……………………………………

……………………

……………………
அதிகம் படிக்காதவர்கள்,
முக்கியமாக முறையாக ஆங்கிலம் படிக்காதவர்கள்,
2-4 நிமிடங்களுக்கு மற்றவர்களுடன் சாதாரண முறையில்
ஆங்கிலத்தில் உரையாடுவது சகஜம். பலரிடம் இதை
பார்த்திருக்கிறோம்.
ஆனால், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் காலத்தில்,
படிக்காத ஒரு தமிழ் நடிகர் ஆங்கிலத்தில் சகஜமாக பேட்டி
கொடுப்பது அபூர்வமே….
அந்த வகையில், சிவாஜி – அந்த நாட்களிலேயே
கொடுத்த ஆங்கில பேட்டியின் வீடியோ கிடைத்தது…
இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் இது வெளிவந்தது…
நானே இப்போது தான் பார்த்தேன்…..
வெட்ட வெளிச்சமாக, தன் வாழ்க்கை முழுவதையும் பற்றி
மனம் விட்டு பேசுகிறார் சிவாஜி…. பேட்டி முழுவதையும்
பார்க்கும்போது,
“அய்யோ இந்த மகா கலைஞன் –
இன்று நம்முடன் இல்லையே ” என்கிற ஆதங்கம் உண்டாகிறது.
பேட்டி காண்பவர் – புகழ்பெற்ற அந்தக்கால தூர்தர்ஷன்
படைப்பாளி – ராஜீவ் மெஹ்ரோத்ரா –
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் … கீழே –
IN CONVERSATION- SIVAJI GANESHAN –
…………………
.
………………………………………………
பேட்டி நன்றாகவே இருந்தது, வெள்ளந்தி மனதிலிருந்து வந்த வார்த்தைகள்.
சிவாஜி அவர்கள் என்னை ஒரு வார்த்தை கேட்டிருந்தால் சொல்லியிருப்பேன், உங்களுக்கு அரசியல் சுட்டுப்போட்டாலும் வராது என்று. 80களில் 1 1/2 கோடியை அவர் இழந்திருக்காமல் இருந்திருக்கக் கூடும். அவர் அரசியல் பேச்சை பாளையங்கோட்டையில் கேட்டு நொந்துபோனேன். சினிமா வசனங்கள் பாணியில் நாடகத் தன்மையோடு, புளுகுமூட்டைகளாக அந்தப் பேச்சுகள் அமைந்திருந்தால், நிச்சயம் நல்ல நிலைக்கு அரசியலில் வந்திருப்பார். (இருந்தாலும் ஒண்ணு சொல்லணும்…..சாதாரண மனிதர்களுக்கு எம்ஜிஆர் என்ற பிம்பம் ஆகாயம் என்றால், சிவாஜி என்ற பிம்பம் சுமார்தான். அவரை அவரது நடிப்புக்காக ரசித்த கூட்டம் மாத்திரம் உண்டு, அவருடைய நல்ல குணம் பொதுவெளியில் கட்டமைக்கப்படவில்லை, எம்ஜிஆரின் கெட்ட குணங்கள் எதுவும் பொதுவெளியில் வரவில்லை)