…………………………………….

……………………….
அண்மையில் சுகி சிவம் அவர்கள் எழுப்பிய கேள்வியை
முன்வைத்து நாம் இந்த தளத்தில் ஓரளவு விவாதித்திருந்தோம்.
சில நண்பர்கள் இருக்கும் குறைகளைச் சொல்லி இருந்தார்கள்.
சில நண்பர்கள் எந்தெந்த விஷயங்கள் சீர் செய்யப்பட வேண்டும்
என்று விவரித்திருந்தார்கள்.
இந்து கோயில்கள், அவற்றின் வழிபாட்டு முறைகள், சொத்துகள்
ஆகியவற்றை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலிருந்து
வெளியே கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரது முக்கியமான
கருத்தாக இருந்தது.
தற்போது, இதே நோக்கத்தில், தனித்தனியாக சில ஆன்மிகவாதிகளும்,
சில இயக்கங்களும், கட்சிகளும் கூட இயங்கி வருகின்றன.
அறநிலைதத்துறையின் கட்டுப்பாட்டிலிருந்து கோயில்களை வெளியே கொண்டு வர வேண்டுமென்றால், அதற்கு பதிலாக- நமது அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றக்கூடிய வகையில் உரிய அமைப்பு
ஒன்று உருவாக்கப்பட வேண்டும்….. இந்த லட்சியத்தில், முயற்சியில் ஆர்வமுடைய அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு இயங்க வேண்டும்.
அந்த வகையில், இந்த வலைத்தளத்தின் சார்பாக, சில யோசனைகளை
கூற விரும்புகிறேன்….
- 100 ஆண்டுகளுக்கு மேலாக,
நல்லமுறையில் இயங்கி வருகின்ற,
தமிழ்நாட்டின் அனைத்து மடங்களின்
நிர்வாகிகள், ஆதீனகர்த்தர்கள்
ஆகியோரை ஒருங்கிணைத்து
” இந்து கோயில்கள் நிர்வாக வாரியம்”
என்று புதிதாக அமைப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும்.
( இவற்றின் எண்ணிக்கை அதிகம் போனால் …50 – 60 இருக்கக்கூடும்..)
இந்த வாரியத்தில், தமிழக அரசின் சார்பாக, பணியில் இருக்கின்ற
துறைச் செயலாளர் ஒருவரும்,
உயர்நீதிமன்றத்தின் சார்பாக,
பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரும்,
இணைக்கப்பட (நாமினேட்) வேண்டும்…. இவர்கள் ஓய்வு பெறுங்கால்,
பதிலுக்கு அதே அந்தஸ்திலுள்ள வேறு ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.
அரசின் சார்பாக நியமிக்கப்படும், துறைச்செயலாளர் –
இந்த நிர்வாக வாரியத்திற்கும்- அரசுக்கும் இடையேயான பாலமாக
செயல்பட வேண்டும்… வாரியத்தின் சார்பான விஷயங்களை,
தேவைகளை அரசிடம் கொண்டு செல்வதும், அதற்கான மேல் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இவரது பொறுப்பாக
இருக்க வேண்டும்…..
இதைத்தவிர, வேறு எந்த ஒரு அரசு அதிகாரியோ, ஊழியர்களோ –
இந்த வாரியத்தில் பணிபுரிய அனுமதிக்கக்கூடாது.
தற்போது அறநிலயத்துறை சார்பாக பல்வேறு கோயில்களில்,
மற்றும் அறநிலையத்துறை அலுவலகங்களில் பணியாற்றி வரும் –
கமிஷனர்கள், இணை/துணை கமிஷனர்கள் உட்பட – அனைத்து
அரசு ஊழியர்களும் – மற்ற அரசு இலாகாக்களுக்கு
மாற்றப்பட வேண்டும்.
………………………
இதன் மூலம் இந்து கோயில்கள் நிர்வாக வாரியம் –
QUASI-JUDICIAL- என்கிற – சட்டபூவமான அங்கீகாரத்தை பெறும்.
இந்த வாரியம் எடுக்கும் முடிவுகள், சட்டபூர்வமான அந்தஸ்தை பெறும்.
அனைத்து கோயில்கள், அவற்றின் வழிபாட்டு முறைகள், சொத்துகள்
பராமரிப்பு, நிலங்கள், கடைகள், குத்தகை, ஏலம் உட்பட
அவற்றின் நிதி நிர்வாகங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளையும்
இந்த வாரியம் மேற்கொள்ள வேண்டும்.
எந்த ஒரு கோயிலின், எந்த ஒரு சொத்தையும்,
யாருக்கும் விற்பனை செய்யவோ, பெயர்மாற்றிக் கொடுக்கவோ,
நீண்ட கால குத்தகைக்கு கொடுக்கவோ, யாருக்கும் அதிகாரம்
கிடையாது என்பதை இந்த வாரியம் உறுதி செய்ய வேண்டும்.
கோயில்களில் குத்தகை எடுப்போர், வாடகைக்கு கடைகளை
எடுப்பவர்கள், லைசென்சு பெறுவோர், ஆக – கோயில்களின்
மூலம் ஆதாயபூர்வமான பணிகளை பெறுவோர் அனைவரும்
இந்து மதத்தைச் சேர்ந்தவராக இருத்தல் அவசியம்.
…………………
இந்த அமைப்பு, பொதுக்குழு ( General Council )
என்று அழைக்கப்படலாம்.
இந்த பொதுக்குழு உறுப்பினர்கள் கூடி, கீழ்க்கண்ட பணிக்குழுவை
(Working Committee) உருவாக்க வேண்டும்.
1) பொதுக்குழு உறுப்பினரிலிருந்து இத்தகைய பணிகளில்
ஆர்வமுடைய, பொருத்தமான 5 பேர்…..
2) பொதுமக்களிலிருந்து – ஆன்மிகத்திலும், சமூக நலனிலும்
அக்கறை கொண்டு ஏற்கெனவே சிறப்பாக செயல்பட்டு வரும்,
மக்களின் நம்பிக்கையைப் பெற்ற – 5 பேர் …
- என மொத்தம் 10 பேரைக்கொண்ட பணிக்குழுவை உருவாக்கி,
அனைத்து கோயில்களின் அன்றாட நிர்வாகங்கள் அனைத்தையும்
கவனித்து வரலாம். முக்கியமான விஷயங்கள் என்று
கருதப்படுபனவற்றை இந்த பணிக்குழு, பொதுக்குழுவில், தங்கள்
பரிந்துரைகளுடன் முன்வைத்து ஒப்புதல் பெற வேண்டும்.
தங்கள் பணிகளுக்கு தேவை என்று நினைக்கும்
துணைவிதிகளை – பொதுக்குழுவே உருவாக்கிக்கொள்ளலாம்.
………….
இந்த பொறுப்புகள் அனைத்தும், கௌரவ பணிகளாக கருதப்பட
வேண்டும்…. இந்த பொறுப்புகளில் இருக்கும் யாரும்,
கோவில் நிதியிலிருந்து ஊதியம் எதையும் எதிர்பார்க்கும்
நிலையில் இருக்கக்கூடாது….
………….
கோயில்களில் பணிபுரியும் அனைவரும்,
இந்த வாரியத்தின் ஊழியர்களாக கருதப்பட வேண்டும்.
புதிய பணியாளர்களை தேர்ந்தெடுக்கும்போதும் சரி,
ஏற்கெனவே இருக்கக்கூடியவர்களும் சரி –
அனைவரும் கீழ்க்கண்ட உறுதி மொழியை
ஏற்று ஒப்பம் செய்து கொடுக்க வேண்டும்..
1) தான் -தெய்வ நம்பிக்கை உள்ளவர்.
2) தான் இந்து மதத்தினைச் சேர்ந்தவர்.
3) தான் எந்தவொரு அரசியல் கட்சியிலும்
முன் எந்த சமயத்திலும் உறுப்பினராகவோ, ஆதரவாளராகவோ
இயங்கியதில்லை; எதிர்காலத்திலும், இதே நிலையை
மேற்கொள்வார்.
(புது பணியாளர்களை தேர்ந்தெடுக்கும்போது, எந்த விண்ணப்ப
தாரராவது, அரசியல்வாதிகள் எவரிடமிருந்தாவது பரிந்துரை
கொண்டு வந்தால், அவர் துவக்கத்திலேயே நிராகரிக்கப்படுவார்
என்பதை வெளிப்படையாக அறிவித்து விட வேண்டும்…..)
கோயில் நிர்வாகத்தின் எந்த மட்டத்திலும், அரசியல்வாதிகளுக்கு
தொடர்பு இருக்கக்கூடாது.
……………………….
இவை யெல்லாம் முழுமையான தீர்மானங்கள்
அல்ல…. சில ஆலோசனைகள் மட்டுமே.
இந்த மாற்று திட்டத்தை முன்னெடுத்துச்
செல்லும் அமைப்பு, சம்பந்தப்பட்ட, ஆர்வமுள்ள அனைவரையும் கலந்தாலோசித்து –
FOOL PROOF PLAN -ஒன்றினை தயாரித்து,
- தமிழக அரசு இதனை உரிய முறையில் பரிசீலித்து
விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கையுடன்
அரசிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்…..
-இதை எந்த அரசியல் கட்சி, அல்லது அமைப்பின் பொறுப்பிலும்
விடாமல், ஆன்மிகவாதிகள், பக்தர்கள், இந்து கோயில்களின்
பாதுகாப்பில்அக்கறை கொண்டோர் முன் நின்று நடத்த வேண்டும்.
(இந்த முயற்சிக்கு அரசியல் சாயம் பூசப்படுவதை தவிர்க்கவே
இந்த வழி… இதனை ஆதரிக்கும் அரசியல் கட்சிகள்,
பின்னணியில் நின்று தங்கள் ஆதரவை தாராளமாகத் தெரிவிக்கலாம்….)
(அடுத்த அரசு, ஆட்சிப்பொறுப்பேற்கட்டும் என்று காத்திராமல்,
இப்போதே இதைச் செய்யலாம்…)
அரசு, சட்டமன்றத்தில் உரிய மசோதாவை நிறைவேற்றி
புதிய ” இந்து கோயில்கள் நிர்வாக வாரியம்” ஒன்றை, அதற்கு உரிய
அதிகாரங்களை வழங்கி- அதை ஒரு சுயேச்சையான வாரியமாக –
உருவாக்க வேண்டும்.
அரசுக்கு, இந்து மதத்தை சேர்ந்த மக்களின் இந்த கோரிக்கையை
ஏற்பதில் எந்தவித இழப்பும் ஏற்படப்போவதில்லை. புதிதாக
நிதிச்சுமைகளும் எதுவும் வரப்போவதில்லை; ஏற்காமலிருக்க
உரிய காரணங்கள் ஏதுமில்லை.
எனவே, அரசு நியாயமான கால அவகாசத்திற்குள்,
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால்,
அதனை வலியுறுத்தி போராட, அனைத்து மக்களும்
சேர்ந்து பிரம்மாண்டமான அளவில் இணைந்து போராட வேண்டும்.
ஆங்காங்கே உள்ள உள்ளூர் மக்களையும்
உடன் சேர்த்துக்கொண்டு,
தமிழ்நாட்டின் முக்கியமான, பெரிய கோயில்களின்
வாசல்களில் அமர்ந்து, இந்த கோரிக்கைகள் நிறைவேறும்
வகையில் போராட முற்பட வேண்டும்….. இந்த போராட்டங்கள்
அனைத்தும் சாத்வீகமான முறையில், அரசியல் கலப்பற்று
நிகழ வேண்டும். கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு
ஏற்கும் வரை தொடர்ந்து, காலவரையற்று போராட வேண்டும்.
வசதிப்படுபவர்கள் நாள் முழுவதும் போராட்ட பந்தலில் அமர்ந்து
போராடலாம்… வேறு பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களும்,
சாதாரண உள்ளூர் பொதுமக்களும் தங்கள் பணி முடிந்தவுடன்
இங்கே வந்தமர்ந்து மற்றவர்களுடன் போராட்டத்தில் சேர்ந்து கொள்ளவேண்டும்.
( இங்கே ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
இந்த முயற்சிகள் – எந்த மதத்திற்கும் எதிரானவை அல்ல.
இந்து கோயில்களும், அதன் சொத்துகளும் – கயவர்களால்
சுரண்டப்படாமல் பாதுகாக்கப்படவும்,
அவை ஏற்படுத்தப்பட்ட நோக்கத்திற்காக உரியமுறையில்
பயன்படுத்தப்படவும் வேண்டும் என்கிற நோக்கத்தையும்
முன் வைத்தே இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன … )
இந்த விஷயத்தில் ஆர்வமுடைய,
வாசக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் –
இந்த முயற்சியில் தங்களின் பங்காக –
இந்த இடுகையில் கூறப்படும் கருத்துகள், இயன்ற வரையில்
அனைத்து மக்களிடமும் பரவலாகச் சென்றடைய வேண்டும்.
அதற்காக,
நண்பர்கள் தாங்கள் பயன்படுத்தும், சமூக வலைத்தளங்கள்,
வாட்ஸப், முகநூல் பக்கம், ட்விட்டர், இன்ஸ்டாகிராம்,
போன்ற அனைத்து ஊடகங்களின் மூலமும் இந்த இடுகையின்
லிங்க்கை -https://vimarisanam.com/2023/01/30/%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%af%81/
பரிமாறிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
.
……………………………………………….
பலர் (மத நம்பிக்கையுள்ள, கோவில் நன்றாக நடக்கவேண்டும் என்ற எண்ணம் அல்லது தான் சொல்வதே சரி என்ற எண்ணம் அல்லது அடுத்தவர் மீது காழ்ப்புணர்வு) கோவில் நிர்வாகத்தினரை, அல்லது முன்னெடுத்துச் செய்யணும் என்று ஆசையுடன் செய்பவரை, கோயிலில் தற்போதைய நடைமுறைகளில் உள்ள குறைகளை, குற்றம் சொல்லும் நோக்குடன் குற்றம் சுமத்துகின்றனர், யூடியூபில் பேட்டியும் கொடுக்கின்றனர். எப்போதுமே குற்றம் சொல்லுவது மிக மிகச் சுலபமான வேலை. ஒரு காரியத்தை எடுத்துச் செய்யும்போதுதான் அதன் பிரச்சனைகள் எல்லாம் தெரியும்.
அதனால் seeing bigger picture சின்னச் சின்ன விஷயங்களைப் பெரிதுபடுத்தக்கூடாது, service செய்பவரையும் குறைகள் சொல்லிச் சொல்லி இந்த வம்பே வேண்டாம் என்று ஓடிப்போகச் செய்யாதிருக்கவேண்டும் இந்த whistle blowers என்று தங்களை நம்பிக்கொண்டிருக்கும் புண்ணியவான்கள்.
இதை இங்கு எழுதணும் என்று தோன்றியது.
ஆக்கபூர்வமான யோசனைகளை சொல்லியிருக்கிறீர்கள். அரசுக்கு இது எட்டிக்காய் போல் கசக்கும், தங்கள் கையில் உள்ள அதிகாரம் போவதால். இதை முன்னெடுப்பது யார்? மடாதிபதிகள் சேர்ந்து முயற்சித்தால் இது கட்டாயம் நடக்கும்!
நல்ல யோசனைகள் அய்யா.
இதை மாநில (அதுவும் கழக) அரசு செய்யுமா.
மத்திய அரசு செய்ய முயற்சிக்க இடம் உள்ளதா?..
மாநில அரசே, சட்டமன்றத்தில் உரிய மசோதாவை
நிறைவேற்றி – நடைமுறைப்படுத்தலாம்…
கழக அரசு செய்யுமா ….?
அது மக்கள் கொடுக்கும் அழுத்தத்தில்
இருக்கிறது…
(ஜல்லிக்கட்டு நினைவிருக்கிறதா…? )
ஜல்லிக்கட்டு – மாநிலத்தில் நிலவிய அரசியல் குழப்பத்தை மக்களின் கவனத்திலிருந்து திருப்ப அரசால் ஊக்குவிக்கப்பட்ட போராட்டம். அரசு நினைத்திருந்தால் ஆரம்பத்திலேயே நிறுத்தியருக்க முடியும்.
தமிழகம் என கூறியுள்ளீர்கள் உடன்பிறப்புகள் உங்கள் மேல் பாய்ந்துவிடுவார்கள்
கேட்பது சுலபம் ..அதனால் இன்னும் சில கேள்விகள்…
நான் வேற்று மதத்தை சார்ந்து இருக்கிறேன் என்று வைத்துக்கோவோம்..
ஆனால் நியாயமாக தொழில் செய்து குத்தகை கொடுக்க என்னை அனுமதிக்காமல் இருக்கலாமா..
>>ஆன்மிகவாதிகள், பக்தர்கள்
இவர்கள் எப்போதும் ‘ஈகோ’ இல்லாமல் ஒன்றாக பணி செய்வார்களா
இது அவரவர் மதம் சார்ந்த,
நம்பிக்கை சார்ந்த – விஷயம்… இதில்
மற்ற மதத்தினரின் குறுக்கீடு
பொதுவாக விரும்பப்படாது….
விரும்பத்தக்கதும் அல்ல…
//நான் வேற்று மதத்தை சார்ந்து இருக்கிறேன் என்று வைத்துக்கோவோம்.. ஆனால் நியாயமாக தொழில் செய்து குத்தகை கொடுக்க என்னை அனுமதிக்காமல் இருக்கலாமா..// – நீங்கள் எங்காவது மாற்று மதத்தினரின் கோயில்களில் அல்லது பிஸினெஸ் இடங்களில் இந்துக்கள் கடைகளை, குத்தகைக்கு எடுத்துப் பணி செய்வதைப் பார்த்திருக்கிறீர்களா? நான் இதனை முழுவதுமாக அனலைஸ் செய்தவன். முஸ்லீம் ஜமாத்களில், முஸ்லீம்கள் இந்துக்களின் கடைகளில் வாங்குவதைக் கண்டால், கண்டிக்கிறார்கள், முஸ்லீம் கடைகளில் மாத்திரம் வாங்கவேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். முஸ்லீம்களுக்கும் கிறித்துவர்களுக்கும் இல்லாத ‘மதச்சார்பின்மை’ இந்துக்களுக்கு எதற்கு?
அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு. இந்துக்களின் கோயில் மற்ற இடங்களில் தொழில் செய்வதற்கு மாற்று மதத்தினருக்கு எதற்கு அனுமதி வேண்டும்? அவர்கள் அவர்களது மதத்தினரிடையே தொழில் செய்துகொள்ளலாமே. ஆச்சி மசாலா, தங்கள் வருமானத்தில் பெரும் பகுதியை கிறித்துவ மதமாற்றத்திற்காக, அவர்களது சர்ச்சுக்குக் கொடுப்பது உங்களுக்குத் தெரியுமா? இதைப்போலத்தான் மற்ற மதத்தினர் செயல்படுகின்றனர்.
.
ஸ்ரீநகர் லால் சவுக்’கில் இந்த நாட்டின்
மூவர்ணக்கொடியை பறக்க விட்டார் -ராகுல்….
………………….
நல்லதொரு லட்சியத்தை முன்வைத்து –
அற்புதமான பயணத்தை மேற்கொண்டு,
வெற்றிகரமாக முடித்த –
– ராகுல் காந்தி ….அவர்களுக்கு
இந்த வலைத்தளத்தின் சார்பாக வாழ்த்துகள்…
………………….
………………….