……………………………………

……………………………………
சென்ற சட்டமன்ற தேர்தலில் திமுக-வை கடுமையாக எதிர்த்து விட்டு,
வெட்கம், மானம், சூடு, சுரணை எதுவுமற்றி, முழுக்க முழுக்க
சுயநலம் மட்டுமே காரணமாக -இந்த இடைத்தேர்தலில் –
அதே திமுக-வின் வேட்பாளரை
ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார் கமல்ஹாசன்.
தன், மானங்கெட்ட தனத்தை மறைக்க – மறைந்த ஜெயலலிதா
அவர்களின் மீது பொய்யான பழியைப் போடுகிறார்.
விஸ்வரூபம் படத்தை தடுக்க முயன்றாரா ஜெயலலிதா ?
கடுமையாகச் சாடி, கமலின் போக்கை விமரிசிக்கிறார்
மூத்த பத்திரிகையாளர் “துக்ளக்” ரமேஷ் அவர்கள்…..
பேட்டி கீழே –
…………………….
…………………………………………………………………………………………………………………………………………………..
//வெட்கம், மானம், சூடு, சுரணை எதுவுமற்றி, முழுக்க முழுக்க
சுயநலம் மட்டுமே காரணமாக // – கமலஹாசனின் வாழ்க்கையே இந்தப் பாதையில்தான் இருந்தது இருக்கிறது. இதில் புதிதாக வெட்கம் மானம் சூடு சுரணை அவருக்கு எதற்கு? சொந்த வாழ்க்கையில் அவரால் ஏமாற்றப்பட்டவர்கள், திரையுலகில் ஏமாற்றப்பட்டவர்கள், அரசியலில் கைகழுவப்பட்டவர்கள்-அவர் கட்சி மகேந்திரன் கமலை விமர்சித்துவிட்டு திமுகவுக்குச் சென்றாரே… என்று பெரிய லிஸ்ட் உண்டு.
நான் எழுதும்போது கசப்பாகத் தோன்றும். கமலஹாசன், சீமான், திருமா மற்ற ‘நியாயவாதிகள்’ வேடத்தில் வரும் ஓநாய்கள் (இது ரொம்ப அதீத விமர்சனமாகத் தோன்றினால், தேசவிரோதிகள் என்று போட்டுக்கொள்ளுங்கள்) திருமுருகன் காந்தி, உதயகுமார் கோவன், கோவாலசாமி என்று பெரிய லிஸ்ட் உண்டு. இவர்களை இயக்குவது கிறித்துவ சக்திகள் (வெளிநாட்டு).
அதனால்தான் wantedஆக வண்டியில் ஏற கமலஹாசனைக் கேட்டுக்கொண்டன அந்த வெளிநாட்டு சக்திகள். அதேபோல, ராகுல் காந்தியையும் சிலரை மாத்திரம் அழைப்பதற்கு அனுமதி கொடுத்தன. இப்படித்தான் கமலஹாசன் தன் வேடத்தைக் கலைத்துவிட்டு காங்கிரஸ் வண்டியில் ஏறினார். பிறகு திமுக கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார் (இவருடைய படம் உதயநிதி வெளியீட்டில் வந்ததும், அதற்குப் பிறகு ஆஹா ஓஹோ என்று அவர் உதயநிதியைப் புகழ்ந்ததும் எல்லோருக்கும் தெரியும்).
கமலஹாசனைப் போல, திரையுலகில் (படங்களில் மாத்திரம் அல்ல. அவர்தான் இளையராஜாவுக்கும் கங்கை அமரனுக்கும் ஆகவிடாமல் செய்த சூத்திரதாரி), சொந்த வாழ்க்கையில் (கட்டிய மனைவி இருக்கும்போதே, சரிகாவிற்கு குழந்தையைக் கொடுத்துத் தன் ஆபீஸில் அவரை வைத்துக்கொண்டார், வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு வந்தால் பிரச்சனை என்று..இதனை சாருஹாசன் எழுதியிருக்கிறார்), அரசியலில் நடித்தவர்கள் யாரும் இல்லை. நடிப்பு என்பதே அந்த அந்த சமயத்திற்கு ஏற்றபடி வேடம் போடுவதுதானே.
கமலஹாசனுக்கு இயல்பாக கருணாநிதி மீதான அன்பு, ஜெ.வைவிட அதிகம் என்றே காட்டிக்கொண்டிருந்திருக்கிறார் (இல்லைனா, ‘பாப்பான்” என்ற பட்டத்தை மாத்திரமல்ல நரகல் நடையில் கருணாநிதி அளிக்கும் அர்ச்சனைகளை ஏற்கவேண்டும்). இப்போது திமுக குட்டையில் ஊறியாகவேண்டிய நிலைமை. அதனால் விஸ்வரூபம் படத்திற்கான பிரச்சனையை, ஜெ. மறைந்துவிட்டார் என்பதால் அவர் மீது தூக்கிப் பழிபோடுகிறார்.
அப்போது அந்தப் படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் முஸ்லீம் கட்சிகள். அவர்களின் குற்றச்சாட்டு, தொழுகை செய்துவிட்டு வெளியில் வந்து குண்டு வைப்பதுபோல மற்றும் இன்னும் பல காட்சிகள் முஸ்லீம்களின்மீது தவறான பிம்பத்தைக் கட்டமைப்பதாக உள்ளது என்பதுதான் (இது ஒன்றும் தவறான பிம்பம் அல்ல. முஸ்லீம் தீவிரவாதிகள்/பயக்கரவாதிகள் உலகளாவிய அளவில் இப்படித்தான் நடந்துகொண்டிருந்தார்கள்). இந்த மாதிரி மதப் பிரச்சனையாகத் திருப்பி விடப்பட்ட ஒரு பிரச்சனையில் ஜெ. மாத்திரமல்ல கருணாநிதி கூட கருத்து சொல்ல முடியாது, சொல்லவும் இல்லை, ஆதரவு தெரிவிக்கவும் இல்லை. அரசின்மீது குற்றம் சாட்டினால் (ஜெ.மீது) கருணாநிதி ஆதரவு தருவார் என்ற திரை அரசியல் கணக்கில், அரசின் மீது தவறாக அப்போது குற்றம் சாட்ட முனைந்தார். பிறகு கமலஹாசனே சில பல காட்சிகளை நீக்கிய பிறகு அரசு தலையிட்டு பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவந்தது என்று நினைவு. இதுபோலத்தான் ‘விருமாண்டி’ படப் பெயருக்கு புதியதமிழகம் கிருஷ்ணசாமி மூலமாக எதிர்ப்பு வந்தது (அதற்கு முன்பு சண்டியர் என்ற பெயர் இருந்தது என்று நினைவு).
நல்லவேளை துக்ளக் ரமேஷ் இதனைப் பதிவு செய்தார். இல்லையென்றால், அண்ணா கனவில் சொன்னார், காமராசர் என் வீடு தேடிவந்து என்னிடம் பணம் யாசித்தார், ராஜாஜி என் வீடு தேடி வந்து காலில் விழாக்குறையாக என்னிடம் மன்றாடினார், அப்துல் கலாம் அரசு வேலை கேட்க என்னிடம்தான் அப்ளிகேஷன் தூக்கிக்கொண்டு வந்தார் என்றெல்லாம் ஒருவர் இறந்த பிறகு நாக்கூசாமல் பொய்யை அள்ளிவிடுவதை வழக்கமாக வைத்திருந்த பேனாவின் வாரிசான் ஸ்டாலினுக்குப் போட்டியாக கமலஹாசன் நடந்துகொண்டது பலருக்கும் தெரியாத விஷயமாக ஆகியிருக்கும்.
புதியவன்,
இது தேவலையே …😊😊😊
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
தலைப்பில் கமல், ரமேஷ் பெயரை நீக்கி அதே தலைப்பில் ஏகப்பட்ட பதிவுகள் நீங்கள் போடலாம்.
நம்ம தலைமை தேர்தல் அதிகாரி சத்ய… சொல்லியிருக்கிறாரே..ஈரோடு கிழக்கில் ஒரு தவறும் நடக்கவில்லை, யாருமே கம்ப்ளெயிண்ட் பண்ணவில்லை, சமூக வலைதளத்தில் வரும் காணொளிகளை ஏற்றுக்கொள்ள முடியாது, என் கண் முன்னால், யாரேனும் காசு கொடுத்து, அதை இன்னொருவர் என்னிடம் கம்ப்ளெயிண்ட் செய்து, நான் ஏற்றுக்கொண்டால்தான் நடவடிக்கை எடுக்கலாமா என்று யோசனை செய்வேன் என்று சொல்லியிருக்கிறாரே… அது பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?
நாட்டின் தேர்தலை (மாநில, மத்திய) பேசாமல், 3rd Party companyக்குக் கொடுத்துவிடுவது நல்லதா? (பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன் மற்றும் பாஸ்போர்ட் சம்பந்தமான சேவைகள் அனேகமாக எல்லாவற்றையும் மூன்றாம் தரப்பிற்கு காண்டிராக்ட் கொடுத்துவிடுகிறார்கள், எல்லா நாடுகளும், இந்தியா உட்பட. அப்படிச் செய்வதால் வேலை ஒழுங்காக நடக்கிறது)
ஏன் – மத்தியில் உள்ள அரசமைப்பு
உறங்கிக்கொண்டா இருக்கிறது….?
அது, இதே தேர்தலில், பாஜக போட்டியிட்டிருந்தால்,
இதையெல்லாம் நடக்க விட்டிருக்குமா….?
அந்த அமைப்புகளின் கைகளை இப்போது
கட்டிப்போட்டிருப்பது யார்…..?
..
தமிழக தேர்தல் ஆணையர்தான் தமிழக தேர்தலுக்கு இன்சார்ஜ். அவர்கள் சொல்லாமல் மத்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க முடியாது என்று நினைக்கிறேன். அகில இந்திய அளவில் மீடியா பெரிய அளவில் கொண்டு சென்றால் தமிழக மானமும், தமிழக தேர்தல் ஆணையத்தின் மானமும் சந்தி சிரிக்கலாம்.
பாஜக தடை செய்தால், தோல்வி பயம் என்று நெகடிவ் ஆக, இங்குள்ள பத்திரிகைகள் தொலைக்காட்சி ஊடகங்களில் உள்ள நடுநிலை வேடதாரிகள் ஊளையிடுவார்கள். அது நெகடிவ் விமர்சனமாக தமிழக பாஜகவுக்கு அமையும். அடுத்து கிறித்துவ ஊடகமான பிபிசி போன்றவையும் இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என்பதுபோல் (ஏதோ அவர்கள் நாட்டில் ஜனநாயகம் இருக்கிறது என்ற நினைப்பில்) கத்த ஆரம்பிக்கும்.
அதனால, வாக்காளர்களை விலைக்கு வாங்கு, வாக்கை அள்ளு ஸ்ட்ராடஜிதான் வெற்றிபெரும். பொதுத் தேர்தல் என்று வரும்போது, பொதுவாக நாட்டில் நடப்பதைப் பார்த்து எந்தக் கட்சி வரணும் என்று நினைக்கும் 20 சத உருப்படியான வாக்காளர்களால்தான் நம் ஜனநாயகம் இன்னும் உருப்படியாக இருக்கிறது. மற்றபடி இடைத்தேர்தல் என்பது காசு கொடு, வாக்கு வாங்கு.
நான் பார்த்த காணொளிகள்ல, வாக்காளர் குடும்பம் சொல்லுது, குக்கர் நல்லா இருக்குதுங்க.. எங்க வீட்டுல ஐந்து பேர் இருக்கோம். வீட்டுக்கு ஒண்ணுதானா? சரி..எங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டுல உள்ளவர்களுக்கு வரலைங்க. அதுக்கு காரில் உள்ளவன், அதெல்லாம் சரியா வந்துடும். இன்னொரு காணொளில, பொருள் வந்துடுச்சா? அதுக்கு அந்த வீட்டில் உள்ள ‘ஆண்’, ஹிஹி அதெல்லாம் வந்துடுச்சுங்க. யாருக்கு வாக்களிக்கணும்னு சொன்னாங்களா? ஆமாம்..பாருங்க..இந்த போஸ்டரைக் கொடுத்தாங்க. (அதில் ஸ்டாலின்….கைச்சின்னம்).
இந்த மாதிரி பதர்களுக்கு வாக்குரிமை ஒரு கேடா? இதற்கு அந்த ஊரில் உள்ளவங்கள்லாம், கோயில் வாசல்ல திருவோடோட உட்கார்ந்துவிடலாம். இவங்கள்லாம் பிள்ளை பெற்றுக்கொள்ளவே லாயக்கில்லாதவர்கள் (அவங்கள்லாம் டீசண்ட் வீடு, நல்ல டிரெஸ்தான் போட்டிருந்தாங்க. பிச்சைக்காரர்கள் இல்லை, ஆனால் பிச்சைக்கார குணம்) இந்தக் காணொளிகளை அவர்களின் பசங்க அல்லது உறவினர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள்? ஏற்கனவே எனக்கு ‘எங்க ஊர் திருமங்கலம்’னு யாரேனும் சொன்னால், ஓ அந்த 70 சதவிகித பிச்சைக்காரனில் இவனும் ஒருவன் போலிருக்கிறது என்று நினைத்துக்கொள்வேன்.
புதியவன்,
தங்களது அறச் சீற்றம் புரிகிறது.
புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் மாற்றம் ஏற்படலாம்.
வாழ்த்துக்களுடன்