…………………………..

…………………………………………

……………………..
வாசக நண்பர் – லோகநாதன் செங்குட்டுவன் – கேள்வி –
மத்திய வங்கியின் எணணியல் நாணயம் ( Central Bank Digital Currency, CBDC) பற்றிய உங்கள் கருத்து மற்றும் அதன் சாதக பாதக அம்சங்கள் குறித்து உங்கள் பார்வை அறிய விரும்புகிறேன்.
ஜூனியர் பதில் –
இது மற்றவர்களிடமிருந்து வேறுபட்டிருக்கலாம்…
ஆனால், இவையே என் பார்வை.
இதனால் யாருக்கு பயன்…..???
இந்தியாவில் டிசம்பர் 2022 முதல் ரிசர்வ் வங்கியால்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஈ-ருபீ என்கிற டிஜிடல் கரென்சியால்,
முக்கியமாக பயன் பெறுவது ரிசர்வ் வங்கி மட்டுமே…!!!
ரூபாய் நோட்டுகளை அச்சிடும் வேலை மிச்சமாகிறதே…!!!
ஏற்கெனவே ஏகப்பட்ட டிஜிடல் பணப்பரிமாற்றங்களுக்கான
வழிகள் நிறைய இருக்கும்போது – இதற்கான புதிய தேவை என்ன…?
பொதுமக்களுக்கோ, வர்த்தகர்களுக்கோ – புதிதாக
எந்தவித லாபமும் இல்லை; மாறாக தொந்திரவுகள் நிறைய
உண்டு என்பதே என் கருத்து.
- முதல் விஷயம், இது ரூபாய்க்கு மாற்றானதல்ல.
ரூபாய் மதிப்பிலேயே தான் இதுவும் வெளியிடப்படுகிறது.
-இதை அதிகாரபூர்வமாக வங்கிகள் மூலமே பெற முடியும்.
-இதை மொபைல் போனில் சேமித்து வைக்க வேண்டும்.
(லேப்-டாப்’பிலும் சேமித்து வைக்கலாம்… ஆனால், லேப்டாப்பை
எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்ல, இயக்க – வசதிப்படுமா …?)
பொதுவாக மொபைல் போனில் செய்யப்படும் பணப்பரிமாற்றங்கள்
பத்திரமானவை அல்ல என்பது என் கருத்து …
நாம் மொபைலை தவற விட்டு விட்டால், ஏகப்பட்ட சிக்கல்கள்.
செலவுகளுக்கு எப்போதும் மொபைலையே நம்பியிருக்க முடியுமா…?
இதை ஸ்டோரேஜ் செய்து வைக்க வேறு
தனியாக கட்டணம் வசூலிக்கப்படும்…!!
வங்கியில் இருக்கும் வரை, நமது பணத்துக்கு வட்டி உண்டு.
ஆனால், டிஜிடல் வாலட்டுகளுக்கு மாற்றி விட்டால், எந்தவித வட்டியும்
கிடையாது. எனவே பெரிய தொகைகளை வாலட்டில் மாற்றி
வைத்திருந்தால், வட்டி இழப்பு….
முக்கியமான தடங்கல் – யாருக்கு பணம் தருகிறோமோ அல்லது
அனுப்புகிறோமோ – அவர்களுக்கும் டிஜிடல் பரிமாற்ற வசதி
இருக்க வேண்டும்…
எனவே, நாம் மார்க்கெட்டுக்கோ, சிறு கடைகளுக்கோ,
சாதாரண ஓட்டல்களுக்கோ போனால், இதை பயன்படுத்த முடியாது.
நமது குடும்பத்து நெருங்கிய உறவினர்களுக்கு பணம் அனுப்பக்கூட
இதை பயன்படுத்த முடியாது -( அவர்களுக்கு வங்கிக்கணக்கு
இருந்தால் கூட ….!!!)
இன்னுமொரு முக்கியமான விஷயம் – தெரிந்தால் எரியும் –
இந்த டிஜிடல் அக்கவுண்டை முதல்முறை ஓப்பன் பண்ணும்போது,
உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் வங்கிகள்
உங்களுக்கு தெரிந்தே உரித்து எடுத்துக் கொள்கின்றன.
அதன் பிறகு நீங்கள் பயன்படுத்தும் டிஜிடல் கரென்சி செல்லும்
வழிகள் / இடங்கள் அனைத்தும், ஆட்டோமேடிக்’காக அதற்குரிய
சர்வர்களில் பதிவாகி விடும். அதாவது உங்கள் பண பரிவர்த்தனை
அனைத்தும் – வங்கிகளிடம் பதிவாகி விடும்….
இதனால் யாருக்கு லாபம் – யோசியுங்கள்….!!!
பின் ஏன் இதை கொண்டு வந்தார்கள் என்கிறீர்களா….?
ரிசர்வ் வங்கியின் தோற்றுப்போன பொருளாதாரக்
கொள்கைகள் மீது வரும் விமரிசனங்களை – மடை மாற்ற,
திசைதிருப்பிவிட செய்யப்படும் முயற்சிகள் இவை….
……………………….
வாசக நண்பர் கண்ணன் -கேள்வி –
“பதான் ” படம் வெற்றி பற்றி உங்கள் கருத்து என்ன …..?
ஜூனியர் பதில் –
ஷா ரூக் கானின்- “பதான்” ஹிந்தி திரைப்படம்,
அது வெளியிடப்படுவதற்கு 10 நாட்கள் முன்னதாக கூட,
பாஜக-வினரால் மிகக்கடுமையாக எதிர்க்கப்பட்டது.
சில இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் கூட நிகழ்ந்தன.
மத்திய பிரதேச, பாஜக கேபினட் அமைச்சர் ஒருவர்
பதான் படத்தை மத்திய பிரதேசத்திற்குள் நுழையவே
விட மாட்டோம் என்று கூட சொன்னார்.
……

……
அவர் ஆட்சேபணைக்குரியதாகச் சொன்ன முக்கியமான
காரணம், கீழேயுள்ள பாடலும், அதில் தீபிகா அணிந்திருக்கும்
( காவி வண்ணத்திலான …?)உடைகளும்….!!!
………………….
………………….
ஆனால், திடீரென்று படம் வெளிவதற்குள் நிலைமை
மாறிவிட்டது…. எதிர்ப்புகள் சட்டென்று அடங்கி விட்டன….
அதே தீபிகா உடைகளுடன், அதே பாடலுடன் –
பதான் ரிலீஸ் ஆகி ( மத்திய பிரதேசம் உட்பட )மாபெரும்
பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை பெற்று,
முதல் 5 நாட்களிலேயே 500 கோடி வசூலையும் தாண்டி விட்டது….
உண்மையில் இது யாருக்கான வெற்றி…..?
இந்த வெற்றிக்காக ஒரு விலை கொடுக்கப்பட்டது….
என்ன விலை….? எத்தகைய விலை….?
அதை கொடுத்தவரும் – இப்போதைக்கு – சொல்ல முடியாது.
வாங்கியவரும் சொல்ல மாட்டார்….
அப்புறம் நான் மட்டும் எப்படி சொல்ல முடியும்….??? 😊😊😊!!!!!!!!!!!!!!!!!!!!!!!
.
……………………………………………………………………………………………………………………………………………..
//“பதான் ” படம் வெற்றி பற்றி// கலையில் அரசியல் எடுபடாது. தேவையில்லாத எதிர்ப்பு படத்தின் வெற்றிக்குத்தான் உதவும். திரைப்படம் ரசிக்கும்படி இருந்தால் மக்கள் எதையும் பொருட்படுத்த மாட்டார்கள் (விஸ்வரூபம் ஒரு உதாரணம். பாபா இன்னொரு உதாரணம். படம் நல்லா இல்லைனா பப்படம்தான்….எதிர்ப்பினால் படம் ஃப்ளாப் ஆனதுன்னு சொல்லமுடியாது). வெளியாகும் ஒவ்வொரு தியேட்டரிலும் ரௌடியிசம் தலைகாட்டி, அரசு ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்தால்தான் பொதுமக்கள் ரிஸ்க் எடுத்து தியேட்டருக்கு வரமாட்டார்கள் (பாமக செய்ததுபோல).
உங்கள் தளத்திலும் கவர்ச்சிப் படங்கள் போட்டுட்டீங்க.
டிஜிடல் கரன்சி….நீங்கள் நினைப்பதைத்தான் நானும் நினைத்தேன். ஆதாயம் இல்லாமல்…..ஆற்றில் இறங்குவார்களா?
புதியவன்,
// உங்கள் தளத்திலும் கவர்ச்சிப்
படங்கள் போட்டுட்டீங்க…///
அதற்கான தேவைகளை நான்
எப்போதோ கடந்து விட்டேன்.
அவை இல்லாமலே 13 வருடங்களை
இந்த வலைத்தளம் வெற்றிகரமாக தாண்டி
வந்திருக்கிறது என்பது உங்களுக்கு
தெரியாதா என்ன….?
பதான் படத்தில், தீபிகா –
ம.பி. அமைச்சர் கண்களை உறுத்திய அந்த காவி
உடையில் வருவது சில செகண்டுகளுக்கு தான்…
அதற்குள்ளாக அந்தக் காட்சியை ஸ்டில்’லாக
பிடிப்பதற்கு நான் படாதபாடு பட்டேன்.
அதை ரசிக்காமல், பாராட்டாமல்…..
நீங்கள் என்னவென்றால்…..
கோளாறு…உங்கள் பார்வையில்,
ரசனையில் தான் .😊😊
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
/ரிசர்வ் வங்கியின் தோற்றுப்போன பொருளாதாரக் கொள்கைகள்/
எந்த விதத்தில் தோல்வி என்று சொல்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?
எப்பொழுதெல்லாம் ரூபாயின் மதிப்பு குறைகிறதோ அப்போதெல்லாம் டாலர் வாங்குவது என்று ரிசர்வ் வங்கியின் வரையுரைக்கு உட்பட்டு செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். விசா / மாஸ்டர்கார்ட் தங்கள் கைகளுக்குள் வைத்திருந்த க்ரெடிட் கார்ட் ப்ராஸஸிங்கை ரூபே மூலம் முறித்தது பல நாடுகளும் வியந்து பார்க்கும் விஷயம். உக்ரேய்ன் ரஷ்யா போரில் மேற்குலக நாடுகள் ரஷ்யாவை ஸ்விப்ட் ஸிஸ்டெத்திலிருந்து வெளியேற்றிய உடன், ரஷ்யா பணமிருந்தும் நிறைய பிரச்சனைகளை சந்தித்தது. அதே சமயம், இந்திய ரிசர்வ் வாங்கி ஏற்படுத்திய NCP சிஸ்டம் ஸ்விப்ட் சிஸ்டத்துக்கு மாற்றானது. மிகவும் முன் யோசனையுடன் ஆரம்பித்த திட்டம் இப்போது மற்ற நாடுகளும் உபயோகிக்க முனைந்திருக்கிறது.
எனவே, ரிசர்வ் வங்கி மிகவும் முன் யோசனையுடனும், திறமையாகவும் செயல்படுவதாக நம்புகிறேன்
bandhu,
ஏற்கெனவே ஏகப்பட்ட எலெக்ட்ரானிக்
பணப் பரிவர்த்தனை வழி முறைகள் நடைமுறையில்
இருக்கும்போது, இந்த ஈ-ருபீ என்கிற
டிஜிடல் கரென்சியின் அவசியம் -தேவை – என்ன…..?
எந்தெந்த விதங்களில் இந்த புதிய முறை
அசௌகரியமானது, உபயோகமற்றது என்று
விவரமாக மேலே கூறி இருக்கிறேன்…
அதற்கு உங்கள் விளக்கம் என்ன…..?
இத்தனை குறைகளுடன், புதிதாக எதற்காக,
யாருக்காக இந்த சிஸ்டம் …?
கொஞ்சம் ஏமாந்தால், டிமானடைசேஷன் கூட
அற்புதமானது என்று சொன்னாலும் கூட
சொல்வீர்கள் போலிருக்கிறதே….
ஒருவேளை நீங்கள் அந்த டிமானடைசேஷன் புலி,
(நண்பர் புதியவனின் மொழியில் “புளி”…!!! )
இன்றைய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ்’-ன்
ரசிகரோ….!!!!😊😊
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
டிஜிட்டல் ரூபாயை பொறுத்தவரை உங்கள் கருத்தோடு முற்றிலும் உடன்படுகிறேன். பிட்காயின் போன்றவை முற்றிலும் வேறுவிதமான கரன்சி என்ற விதத்திலாவது ஒத்துக்கொள்ளலாம். டிஜிட்டல் ரூபாய் எந்தவிதத்தில் யாருக்கு உபயோகம் என்று தெளிவாக இல்லை. வேலையற்றவேலை என்று நினைக்கிறேன்.
அதற்காக ரிசர்வ் வங்கி தோல்வி என்று முத்திரை குத்தமாட்டேன். அதற்காகத்தான் விளக்கமாக பதில் அளித்தேன்!
With all the flaws, I still rate Reserve Bank high!
ஐயா காவிரி மைந்தன் அவர்களுக்கு மிக்க நன்றி.
நீங்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் ஏற்புடையது மற்றும் வெளிப்படையானவை.
இதில் மேலும் மறைமுக காரணங்கள் இருக்க வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக இந்த CBDCயை செலவு செய்ய கட்டுபாடுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இது Social credit score system ஏற்படுத்த அடித்தளமாக அமைய வாய்ப்பு உள்ளது.
இதனை அரசு தெளிவுபடுத்த வேண்டும். ஏன் இதனை எந்த அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆராயவில்லை என்பது வருத்தமாக உள்ளது.
//டிஜிட்டல் ரூபாய் எந்தவிதத்தில் யாருக்கு உபயோகம் என்று தெளிவாக இல்லை//
எனக்கும் தெரியவில்லை.. ஆனால் Paytm, GPay போன்றவை வந்த போதும், தேவை என்ன, இது ஒர்க் ஆகாது என்று தான் நினைத்தேன். பொறுத்து இருந்து பார்க்க விரும்புகிறேன்(வேற வழி)
//க்ரெடிட் கார்ட் ப்ராஸஸிங்கை ரூபே மூலம் முறித்தது பல நாடுகளும் வியந்து பார்க்கும் விஷயம்.//
தெரிந்து கொள்ள தான்..
Indian banks had to bear the high cost for affiliation and the connection with international card associations schemes like Visa and Mastercard.
இப்ப ரூபே யால் நாம்(தனி நபர், நம் நாடு) அடைந்த பலன் என்ன..How much cost saved..
நன்றி