மோடியை நம்பியது தான் ஓபிஎஸ் செய்த தவறா..? – பண்ருட்டி ராமச்சந்திரன் …

……………………………….

…………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , . Bookmark the permalink.

3 Responses to மோடியை நம்பியது தான் ஓபிஎஸ் செய்த தவறா..? – பண்ருட்டி ராமச்சந்திரன் …

 1. புதியவன் சொல்கிறார்:

  //எவ்வளவு பேர் வேண்டாம் என்கிறார்கள்?// – அபூர்வத்திலும் அபூர்வம் இத்தகையவர்களைப் பார்ப்பது. அனேகமாக எல்லோரும் அந்த ஈரோடு கிழக்கு, திருமங்கலம் தொகுதி மக்களைப் (அந்த 40-50,000 மக்கள்) போலத்தான். அவர்களுக்கு (அத்தகைய மக்களுக்கு) அரசிடமிருந்து எதையும் எதிர்பார்க்கும் தகுதியோ, இல்லை இந்திய நாட்டின் குடிமகன் என்று சொல்லும் தகுதியோ இல்லை எதிர்கால இந்தியக் குடிமகன்களைப் பெறும் தகுதியோ கிடையாது. அவர்கள் இந்த நாட்டின் சாபக்கேடுகள். எட்டப்பன் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

  //நாம் நமக்கு நன்மை எது என்று சிந்திக்கவேண்டும். பாஜகவை நம்பக் கூடாது// – இதைப் புரிந்துகொள்ள இத்தனை வருடங்களா? 2005, 2009 ஆட்சிகளின்போது கூட்டுக்கொள்ளை அடித்துவிட்டு, பிரச்சனை என்று வந்தபோது காங்கிரஸ் எப்படி திமுகவிடம் நடந்துகொண்டது? கூடா நட்பு கேடா முடியும் என்று கருணாநிதி சொல்லவில்லையா? வாஜ்பாய் அரசில் அங்கம் வகித்து, எல்லா நன்மைகளையும் தங்களுக்குப் பெற்ற கருணாநிதி, மாறன் இறந்துவுடனேயே, பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு வாஜ்பாய் முகத்தில் கரியைப் பூசவில்லையா? அதிமுக கட்சிப் பிரச்சனைக்கும் பாஜக, பிரதமர் போன்றவர்களுக்கும் என்ன சம்பந்தம்? எடப்பாடி 90 சதம் நிர்வாகிகளின் ஆதரவைப் பெற்றிருக்கிறார், ஓபிஎஸ்ஸுக்கு 5 சதம் கூட இல்லை. இதற்கு என்ன காரணம், அவர்களின் நம்பிக்கையை நாம் பெறுவது எப்படி என்று ஓபிஎஸ் சிந்திக்காமல், பாஜக தலைமை, திமுக தலைமை என்று அரசியல் நட்பு கொண்டிருந்தால், எப்படி அதிமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெறுவார்? இப்போதுமே அதிமுகவின் தொண்டர்கள் அனைவரும் வாக்களித்தாலும், 70 சதத்துக்கு மேல் எடப்பாடி பெறுவார்.

  அதுவும் தவிர ஓபிஎஸ், நல்ல அரசியல்வாதி, தலைமை ஏற்கும் பக்குவம் பெற்றவரல்லர். ஜெ. மறைந்த உடனே, பிரதமர் மோடி, நடராஜனுக்கு ஆறுதல் சொன்னார் (அவருக்கும் அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம்?), சசிகலாவின் மீது அனுதாபப் பார்வை வீசினார். அப்போது மோடிக்கு அதிமுகவின் பிடி யாரிடம் இருக்கும் என்று தெரியாது. நமக்கு விருப்பமோ இல்லையோ…அதிமுக கட்சி இப்போது எடப்பாடி கையில்தான் இருக்கிறது. பாஜகவிற்கு அதிமுக என்ற கட்சியின் துணை இப்போது வேண்டும். அவ்ளோதான் மேட்டர். அரசியல் பார்வையாளனான எனக்குத் தெரிந்தது, ஓபிஎஸ்ஸுக்குத் தெரியாதது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. My time is over, Now let me work under new leader or leave politics என்பதுதான் ஓபிஎஸ்ஸின் முடிவாக இருந்திருக்க வேண்டும்.

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  // அரசியல் பார்வையாளனான எனக்குத் தெரிந்தது,
  ஓபிஎஸ்ஸுக்குத் தெரியாதது எனக்கு ஆச்சர்யமாக
  இருக்கிறது.
  My time is over, Now let me work under new leader or
  leave politics என்பதுதான் ஓபிஎஸ்ஸின் முடிவாக
  இருந்திருக்க வேண்டும். //

  2024 தேர்தலுக்கு முன்னதாக, எடப்பாடியார், எப்படியும் பாஜகவை
  கைகழுவிவிட்டு, காங்கிரசோடு போகப்போகிறார்…

  அது தெரிந்து தான் ஒன்றும் தெரியாத ஓபிஎஸ் இன்னமும்
  பாஜக-வுக்காக காத்திருக்கிறார்…!!!

  உங்கள் அபிப்பிராயப்படி, “ஒன்றும் தெரியாத”
  ஓபிஎஸ்-க்கு தெரிந்த இது கூட,
  தீர்க்கமான ” அரசியல் பார்வையாளரான ” உங்களுக்கு
  தெரியாமல் போனது எப்படி …? என்பது தான்
  ஆச்சரியமாக இருக்கிறது….😊

  • புதியவன் சொல்கிறார்:

   எனக்கு அதில் சந்தேகம் இருக்கிறது. அதாவது 2024ல் பாஜகவை கழற்றிவிட்டு தேர்தலில் நிற்கும் ஜெ ஸ்டேடஸை எடப்பாடி பெறவில்லை. ஒருவேளை அப்படி நின்றால், (எனக்கு நம்பிக்கையில்லை), திமுக கூட்டணி ஏகப்பட்ட எம்பிக்களைப் பெறும், திருமா போன்றவர்களுக்கு திரும்ப எம்பி ஆகும் வாய்ப்பு கிடைக்காது.

   இப்போதும் அதிமுகவிற்கு சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்கவில்லை. இருந்தாலும் இரட்டை இலையின் மவுசு குறையவில்லை.

   பாஜகவிற்கு குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி இருக்கிறதா என்ற சந்தேகமும் வருகிறது.

   இன்னொன்று… காங்கிரஸ் அதிமுகவுடன் செல்லும் என நான் நம்பவில்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s