விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்,
உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற
மேலே உள்ள அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
திமுக காங்கிரஸை விடாது. தற்போதுள்ள கூட்டணியையும் விடாது. பாமகவைச் சேர்த்துக்கொண்டால் விசிகவை வெளியேற்றுவார்கள். வேல்முருகனுக்கு இந்தக் கூட்டணியில் இடமில்லை. கமலஹாசனுக்கு ஒரு எம்.பி நிச்சயம் (குறைந்தபட்சம் ராஜ்யசபா).
அதிமுக-எடப்பாடி, மீண்டும் சிறுபான்மையினரைக் கவருவதற்காக பாஜகவை விட்டு விலக நினைக்கிறார், அல்லது விலகியிருக்க நினைக்கிறார். ஜெ. மாதிரி ஸ்டாண்ட் எடுத்தால் அதிமுகவுக்கு நல்லது என்று நினைக்கிறார். அதிமுகவின் 10 சத வாக்குகள் (குறிப்பாக 7 சத முக்குலத்தோர் வாக்குகள்) அவரைவிட்டுப் போய்விட்டன. அது திரும்பி வருவதற்கு, முக்குலத்தோர் தலைவர்களை அவர் வளர்க்கணும் (தங்க தமிழ்செல்வன் போன்று)
பாஜக முட்டுச் சந்தில் இருப்பதாக நான் நினைக்கிறேன். மக்கள் பாமகவை ஒரு பெரும் கட்சி, தமிழகத்தைத் தலைமை தாங்குவதற்கான கட்சி என்று நினைத்ததே கிடையாது. 5 எம்பி சீட், 25 எம் எல் ஏக்களுக்காக, கொள்கை என்ற ஒன்றை வைத்துக்கொள்ளாத கட்சியாகிவிட்டது அது. காங்கிரஸும் அந்த நிலைமைக்கு எப்போதோ வந்துவிட்டாலும், தேசியக் கட்சி என்ற அந்தஸ்து இருக்கிறது. பாஜக தனித்துப் போட்டியிட்டால், வாக்கு சதவிகிதம் கூடும், ஆனால் எம்பி சீட்டுகள் கிடைப்பது கடினம். இவர் பிரதமர் என்று கைகாட்டாமல் அதிமுக கூட்டணியால் எந்த வெற்றியையும் பெற முடியாது. மக்களுக்கு ஆட்சியின் மீதான அதிருப்தி என்பது பணத்தினால் சரி செய்யப்பட்டுவிட முடியும் என்று தோன்றுவதால், மும்முனைப் போட்டி என்று வந்தால் பாண்டே சொல்வது போல திமுக கூட்டணிக்குத்தான் சாதகம். பாஜக எந்தக் காரணம் கொண்டும் ஓபிஎஸ், தினகரன், சசிகலா போன்றவர்களுடன் கூட்டு வைத்து அதிமுகவிற்கு கெடுதல் செய்யக்கூடாது, அது பாஜகவை வளர்ச்சிப்பாதைக்குக் கொண்டுசெல்லாது.
எடப்பாடி, பாஜகவுக்கு துரோகம் செய்வதாக நான் நினைக்கவில்லை. எடப்பாடிக்கு, புல்லுருவிகள் என்று தான் நினைப்பவர்களிடமிருந்து அதிமுகவைக் காக்கணும், இழந்த வாக்கு பலத்தை மீண்டும் கொண்டுவரணும் என்பதுதான் முக்கியம். பாஜகவை வளர்ப்பது எடப்பாடியின் வேலையில்லை.
விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்
உடனடியாக மின்னஞ்சல்
மூலம் பெற - மேலே உள்ள
அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய