நிஜமாகவே பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருக்கிறாரா …? பழ.நெடுமாறன் அவர்கள் சொல்வது …?

…………………..

……………

நிஜமாக இருந்தால் தேவலையே என்று ஒர் ஆதங்கம் ஏற்படுவது உண்மை.

ஆனால், நிஜமாக இருப்பதற்கான வாய்ப்புகள் கொஞ்சம் கூட இருப்பதாகவே
தோன்றவில்லை…

இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில்,
பழ.நெடுமாறன் அவர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு தகவலை
வெளியிடுவதால் எந்தவித பயனும் இல்லை; மேலும் அவரது வயது,
தற்போதைய அரசியல் ஓய்வுநிலை ஆகியவற்றை பார்க்கும்போது,
இந்த மாதிரி பொய்யான தகவலை சொல்லவேண்டிய சூழ்நிலை
நிச்சயமாக அவருக்கு இல்லை;

இதே நேரத்தில், வெகு ஆண்டுகளாக, இந்த தலைப்பைப்பற்றி,
தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த
தலைவர் திருச்சி வேலுசாமி அவர்களும், தனிப்பட்ட முறையில்
நேற்று – இதனை உறுதி செய்து பேட்டி கொடுத்திருக்கிறார்….

இது குறித்து அகில இந்திய அளவிலும் பரபரப்பாக
தலைப்புச் செய்திகள் வெளிவந்துள்ளன.

எனக்கு கிடைத்ததில் – சில லிங்குகளை மட்டும் கீழே தந்திருக்கிறேன்.

……………
பிரபாகரன் நலமுடன் உள்ளார் – பழ நெடுமாறன்….!
zee tamil news-
…………..

……………

பிரபாகரன் நிச்சயம் வருவார் |
உடைக்கும் திருச்சி வேலுச்சாமி |Aadhan Tamil –

………………………………………

…………………………………………….

economic times –


.
………………………………………………………………………………………………………………..……..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to நிஜமாகவே பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருக்கிறாரா …? பழ.நெடுமாறன் அவர்கள் சொல்வது …?

 1. புதியவன் சொல்கிறார்:

  //நிஜமாக இருந்தால் தேவலையே என்று ஒர் ஆதங்கம் ஏற்படுவது உண்மை. ஆனால், நிஜமாக இருப்பதற்கான வாய்ப்புகள் கொஞ்சம் கூட இருப்பதாகவே தோன்றவில்லை…//

  எப்போதே வரலாறு ஒரு சில வாய்ப்புகளையே வழங்கும். அப்போது வாய்ப்பைத் தவற விட்டுவிட்டால், பிறகு கிடைக்கவே கிடைக்காது. பிரபாகரன், சமாதானத்துக்கான வாய்ப்புகளையெல்லாம் அடைத்துவிட்டார். அவர் ஜனநாயக வழிமுறைகளில் நம்பிக்கை இல்லாதவர்.

  பிரபாகரன் பெயரைச் சொல்லி எத்தனையோபேர், சம்பாதித்துவிட்டார்கள். ஈழப் போராட்டத்திற்கு ஆதரவு என்று சொல்லி, கையறு நிலையில் இருந்தவர்களிடம் கறந்துவிட்டார்கள். வெளிநாடு வாழ் ஈழ மக்களிடம் பணம் வசூலித்தவர்கள், போரின் முடிவின் போது பணத்தைப் பதுக்கிவிட்டனர். காலம் முடிந்துபோய்விட்டது.

  இப்போது பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று சொல்லி, அதை வைத்து என்ன சாதிக்கப்போகிறார்கள்? ஹிட்லர் பதுங்குகுழியிலிருந்து தப்பி உயிர்வாழ்ந்தார், தன்னைப் போல் இருந்தவரின்மீது பெட்ரோல் ஊற்றி, தான் இறந்ததுபோல் செட்டப் செய்தார் என்ற தியரியை வைத்துப் பல புத்தகங்கள் எழுதப்பட்டதுதான் மிச்சம். இங்கும் பிரபாகரன் சாகவில்லை என்ற திரைக்கதை எழுதி அவரை இன்னும் பெரிய மாவீரன் என்ற பிம்பத்தைக் கட்டியெழுப்ப நினைக்கிறார்கள் போலிருக்கிறது.

  பிரபாகரன், தமிழ் ஈழம் என்ற நாடு அமைந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதைக் காட்டிவிட்டார். எப்போதுமே சர்வாதிகாரிகளால்தான் தாங்கள் நினைத்ததைச் செயல்படுத்தி, சாதனையை ஏற்படுத்த முடியும். ஈழத்திற்காக, நிறைய பண வசூலையும் கெடுபிடியுடன் செய்தார் (இல்லையென்றால் ஆயுதம், போர், நிர்வாகம் போன்றவற்றை எப்படி நினைத்துப் பார்ப்பது?).இருந்தாலும் அவரது படைவீரர்கள், அவரை நம்பிய மக்கள் என்று ஒரு வரலாற்று நாயகனைப் போன்று வாழ்ந்த அவரது வாழ்க்கை மனதில் தாக்கம் ஏற்படுத்தாமல் இல்லை.

  உலகெங்கும் சிதறிவிட்ட ஈழத் தமிழர்களை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது. தங்கள் கலாச்சாரம், வாழ்விடம், சொந்தம், மதம் என்று எல்லாவற்றையும் இழந்து வெளிநாடுகளில் ஐக்கியமாகிவிட்டனர். அவர்களது அடுத்த தலைமுறைக்கு, தங்கள் பெற்றோர் எவற்றை இழந்தனர், தாங்கள் எதைஎதை இழந்தோம் என்று தெரியாது. ஆனால் புத்திசாலியான அந்த மக்கள், தாங்கள் அடைக்கலம் புகுந்த நாடுகளில் நன்றாகவே வாழ்கிறார்கள்.

  புதிய புரளியைக் கிளப்புகிறவர்கள், இலங்கையில் இருக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கு இன்னல்களையே கொண்டுவருகிறார்கள் என்பதை மறக்கவேண்டாம்.

 2. புதியவன் சொல்கிறார்:

  இதற்கும், மத்திய அமைச்சர்கள், அண்ணாமலை போன்றோர் தொடர்ந்து இலங்கை செல்வதற்கும் சம்பந்தம் உண்டா? அதாவது அவர்களின் தாக்கத்தை (பாஜகவின்) குறைக்க, புரளி கிளப்புகிறார்களா? அந்தச் சந்தேகம் எனக்கு இருக்கிறது. திடுமென்று பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற பேட்டிகள் செய்திகள் இப்போது வருவதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

 3. Karthikeyan Palanisamy சொல்கிறார்:

  //நிஜமாக இருந்தால் தேவலையே என்று ஒர் ஆதங்கம் ஏற்படுவது உண்மை. ஆனால், நிஜமாக இருப்பதற்கான வாய்ப்புகள் கொஞ்சம் கூட இருப்பதாகவே தோன்றவில்லை…//

  சீமானுக்காகவாவது அவர் உயிரோட இருக்கணும்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s