…………………………………………………..
இவ்வளவு பிரமாதமாக ரூம் போட்டு யோசிக்க
தமிழக பாஜக-வில் எக்கச்சக்கமான அறிவுஜீவிகள்
இருந்தும் –
ஒருவருக்கும், பாஜக டெல்லி தலைமை நகர்த்தி வரும்
முக்கியமான, தமிழகம் சார்ந்த திட்டத்தை யூகிக்கத்
தெரியவில்லையே…..!!!
திமுக-கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி, வெளியேற்றப்
படப்போவதும், அதன் விளைவாக, திமுக – காங்கிரஸ்
இரண்டுமே பலவீனப்படப்போவதும் தெரியாமல்,
மிக மிக வலுவான திமுக கூட்டணி, 40-க்கு 40 சீட் கூட ஜெயிக்கும் என்கிற
லெவலிலேயே யோசிக்கிறார்களே…!!!
அரசியல் ஆய்வாளர் ( பாஜக-வைச் சேர்ந்த )ஸ்ரீராம் சேஷாத்ரி சொல்வதைக் கேளுங்களேன்…..
………………………………………………
//திமுக-கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி, வெளியேற்றப்
படப்போவதும், அதன் விளைவாக, திமுக – காங்கிரஸ்
இரண்டுமே பலவீனப்படப்போவதும்// – எப்படித்தான் இப்படி நீங்கள் யோசிக்கிறீர்களோ…. திமுக ஒருக்காலும் காங்கிரஸை வெளியேற்றாது. ஒருவேளை அதிமுக, 12 தொகுதிகள் கொடுக்கிறேன் என்று சொல்லி ஆசை காட்டி, திமுக 5-6க்குமேல் தரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தால் மட்டுமே, அதிமுகவுடன் காங்கிரஸ் செல்லும் வாய்ப்பு உண்டு. மற்றபடி, மூப்பனார், வாழப்பாடி காலம்லாம் இப்போ காங்கிரஸில் இல்லை. இப்போ இருப்பவர்கள் திமுகவின் கொத்தடிமைகள். (means, Congress leaders wants to get seat and win, with DMK. They don’t want Congress to succeed). Without Congress தேசிய அளவில் திமுகவுக்கு பெயர் கிடைக்காது, தமிழகத்தில் கிறித்துவ வாக்குகளும் கிடைக்காது.
ஸ்ரீராமின் analysis எனக்கு தவறு என்றே தோன்றுகிறது. காங்கிரஸ், திமுக இரண்டும் இந்தியாவைக் கொள்ளையடித்தன. எவ்வளவு ஊழலில் ஈடுபட முடியுமோ அவ்வளவு ஊழலில் ஈடுபட்டன (2005-2014). ஊழலில் எக்ஸ்பர்ட் ஆன அந்த 30 சதம் தமிழர்களும்கூட அந்தச் சமயத்தில் வெறுப்போடு இருந்தனர். போதாக்குறைக்கு குஜராத் மாடல் என்று மோடி மீதான பிரமிப்பு இருந்தது. தமிழக பத்திரிகைகளும் மோடி பற்றி எழுதின. அதற்கு ஏற்ற மாதிரி பாமக போன்றவையும் கூட்டணியில் இருந்தன. அதனால்தான் பாஜகவுக்கு 20 சதம் வாக்குகள் கிடைத்தன. அதையும் மீறி ஜெ. பெற்ற வெற்றி, எனக்கு பிரமிப்பை உண்டாக்கியது. (ஆனால் அதன் காரணம் பாஜகவை விரும்பாத சிறுபான்மையினர், ஊழல் திமுக+காங்கிரஸ் மீது அப்போது அவர்கள் கொண்டிருந்த வெறுப்பை மீறி, அதிமுக, பாஜகவை வெற்றிபெறும் என்ற நம்பிக்கையால் அளித்த வாக்கு). அந்த நிலையை பாஜகவின் வளர்ச்சி நிலை என்று எடுத்துக்கொள்வது தவறு. இதற்கு உதாரணம், ராஜீவ் காந்திதான் காங்கிரஸை அதன் உச்சத்திற்குக் கொண்டு சென்றார் என்று சொல்லுவது போலாகும் (இந்திரா இறந்ததும், அளப்பரிய வெற்றியை ராஜீவ் தலைமையில் காங்கிரஸ் குவித்தது).
ஸ்ரீராம் சொல்லும், 2-3 சதம் பார்ட்டியாக பாஜக வந்திருக்கிறது என்பதே மிகத் தவறான வாதம். இன்றைக்கு பாஜக 6-8 சதத்திற்கு மேல் வாக்கு வங்கி வைத்திருக்கும் என்று நம்புகிறேன். பாஜக வளர்ச்சிக்கு அண்ணாமலை ஒரு முக்கியக் காரணம். 2024ல் தனியாக பாஜக நின்றால், இந்த சதம் 10-12 சதத்திற்கு உயரும். இன்னும் கூட்டணிகள் (கூட்டணி என்றதும் யாரும் காக்காய், குருவிகளையும் சேர்த்துவிட வேண்டாம். அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமக, தேதிமுக, விசிக, கம்யூனிஸ்டுகள் போன்றவையே தமிழகத்தின் கட்சிகள். முஸ்லீம் கட்சிகள் ஒரு added advantage) அமைந்தால் இது அதிகமாகும். ‘பிரதமர் மோடி’ என்ற வார்த்தைக்கான வாக்குகள் அவை. அதுபோல, தமிழகத்தில் ‘தலைவர்’ என்பவரால்தான் கட்சிக்கு வாக்குகள் விழும். அவரது பெர்சனாலிட்டி மிக முக்கியம். காங்கிரஸ் மூப்பனார் தலைமையில் ஒரு நல்ல நிலையை அடைந்தது. அதிமுகவுக்கு ஜெ, தேதிமுகவிற்கு விஜயகாந்த், பாமகவுக்கு ராமதாஸ். பாஜகவிற்கு அண்ணாமலை தலைமை என்பது பெரிய வாய்ப்பு என்றுதான் நான் நினைக்கிறேன்.
2024 தான், மோடி அவர்களின் கடைசித் தேர்தல். அதன்பிறகு யோகி வரும் வாய்ப்பே அதிகம். 2025ல் யோகி பெரிய பொசிஷனுக்கு வந்தாலும் ஆச்சர்யமில்லை. மோடியின் influence 2026 தமிழக தேர்தலில் இருக்கலாம். அதனால்தான் ஸ்ரீராம் 2024-26 என்று குறிப்பிடுகிறார்.
………………………………………….
……………………………………………………………………………………………………………….
.
அந்த காணொளிகளையும் இதில் சேர்த்திருக்கலாம். கொஞ்சம் பயந்துட்டாங்க போலிருக்கிறது. அண்ணாமலை சட்டப்படி பேசக்கூடியவர், தலைமையின் ஆசி அவருக்கு இருக்கிறது. அதனால் பம்முகிறார்கள் என்றே நான் நினைக்கிறேன். அதுவும்தவிர, அண்ணாமலை கைது செய்யப்பட்டால் தேசிய ஊடகங்களில் திமுக ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் நிர்வாகிகள் பேசியது சப் டைட்டிலுடன் வரலாம், அது தனக்கான எதிர்ப்பை வடநாட்டில் உண்டாக்கலாம் என்பதைப் புரிந்துகொண்டதால் அடக்கி வாசிக்கிறது என்று தோன்றுகிறது.
……………………………
…………………………..
கேட்டீங்களா இந்தக் காணொளியை. “திமுக ஆதரவாளரான மூத்த பத்திரிகையாளர்”… இவனுங்கள்லாம் பத்திரிகையாளர் என்ற போர்வையில் நாட்டைக் கெடுக்க வந்தவர்கள். பத்திரிகையாளர் வேலை என்ன? நடப்பதைச் சொல்வது, எது நல்லது என்று பேசுவது. அதற்கும் மேல் ஒரு கட்சிக்கு சொம்பு தூக்குகிறவர்களெல்லாம் பத்திரிகையாளர், பொருளாதாரப் புளி என்று வருவதுதான் ஜனநாயகத்துக்குக் கேடு. இவருக்கு 1000 ரூபாய் பொதுமக்களுக்கு லஞ்சம் கொடுத்தால் ஏற்றுக்கொள்ள முடியுமாம், 20,000 கொடுத்தது தாங்கிக்கொள்ள இயலவில்லையாம். வயிறு எரிகிறதாம். சென்ற மாதம் வரை, திமுக எல்லாத் திட்டங்களையும் நிறைவேற்றிவிட்டது, மக்களுக்கான அரசு என்று பெரிய ஜால்ரா அடித்துக்கொண்டிருந்தவர், இப்போது தனக்கு வரவு வரவில்லை என்றபோது எதிர்க்குரல் கொடுக்கிறாராம்.
மக்கள் கஷ்டப்படுகிறார்கள், அந்தக் கட்டணம் ஏறிவிட்டது, மின்சாரக் கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி…என்று அடுக்குகிறாரே… இதனால் மக்களுக்கு என்ன பாதிப்பு வந்துவிட்டதாம்? இவருக்கு வேண்டுமானால் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். மக்கள் இந்த ஆட்சியில் மிக நன்றாக இருக்கிறார்கள். டாஸ்மாக் விலையை இரண்டு மடங்காக ஏற்றவில்லையே என்று வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அரசுக்கு வருவாய் இல்லாவிட்டால் மக்கள் நலத் திட்டங்களை எப்படிச் செய்யமுடியும்? உண்மையில், மக்கள், சமையல் எரிவாயுவை 1 சிலிண்டர் 20,000 ஆக்கவில்லையே என்று வருத்தப்படுகிறார்கள். அவங்களுக்கு எது எவ்வளவு விலை உயர்ந்தாலும் பரவாயில்லை, தேர்தலுக்கு 20 நாட்கள் முன்பு, தினமும் 1000 ரூபாய், இலவச உணவு போட்டாலே போதுமானது என்றே நினைக்கிறார்கள். இதைத்தான் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் உணர்த்துகிறார்கள். நிலைமை இப்படி இருக்க, எதற்கு மக்களுக்காக அரசு எந்தத் திட்டமும் செயல்படுத்த வேண்டும்? பிச்சைக்காரர்களை, பிச்சைக்காரர்களாக நடத்தினால் போதாதா?
இதைக்கூடப் புரிந்துகொள்ளாமல், திமுகவைப் பற்றிப் பேச வந்துவிட்டார் இந்தப் புண்ணியவான்.
……………….
……………….