அடுத்த பிரதமராக நிதின் கட்கரி …???

……………………………..

……………………….

கீழே ஒரு செய்திக் காணொளி –

…………………..

…………………..

மத்திய அமைச்சர்களில் மிகவும் வித்தியாசமானவர்
திரு.நிதின் கட்கரி…. (மஹாராஷ்டிராவை சேர்ந்தவர்)

மத்திய தரைவழிபோக்குவரத்துத் துறை –


இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக – அற்புதமான,
உலகத்தரம் வாய்ந்த சாலைகள் தொடர்ந்து உருவாகி
பயன்பாட்டிற்கு வந்துகொண்டிருக்கின்றன…
அதற்கான ஒரு சான்று தான் மேலேயுள்ள காணொளி.

சரியான திட்டமிடல்,
குறித்த நேரத்தில் துவக்கி,
குறித்த காலத்திற்குள்ளாகவே ப்ராஜக்டுகளை
முடிப்பது என்பது- இவரது ஸ்பெஷாலிடி…

ஊழல், லஞ்சம் என்று இதுவரை எந்த வித புகாரிலும்
இவர் பெயர் அடிபட்டதில்லை.
கலகலப்பான மனிதர்…
எப்போதும் சிரித்த முகம்…
எந்தவித “பந்தா” வும் கிடையாது.
யாரிடமும் சண்டை, சச்சரவு கிடையாது…
ஜாதி, மதம், மொழி – எதுவும் இவர் வழியில் குறுக்கிடுவதில்லை.


( நான் இரண்டு முறை, சுமார் அரை மணி நேரம் மிக அருகிலிருந்து
இவர், மற்றவர்களுடன் பழகும் முறையை கவனித்திருக்கிறேன்…)

எந்த மாநில முதலமைச்சர் உரிய திட்டங்களுடன் கேட்டாலும்,
உடனே ஏற்று செயல்படுகிறார். இவர் மூலம், தமிழகத்திற்கும் நிறைய
நெடுஞ்சாலை வசதிகள் கிடைத்திருக்கின்றன.

அனைத்து கட்சியினருடனும் இவருக்கு நல்ல உறவு உண்டு.

இவர், இந்தியாவின் பிரதமர் ஆனால், இப்போது நாம்
சந்தித்துக்கொண்டிருக்கும் பல – ஜாதி, மத, இன – மோதல்கள் –
நிச்சயம் குறையுமென்று நம்பலாம்.

இன்றைய அரசியலில், நம்பிக்கை தரும் ஒரு மனிதர்….!!!

மோடிஜி ரிடையர் ஆகும்போது
(75 வயதில்) அவர் இடத்திற்கு வர கட்கரிஜி பொருத்தமானவராக இருப்பார்.

.
……………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to அடுத்த பிரதமராக நிதின் கட்கரி …???

 1. Ganapathi Subramanian சொல்கிறார்:

  One of the most capable and efficient minister in Modi Cabinet. During late 90s ,he was PWD minister in Maharashtra and built 50 flyovers in Mumbai and the first expressway in India – Mumbai Pune expressway – was also built only during his tenure,if I am not wrong. . During his presidency BJP grew a lot . Ofcourse, corruption charges were/ are there on him. No doubt he is surely a PM material. But I think BJP may not project him/ consider him
  The mantle might go to Yogi.

 2. புதியவன் சொல்கிறார்:

  என்னன்னவோ முயற்சித்து கடைசியில் பாஜக வை ஆட்சியிலிருந்து இறக்க வழி கண்டுபிடித்து விட்டீர்கள். மோடிக்கு அடுத்து யோகி…… ஒரு நாள் அண்ணாமலை.

  கட்கிரிக்கு வாய்ப்பு நஹீ

 3. tamilmani சொல்கிறார்:

  நிதின் கட்கரி திறமை ஆனவர் சந்தேகமில்லை. அனால் அவர் உடல்நிலை
  மோடி போல அவ்வளவு சிறப்பாக இல்லை. சக்கரை நோய் உள்ளவர். அடிக்கடி மயங்கி விழுபவர்.
  வெளிநாட்டு பயணங்கள் செய்பவர் அல்ல. மீண்டும் மோடி அல்லது யோகி என்பது என்னுடைய
  கணிப்பு .

 4. bandhu சொல்கிறார்:

  என் நெருங்கின உறவினர் நிதின் கட்காரி தலைமை வகித்த ஒரு ட்ரான்ஸ்போர்ட்டேஷன் மீட்டிங்கில் கலந்து கொண்டார். பல துறைகளின் நிபுணர்கள் தங்கள் தொழில் நுட்பங்களை விளக்கும்போது அவர் கேட்ட கேள்விகள் துறை நிபுணர்களையே திணறடித்து என்று சொல்லி சொல்லி மாய்ந்தார்!

  சாலை கட்டமைப்பு இவர் கீழ் மிக வேகமாக வளர்ந்து வருவது கண்கூடு!

  பிரதமராக வருவது நல்லது. மோடியே தொடர்ந்தாலும் நல்லது!

  நாடெங்கும் மதக்கலவரங்கள் நடப்பது போல மீடியாக்கள் எழுதுவது வாங்கிய காசுக்கு கூவுவது! நிலவரம் அப்படியில்லை என்று எல்லோருக்குமே தெரியும்!

 5. Arul சொல்கிறார்:

  There is always have a second option on NITIN KATKARI as a PM by RSS. From, last election itself they have the plan. If under MODI, BJP will not get he majority, Nitin is their choice who maintain good relationship with the opposite parties and easily get their support. But Narendra Modi got the majority. So the plan stopped. 2024 if BJP did not get the majority, then again it will go to NITIN. RSS is waiting for that, now Narendra Modi and Amit shah is more than their PARTY which they won’t like..

 6. Raghuraman சொல்கிறார்:

  Sir, it may be possible , however, I have a fear that many individual performers fail when they are elevated.
  You have Dr. MMS and VP Singh as recent examples. Both excelled in their allotted portfolios, failed when they were given charge.
  Regards

 7. ஆதிரையன் சொல்கிறார்:

  ///
  இவர், இந்தியாவின் பிரதமர் ஆனால், இப்போது நாம்
  சந்தித்துக்கொண்டிருக்கும் பல – ஜாதி, மத, இன – மோதல்கள் –
  நிச்சயம் குறையுமென்று நம்பலாம்
  ////

  இதன் அர்த்தம் தான் எனக்கும் புரியவில்லை.அப்படி பிஜேபி எங்கு தான் மத மோதல்களை விளைவித்தது. அபாண்டமான மேலோட்டமான குற்றசாட்டு . இங்கு ஹிந்துக்களை புண்படுத்துபவர்களெல்லாம் அதற்க்கு காரணம் இல்லையா…ஹிந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளை இழிவு படுத்தி, வேற்றுமை படுத்தி பார்க்கும் அரசியல் வாதிகள் இந்த மத மோதல்களுக்கு காரணம் இல்லையா….மீடியாக்களின் பொறுப்பற்ற போக்கு தான் இது போன்ற கலவரங்களுக்கு முழுக்க முழுக்க காரணம்.நீங்கள் நினைப்பது போல் பிஜேபி அல்ல.மீடியாக்கள் கொடுக்கும் விபரீதமான தலைப்பு செய்திகள் தான் பல கலவரங்களை தூண்டியிருக்கின்றன. குஜராத் கலவரம்,நூபுர் ஷர்மா விவகாரம் etc etc ..
  பிஜேபி ஆட்சியில் விளைந்த அந்த மத மோதல்கள் தான் என்ன …கண்ணை மூடிக்கொண்டு ஏன் இவ்வளவு அநியாய குற்றசாட்டு…மக்கள் கடைசியில் எவ்வாறெல்லாம் நம்ப வைக்க பட்டிருக்கிறார்கள் ….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s