அண்ணாமலை அவர்கள் யோசிக்க வேண்டும் ….கட்டுப்படுத்த முடியவில்லையா….அல்லது அவர் கட்டுப்படுத்த நினைக்கவில்லையா…. ?

………………………………………………………………..

…………………………………………………..

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கும்,
அவரது நெருங்கிய தோழர் அமர் பிரசாத் ரெட்டிக்கும்
இடையே உள்ள உறவு, நெருக்கம் மற்றும் அதன் விளைவுகள்
குறித்து விவரமான அரசியல் கட்டுரை ஒன்றினை
காமதேனு இதழ்( இந்து தமிழ் நாளிதழ்) வெளியிட்டிருக்கிறது.
அதன் சுருக்கத்தை கீழே தந்திருக்கிறேன்…. கட்டுரையில்
கூறப்படும் விஷயங்கள் பெரும்பாலும் உண்மை என்றே
மற்ற இடங்களின் மூலம் நான் அறிந்த தகவல்களும் கூறுகின்றன….

அண்ணாமலை அவர்கள் யோசிக்க வேண்டும்…
அண்ணாமலை-க்கு இத்தகைய ஒரு நண்பர் அவசியம் தேவையா…?
வேகமாக வளர்ந்து வரும் இளம் தலைவரான அண்ணாமலையின்
எதிர்காலத்தை பாதிக்கக்கூடிய அளவிலான இந்த உறவும்,
நெருக்கமும் தேவையா….?

நண்பரை அண்ணாமலையால் கட்டுப்படுத்த முடியவில்லையா….
அல்லது அவர் கட்டுப்படுத்த நினைக்கவில்லையா…. ?

…………………………………………

காமதேனு கட்டுரையிலிருந்து —

அண்ணாமலைக்கு அனைத்துமாக இருக்கும் அமர் பிரசாத்
ரெட்டியால், தலைவர் அண்ணாமலையும் தமிழக பாஜகவும்
தடுமாற்றம் கண்டிருக்கிறார்கள்.

அண்ணாமலையின் வலது, இடது கரங்களாக செயல்படும்
அமர் பிரசாத் ரெட்டி – யார், அவரது அரசியல் மற்றும் அதிகார
லீலைகள் எப்படியானது, அண்ணாமலையால் அவரை
ஏன் தவிர்க்க முடியவில்லை, அண்ணாமலையின் எதிர்ப்பாளர்கள்
மட்டுமன்றி தீவிர இந்துத்துவ எதிர்ப்பாளர்களும் ஏன் அமர்
பிரசாத்துக்கு எதிராக வரிந்துகட்டுகிறார்கள், தமிழக பாஜகவின்
நடப்பு போக்கு எங்கே சென்று முடியும்… என்பதான கேள்விகள்,
தமிழக அரசியலை ஆக்கிரமித்துள்ளது.

திருச்சி சூர்யா சிவா, காய்த்ரி ரகுராம் என கட்சியை விட்டு
விலக்கப்பட்டவர்கள் முதல் மீஞ்சூர் சலீம் போன்று கட்சிக்கு
உள்ளிருப்பவர்கள் வரை பலரும் பகிரங்கமாகவே அமர் பிரசாத்துக்கு
எதிராக கொதிக்கிறார்கள். அரசியல் அனுபவமிக்க பொன்னார்,
நயினார் முதல் வளர்ந்து வரும் எல்.முருகன் வரை பாஜகவின்
தமிழகத் தலைவர்கள் பலரும் கமலாலயத்து நந்தியான
அமர் பிரசாத் மீது கடும் கோபம் கொண்டுள்ளனர்.

கட்டம் கட்டப்பட்ட கே.டி.ராகவன் போன்றோர் முதல் அரசியல்
கட்டங்களின் காய்களை சராமாரியாய் நகர்த்தி வந்த ஆடிட்டர்
குருமூர்த்தி வரை இதர சிலரையும் இதே நந்தி உறுத்தி வருகிறது.

வழக்கமாக திமுக தலைமைக்கு எதிராகவும், இந்துத்துவ மற்றும்
பாஜக ஆதரவாகவும் குரல் கொடுத்து வரும் மாரிதாஸ், தமிழக
பாஜக தலைமையின் சகலமுமாக வலம் வரும் அமர் பிரசாத்
ரெட்டியை அம்பலப்படுத்தி இருப்பது பொதுவெளியில் பலவாறாக
அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. திராவிட கட்சிகளுக்கு மாற்றாக
வளர்ந்து வரும் பாஜகவையும் அதன் தலைமையையும் பதம் பார்க்கும் வகையில் மாரிதாஸ் பொங்கியிருப்பது, கட்சியின் வளர்ச்சியை
பாதிக்கும் என்று சிலர் புலம்புகிறார்கள். ஆனால் பெருவாரியானோர், “பாஜகவினரின் மனசாட்சியாக மாரிதாஸ் குரல் எழுப்பியிருக்கிறார், இம்மாதிரியான சுய விமர்சனங்களும், சுட்டிக்காட்டல்களும் கட்சியின் வளர்ச்சிக்கு உதவவே செய்யும்” என்கிறார்கள்.

அனைத்து களேபரங்களுக்கும் அடிப்படை தமிழக பாஜகவின்
’வார் ரூம்’ அறைகளில் இருந்தே தொடங்கியது. நடிகர்கள்
முதல் அரசியல்வாதிகள் வரை, பொதுவாழ்க்கையில் பிரபலத்தை விரும்புவோரும், அதனை வளர்த்து தக்கவைத்துக்கொள்வோரும் ஆர்ப்பாட்டமின்றி வார் ரூம் பாவிக்கவே செய்கிறார்கள்.
உச்ச நடிகர்கள் மற்றும் அவர்களின் திரைப்படங்களை ஆராதிப்பது, அப்டேட்டுகளை பரப்புவது, எதிர் நடிகர் முகாமை சமூக ஊடகங்களில் தாக்குவது உள்ளிட்ட உத்திகளை நட்சத்திரங்களுக்கான வார் ரூம் அடிபொடிகள் பார்த்துக்கொள்கிறார்கள். ரசிகர்களின் துடிப்பை வணிகமாக்கவும், அரசியல் கனவுக்கு அடித்தளமிடவும் விரும்பும் நட்சத்திரங்கள் இதற்காக பெரிதாய் செலவழிக்கவும் செய்கிறார்கள்.

இவர்களுக்கு அப்பால் அரசியல்வாதிகள் தங்களது உட்கட்சி மற்றும்
எதிர்கட்சி எதிரிகளின் தாக்குதல்களுக்கு பதிலடி தரவும், அவர்கள்
மீது சேற்றை வாரியிறைக்கவும், தங்கள் பிம்பத்தை சதா வெளிச்சத்தில்
நீந்தச் செய்யவும், பிரமுகரின் சகல நகர்வுகளையும் பெரிதுபடுத்தி
சமூக ஊடகங்களில் பிரபலமாக்குவார்கள். பிரதமர் மோடி முதல் தமிழக அமைச்சர் உதயநிதி வரை இதற்கெனத் தனிக்குழுக்கள் கமுக்கமாய் செயல்பட்டும் வருகின்றன. ஆனால், பாஜகவின் சார்பில் கூடிய
வார் ரூம் தங்கள் இருப்பையும், செயல்பாடுகளையும் வெளிப்படையாக பறைசாற்றியதன் பின்னணியில் இருந்த உள்நோக்கமே, தற்போதைய அக்கப்போர்களுக்கு காரணமாகி இருக்கிறது.

பாஜக சார்பில் அமைக்கப்பட்ட அடையாறு வார் ரூம், ஆர்எஸ்எஸ்
மற்றும் பாஜகவின் சித்தாந்தங்களை விதந்தோதவும், மோடி முதல் அண்ணாமலை வரையிலான தலைவர்களின் புகழ்பாடலையும்
மட்டுமே செய்திருப்பின் இந்தளவுக்கு விவகாரம் சந்தி சிரித்திருக்காது.

குறிப்பிட்ட சிலரை குறிவைத்து தரம் தாழ்ந்து தாக்குவது முதல்
தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களை மிரட்டி பணம்
பறித்ததான குற்றச்சாட்டுகளுக்கும் ஆளானபோது, பாஜக டெல்லி
தலைமைக்கு புகார் கணைகள் பறந்தன.

அரசியல் கூட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்துவதன் பெயரில்
உண்டியல் குலுக்குவது முதல் ரசீதுடன் நன்கொடை பெறுவது வரை
அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் வசூலிப்பது சாதாரணமாக
நடப்பது. இது மக்களுக்கான அரசியல் நிகழ்வில் அவர்களையும் பங்கேற்பாளர்களாக்கும் உத்தியும் கூட.

ஆனால், அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை முன்வைத்து, பெரும் தொழிலதிபர்களிடம் பெருந்தொகை பெறப்பட்டதாக வார் ரூம் செயல்பாடுகளுக்கு எதிராக மாநில
அமைச்சர் செந்தில் பாலாஜி பொதுவெளியில் குற்றம் சாட்டும்
அளவுக்கு நிலைமை மோசமானது.

பாஜகவை சேர்ந்த பலரும் தங்களுக்குள் இதை விவாதிக்க
ஆரம்பித்தனர். எல்லோரின் விரல்களும் அண்ணாமலைக்கு
எல்லாமுமான அமர் பிரசாத் ரெட்டியை நோக்கியே நீண்டது. போதாக்குறையாக சுரனா குழுமம், ஆருத்ரா கோல்ட் என
வங்கியிலும், மக்கள் மத்தியிலும் பல்லாயிரம் கோடி மோசடி
செய்தவர்கள் பலரும் அமர் வாயிலாக பாஜகவில் ஐக்கியம்
ஆனார்கள். எல்லாவற்றையும் மாரிதாஸ் பொதுவில்
போட்டுடைத்தார். மாரிதாஸ் போர்க்கோலம் பூண்டதன்
பின்னணியில், பாஜகவில் அவருக்கான ராஜ்யசபா எம்பி பதவி
முதல் கட்சியின் உச்ச பொறுப்புகள் வரை எதிர்பார்ப்புகள் பொய்த்துப்போனதே காரணம் என்று சொல்லப்பட்டபோதும்,
காயத்ரி ரகுராம் விவகராமே மாரிதாஸை வெடிக்கச் செய்தது.

குஷ்பூ அளவுக்குக்கூட அரசியல் அனுபவம் பெறாத காய்த்ரி
ரகுராமால், தான் பாஜகவில் இருந்து கட்டம்கட்டப்பட்டதை
தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. எனவே, சதா
அண்ணாமலைக்கு எதிராக ட்விட்டரிலும், யூடியூப் பேட்டிகளிலும் சீற ஆரம்பித்தார். அரசியல் கணக்குகள், பிரதிபலன் எதிர்பார்ப்புகள்
ஏதுமற்ற அவரது சீற்றம் அண்ணாமலையின் பிம்பத்தை தொடர்ந்து
சேதம் செய்தது. பதிலடியின் பெயரில் அண்ணாமலையின்
துதிபாடிகளில் சிலர் காயத்ரியின் ஆபாச மார்பிங் புகைப்படங்களை பொதுவில் பரப்ப, சகலரும் முகம் சுளித்தனர். இதை முன்வைத்தே
வார் ரூம் நோக்கத்தை மாரிதாஸ் கேள்வியாக்கினார்.

இதற்கு பேட்டியொன்றில் கெத்தாக பதிலளித்த அமர் பிரசாத் ரெட்டி,
“அவர் முதலில் பாஜகவில் சேரட்டும்; பிறகு கேள்வி கேட்கட்டும்”
என்றதும், மாரிதாஸ் போர்க்கோலம் பூண்டார்.

‘வார் ரூம் ரெட்டி. பெருச்சாளிகள் மீது கவனம் தேவை’,
’ரெட்டியின் சதுரங்க வேட்டை. இதுவரை வெளியாகாத தகவல்கள்’-

 • என்று 2 வீடியோக்கள் வெளியிட்டார். தனக்கே உரிய பாணியில்
  அமர் பிரசாத் ரெட்டியை உண்டு இல்லையென செய்தார்.
  அமருக்கு வைத்த குறி மறைமுகமாக அண்ணாமலையை தாக்கும் என்பதையும் மாரிதாஸ் அறியாதவரல்ல.

மாரிதாஸ் மட்டுமல்ல, இன்றளவும் அண்ணாமலை புகழ்பாடும்
திருச்சி சூர்யா, பாஜகவில் தான் அரசியல் காவுக்கு ஆளானதற்கு
அமர் பிரசாத் ரெட்டியே காரணம் என்கிறார். கே.டி.ராகவன் முதல்
காயத்ரி ரகுராம் வரை கட்சியிலிருந்து கட்டம் கட்டப்பட்டவர்களும் அவர்களுக்கு ஆதரவானவர்களும் அமர் நோக்கியே விரல்
நீட்டுகிறார்கள். ஹனி ட்ராப் வீடியோ, ஆடியோக்கள் முதல்
ஆர்டிஐ தகவல் அடிப்படையில் மிரட்டி வசூல் நடத்துவது வரை
அமர் மீதான குற்றச்சாட்டுகளை அண்ணாமலை அறியாது இருப்பாரா?

உண்மையில் இப்படியான ஒருவரே வளரும் அரசியல்வாதி
ஒருவரின் வளர்ச்சிக்கு ஆகமுடிந்தவற்றை செய்ய முடியும்.
பல அரசியல் பிரபலங்களின் அந்தரங்க பின்புலத்தை தோண்டினால்
இப்படி பல அமர்கள் அமர்ந்திருப்பார்கள். இங்கே சற்று
வெளிப்படையாகவே வலம் வந்திருக்கிறார் அமர். அது அவரது
பாணியாகவோ தேவையாகவோ இருந்திருக்கலாம். ஆனால்,
சேதாராம் பாஜகவுக்கும் அண்ணாமலைக்கும் சேர்ந்திருக்கிறது.

சாதாரண நாளிலேயே தமிழக அரசியல் களத்தை திரும்பிப் பார்க்க
வைக்கும் அண்ணாமலை, ஈரோடு இடைத்தேர்தல் களத்தில் நிற்காது பெங்களூருக்கும் இலங்கைக்கும் இடம் பெயர்வதன் பின்னணியில்,
அமர் உள்ளிட்ட அண்ணாமலைக்கு எதிரான புகார்களே காரணம் என்கிறார்கள்.

விரைவில் அண்ணாமலைக்கு மாற்றாக தலைவர் நியமிக்கப்படுவார் என்றெல்லாம் தமிழக பாஜகவில் பேச்சு அடிபடுகிறது. நிதர்சனத்தில்
சற்றும் சாத்தியம் இல்லாதவை என்ற போதும், அண்ணாமலைக்கு
எதிரான அதிருப்தி அடுத்தகட்டத்தை எட்டியிருப்பதையே இவை காட்டுகின்றன.

இதே கோணத்தில் அண்ணாமலையின் வார் ரூம் நோக்கம்,
பாஜகவை கடந்ததாகவும் அண்ணாமலையை மையமாக்கியும் பார்க்கப்படுகிறது. தனக்கான அரசியல் தொடர்புகள் மற்றும்
மக்கள் அபிமானத்தை வளர்த்துக்கொள்ளவும், பிற்பாடு
அவசியமெனில் தனிக்கட்சி தொடங்குவதற்கும் உதவும் வகையிலே
வார் ரூம் செயல்பாடுகளை முடுக்கி விடுவதாகவும், அதற்குத்
தோதாக அமர் பிரசாத் ரெட்டி போன்றவர்களே சரிப்படுவார்கள்
என்றும், அவரை அண்ணாமலை அரவணைத்து வருவதாகவும்
பாஜகவில் புலம்புகிறார்கள்.

பாஜகவையும் கட்சியின் இதர தலைவர்களையும் பின்தள்ளி அண்ணாமலையின் புகழே அதிகம் பாடப்படுவதையும்,
லாபமோ நட்டமோ மாநில அரசியல் தன்னை மையமாக்கி
சுழல்வதையே அண்ணாமலை எதிர்பார்ப்பதையும் இதற்கு
சாட்சியாக அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

தமிழகத்தில் அண்ணாமலை குறிவைத்திருக்கும் அரசியல்
வெற்றிடத்துக்கு தகுதியாக தன்னை வளர்த்துக்கொள்வதையும்,
அதற்காக அமர் பிரசாத் போன்றவர்களை நம்புவதையும்
இதன் பின்னணியில் இருந்தே பார்க்கிறார்கள்.

அண்ணாமலைக்கு எதிர்திசையில் ஆவேசம் காட்டிய மாரிதாஸும்
திடீரென அமைதியானார். ‘நல்லவர்கள் மற்றும் பெரியவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அமர் பிரசாத்துக்கு எதிரான
தாக்குதல்களை நிறுத்திக்கொள்வதாக’ச் சொல்லி இப்போதைக்கு இடைவேளை விட்டிருக்கிறார்.

அந்தப் பெரியவர் அநேகமாக ஆடிட்டர் குருமூர்த்தியாக இருக்கும்
என்றும், தனது பிடியை மீறி தமிழக பாஜகவை அண்ணாமலை
செலுத்துவதை ரசிக்காது எதிர் லாபி செய்கிறார் என்றும்
பாஜகவினர் பகிரங்கமாகவே பதிவிட்டு வருகிறார்கள்.

வார் ரூமும் போர்ப்பரணியை அடக்கி வாசித்து வருகிறது.
தேசிய கட்சியான காங்கிரஸ் சரிந்ததன் பின்னணியில்
அதன் உட்கட்சி மோதல்களே காரணம் என்பது ஊரறிந்தது.
இன்றைக்கும் அந்த தடுமாற்றங்களில் இருந்து மீள வழியின்றி
காங்கிரஸ் தவிக்கிறது. காங்கிரஸ் மற்றும் திராவிட கட்சிகளுக்கு
மாற்று என்று கிளம்பிய பாஜகவினரும் இப்படி அதே பாதையில்
செல்வதுதான், எதிர்பார்ப்புகளை வளர்த்திருந்த கட்சியினர்
மற்றும் ஆதரவாளர்களை நோகடித்திருக்கிறது.
( நன்றி – காமதேனு தளம் ….)

.
……………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

13 Responses to அண்ணாமலை அவர்கள் யோசிக்க வேண்டும் ….கட்டுப்படுத்த முடியவில்லையா….அல்லது அவர் கட்டுப்படுத்த நினைக்கவில்லையா…. ?

 1. Peace சொல்கிறார்:

  Please check out
  Chat.openai.com
  I would like to hear your thoughts. Significant development.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Peace,

   உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி…
   கொஞ்ச நாட்களாகவே நினைத்துக் கொண்டிருந்தேன்
   இதை முயற்சி செய்து பார்க்கவேண்டுமென்று….

   உங்கள் பின்னூட்டத்தின் தூண்டுதலால்,
   உடனடியாக முயற்சி செய்து பார்த்தேன்…

   அவர்கள் செப்டம்பர் 21 வரையிலேயே அப்டேட்
   செய்திருப்பதால், தற்போதைய நிலவரம் பற்றி கேட்டால்,
   தவறாக தகவல் வருகிறது….

   ஆனால், செப்டம்பர் 21 வரையிலான செய்திகளை
   சரியாகவே தருகிறது….

   அருமையான முயற்சி… அற்புதமான சாதனை…
   இது மனித குலத்தை எங்கெங்கோ கொண்டு போகப்போகிறது…..!!!

   உங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி.

   நான் கேட்ட 2 கேள்விகளையும், கிடைத்த பதில்களையும்
   கீழே தந்திருக்கிறேன்…. உங்கள் தகவலுக்காக –
   ………………………………………………….
   my question was –

   what you have to say about assembly by elections in Erode East constituency…?

   Reply was –
   —————–
   As an artificial intelligence language model, I do not have opinions or feelings about specific political events or issues. However, I can provide some information about the assembly by-elections in Erode East constituency.

   The Erode East constituency in Tamil Nadu went to by-elections on October 4, 2021, after the demise of the sitting MLA, K.S. Thennarasu. The constituency has a total of 2,52,005 voters, and there were eight candidates in the fray for the by-election.

   The major parties that contested the by-election were the All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK), Dravida Munnetra Kazhagam (DMK), and Bharatiya Janata Party (BJP). The AIADMK fielded its candidate Senthil Balaji, who was previously with the DMK and won from the same constituency in 2011. The DMK fielded K.S. Thennarasu’s son, T. Thirumagan Thennarasu, and the BJP fielded its state general secretary, Nainar Nagenthran.

   The by-election results were announced on October 10, 2021, and the AIADMK’s Senthil Balaji won the Erode East constituency by-election by a margin of 33,212 votes. Senthil Balaji secured 86,943 votes, while T. Thirumagan Thennarasu secured 53,731 votes, and Nainar Nagenthran secured 1,910 votes.

   Overall, the assembly by-elections in Erode East constituency were a significant event for the people of the constituency and Tamil Nadu, as it could impact the balance of power in the state assembly.
   ————————————————————————–
   2-வது சாம்பிள் –

   my quetion was –

   what is the border problem between India and China ?

   Reply was –
   —————————–

   The border problem between India and China is primarily centered around the disputed territory of Aksai Chin and the northeastern Indian state of Arunachal Pradesh. Both India and China claim these territories as their own, with India claiming Aksai Chin as a part of the Ladakh region of Jammu and Kashmir, and China claiming it as a part of Xinjiang Autonomous Region.

   The border dispute first erupted into a military conflict in 1962 when China invaded India, resulting in a decisive Chinese victory and a border ceasefire agreement. However, the underlying border dispute remains unresolved, and there have been sporadic border clashes and standoffs between the two countries since then.

   In recent years, tensions between India and China have risen due to the construction of military infrastructure along the disputed border by both sides. The most recent clash between Indian and Chinese troops occurred in June 2020, resulting in the deaths of several Indian soldiers and an unknown number of Chinese soldiers. Despite diplomatic efforts to ease tensions, the border problem remains a significant point of contention between the two countries.

   .
   …………………………………………..

   .
   உங்களுக்கு இதில் – எதாவது வித்தியாசமான அனுபவங்கள் உண்டா…?

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • புதியவன் சொல்கிறார்:

   முதலில் இது ஏதோ புதுசு என்று நினைத்துவிட்டேன். இதே போல chatgpt என்று ஒன்று முன்னமேயே இருக்கிறதே என்று நினைத்தேன். இன்று பார்த்தபோதுதான் தெரிந்தது, அதேதான் இது என்று.

   இதனை எங்களிடம் (என்னிடம், மனைவியிடம்) முதலில் சொன்னது என் பெண். எதைக் கேட்டாலும் உடனுக்குடன் பதில். ரொம்பவே ஆச்சர்யப்பட்டோம். இதன் பிரபலத்தை அறிந்த கூகுள், அதற்கான செயலியை உருவாக்கிக்கொண்டிருக்கிறது (இல்லைனா, அதன் பிஸினெஸுக்குப் பெரும் ஆபத்து)

   AI (ஆர்டிஃபீஷியல் இண்டெல்லிஜென்ஸ்) மிகவும் தேவைப்படுவது இரண்டு இடங்களில். 1. வழக்குகளில் 2. மருத்துவத்தில். இந்த இரண்டையும் முதலில் கொண்டுவந்தால், எனக்குத் தெரிந்து வழக்குக்காக பொதுமக்களுக்கு ஆகும் செலவும், மருத்துவச் செலவும் கணிசமாகக் குறையும். அடுத்தது தேவையில்லாத manpowerம் குறையும். இந்த இரண்டிற்கான லாபி அதிகம் என்பதால் இன்னமும் வழக்கத்துக்கு வரவில்லை. வெகு விரைவில் இவற்றை எதிர்பார்க்கலாம்.

   15 வருடங்களுக்கு முன்பு, லண்டனில் ஒரு I.T exhibitionல், விளம்பரங்கள் ஒரு ஸ்க்ரீனில் எங்கு வந்தால், உபயோகிப்பாளர்கள் பார்க்கும் வாய்ப்பு அதிகம் என்பதற்காக ஒரு பெரிய திரை, பல கேமராக்களோடு வைத்திருந்தார்கள். இதுபோல பயனாளர்களின் behavior, interest, இவைகளை ஏற்கனவே கூகுள் எடுத்துவைத்துக்கொள்கிறது. இந்த dataவை, vendorsக்கும் பகிர்கிறது. அதற்கு ஏற்றவாரு விளம்பரங்கள், நாம் ஒவ்வொரு முறை கணிணியை உபயோகிக்கும்போதும் வரும். இந்த dataவை கூகுள், OTT தளங்களுக்கும், தொலைக்காட்சிகளும் (OTT போன்றவை) பகிரும்போது, நமக்கு ஏற்ற விளம்பரங்கள் ஒவ்வொரு பயனீட்டாளருக்கும் வரும் காலம் தொலைவில் இல்லை. (இதுல இப்போது இருக்கும் பிரச்சனை, ஒரு தடவை தவறுதலாக உள்ளாடை சம்பந்தமாக சிறிய விளம்பரத்தை, இது தினமலர் போன்ற தளங்களுக்குச் செல்லும்போது தவறுதலாக அந்த விளம்பரத்தை press செய்துவிட்டால், பிறகு வேறு தளங்களை உபயோகிக்கும்போதும் பெண்கள் சம்பந்தப்பட்ட விளம்பரங்களே வந்து நம்மைச் சங்கடத்துக்கு உள்ளாக்கும்)

   நாம் இணையதளம் மற்றும் சோசியல் மீடியாவில் எழுதும் கருத்துக்களை வைத்து, நம் எண்ணவோட்டங்களை எடைபோட்டு, அதற்கு ஏற்றவாறு விசா அப்ளிகேஷனை அனுமதிப்பது, மறுப்பது என்பது பலப் பல வருடங்களுக்கு முன்பேயே வந்துவிட்டது என்பது உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன் (அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள்தாம் முதலில் இதனைச் செய்தன)

 2. புதியவன் சொல்கிறார்:

  //பிரதமர் மோடி முதல் தமிழக அமைச்சர் உதயநிதி வரை இதற்கெனத் தனிக்குழுக்கள் கமுக்கமாய் செயல்பட்டும் வருகின்றன//

  //வார் ரூம் செயல்பாடுகளுக்கு எதிராக மாநில அமைச்சர் செந்தில் பாலாஜி பொதுவெளியில் குற்றம் சாட்டும் அளவுக்கு நிலைமை மோசமானது//

  //அமர் உள்ளிட்ட அண்ணாமலைக்கு எதிரான புகார்களே காரணம்//

  //அண்ணாமலைக்கு மாற்றாக தலைவர் நியமிக்கப்படுவார் என்றெல்லாம் தமிழக பாஜகவில்//

  //பிற்பாடு அவசியமெனில் தனிக்கட்சி தொடங்குவதற்கும் உதவும் வகையிலே//

  //அண்ணாமலை குறிவைத்திருக்கும் அரசியல் வெற்றிடத்துக்கு தகுதியாக தன்னை வளர்த்துக்கொள்வதையும், அதற்காக அமர் பிரசாத் போன்றவர்களை நம்புவதையும்//

  இனிக் கவலையில்லை. விளம்பர காசுக்காக திமுக நிர்வாகி இந்து ராம் தட்டேந்தலாம். காசு கிடைக்குமென்றால் சாக்கடைச் செய்திகளையும் முக்கியச் செய்தியாகத் திரிப்பதில் இந்து பத்திரிகை, ராம் வந்த பிறகு மிகவும் புகழ் பெற்றிருக்கிறது. அவர்களின் சந்தாதாரர்கள் சரிவுக்கு ராமின் மோசமான செயலும் மிகப் பெரிய காரணம்

 3. புதியவன் சொல்கிறார்:

  //அரசியல் கணக்குகள், பிரதிபலன் எதிர்பார்ப்புகள் ஏதுமற்ற அவரது சீற்றம்// – பரவாயில்லையே…காயத்ரி ரகுராமுக்கும் இந்துப் பத்திரிகை வால் பிடிக்கத் தொடங்கியிருக்கிறதே…. ஹெவி பேமெண்ட் போலிருக்கிறது.

 4. புதியவன் சொல்கிறார்:

  டி.ஆர் பாலு, சைதை கிட்டு, மா.சுப்ரமணியன், (தற்போதுள்ள மற்றும் முன்பிருந்த அண்ணாநகர் கும்பல் பெயர்களையெல்லாம் இழுத்துவிடலாம்) இவர்களெல்லாம் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, இல்லை மேற்கத்தைய நாடுகளில் MS முடித்த பிறகு மக்களுக்குச் சேவை செய்ய கருணாநிதி, ஸ்டாலினுடன் கைகோர்த்தார்கள், வைகோ அவராகவே அன்பாக திமுகவிலிருந்து வெளியேறினார் என்று இந்து ராம் எண்ணுகிறார் போலிருக்கிறது. அதனால்தான் திமுக போன்று மக்கள் சேவை செய்யவந்தவர்களை பாஜக கொண்டிருக்கவில்லையே, அண்ணாமலைக்குக் கெட்டபெயர் வந்துவிடுகிறதே என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார் போலிருக்கிறது.

  அண்ணாமலையைப் பொருத்த வரையில் தேசியக் கட்சியின் தமிழகத் தலைவர். அவருடைய டெர்ம் 2 முறைகள்தாம். அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பணி தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பது. தேசியக் கட்சிகளுக்கே உரித்தான, தேர்தல் உத்திப்படி, தலைமைக் குழு சொல்வதைக் கேட்கவேண்டிய செய்யவேண்டிய கட்டாயம் அவருக்கு உண்டு. அண்ணாமலைக்கு பாஜக தலைமை முக்கியத்துவம் கொடுக்கிறது. அதை வைத்து வளர்வது அண்ணாமலை கையில் உள்ளது. எனக்குத் தோன்றுகிறது அவர் தேஜஸ்வி சூர்யாவைவிட மிகுந்த லெவல் ஹெடட், தமிழகத்துக்கு ஏற்றமாதிரி அரசியல் செய்துவருகிறார், பாஜகவில் மிக முக்கியத் தலைவராக உயர்வார். அதனால்தான் கர்நாடகா, இலங்கை என்று அவரை முன்னிலைப்படுத்துகிறது பாஜக.

  இந்து தமிழ் நாளிதழில் இந்தக் கட்டுரையை எழுதியவர், ஒருவேளை இந்து ராமை வெளியேற்றிவிட்டு இந்துவைக் கைப்பற்ற, அல்லது திமுக தலைமைக்கு நெருக்கமாகி அமைச்சராவதற்காக, தன் பெயர் பிரபலமாக இந்தக் கட்டுரையை எழுதினார் என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் கட்டுரையில் உள்ள தகவல்களும்.

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  புதியவன்,

  பின்னூட்டங்களைப் பொருத்த வரையில்,
  உங்களுக்கு பிடித்தவரை தலைமேல் தூக்கி
  வைத்துக் கொண்டு ஆடுவதும், பிடிக்காதவரை
  காலால் மிதிப்பதும்- உங்கள் வாடிக்கையாகி
  விட்டது..

  உண்மை நிலவரத்தை ஜீரணிக்க முயலுங்கள்…
  கற்றுக் கொள்ளுங்கள்….

  உங்கள் மதிப்பீட்டின்படி, மாரிதாஸ் என்பவர்
  வடிகட்டிய முட்டாளா, இல்லை மனிதர்களை
  எடைபோடும் சாமர்த்தியம் இல்லாதவரா….?

  இந்த சூழ்நிலை பற்றி, மாரிதாஸ் சொல்கின்ற
  செய்திகளுக்கு – உங்கள் விளக்கம் என்ன…..?

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • புதியவன் சொல்கிறார்:

   மாரிதாஸ் ரொம்பவே உணர்ச்சி வசப்படுகிறார். அதனால் சட் என்று அவருக்குக் கோபம் அதீதமாக வந்து ரொம்பவே குறை சொல்லுகிறார். அவரது விமர்சனத்திலும், நிறைய நேரங்களில் தரம் தாழ்ந்து, கடுமையாக விமர்சிக்கிறார். அப்படி எழுதுபவர்கள் சொல்லுபவர்கள் நல்ல விமர்சகர் அல்ல. நல்ல பத்திரிகையாளர்கள் அப்படி இருக்கமாட்டார்கள். அவருடைய காணொளிகளைப் பாருங்கள்.

   இந்தச் சூழ்நிலையைப் பற்றி விவரமாக நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் ரெட்டிக்கும் அண்ணாமலைக்கும் முடிச்சுப் போடுவது தவறானது என்றே நான் நம்புகிறேன் நினைக்கிறேன். In a company, not owned by me, but am a senior employee, there might be so many senior or junior persons, who may have or may not have links to MD. அண்ணாமலை வேலை, எல்லோரையும் சரி செய்வது அல்ல. தலைவர் சொல்வதை எல்லோரும் மதித்து அதன்படி நடக்கச் செய்வது மாத்திரம்தான் அவர் வேலை. There may be so many reasons why an action is taken or why an action is not taken. There may be reasons why he is sent to Srilanka, in the midst of by election, suddenஆ ஓபிஎஸ்ஸை பாஜக கைகழுவுவதுபோல நடந்துகொள்வது, போட்டியிடாதது, அதிமுக எடப்பாடி சார்பு நிலை… He can’t worry about all these things. His job is to execute what his bosses direct. He may have a say to object or express his points. இதெல்லாம் எனக்குப் புரிவதால், என் மனதில் இருக்கும் அண்ணாமலை என்ற மனிதனின் பிம்பத்தை இவை சிதைப்பதில்லை.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    மகா கேவலமான சப்பைக்கட்டு….

    இதெல்லாம் உங்கள் முந்தைய பின்னூட்டங்களுக்கான
    விளக்கமே அல்ல….

    நான் முதலில் சொன்னதை இங்கே மீண்டும் சொல்கிறேன் –

    உங்களுக்கு வேண்டப்பட்டவர் என்றால், அவர் செய்யும்
    எல்லாமே சரி….
    வேண்டப்படாதவர் என்றால், அவர் அடிப்படையிலேயே
    லாயக்கில்லாதவர், உதவாக்கரை….

    சரியான நிலையில் இருந்துகொண்டு,
    எந்தவொரு செய்தியையும், நிகழ்வுகளையும் கவனித்து-
    நேர்மையாக, பாரபட்சமின்றி – கருத்து தெரிவிக்கும் முறை நிச்சயமாக இதுவல்ல….

 6. Peace சொல்கிறார்:

  You are absolutely correct. Currently no one is directly or indirectly making money of this. Once they figure this out, they will train this to update itself.
  On a lighter note it says it can give me answers in Tamil.

 7. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  Peace,

  It is really astonishing….
  Even a couple of years ago
  we had absolutely no idea
  about such possibilities …

  I am unable to judge /imagine
  where this development
  is going to land us…

  .
  -with all best wishes,
  Kavirimainthan

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s