…………………..

…………………..
Ratan Tata Best Answers – Honest,
Humorous and Inspiring Replies –
……………….
.
…………………………………………………………………………………………………………………………
நஷ்டத்தில், நம்பிக்கையே இல்லாமல் இயங்கிக்கொண்டிருந்த
ஏர்-இந்தியா நிறுவனம், மிகச்சரியான நிறுவனமான டாடா’விடம்
இறுதியாக சென்று சேர்ந்திருப்பதை உலகமே வரவேற்கிறது.
டாடா’விடம் போய்ச்சேர்ந்தவுடன்,
ஏர் இந்தியா – தனது செயல்பாட்டினை அதிகரிக்கும் விதமாகவும்,
விரிவாக்கம் செய்யும் விதமாகவும் ஏர்பஸ் நிறுவனத்திடம்
இருந்து 250 விமானங்களையும், அமெரிக்காவினை சேர்ந்த
போயிங் நிறுவனத்திடம் இருந்து 220 விமானங்களையும் வாங்க
ஒப்பந்தம் செய்துள்ளது. ஆக மொத்தம் ஏர் இந்தியாவுக்கு
புதியதாக 470 விமானங்கள் வாங்கப்படவுள்ளன.
இதற்கு முன்னதாக ஏர் இந்தியா நிறுவனம் 370 விமானங்களை
வாங்கவும் ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த நிலையில் மொத்தம்
840 விமானங்களுக்கு ஆர்டர் ஏர் இந்தியாவிலிருந்து
செய்யப்பட்டுள்ளது.
இது இந்தியாவோடு நில்லாமல், அமெரிக்கா
ஃப்ரான்சு, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் தொழிலாளர்களுக்கு
கூட மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
அமெரிக்கா, ஃப்ரான்ஸ், பிரிட்டன் ஆகிய 3 நாடுகளுமே
தங்கள் நாட்டில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கித்
தந்திருப்பதற்காக – இந்தியாவுக்கு நன்றி சொல்லி இருக்கின்றன.
கடந்த 2005-ஆம் ஆண்டு ஏர் இந்தியா 111 விமானங்களை வாங்க
ஆர்டர் அளித்தது. அதன்பிறகு, கடந்த 17 ஆண்டுகளில் ஏர் இந்தியா விமானங்களை கொள்முதல் செய்வது இதுவே
முதல்முறை . . ஏர் இந்தியாவின் மிகப்பெரிய விமான ஆர்டர்
இதுதான் என்றும் கூறப்படுகின்றது. இந்திய விமான போக்குவரத்து
வரலாற்றில் இது முக்கிய மைல்கல்லாக இருக்கலாம் என
கூறப்படுகிறது.
- தள்ளாத வயதிலும், ஊருக்கு மட்டுமல்ல, உலகுக்கே உதவும்
கரங்களாக இயங்கிக் கொண்டிருக்கும் இவர் தான்
ரத்தன் டாடா …!!!
” ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு …”
.
…………………………………………………………………………………………………………………………………..