……………………………………..

………………………………………
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு,
திட்டக்குழு துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள
பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சனுக்கு –
புதிய ஞானோதயம் ஏற்பட்டுள்ளது….
பாருங்களேன் …
புதிய புதிய தத்துவங்கள்,
புதிய புதிய விளக்கங்கள்,
புதிய புதிய நியாயங்கள்….
- “உல்டா -பல்டி ” என்றால் என்ன … ???
இந்த காணொளியை பார்த்தால் புரியும் …..!!!
( முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் –
இந்த “வளர்ச்சி”கள் அத்தனையும், அவர்
திட்டக்குழு துணைத்தலைவராக பதவியேற்ற பிறகு தான்
அவர் கண்களுக்கு தெரிந்திருக்கிறது…!!! )
……………
.
………………………………………………………………………………………………………………….………….
ஜெயரஞ்சனும் வாக்காளர்களில் ஒருவர்தானே… அவருடைய விலை திமுகவுக்கு முன்னமே தெரிந்திருக்கிறது. அந்த விலையை அதிகப்படுத்தவே பாஜக எதிர்ப்பு தமிழக எதிர்ப்பு என்று காணொளிகளை அதிமுக ஆட்சியின்போது இந்தப் பொருளாதாரப் புளி பகிர்ந்துகொண்டார். தேர்தலின்போது திமுக மேடை ஏறியபோதே இவரது பொருளாதார அறிவு சந்திசிரிக்க ஆரம்பித்தது. இவர்தான், பேருந்து ஓசிப் பிரயாணத்தினால், பெண்களின் பொருளாதாரம் 40 சதம் அதிகமாகிவிட்டது என்று கண்டுபிடித்தவர். இவர் முகத்தில் ஸ்டாலின் எப்போ கரியைப் பூசப்போகிறாரோ.
இந்தக் கும்பலில் சேர்ந்தவர்கள்தான் திருமுருகன் காந்தி, கோவன், கோவாலசாமி, நவீன நாஞ்சில் சம்பத் சுகி சிவம் போன்றோர். (வாயை வாடகைக்கு விட்டுப் பிழைப்பதால்)
அது சரி…தனியார் பேருந்துகள் சென்னையில் வருவதை எதிர்க்கமுடியாத அளவு கம்யூனிஸ்டுகள் கொத்தடிமை ஆவார்கள் என்று நினைத்துப்பார்த்தீர்களா? பேருந்து தனியார் மயமாமும்போது மற்ற தொழில்கள் தனியார் மயமானால் என்ன கெட்டுப்போச்சு?