…………………………………

……………………………………
அம்மா வைத்த ரசமா, மனைவி வைத்த ரசமா …
எது பிடிக்கும் உங்களுக்கு – என்று என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன் …… ???
அந்தக்காலத்தில், அம்மா கைச்சமையலை சாப்பிடும்போது,
அது தான் மிகவும் பிடித்திருந்தது.
மனைவி வந்த பிறகு, அவர் சமையல் பொறுப்பை ஏற்ற பிறகு,
அவர் வைக்கும் ரசமும் அருமையாக இருக்கிறது….!!!
எது சிறந்தது என்னைக் கேட்டால் – இரண்டுமே பிரமாதம் என்பேன்.
ஒன்று நன்றாக இருப்பதால், இன்னொன்று நன்றாக இருக்க
முடியாதா என்ன ….?
அது போல், அந்தக்காலத்தில் – ஏன் இன்று வரை கூட – மிகவும்
பாப்புலரான ஒரு பாடல் ” பேசுவது கிளியா – இல்லை பெண்ணரசி
மொழியா…??? “
ஓரிஜினலாக கருப்பு-வெள்ளையில், பணத்தோட்டம் படத்தில்,
கவிஞர் கண்ணதாசன் எழுத, எம்.எஸ்.வி. இசையமைத்த பாடல்…
பல வருடங்கள் யூ-ட்யூபில் -கருப்பு வெள்ளையில் ரசித்த பாடல்…..
இப்போது வண்ணத்தில் மெருகூட்டப்பட்டு,
கலரில் வெளிவந்திருக்கிறது…
இதுவும் பிரமாதமாக இருக்கிறது….
இரண்டில் எது சிறப்பு …?
நான் சொன்ன பதிலைத்தான் நீங்களும் சொல்வீர்களென்று
நினைக்கிறேன்.
பாடல் கீழே –
கருப்பு வெள்ளை –
………………………….
கலர் –
.
………………………………………………
தங்கம் மாதிரி மின்னும் நிறம் எம்ஜிஆருக்கு. நல்ல மனது, அப்படியே முகத்தில் தெரியும்.
பாடல் நல்லா இருக்கு. பழைய பாடல்கள்தாம் மனதுக்கு எவ்வளவு ஆதுரமாக இருக்கிறது.
கருப்பு வெள்ளையில் நல்ல பிரிண்டில் அவரது ஒரிஜினல் நிறம் தெரியும். கலரில், கொஞ்சம் மெழுகு பூசினது போல் தெரிந்தாலும், அதுவும் அழகுதான்.
காலம், மாற வேண்டும் என்று நினைத்தால், அதற்கேற்றவாறு நிகழ்வுகளை உண்டாக்கிவிடும். கருணாநிதி மாத்திரம், எம்ஜியாரை கோபப்படுத்தாமல், அவர் ஆசைப்பட்ட திரையுலக வாழ்க்கையை அழிக்க முயலாமல் இருந்திருந்தால், தமிழக மக்களிடத்தில் நிரந்தர கெட்ட பெயர் வந்திருக்காது. திமுக தீய சக்தி, கருணாநிதி கெட்டவர் என்ற எண்ணம், குறைந்தபட்சம் 35 சதம் தமிழக மக்களுக்காவது எப்போதுமே உண்டு. (உடனே மீதி 65 சதம்னுலாம் கற்பனையை ஓட்டாதீங்க. 15 சதம்தான் கருணாநிதி ஆதரவு மனநிலை எப்போதுமே)