……………………………………….

…………………………………………..
சுப்ரீம் கோர்ட்டில், எடப்பாடியாருக்கு சாதகமாக இப்படியொரு
தீர்ப்பு வருமென்பதை பாஜக தலைமை எதிர்பார்க்கவில்லை
என்பது அதன் ரெஸ்பான்ஸை பார்த்தாலே தெரிகிறது.
எடப்பாடியார் நம்பிக்கைக்கு உரியவர் இல்லை –
என்பதை பாஜக உணர்ந்திருந்தாலும், பாசம் –
அவர் வைத்திருக்கும் ஓட்டுகளின் மீதுள்ள பாசம் காரணமாக
மட்டுமேபாஜக அவரை சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆதரித்து
வேலை செய்கிறது.
ஆனால், எடப்பாடியார் நூற்றுக்கு நூறு சதவீதம் ,
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னாடியே பாஜகவை கழட்டி விடுவார்
என்பதே பல விமரிசகர்களின் எதிர்பார்ப்பு….
ரவீந்திரன் துரைசாமி என்ன சொல்கிறார் பார்ப்போமே….!!!
………………………………………………
.
………………………………………………………………………………………………………………………
1. ஓபிஎஸ்,பாஜக ஆதரவு நிலை எடுத்துக்கொண்டிருந்தார், கொத்தடிமையாக ஆவதற்குத் தயாராக இருந்தார். அதற்காக அதிமுகவை காட்டிக்கொடுக்கும் வேலையையும் செய்தார். இதுபற்றி நான் நிறைய எழுதியிருக்கிறேன். (இதே தளத்தில் ஓபிஎஸ் தான் முதல்வராக வரணும்னு அப்போ ஜெ. மறைந்த நேரத்திலும் எழுதியிருந்திருக்கிறேன்). ஓபிஎஸ் ஸின், மாபெரும் தவறு, எடப்பாடி முதல்வராக ஆகிவிடக்கூடாது என்பதற்காக, திமுகவுக்குச் சாதகமாக நடந்துகொண்டது.
2. Ground reality என்பது, அதிமுக நிர்வாகிகள் எடப்பாடியின் தலைமையை ஏற்றுக்கொள்வது. (ஒரு கம்பெனியிலேயே, சேர்ந்து ஒரே வேலை செய்துகொண்டிருந்தாலும், எப்போது அவர்களில் ஒருவரை மேனேஜராக ஆக்கிவிடுகிறார்களோ, அப்போ மத்தவங்க அதனை ஏற்றுக்கொண்டுதான் ஆகணும். நானும் அவனும் சேர்ந்து டீ சாப்பிட்டோம், என்கிட்டதான் அவசரத்துக்கு ஐந்து பத்து கடன் வாங்குவான் என்று பழைய கதையைப் பேசிக்கொண்டிருந்தால், நம் வேலை போய்விடும்) அதனால் ஓபிஎஸ் கௌரவமாக தன்னுடைய பதவியைத் தக்கவைத்திருக்கவேண்டும். அதைவிட்டுவிட்டு போருக்குத் தயாரானார். தோல்வியைச் சந்தித்துத்தான் ஆகணும். அவரால் இனிச் செய்யமுடிந்தது, தேவர் கவுண்டர் என்று பிரச்சனையைத் திசைதிருப்பி அதிமுகவின் தேவர் சாதி வாக்குகளைக் கெடுப்பது. அதனால் அதிமுக குறுகிய காலத்தில் பலவீனமடையும். ஆனால் பிறகு பலப்படும். தங்க தமிழ்ச்செல்வன் போன்றவர்கள் அதிமுக திரும்பினால்.
3. பாஜக, இந்த மாதிரி விஷயங்களில் வெறும்ன தீர்ப்பை வரவேற்கிறோம் என்று சொல்வதோடு நின்றுவிடுவார்கள். அவங்களுக்கு இரட்டை இலையின் ஆதரவும் வேணும், இந்த இரண்டு தலைவர்களும் வேணும். பாஜகவின் Priority அவங்க கட்சியை இங்க வளர்க்கணும் என்பதுதான். அவர்கள் இந்திரா காங்கிரஸைப் போன்றவர்கள் அல்லர்.
ரவீந்திரன் துரைசாமி எல்லா காணொளிகளிலும் ஜாதியை மையமாக வைத்தே பேசுகிறார். அது ஏற்புடையது அல்ல.
//எடப்பாடியார் நம்பிக்கைக்கு உரியவர் இல்லை – என்பதை பாஜக உணர்ந்திருந்தாலும்,// – கா.மை சார், இதனை நீங்க எழுதியிருப்பதால், அரசியலில் யார் நம்பிக்கைக்கு உரியவர்? எதனால் எடப்பாடி நம்பிக்கைக்குரியவர் அல்லர் என்பதை நீங்க சொல்லணும். உங்கள் கருத்தோடு நான் மாறுபடுகிறேன்.
புதியவன்,
உங்கள் கண்ணேதிரே ஒருவன் ஆயிரம் கோடி அளவில்
பணத்தைச் செலவழிக்கிறான்…பணத்தைச் செலவழித்து,
எல்லாரையும், எல்லாவற்றையும் வாங்கி விடுகிறான்.
அவனுக்கு அந்த அளவு பணம் நேர்மையான வழியில்
சம்பாதிக்க அவனுக்கு வாய்ப்பே இல்லை….
அது உங்களுக்கும் புரிகிறது…. தெரிகிறது.
ஆனால், அவனைத் திருடன் என்று சொன்னால்,
அவன் ” உங்களுக்கு பிடித்த திருடன்” என்கிற
ஒரே காரணத்தால், பதிலுக்கு -” யார் தான் திருடவில்லை ” –
என்று நீங்கள் கேட்கிறீர்கள்….!!!
பிரமாதமான லாஜிக்…
இந்த அயோக்கியத்தனத்தை ஆதரித்தால்,
வேறு எந்த அயோக்கியத்தனத்தையும் விமரிசிக்க
உங்களுக்கான தார்மீக உரிமையை இழந்து விடுகிறீர்கள்.
எனக்கு குணம் அவசியம்.
உங்களைப் போல் வேண்டியவர்-வேண்டாதவர் எல்லாம்
கிடையாது.
தெரிந்தே ஒருவன் அயோக்கியத்தனம் செய்தால்,
அவனை நான் விமரிசனம் செய்யத்தான் செய்வேன்.
நீங்கள் கண்களை மூடிக்கொண்டே
சில அயோக்கியத்தனங்களை ஆதரிப்பீர்கள்…
எனக்கேதும் நஷ்டமில்லை…
அது உங்கள் விருப்பம்.
ஆனால், உங்கள் எடைபோடலின் மீதான மரியாதை
படிப்பவர்களுக்கு, குறைந்து போகும் என்பதை
உணர்ந்து கொள்ளுங்கள்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
.
//அவனைத் திருடன் என்று சொன்னால், அவன் ”// -இதுதான் என் //அரசியலில் யார் நம்பிக்கைக்கு உரியவர்?// இந்தக் கேள்விக்குப் பதிலா? அப்படித்தான் என்று நினைத்துக்கொண்டு எழுதுகிறேன்.
எனக்கு எடப்பாடி மிகவும் பிடித்தவர் என்று நீங்களே கற்பனை செய்துகொள்ளவேண்டாம். எனக்கு அதிமுக பிடிக்கும். அதிமுக பெரிய கட்சியாக, மக்கள் அதன் மீது வைத்த நம்பிக்கை குறையாமல் தொடர்ந்து செயல்படவேண்டும் என்ற ஆசை. எடப்பாடி, காலச்சூழலில் தலைமைக்கு வந்தவர், கப்பலைத் திறமையாக ஓட்டியவர், ஜெ. புகழுக்கு பங்கம் ஏற்படாமல் காத்தவர்.
//ஆயிரம் கோடி அளவில் பணத்தைச் செலவழிக்கிறான்…பணத்தைச் செலவழித்து, எல்லாரையும், எல்லாவற்றையும் வாங்கி விடுகிறான்// – எடப்பாடி, தன் இருப்பைத் தக்கவைக்க (அதிலும், நான் நினைப்பது, அதிமுகவின் இருப்பை, stabilityஐ என்றே அர்த்தப்படுத்திக்கொள்கிறேன்), மாவட்டச் செயலாளர், காண்டிராக்டில் பெறும் பணத்தில் இத்தனை சதவிகிதம் கட்சிக்குக் கொடுக்கவேண்டும் என்பதைக் கண்டுகொள்ளாமல் முழுவதும் அவர்களே வைத்துக்கொள்ளும்படியாக அனுமதித்தார். இன்னும் இதுபோல பல தளர்வுகளைச் செய்தார் என்று பல்வேறு காணொளிகளில் கேட்ட நினைவு. எடப்பாடி உத்தமர் இல்லை. ஓபிஎஸ்ஸும் உத்தமர் கிடையாது. டீக்கடை வைத்திருந்தவர், இன்று ஒரு வழக்குக்காக 60 கோடி செலவழிக்கும் அளவு வந்திருக்கிறார். தன் மகனை எம்.பி தேர்தலில் வெற்றிபெறச் செய்யும் சூத்திரம் தெரிந்த அவருக்கு (வேறு என்ன..உதயநிதியின் முதல் தேர்தலில் வெற்றிபெற ஸ்டாலின் செய்த தந்திரம்தான்) ஒரு எம்.எல்.ஏவையும் வெற்றிபெற வைக்கத் தெரியவில்லை. எடப்பாடியும் உத்தமர், காமராசருக்கு அடுத்தவர் என்று எழுதுவதற்கு ஒரு ஆதாரமும் இல்லை.
ஆனால், எடப்பாடி முதல்வராக இருந்தபோது தன் குடும்பத்தை முன்னிலைப்படுத்தவில்லை. அதிமுக ஆட்சியிலிருந்து நழுவிவிடாமல் காத்தார் (அதற்கேற்ற அரசியல் தந்திரங்களோடு), மக்களை வாட்டி வதைக்கும்படியான எந்த ஒரு செயலையும் அவர் மேற்கொள்ளவில்லை. கட்சிக்காரர்கள், பெண் போலீஸை மானபங்கப்படுத்த அனுமதிக்கவில்லை. கட்சிக்காரர்கள் போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து நடத்த அனுமதிக்கவில்லை. அவருடைய மனைவியும் கோவில் கோவிலாகச் சென்றார் (ஆனால் அவர் மனைவி பெயரோ, அவருக்கு போலீஸ் குழுவின் பாதுகாப்போ, அதிகாரத் திமிரான நடவடிக்கையோ ஒன்றுகூட நடக்கவில்லை. அவர் பெயரே யாருக்கும் நினைவிருக்காது). அதிமுகவை வழிநடத்தினார். எப்போது அவருக்கு ஓபிஎஸ்ஸை கழற்றிவிடவேண்டும் என்ற எண்ணம் உதித்திருக்கும்? கட்சியில் நடப்பதை பாஜகவுக்கு உளவு சொல்வது, பாஜக வை எப்போதும் பஞ்சாயத்துக்குக் கூப்பிடுவது, எதற்கெடுத்தாலும் பிரதமரைப் பார்த்து நட்பு வளர்த்துக்கொள்வது, இன்னொரு பக்கம் தன் பையனை திமுகவுடன் நட்பில் இருக்கச் செய்வது என்று அதிமுகவைக் கெடுக்க முயன்றார். தன் மகனை அமைச்சராக்கவேண்டும் என்று அழுத்தம் தந்தார். அதிமுக பற்றிய கவலை, அதன் முன்னேற்றம் பற்றிய கவலைகளை, அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுக்க இயலாமல், ஓபிஎஸ்ஸுடனான பஞ்சாயத்திலேயே நேரத்தைப் போக்கினால் எப்படி திமுகவை எதிர்த்து அரசியல் செய்வது? ஏற்கனவே தினகரன் பிரிந்தாகிவிட்டது. சசிகலாவின் பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது.
ஒரு முதல்வராக அவரது நடவடிக்கைகளையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். பேச்சுக்களையும் பார்த்திருப்பீர்கள். அவை என்னைக் கவர்ந்தன. நான் முன்னமேயே எழுதியிருந்தது போல, அஜீத் போன்ற மக்களிடம் பாப்புலரான நல்லவர் அதிமுக தலைமைக்கு வந்திருந்தால் நான் நிச்சயம் வரவேற்றிருப்பேன்.
//எடப்பாடியார் நம்பிக்கைக்கு உரியவர் இல்லை// – நம்பிக்கைக்கு உரியவர் என்றால் என்ன அர்த்தம்? எடப்பாடி (நான் ஒருமையில் எழுதவில்லை. அவர் ஊர் பெயரே போதும்) யாருக்கு நம்பிக்கைக்கு உரியவராக இருக்கணும்? அதிமுகவுக்கு மாத்திரம் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தால் போதும். ஒரு தேர்தலின்போது கடைசி நேரத்தில் மதிமுகவை மற்றும் கம்யூனிஸ்டுகளை ஜெ. கழற்றிவிட்டார். இப்போது திமுகவுக்கு ஜால்ரா போடுவது போன்று கம்யூனிஸ்டுகள் மற்றும் கோவாலசாமி, ஜெவுக்கு அனுதினமும் ஜால்ரா போட்டார்கள். அதனால் இந்தக் கடைசி நேரக் கழற்றிவிடலாம், அவர்களால் திமுக பக்கம் போகமுடியாமல், தனியாக நின்றன என்று நினைவு. ஜெ வின் அந்த நடவடிக்கைக்குக் காரணம், அவர்கள் இல்லாமலேயே அதிமுக வென்றுவிடும் என்ற நம்பிக்கைதான். (பிற்பாடு ஒரு சமயம், அந்தத் தேர்தலில் தேதிமுகவைச் சேர்த்துக்கொண்டிருக்கவேண்டாம், அவர்கள் இல்லாமலேயே தான் வென்றிருக்கமுடியும் என்று அவர் கருத்து சொன்னார் என்று நினைவி). ஒரு கட்சித் தலைவர், அவர் கட்சிக்கு நம்பிக்கைக்கு உரியவராக இருந்தால்போதும்.
1. தேதிமுக-பழம் நழுவி பாலில் விழும் என்று பார்த்துக்கொண்டிருந்த கருணாநிதிக்கு அல்வா கொடுக்கவில்லையா?
2. பாமக, இரு கட்சிகளிடமும் பேரம் பேசி, யார் அதிகம் கொடுக்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைத்து, அதற்கேற்றவாறு தேர்தலைச் சந்திக்கவில்லையா?
3. திமுக-பல கட்சிகளை அவமானப்படுத்தும் விதமாக தங்கள் சின்னத்தில் நிற்கச்சொல்லவில்லையா? (பூர்வஜென்ம புண்ணியம் காரணமாக காங்கிரஸும் கம்யூனிஸ்டுகளும் தப்பித்தன. அவர்களுக்கு லகான் போடும் விதமாக லஞ்சப் பணம் கொடுத்ததை திமுக வெளிப்படையாகச் சொல்லியது)
4. பாஜக இந்துத்துவா கட்சி என்பதை, அவர்களுடன் கூட்டுச் சேர்ந்தபோதெல்லாம் (காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் தவிர.. அல்லது கம்யூனிஸ்டுகள் கூட்டணி வைத்திருந்தார்களா? நினைவில்லை… காசு கொடுத்தால் யாரிடமும் கூட்டணி வைப்பவர்களாயிற்றே அவர்கள்), தமிழகக் கட்சிக்குத் தெரியவில்லையா?
எடப்பாடி என்ன நினைப்பார் (ஒருவேளை நான் அவர் இடத்தில் இருந்தால் என்ன நினைப்பேன் என்ற அனுமானத்தில்). கட்சியை விட்டு சிறுபான்மையினர் முழுமையாகச் சென்றுவிடக்கூடாது. அவர்கள் கொத்தாக வாக்களிக்கும் தன்மை படைத்தவர்கள். இதுபோலத்தான் அரசுப் பணியாளர்களும். மொத்தமாக வாக்களித்துத் தேர்தலின் போக்கைத் தீர்மானிப்பவர்கள். பெண்களும் மொத்தமாக வாக்களிப்பவர்கள், vote influencers. பாஜக கொள்கை வேறு, அதிமுக கொள்கை வேறு. ஆனால் சந்தர்ப்பத்தைப் பொருத்து பாஜகவுடன் கூட்டணியா இல்லையா என்று தீர்மானித்துக்கொள்ளலாம். இப்போ விலகி இருப்பதுதான் நல்லது. அப்படி இருந்தால்தான் we will not get influenced. We can take independent decision. அண்ணாமலை மற்றும் பாஜக தலைவர்கள் நம்மைத் தேடி வரவேண்டும். நாம் காவடி எடுக்கக்கூடாது, எடுத்தால் சிறுபான்மையினரின் நம்பிக்கையை முற்றிலுமாக இழந்துவிடுவோம். இப்படித்தான் எடப்பாடி கணக்குப் போடுவார். அது அதிமுக நிர்வாகிகளுக்கு (across TN) சரியாகத் தோன்றும்.
பாஜக, இன்றைய நிலையில் தமிழகத்திலிருந்து நிறைய எம்.பிக்கள் செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறது. அது அதிமுக கூட்டணியால்தான் சாத்தியம். அதற்கு 7-10 சீட்டுகளை மாத்திரமே ஒத்துக்கொள்ளவேண்டியிருக்கும். இதற்கு ஒப்புக்கொள்ளலாம். அல்லது வேறு வழியில்லாமல், மோடி பிரதமர் என்று முந்நிலைப்படுத்தப்படுவதால் தனித்து நிற்கலாம். அதிமுகவிற்கு, ‘யார் பிரதமர்’ என்ற ஸ்லோகனைச் சொல்லுவது கடினம் என்பதால், 7-10 சீட்டுகளைக் கொடுத்து கூட்டணி வைத்துக்கொள்ளும், ஆனால் அந்தக் காலம் வரும் வரை, அதிமுக தனிப்பாதையில்தான் செல்லும். இப்படி நான் அநுமானிக்கிறேன்.
ரொம்பவே எழுதிவிட்டேன்.
.
புதியவன்,
// 3. பாஜக, இந்த மாதிரி விஷயங்களில்
வெறும்ன தீர்ப்பை வரவேற்கிறோம் என்று
சொல்வதோடு நின்றுவிடுவார்கள்…//
இங்கே பாஜக அதைக்கூட சொல்லவில்லை
என்பது உங்களுக்கு தெரிந்திருந்தும்,
சௌகரியமாக அதை மற(றை)க்கிறீர்கள்…
உங்கள் வாதங்கள் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளக்
கூடிய அளவுக்கு நம்பகமானதாக
இருக்க வேண்டும் என்பதை தயவுசெய்து நினைவில்
இருத்திக்கொள்ளுங்கள்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
இன்னும் வரவேற்கவில்லை. Mostly அவர்கள் அதைச் செய்வார்கள். (அண்ணாமலையிடம் இந்தக் கேள்வி வரும்போது, அண்ணா.. அது அவங்க உட்கட்சிப் பிரச்சனை அண்ணா. அதில நாம என்ன கருத்துச் சொல்வது? உச்சநீதி மன்றம் இப்போ இப்படிச் சொல்லியிருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்புகளை எப்போதுமே வரவேற்பதுதானே பாஜகவின் வழக்கம். ஓபிஎஸ் அவர்கள் என்ன செய்யப்போகிறார், முறையிடுவாரா இல்லை அதிமுகவுடன் இணைவாரா என்பது பற்றி நான் என்னண்ணா சொல்வது? உங்க கேள்விக்கு பதில் சொல்லணும்னா நீதிமன்றத் தீர்ப்பை பாஜக வரவேற்கிறது ன்னு போட்டுக்கோங்க என்று இந்த விஷயத்தை sidelineஆக ஆக்கிவிடுவார்கள்).
அவர்கள் எதற்கு எடப்பாடிக்கான தீர்ப்பை அவசர அவசரமாக வரவேற்கணும்? எடப்பாடி என்ன மாதிரியாக பாஜக பற்றி முடிவெடுப்பார் என்பது தெரியாமல் ஓபிஎஸ்ஸை எதற்கு ஒரேயடியாகக் கைகழுவ வேண்டும் என்று நினைப்பார்கள். I also feel, something is not alright between ADMK (எடப்பாடி), அண்ணாமலை மற்றும் பாஜக தலைமை. எனக்கு என்னவோ அப்படித் தோன்றுகிறது. (ஒருவேளை கவுண்டர் என்பதனாலா என்றும் யோசிக்கிறேன்)