
……………………………………..
இப்போது வீராதி வீரர், சூராதி சூரர் என்று
சிலரால் தூக்கிப் பிடிக்கப்படும் எடப்பாடியாரின்
கதி, 2024 தேர்தலுக்குப் பிறகு எப்படி இருக்கும்…
எங்கே, எதை எண்ணிக் கொண்டிருப்பார் …???
ஓரு சூடான விவாதத்தை காண விரும்புவோருக்காக
இந்த காணொளி …
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இரண்டு
தலைவர்களின் மீது மக்களுக்கு இருந்த
அளவற்ற அன்பு,நம்பிக்கை காரணமாகவும் –
சாதாரண மக்களின் மீது அந்த
2 தலைவர்களுக்கும் இருந்த நிஜமான அக்கறை,
அதை அவர்கள் செயலில் காட்டிய விதம்
காரணமாகவே அதிமுக தமிழ்நாட்டின்
மிகப்பெரிய கட்சியாக வளர்ந்தது..இருந்தது..
இன்று அதிமுகவுக்கும், இரட்டை இலைக்கும்
சொந்தம் கொண்டாடும் எவரையுமே மக்கள்
–எலும்புத் துண்டுக்காக சண்டை
போட்டுக்கொள்ளும் தெரு நாய்களுக்கு
சமமாகவே பொது மக்கள் நினைக்கிறார்கள்..
எனவே, இரட்டை இலை யாருக்கும் கிடைக்காமல்
போவதே இயற்கை செய்யும் நியாயமாக
இருக்கும்.
.
……………………..
………………………………………………………………………………………………………………
//2024 தேர்தலுக்குப் பிறகு எப்படி இருக்கும்… எங்கே, எதை எண்ணிக் கொண்டிருப்பார் // இதெல்லாம் ஒரு கட்சியின் மீதான காழ்ப்புணர்வினால் வருகிறது என்றே நினைக்கிறேன். ஒரு காலத்தில் ஜெ 20 சதம், ஜானகி 8 சதம் என்று வாங்கி, ஜெ தான் எம்.ஜி.ஆரின் வாரிசு என்று நிரூபித்தார். அதுபோலவே எடப்பாடியும் நிரூபிப்பார். அதனை உடைக்க, எடப்பாடி கவுண்டர், ஓபிஎஸ் முக்குலத்தோர் என்று ஓபிஎஸ் கும்பல் ஜாதியைத் தூக்கிப் பிடித்து அதிமுகவை அழிக்கப் பார்க்கிறது. எடப்பாடி, அதிமுக தொண்டர்களால் ஒத்துக்கொள்ளப்பட்ட தலைவர் என்றே நான் நம்புகிறேன்.
/எலும்புத் துண்டுக்காக சண்டை போட்டுக்கொள்ளும் தெரு நாய்களுக்கு சமமாகவே// – இது தவறான கருத்து. தன் கட்சியைக் காப்பாற்றவேண்டிய கடமை எடப்பாடி மற்றும் பல தலைவர்களுக்கு இருக்கிறது. ஓபிஎஸ், கட்சியை பாஜகவிடமும் திமுகவிடமும் அடகுவைக்கப் பார்க்கிறார்.
இரட்டை இலை கிடைக்காமல் (ஒருவேளை), எடப்பாடி 20 சதமும், ஓபிஎஸ் 3 சதமும் வாக்கு வாங்கினால், நீங்கள் எடப்பாடிதான் அதிமுக தலைவர் என்று ஒத்துக்கொள்வீர்களா? இல்லை, இது கொங்கு பெல்ட், தேனிப் பக்கம்தான் பார்க்கவேண்டும் என்பீர்களா? தான் தலைமை வகித்தபோது, மோசமான மக்கள் விரோதக் கொள்கை எதையும் எடப்பாடி செய்ததில்லை, இடைத்தேர்தல்களில் வென்று தன் அரசியல் சாதுர்யத்தைக் காண்பித்து, அதிமுக ஆட்சியை 4 1/2 வருடங்கள் நீடிக்கச் செய்தார். Except for OPS துரோகம், எடப்பாடி கிட்டத்தட்ட வெற்றி நிலைக்கே அதிமுகவைக் கொண்டு சென்றார் (ஓபிஎஸ் ஒத்துழைப்பு இருந்திருந்தால் 3 சத வித்தியாசம் இன்னும் குறைந்திருக்கும்). In today’s situation, EPS is the ADMK Leader.
பாஜகவின் interest என்ன? இன்னும் தனித்து வளரவில்லை. இப்போது அதிமுகவின் வாக்கு வங்கி அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது. அதனால் ‘ஒன்றுபட்ட அதிமுக’ என்பதற்காகப் பாடுபடுகின்றனர். எதிர்காலத்தில் அவர்களுக்கு 20 சதம் வாக்குகள் உறுதியாகி, இதே பிரச்சனையை அதிமுக நேர்கொள்ளும்போது, அவர்கள் எடப்பாடியை ஆதரித்து, கூட்டணியாக வெற்றிபெறவே எண்ணுவார்கள். அதனால் பாஜகவின் ஆர்வத்தை நாம் வேறுவிதமாகப் பார்க்கவேண்டியதில்லை. இதைத்தான் இந்தப் பேட்டியும் உணர்த்துகிறது
ஐயா,
இந்த ஈரோடு கிழக்கு இடை தேர்தல் தமிழ் நாடு பொது தேர்தல் போல் பெரும்பாலான ஊடகங்களால் கட்டமைக்க படுகிறது.
இந்த இடை தேர்தலில் ஈ வி கே எஸ் இளங்கோவன் அவர்களை காங்கிரஸ் மற்றும் திமுக நிறுத்தியது மிக பெரிய தவறு.
திரு இளையராஜா அவர்களை சாதிய அடிப்படையில் தரக்குறைவாக பேசியதை மக்கள் மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள்.
மேலும் தற்போது திமுகவுக்கு போராத காலம். கலைஞர் கருணாநிதி பேனா சர்ச்சை, வேங்கை வயல் சார்ந்த பிரச்சினை கையாண்ட விதம் மக்களின் வெறுப்பை சம்பாதித்திருக்கிரது.
ஈபிஎஸ், ஓபிஎஸ் பிரச்சினையை விட மக்களுக்கு வாழ்வாதார பிரச்சினைகள், உதாரணமாக மது கடைகள் மூடல், பால் மின் கட்டணம் உயர்வு மற்றும் மேற்கூறிய காரணங்கள் அனைத்தும் இந்த தேர்தலில் எதிரொலிக்கும்.
மேலுள்ள காணொலி பற்றிய உங்கள் கருத்துகளை அறிய விரும்புகிறேன்.
நன்றி
போலீஸ்காரங்களைப் பற்றி ஒண்ணு சொல்வாங்க. பெரிய குற்றம் செய்தியா? பெருசா கப்பம் கட்டு என்று. மக்களும் இடைத்தேர்தலில் 5-10 எதிர்பார்ப்பார்கள் என நினைக்கிறேன். காங்கிரசுக்காக திமுக செலவு செய்யுமா? தோற்றால் பெயர் கெடுமே என்பதற்காகச் செலவழிப்பார்கள் என நினைக்கிறேன். திமுக வெல்ல நிறைய வாய்ப்புகள்.
Ilangovan should be defeated at any cost as he is not a good candidate and a liar
who has been promising gobi chetti palayam to samraj nagar (karnatka) railway line
for a very long time and as a central minister he never fulfilled any of the promises he has made .People in turn
never voted for him and he faced many defeats in the Kongu region. DMK very cleverly pushed him in this election. Two leaves symbol and present misrule of DMK
should help the aiadmk candidate to win despite the money and muscle power of
the ruling party. For this people have to thank OPS for shedding his ego and prevented the freezing of two leaves symbol. For this Edappadi should thank
annamalai for his efforts to unite the two factions. Yes this is a make or brake election
for AIADMK.
அதிமுகவிற்கு இந்தத் தேர்தல் வாழ்வா சாவா போராட்டமல்ல. மக்கள் அதிமுவின்மீது எப்படிப்பட்ட அபிமானம் வைத்துள்ளார்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.
கொங்கு பகுதியில் பல பிரச்சனைகள், திமுக எதிர்ப்பு மனநிலை இருந்தாலும், இடைத்தேர்தலில் மக்கள் அதனைக் காண்பிக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.
ஏதோ இளங்கோவன் மாத்திரம் மோசமான வேட்பாளர் என்ற எண்ணம் தோன்ற எழுதியிருக்கீங்க. இப்போ உள்ளவர்கள் எப்படி என யோசியுங்கள்.