…………………………………………….

…………………………………
உற்பத்திச் செலவு அதிகரிக்கும்போது கட்டணத்தை நிச்சயம்
உயர்த்துவார்கள்.
ஆனால், உற்பத்திச் செலவு குறைந்தால்,
கட்டணத்தைக் குறைப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும்
கிடையாது.
‘தமிழ்நாடு மின்சார வாரியம் கடும் நிதிச்சுமையில் இருக்கிறது’
என்று சொல்லி தி.மு.க அரசு கடந்த செப்டம்பர் மாதம்
மின்கட்டணத்தை உயர்த்தியது. வீடுகளுக்கான மின்கட்டணம்
12 முதல் 52 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டது. அதேநேரம்,
`வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும்’ என்றும்
அரசு கூறியது. ஆனாலும், மின்கட்டண உயர்வுக்குப் பிறகு,
வழக்கத்தைக் காட்டிலும் இரு மடங்குக்கு மேல் பில் வருவதைக்
கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள். அது தொடர்பான புகார்கள்
இன்றுவரை ஓயவில்லை.
இந்த நிலையில்தான், மின்சாரத் திருத்தச் சட்டவிதிகளை
மத்திய அரசு தற்போது மாற்றியிருக்கிறது. மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான செலவு மற்றும் கொள்முதல் விலை ஆகியவற்றுக்கு
ஏற்றவாறு ஒவ்வொரு மாதமும் மின்கட்டணத்தை மாற்றியமைக்க
இந்தத் திருத்தம் வழிவகை செய்கிறது. மின் உற்பத்திக்குத்
தேவையான நிலக்கரி, டீசல், எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை
உயர்ந்தால், மின் உற்பத்திக்கான செலவு அதிகரிக்கும்.
அந்தச் செலவை நுகர்வோர் தலையில் கட்டிவிடுவதற்கான
ஏற்பாடுதான் இது.
உற்பத்திச் செலவு அதிகரிக்கும்போது கட்டணத்தை நிச்சயம் உயர்த்துவார்கள். ஆனால், உற்பத்திச் செலவு குறைந்தால்,
கட்டணத்தைக் குறைப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும்
கிடையாது. இதற்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வே சிறந்த
உதாரணம் ….
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது
பெட்ரோல், டீசல் விலை தானாகவே அதிகரிக்கும். ஆனால்,
கச்சா எண்ணெய் விலை குறையும்போது பெட்ரோல், டீசல் விலை குறைவதில்லை. அது பற்றிய கேள்விகளுக்கு, பிரதமர் தொடங்கி ஆட்சியாளர்கள் யாரும் பதிலே சொல்வதில்லை. இனிமேல்,
மின்கட்டணத்திலும் அதுதான் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
“மாதம்தோறும் மின்கட்டணத்தை மாற்றலாம் என்று கொண்டு
வந்திருக்கும் திருத்தம் மிகவும் ஆபத்தானது. இது பொதுமக்களைக்
கடுமையாக பாதிக்கும்” என்று எச்சரிக்கிறார் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினரான நாகல்சாமி.
“குறுகியகால, நீண்டகால அடிப்படையில் ‘பவர் பர்ச்சேஸ்’
ஒப்பந்தங்கள் மூலம் வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்கப்படுகிறது. ஒப்பந்தத்தில் என்ன விலை குறிப்பிடப்படுகிறதோ, அதில் கடைசிவரை
எந்த மாற்றமும் இருக்காது என்பதுதான் இன்றுவரையிலான நடைமுறை.
அதில்தான் மத்திய அரசு இப்போது மாற்றம் கொண்டுவந்திருக்கிறது.
மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி, டீசல், எரிவாயு
போன்றவற்றின் விலை உயர்ந்தாலோ, குறைந்தாலோ, அதற்கு ஏற்ப
ஒவ்வொரு மாதமும் மின்கட்டணத்தை மாற்றலாம் என்று விதியைத் திருத்தியிருக்கிறார்கள்.
தற்போதைய நடைமுறைப்படி, மின்கட்டணத்தை உயர்த்த வேண்டு
மென்றால், ‘மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின்’
ஒப்புதலைப் பெற வேண்டும். பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு
கூட்டங்களை நடத்தி, ஆணையம் ஒப்புதல் வழங்கும். இனிமேல்,
மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமலேயே, ஒவ்வொரு மாதமும் மின்கட்டணத்தை மாற்றிக்கொள்ளலாம்
என்பதுதான் மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் திருத்தம்.
மின்சார உற்பத்திக்கான செலவு மற்றும் கொள்முதல் விலை
ஆகியவற்றின் அடிப்படையில் ‘ஆட்டோமேட்டிக்’-ஆக ஒவ்வொரு
மாதமும் மின்கட்டணம் மாறும் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், பொதுமக்களை அது கடுமையாக பாதிக்கும். ஆனால், இதைப்
பயன்படுத்தி, மின் உற்பத்தி நிறுவனங்கள் கொள்ளை லாபம்
ஈட்டும் சூழல் உருவாகும்” என்கிறார் நாகல்சாமி.
இந்தப் பிரச்னை குறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் சரவணனிடம் கேட்டதற்கு, “மின்சாரத் திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோதே, அதை தி.மு.க
கடுமையாக எதிர்த்தது. தற்போதும், விதிகள் திருத்தத்தை தமிழ்நாடு
அரசு ஏற்காது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியாகச் சொல்லியிருக்கிறார். ஏற்கெனவே மின்கட்டணம் உயர்ந்ததற்கு
மத்திய அரசுதான் காரணம்” என்கிறார் அவர்.
‘மின்சாரத் திருத்தச் சட்ட விதிகள் 2022’-ஐ அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டுவிட்டதால், மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட
இது நடைமுறைக்கு வந்துவிடும் என்று சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அப்படியென்றால், இரண்டு ‘ஆட்டோமேட்டிக் மின்கட்டண உயர்வு’
மூலம் தமிழ்நாடு மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
ஒன்று, மத்திய அரசின்சட்டத் திருத்தம் மூலமாக ஏற்படும் ஆட்டோ மேட்டிக் மின்கட்டண உயர்வு.
மற்றொன்று, தமிழ்நாடு அரசின் மூலம் ஏற்படப்போகும்
ஆட்டோமேட்டிக் மின்கட்டண உயர்வு.
அதாவது, தமிழ்நாட்டில் கடந்த
ஆண்டு மின்கட்டண உயர்வுக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது,
‘ஒவ்வோர் ஆண்டும் ஆறு சதவிகித மின்கட்டணம்
ஆட்டோமேட்டிக்- ஆக உயரும்’ என்ற அம்சம் அந்த உத்தரவில் சேர்க்கப்பட்டது. அதன்படி, எந்த உத்தரவும் இல்லாமல் தமிழ்நாட்டில்
ஒவ்வோர் ஆண்டும் ஆறு சதவிகிதம் மின் கட்டணம் உயரும்
என்கிறார்கள் மின்வாரிய அதிகாரிகள்.
இப்படி ஒரு விதி இருப்பது
குறித்து எந்த மீடியாவிலாவது செய்தி வந்ததா…? யாராவது
இது குறித்து விவாதித்தார்களா …?
அரசுக்கு எதிரான விஷயமாயிற்றே….
கூலியையும் பெற்றுக்கொண்டாயிற்றே …
முதலாளிகளுக்கு எதிராக எந்த மீடியா பேச முடியும்…..?
அடி மேல் அடி பலமாக – தொடர்ந்து விழுகிறது….
மாநில அரசை கேட்டால், மத்திய அரசை கைகாட்டுகிறார்கள்….
மத்திய அரசை கேட்டால், மாநில அரசைக் கேள் என்கிறார்கள்.
அடிப்பது யார் என்று கூட தெரியாமல்
அழவேண்டிய துர்பாக்கியம் – மக்களுக்கு …..!!!
.
……………………………………………….
அரசு மக்களுக்கு உதவணும் சலுகை தரணும்.. உண்மைதான்.
ஹோட்டல்களில் இட்லி உற்பத்திச் செலவு 8 ரூபாய்னா 50ரூ விற்கலாம்த, அரசு மாத்திரம் 1ரூக்கு தரணும் என்ற எதிர்பார்ப்பு சரியா? தரமற்ற நிலக்கரி வாங்குவது, ஊழலுக்கு எதிரா போராடுவது சரி. ஆனால் யூனிட் மின்சாரம் 10ரூ உற்பத்தி செலவு 5ரூக்கு விற்கணும்னு சொல்வது நியாயமா?
புதியவன்,
உங்கள் வாதம் நியாயமானதாக எனக்குத்
தெரியவில்லை.
இட்லி விற்க நிறைய ஓட்டல்கள் இருக்கின்றன.
இடத்திற்கு தகுந்தாற்போல், வசதிக்கு தகுந்தாற்போல்,
வாங்குவதற்கு நிறைய சாய்ஸ் இருக்கிறது.
ஒரு இட்லி 3 ரூபாய்க்கு விற்கும் கடையைக்கூட
நான் உங்களுக்கு காட்ட முடியும்,
ஆனால், மின்சாரம் அப்படியல்ல. அரசு மட்டும் தான்
மின்சப்ளை செய்கிறது.
மேலும் நான் சொல்ல வந்த கருத்தை நீங்கள்
உள்வாங்கிக்கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.
நான் சொல்வது மக்களை ஏமாற்றும் அரசுகளின்
போக்கைப் பற்றி.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
நீங்கள் சொல்வது சரி. ஆனால் அரசுகள் குறுகிய கால வாக்குகளுக்காக, அரசு அலுவலர் சம்பளத்தை வானளாவ உயர்த்துவது, மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு எதிராகப் போராடி, நுகர்வை மிக அதிகமாக்கி, வாக்குகளுக்காகவும் பல்லாயிரம் கோடிகள் சுருட்டவும் செய்து மின்சார வாரியத்தை நலிவுறச் செய்கிறது. நஷ்டத்தை ஈடுகட்ட மின்சார விலையை மறைமுகமாக ஏற்றுகிறது. This will slowly lead to private electricity supply by private firms
காமை சார். இது கேள்வி பதில் பகுதியில் எழுதவேண்டிய ஒன்று.
மின்சார வாரியம் லாபநோக்கில் செயல்பட வேண்டுமா? குறைந்த பட்சம், அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலைக்கு விற்கவேண்டுமா?
என்னை பொறுத்தவரை, அடிப்படை வசதிகளில் ஒன்றான மின்சாரம் அனைவருக்கும் வழங்கப்படவேண்டும். ஒரு மலை கிராமத்தில், பத்து வீடுகள் மட்டுமே இருக்கின்றன என்றால், அவைகளுக்கு மின்சாரம் எந்த விலைக்கு கொடுக்கவேண்டும்? அதற்கான செலவு என்பதில் அந்த இணைப்புகளுக்கு பராமரிப்பு செலவு எல்லாம் சேர்த்து பார்த்தால் ஒரு யூனிட்டுக்கு 50 ரூபாய் ஆகலாம். அப்போது அவர்களுக்கு மட்டும் அதிக விலைக்கு விற்கவேண்டுமா? தனியார் மயமாகிவிட்டால் அவர்களுக்கு மின்சாரம் எல்லோருக்கும் கிடைக்கும் விலைக்கு கொடுக்குமா?
அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது அரசின் கடமை. அது மட்டுமே அரசின் கடமை. ஊழலை ஒழித்தால் வரும் வரி வருமானம் கண்டிப்பாக அதற்க்கு போதும்.
அப்படியா நடக்கிறது அரசு? எங்கும் ஊழல். எதிலும் ஊழல் என்று அடிப்படை வசதி கொடுக்கவேண்டிய நிறுவனங்கள் ஊதாரித்தனமாக செலவு செய்கிறது. ஆட்சியை பிடிக்கவேண்டி ஆளுக்கு ஆள் கொடுக்கும் இலவச பொருட்கள். பொருட்கள் கொடுக்கும் இவர்கள், அந்த பொருட்களை அவர்களே வாங்கும் நிலைக்கு மக்களை உயர்த்தவேண்டாமா? மக்களும் சரி. இலவசமாக கிடைக்கிறது என்றால் எதற்கு விடுவானே என்ற மனப்பான்மை!
இப்படியெல்லாம் காசை அளித்துவிட்டு, காசு வருகிறது என்பதற்காக அரசே சாராயக்கடை நடத்துகிறது. அடுத்து என்ன? அரசு கஞ்சா நிறுவனம் அமைப்பதா? டாஸ்மாக் ஆண்டு வருமானம் 36,000 கோடி. அகநி (சுத்த தமிழ் மாதிரி வேறு இருக்கிறது! அரசு கஞ்சா நிறுவனம்) மூலம் ஒரு 25,000 கோடி வருமானம் வரும் என்றால் அரசு அதை செய்யாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
அரசு எப்படி நடத்த வேண்டும் என்று காட்டியது கடைசியாக காமராஜர் மட்டுமே! மற்றவர் எல்லாம் கட்சியையும், தன்னையும், தன் குடும்பத்தினரையும் வளர்க்கவே அரசு நடத்தினார்கள். இதில் ஜெ கொஞ்சம் வித்யாசம். முடிந்தவரை மக்களை நேரடியாக பாதிக்காமல் (முதல் டேர்ம் தவிர்த்து) அரசு நடத்தினார். இருந்தாலும், அரசின் கடமை எது என்ற அடிப்படையில் இருந்து விலகியே இருந்தார்!
கருணாநிதி ஆட்சியெல்லாம், ‘தேனை நக்குபவன் புறங்கையை நக்கமாட்டானா’ என்பதில் இருந்து ‘தேனை நான் நக்குகிறேன். அதன் பின், என் புறங்கையை மக்கள் நக்கிக்கொள்ளலாம்’ என்ற வகைக்கு மாறியது!