்டாலும், அது அவர்களுக்கு ஆபத்துதான்.

    துக்ளக் ரமேஷ் interviewsல், அவர் மிகச் சிறப்பாக, கள யதார்த்தத்தைப் புரிந்துவைத்திருக்கும் சிறப்பான பத்திரிகையாளராகச் செயல்படுகிறார். அவருக்கு என் பாராட்டுகள். ஒரு கட்சிக்கு ஜால்ரா போடுவது, காசுக்கு ஏற்ற மாதிரி தன் பார்வையை மாற்றிக்கொள்வது என்றெல்லாம் அவர் செயல்படவில்லை. அன்றைய நிலைமையை மிகச் சரியாக அனலைஸ் செய்து பார்வையாளர்களுடன் பகிர்ந்துகொள்கிறார் துக்ளக் ரமேஷ். தகுதியானவரைத்தான் தன்னுடன் வைத்திருந்திருக்கிறார் சோ அவர்கள்.

  3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    .
    புதியவன்,

    // எடப்பாடி-ஸ்டாலின் உடன்பாடு – இதெல்லாம்
    அரசியல்வாதிகளுக்கு,
    கட்சிகளுக்கு இடையே சகஜம்தான்.
    EPS-STALIN உடன்பாடு பெரிய விஷயமல்ல.//

    எடப்பாடியாரின் எடுபிடிகள் சொல்லக்கூடிய
    இந்த வார்த்தைகளை, நீங்கள் சொல்வதன் மூலம்,
    எடப்பாடியார் என்ன செய்தாலும் ஆதரிக்கக்கூடிய
    ஜால்ரா கூட்டங்களில் உங்களையும் ஒருவராக
    நிரூபித்துக் கொள்கிறீர்கள்….

    வெளிப்படையாகவே தெரியும் – தவறான
    செயல்களை ஆதரிப்பதன் மூலம்,

    உங்கள் பின்னூட்டங்களின் மீதுள்ள
    நம்பிக்கையையும், மதிப்பையும்
    நீங்களே குறைத்து கொள்கிறீர்கள்….

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • புதியவன் சொல்கிறார்:

      சார்…. உண்மையைச் சொல்லணும்னா, ஜெ. கருணாநிதி போல, எடப்பாடியோ இல்லை ஓபிஎஸ் ஸோ, தலைவர்கள் இல்லை. இவர்களெல்லாம் ‘அட்ஜெஸ்ட்மெண்ட்’ தலைவர்கள். ‘நடப்பன’ நிலையிலிருந்து ‘ஊர்வன’ நிலைக்குச் சென்று, வாய்ப்பு கிடைத்ததனால் ‘நிற்பன’ நிலைக்கு வந்திருப்பவர்கள். ஜெ, கருணாநிதி நிலைக்கு வரும் வாய்ப்பும் திராணியும் இருந்தவர்களில் ஒருவர் விஜயகாந்த். இனி அந்த இடத்திற்கு உயரும் வாய்ப்பு உள்ளவர் அண்ணாமலை என்பது என் தனிப்பட்ட எண்ணம். எடப்பாடியின் மீதான மதிப்பு, அதிமுகவை இன்றைய நிலையில் காப்பாற்ற நினைக்கிறார் என்ற என் அநுமானம்தான்.

      எப்போது கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லையோ, அப்போதே எடப்பாடி/ஓபிஎஸ், அதிமுகவின் திமுக எதிர்ப்பு நிலையிலிருந்து நழுவிவிட்டனர். அதிமுக எம்பி என்று சொல்லப்படும் ரவீந்திரன் ஸ்டாலினைச் சந்தித்து, இந்த ஆட்சி சூப்பர் என்று சொல்லி, சொந்தக் கட்சிக்குக் களங்கம் ஏற்படுத்தினார். இவங்களைப் பத்தி என்ன பேச?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s