“மூர்க்கத்தனமான”வரா ??? … திரு.ஜெயசங்கர்….

……………………………………

……………………….

………………………

……………………

சில சமயங்களில், சிலரைப்பற்றி வர்ணிப்பது புரிந்துகொள்ள
முடியாமல் போகும்.

சுதந்திர இந்தியாவில் “வெளியுறவுத் துறை” அமைச்சராக பொறுப்பு
வகித்த பலரில், சிலர் மட்டுமே இன்றும் நினைவில் வைத்துக்
கொள்ளப்படுகிறார்கள்; பேசப்படுகிறார்கள்….

அத்தகைய சிலரில் ஒருவராக இடம் பெறுகிறார் நமது தற்போதைய
வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.ஜெயசங்கர்.

  • வெளித்தோற்றம், நடையுடை, முகபாவங்கள், பேச்சு,
    ஆகியவற்றை வைத்து அவரை புரிந்துகொள்வது மிகவும் சிரமம்.
    “பார்த்தால் பசு, பாய்ந்தால் புலி” என்று சொன்னால் சிலர் நம்பக்கூட மாட்டார்கள்…

நான் கீழே எழுதும் சில செய்திகளை வைத்து, அவரை ஓரளவு
புரிந்துகொள்ளலாம்…. ஆனால், முழுவதுமாக அல்ல…. அது கடினம் ….!!!

…………………..

திரு.சுப்ரமணியம் ஜெயசங்கர் – ( 9 January 1955)-
-தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பவர் –
-தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர்.

தந்தை திரு.சுப்ரமணியம் அவர்கள் மத்திய அரசில்
சிவில் சர்வீஸ் அதிகாரியாக பணிபுரிந்தவர்.
தாய் – திருமதி சுலோசனா சுப்ரமணியம்.

டெல்லியிலேயே பிறந்து வளர்ந்து -படித்தவர்….
B.Sc.(Chemistry),
M.A.Political Science,
M.Phil. and PhD in International Relations
from Jawaharlal Nehru University (JNU),
specialised in nuclear diplomacy.

  • என்று அனைத்து படிப்புகளும் டெல்லியிலேயே…

ஜெயசங்கர் – 7 மொழிகளில் சரளமாக இயங்கக்கூடியவர்…
English, Tamil, Hindi, Russian,
conversational Japanese, Chinese and
some Hungarian.

  • இந்திய வெளியுறவுத்துறையில் (Indian Foreign Service
  • 1977-ல் தேர்ந்தெடுக்கப்பட்டு இணைந்தார்.

பின்னர், 1977-லிருந்து தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளில்,
பல்வேறு பதவிகளில் பணி…
கடைசியாக, 2018-ல் வெளியுறவுத்துறை செயலாளராக
பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஓய்வு பெற்றார்.

குறைந்த இடைவெளிக்குள்ளேயே – மே, 2019-ல்,
மோடிஜியின் புதிய அமைச்சரவையில் வெளியுறவுத்துறை
அமைச்சராக பதவி ஏற்றார்…

இவரை, குறிப்பாக தேர்ந்தெடுத்து வெளியுறவுத்துறை
அமைச்சராக்கியது – பிரதமர் மோடிஜி ஆற்றிய
மிகச் சிறந்த பணிகளில் ஒன்று.


அன்று முதல் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக
மிகச்சிறப்பாக பணியாற்றி வருகிறார் ஜெயசங்கர்.
உலக அரங்கில் இந்தியாவின்பெருமையை உயரச்செய்ததில்
இவருக்கும் பெரிய பங்கு உண்டு.

கடந்த ஆண்டு, ரஷ்யா-உக்ரேனிய போர் துவங்கிய சமயத்தில்,
உலகின் மற்ற நாடுகள் எடுத்த நிலையைப்பற்றி கவலைப்படாமல் –
இந்தியா தனக்கேற்ற, பாதையை தேர்ந்தெடுத்தது.
எரிச்சலோடு பார்த்த மற்ற நாடுகள் இந்தியாவின் மீது கொள்கை
தாக்குதல்களை தொடுக்கத் துவங்கின.

மேற்கத்திய மீடியாவை, தைரியமாகவும், தன்னம்பிக்கையோடும்
எதிர்கொண்ட ஜெயசங்கர் – தன் அற்புதமான, புத்திசாலித்தனமான,
தேர்ந்தெடுக்கப்பட்ட – வார்த்தைகளால், எதிர்கொண்டார்….
சில மாதங்களுக்குள்ளாகவே விழித்துக்கொண்ட மற்ற நாடுகள்
தன்னம்பிக்கை மிக்க, சுயசார்புடைய இந்தியாவை புரிந்து கொண்டன.

இவரை இன்னும் புரிய வைக்க, இரண்டு தகவல்களை இங்கே
தர விரும்புகிறேன்….

சாதாரணமாக இந்தியர் எவரையும், அமெரிக்கர்கள், அதுவும்
உயர்பதவிகளில் உள்ளவர்கள் வெளிப்படையாக புகழும் வழக்கமில்லை.
அந்த கௌரவத்தை அவ்வளவு சுலபமாக அவர்கள் யாருக்கும்
கொடுத்து விட மாட்டார்கள்.

ஆனால், அமெரிக்காவின் மிக முக்கியமான இரண்டு பதவிகளை
வகித்து விட்டு, ஓய்வு பெற்றிருக்கும் ஒருவர் ஜெயசங்கரைபற்றி
கூறி இருக்கும் கருத்துகள், ஜெயசங்கருக்கு மட்டுமல்ல –
இந்தியர்களாக நம் அனைவருக்குமே பெருமையும், மகிழ்ச்சியும்
தருபவை ….

……………………………………………………………………………….…

” மைக் பாம்பியோ ” அண்மையில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார்…


யார் இந்த மைக் பாம்பியோ….?

2017-18 -ல் அமெரிக்காவின் உளவுத்துறையான சிஐஏ தலைவராக
இருந்தவர் மைக் பாம்பியோ. முதலில், சிஐஏ தலைவராக இருந்த அவர்
2018 முதல் 2021 வரை அமெரிக்காவின் வெளியுறவுத்துறை
மந்திரியாக செயல்பட்டார்.

இந்த புத்தகத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து எழுதி இருக்கும்
அவர் இந்தியா உள்பட பலநாடுகள், நாடுகளின் தலைவர்கள் குறித்தும்
அவர் சில பக்கங்களில் குறிப்பிட்டுள்ளார்.


அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியாக தான் இருந்த காலகட்டத்தில்
இந்திய வெளியுறவுத்துறை மந்திரிகளுடான உறவு குறித்தும்
மைக் பாம்பியோ தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

2019-ம் ஆண்டு சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் மறைவிற்குப் பிறகு,
ஜெய் சங்கர் இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார். மைக் பாம்பியோ கூறியிருப்பது –
இந்திய தரப்பை பொறுத்தவரை எனது உண்மையான எதிர்தரப்பான
இந்திய வெளியுறவுத்துறை கொள்கை அணியில் இடம்பெற்றுள்ள
மிகவும் முக்கிய நபர் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுப்ரமணியம் ஜெய்சங்கர். இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறை மந்திரியாக
நாங்கள் ‘ஜெ’ வை (ஜெய்சங்கர்) வரவேற்றோம். அவரை விட சிறந்த
எதிர்தரப்பு வெளியுறவுத்துறை மந்திரியை நான் கேட்டிருக்க முடியாது.
நான் அவரை மிகவும் நேசித்தேன். அவர் பேசும் 7 மொழிகளில்
ஆங்கிலமும் ஒன்று. அவரது ஆங்கிலம் என்னை விட சிறப்பாக இருந்தது.

ஜெய்சங்கர் தொழில்முறை கொண்ட, பகுத்தறிவானவர்.
தனது நாட்டையும், தனது தலைவரையும் பாதுகாக்கும் மிகவும் ” மூர்க்கத்தனமான பாதுகாவலர்” ஜெய்சங்கர் ‘ என்று கூறுகிறார்.

……………………………………………………………


அடுத்தது மிகவும் பரபரப்பான ஒரு தகவல்…
இதுவரை நாம் கேள்விப்பட்டிராதது –

பாலக்கோட் தாக்குதலுக்கு பின் இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல்
நடத்த பாகிஸ்தான் தயாரானதாக அமெரிக்க முன்னாள்
வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ தனது புத்தகத்தில்
கூறுகிறார். 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின்
புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் பயணித்த வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.

வெடிபொருட்கள் நிரப்பிய வாகனத்தை கொண்டு பாதுகாப்பு படையினர் பயணித்த வாகனத்தில் மோதிய பயங்கரவாதிகளின் தற்கொலைப்
படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர்
40 பேர் வீரமரணம் அடைந்தனர். பாகிஸ்தானில் செயல்பட்டு வரும்
ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பிப்ரவரி 26-ம் தேதி பாகிஸ்தானுக்குள்
புகுந்து இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது.
கைபர் பக்துவா மாகாணத்தில் உள்ள பாலக்கோட் பகுதியில் இருந்த பயங்கரவாத குழுக்களின் முகாம்களை குறிவைத்து இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து
இருநாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்தது.

பாலக்கோட் தாக்குதலுக்கு பின் இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல்
நடத்த பாகிஸ்தான் தயாரானதாக அமெரிக்க முன்னாள்
வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ கூறியுள்ளார்…

மைக் பாம்பியோ தனது புத்தகத்தில் கூறியுள்ளதாவது:-
2019 பிப்ரவரி மாதம் இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத மோதலுக்கு
எவ்வளவு அருகில் சென்றது என்று உலகம் அறிந்திருக்காது என்று
நான் நினைக்கிறேன். உண்மை என்னவென்றால் எனக்கும்
உண்மையான பதில் தெரியவில்லை. அணு ஆயுத மோதலுக்கு
மிகவும் அருகில் சென்றுவிட்டது என்றே நான் நினைக்கிறேன்.

வடகொரியாவுடன் அணு ஆயுத சமரசம் குறித்த பேச்சுவார்த்தை கூட்டம் ஹனோயில் நடைபெற்ற அந்த இரவை நான் மறக்கமாட்டேன். நீண்டகால வடக்கு எல்லையான காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இந்தியாவும் – பாகிஸ்தானும் ஒருவருக்கு ஒருவர் எச்சரிக்கை விடுத்துக்கொண்டிருந்தனர். பாகிஸ்தானின் தாராளவாத பயங்கரவாத எதிர்ப்பு கொள்கைகளால் இஸ்லாமிய பயங்கரவாதகுழு நடத்திய தாக்குதலில் இந்திய பாதுகாப்பு படையினர் 40 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது.

இந்த மோதலின்போது விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தானியர்கள் இந்திய விமானியை கைதியாக பிடித்தனர். ஹனோயில் தூங்கிக்கொண்டிருந்தபோது இந்திய தரப்பின் அழைப்பால் –
(அந்த காலகட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளராக
ஜெய்சங்க்ரும் , அமைச்சராக சுஷ்மா ஸ்வராஜும் பணியாற்றிக்
கொண்டிருந்தனர்….)
-விழித்துக்கொண்டேன். இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தயாராகி வருவதாக நம்புகிறோம் என்று அவர் என்னிடம் கூறினார். இந்தியாவும் பதிலடி கொடுக்க தயாராகி வருவதாக கூறினார்.

நீங்கள் எதுவும் செய்யாதீர்கள்…
எங்களுக்கு சில நிமிடங்கள் கொடுங்கள்- பிரச்சினையை தீர்ப்போம்
என்று நான் வேண்டிக்கொண்டேன். உடனடியாக அப்போதைய
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனுடன்
இணைந்து நான் எங்கள் ஓட்டலில் தொலைதொடர்பு வசதிகள் கொண்ட
சிறிய அறையில் வேலையை தொடங்கினோம். உடனடியாக நான்
பல முறை பேசியுள்ள அப்போதைய பாகிஸ்தான் ராணுவ தளபதி
ஜாவித் பாஜ்வாவை தொடர்பு கொண்டு இந்தியா கூறியது குறித்து
அவரிடம் கூறினேன். அதற்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி பாஜ்வா,
அணு ஆயுத தாக்குதல் நடத்த தயாராவதாக இந்தியா கூறுவதில்
உண்மை இல்லை. ஆனால், ஒருவர் எதிர்பார்ப்பது போல்,
அணு ஆயுதங்களை நிலைநிறுத்த இந்தியா தயாராகி வருவதாக
அவர் நம்பினார்.

அணு ஆயுத போருக்கு தயாராக வேண்டாம் என்று இரு நாடுகளையும் சமாதானப்படுத்த எங்களுக்கு சில மணி நேரங்கள் ஆனது.
புது டெல்லி, இஸ்லாமாபாத்தில் உள்ள எங்கள் குழுவினர் சிறப்பாக செயல்பட்டனர். கொடூரமான விளைவுகள் ஏற்படுவதை தடுக்க
அந்த இரவு நாங்கள் செய்ததை வேறு எந்த நாடும்
செய்திருக்க முடியாது’ என்று சொல்லி இருக்கிறார்.

  • வெளியுலகிற்கு தெரியாத, அரிய திருப்பங்கள் கூடிய இந்த
    சம்பவங்களைப் படிப்பதற்கே இவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறது என்றால்,
    அந்த சம்பவங்களில், நேரடியாக ஈடுபட்டு சாகசமாக
    செயல்பட்டவர்களின் அனுபவம் எவ்வளவு அற்புதமாக இருந்திருக்கும் …..!!!!

திரு.ஜெய்சங்கர், இந்தியாவுக்கு கிடைத்துள்ள இன்னொரு
அரிய சொத்து.

லேட்டஸ்டாக, துருக்கியிலும் சிரியாவிலும் பூகம்பங்களால்
ஏற்பட்டுள்ள பேரழிவிலிருந்து மக்களை மீட்கும் முயற்சிகளில்
இந்தியாவும் இணைந்து கொண்டிருக்கிறது.
“ஆபரேஷன் தோஸ்த்” (தோஸ்த் என்கிற சொல் துருக்கியிலும்
ஹிந்தியிலும் ஒரே பொருளைத்தரும் …”தோழன்” …) என்று
பெயரிடப்பட்டுள்ள இந்த உதவி ஆபரேஷனை துருக்கியும், சிரியாவும், மனமாற பாராட்டி வரவேற்றுள்ளன.

துருக்கி மொழி தெரிந்த 2 வெளியுறவுத்துறை அதிகாரிகளும்,
இந்திய ராணுவத்தைச் சேர்ந்த அனுபவமுள்ள மருத்துவர்கள்,
செவிலியர்கள், பணியாளர்கள் என்று பலருடன், 4 மோப்ப நாய்களும்
(இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை கண்டுபிடிக்க) என்று
பலரை தொடர்ச்சியாக 4 சரக்கு விமானங்கள் மூலம் இந்தியா
அனுப்பிக் கொண்டே இருக்கிறது. துருக்கியில் உள்ள இந்திய
தூதரக அதிகாரிகளும் – இவர்களை துருக்கிய, மற்றும் சர்வதேச
உதவி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற உதவுகின்றனர்.

உதவிப்பணி தொடரட்டும்.
உலகெங்கும் நமக்கு நிறைய “தோஸ்து”கள் உருவாகட்டும்….!!!

.
………………………………………………………………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to “மூர்க்கத்தனமான”வரா ??? … திரு.ஜெயசங்கர்….

  1. ஆதிரையன் சொல்கிறார்:

    இவரின் ஆங்கில பேட்டிகளை நான் கண்டிருக்கிறேன்.உண்மையில் மயிர் கூச்செரியும் வசனங்கள் என்றால் மிகையில்லை. ஆங்கில மீடியாக்களை புள்ளி விவரங்களால் ஓட ஓட வைத்ததை கண்டிருக்கிறேன். இவரின் பேட்டிகளை கண்ட பிறகுதான் , ஐரோப்பிய,அமெரிக்க அரசாங்கங்கள் எப்படியெல்லாம் பெட்ரோலை ரசியாவிடமிருந்தே மறைமுகமாக தங்கள் நாடுகளுக்கு பெற்றுக்கொண்டே , அதை குறைவான சதவீதம் மட்டுமே ரஸ்சியாவிடமிருந்து இறக்குமதி செய்யும் நம்மை எப்படியெல்லாம் பழி சொல்லி ஏமாற்ற பார்க்கிறார்கள் என்பதே புரியவந்தது .இவரின் அக்கறையுடன் கூடிய வெளிநாட்டு பயணங்கள் மூலம் இந்த வெளிநாட்டு மீடியாக்களின் வாயை கட்டி போட்டிருக்கிறார். இவரின் பங்களிப்பு மட்டும் இல்லையெனில் ,இந்த உக்ரைன்,ரஷ்யா பிரச்சினையில் நாம் மிகப்பெரிய பிரச்சினைகளை சந்தித்திருப்போம் என்பது மிகவும் உறுதி .நமது நாடு உலக அரங்கில் வில்லத்தனமான சித்தரிக்க பட்டிருக்கும் .

    • புதியவன் சொல்கிறார்:

      பெட்ரோலை இல்லை, Gas. ரஷ்யா கொடுக்கவில்லை என்றால் ஐரோப்பிய தேசங்களுக்கு மிகப் பெரிய பிரச்சனையாகிவிடும்.

      • bandhu சொல்கிறார்:

        வீடுகளுக்கான ஹீட்டர் பயன்படுத்த பெரும்பாலும் natural gas ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பயன்படுத்தப்படுகிறது. இது ஐரோப்பாவிற்கு விற்பது ரஷ்யா. அது இன்றுவரை தடையில்லாமல் தொடர்கிறது. gas / gasolene என்ற பெயரில் குறிப்பிடப்படுவது நாம் பெட்ரோல் என்று குறிப்பிடுவதில் மூலப்பொருள். அதை ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யத்தான் நேட்டோ நாடுகள் தடைவிதித்துள்ளன. ஆனாலும், இந்தியா மற்றும் சைனா எதிர்ப்பை கண்டுகொள்ளாமல் இன்னும் இறக்குமதி செய்துகொண்டுதான் இருக்கின்றன. இந்தியா ஒருபடி மேலே போய் , இறக்குமதி செய்து, refine செய்து ஐரோப்பிய நாடுகளுக்கு விற்கிறது!

        இந்தியா வாங்குவதை பற்றி எரிச்சலுக்கான கேள்விகேட்கும் மேற்குலக மீடியாக்களை ஜெய்ஷ்ங்கர் அடித்து நொறுக்குகிறார்! மேற்குலக மீடியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம் என்றால் மிகையே இல்லை. மிக சமீபத்தில் ஆஸ்திரிய மீடியா நிருபர் எடுத்த பேட்டி யூடியூபில் கிடைக்கிறது. அதை பார்த்தால் தெரியும். எந்த அளவு அவர் இவர்களை ஓட ஓட விரட்டுகிறார் என்று!

  2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    A sample Video –

    …………….

    ……………

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s