பத்திரிகையாளர் மணி சொல்வதுஎத்தனை % (சதவீதம்) சரி என்று நினைக்கீறீர்கள் …..?

………………………….

……………………………………………………………………………..

வழக்கமாக கொடுக்கும் யுட்யூப் பேட்டி போல் அல்லாமல், இந்த தடவை விகடன் தளத்தில் பேசுகிறார் மணி….

  • பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் நடந்தது பற்றியும்
    அதன் பின்னணி பற்றியும் பத்திரிகையாளர் மணி
    சொல்வது எத்தனை % (சதவீதம்) சரி என்று நினைக்கீறீர்கள் …..?
  • ஆனால், இந்த தேசிய செயற்குழு கூட்டத்திற்கு பிறகு, பாஜகவில்
  • தேசிய அளவில் ஒரு கொள்கை மாற்றம் ஏற்பட்டிருப்பது,
  • ஷா ரூக் கானின் “பதான்” படத்திற்கு, முன்னதாக தெரிவிக்கப்பட்ட கடுமையான எதிர்ப்பு விலக்கிக்கொள்ளப்பட்டதிலிருந்தே தெளிவாகிறது.

…………………………………………………………………………………………………………………………..

.

…………………………………………………………………………………………………………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

11 Responses to பத்திரிகையாளர் மணி சொல்வதுஎத்தனை % (சதவீதம்) சரி என்று நினைக்கீறீர்கள் …..?

  1. Logan சொல்கிறார்:

    ஐயா. நான் BJP அனுததபியோ ஆதரவாளனோ இல்லை. இப்போது நடக்கும் BBC ஆவணம். அதானி கம்பெனி ஷேர் மார்க்கெட் பிரச்சினை ஆகியவற்றிற்கும் உலக அரசியல் நிகழ்வுகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்று நான் நினைக்கிறேன்.முக்கியமாக அமெரிக்க டாலரின் world reserve currency currency status ஐ BRICS நாடுகள் மாற்றி அமைக்க செயல் பாட்டில் இறங்கி உள்ளனர். கடாபி யும் சதாம் உசேன் கொல்ல பட்ட காரணம் அறிவோம். ஆனால் அமெரிக்காவால் BRICS தலைவர்களை நேரடியாக எதிர்க்க முடியாது. எனவே இது போன்ற பிரச்னைகளை சர்வதேச ஊடகங்கள் மற்றும் வாடகை பத்திரிகையாளர்கள் களம் இறக்கி இருகிறார்கள்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      .

      Logan,

      பத்திரிகையாளர் மணி சொல்வதை
      அப்படியே நான் ஏற்கிறேன் என்று சொல்லவில்லையே….
      படிப்பவர்களைத் தானே கேட்டிருக்கிறேன் –
      எத்தனை % சரி என்று….!!!

      ………….
      அதானி ரொம்ப நேர்மையான, நியாயமான
      முறையில் உலகின் 3-வது பணக்காரராக
      கடந்த 10 வருடங்களுக்குள் உயர்ந்திருக்கிறார்
      என்று நீங்கள் நினைக்கிறீர்களா….?
      ………….

      நீங்கள் துவக்கத்திலேயே BJP அனுதாபியோ
      ஆதரவாளனோ இல்லை என்று சொல்லி
      விட்டீர்கள்…

      சரி ….

      ஆனால், நீங்கள் இங்கே பதிந்துள்ள வீடியோவை
      உருவாக்கியுள்ள அமைப்பின் சொந்தக்காரர்
      யார் என்பது உங்களுக்கு தெரியுமா….?
      அல்லது தெரியாமலே பதிவு செய்து விட்டீர்களா…?

      சரி –
      சவூதி அரேபியா – ப்ரிக்ஸ் நாடுகளில் ஒன்றா…?
      அமெரிக்காவுக்கு எதிராக செயல்படக்கூடிய நாடா …?

      ……………

      உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது
      ஒன்றை மட்டும் தான்….

      “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்,
      அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.”

      -என்கிற குறள் வரிகளை மட்டுமே.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • Logan சொல்கிறார்:

        ஐயா.
        நான் இணைத்துள்ள காணொலி அது கூறும் செய்திக்காக மட்டுமே. ரஷ்ய யுக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்கா மற்றும் மேற்கு உலக நாடுகள் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு எதிராக எவ்வளவு அழுத்தம் கொடுத்தது என்பதை அறிவீர்கள்.இதனை நமது வெளி உறவு துறை அமைச்சர் திரு ஜெய்சங்கர் அவர்கள் சிறப்பாக கையாண்ட விதம் மிகவும் பாராட்டுதலுக்கு உறியது. உலக அரசியல் நிகழ்வுகள் பல்வேறு நோக்கங்கள் கொண்டது. அவற்றை முழுமையாக விளக்குவது கடிணம்.
        கிழே உள்ள இணைப்பில் உள்ள மூன்று இடுகைகள பொறுமையாக படித்து பாருங்கள்.
        https://capitalisteric.wordpress.com/
        ஐயா புதியவன் அவர்களின் கருத்து எனக்கு ஏற்புடையது.
        நன்றி

        • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

          .
          Logan

          கீழ்க்கண்ட கேள்விக்கு நீங்கள் இன்னும்
          பதில் சொல்லவில்லையே –

          ………….
          அதானி ரொம்ப நேர்மையான, நியாயமான
          முறையில் உலகின் 3-வது பணக்காரராக
          கடந்த 10 வருடங்களுக்குள் உயர்ந்திருக்கிறார்
          என்று நீங்கள் நினைக்கிறீர்களா….? 😊
          ………….

          .
          -வாழ்த்துகளுடன்,
          காவிரிமைந்தன்

          • புதியவன் சொல்கிறார்:

            காமை சார் என்னைக் கேட்காவிட்டாலும் பதில் சொல்வது என் கடமை. அதானி மாத்திரமல்ல, பெரும் பணக்கார்ர்கள், அதிலும் குறுகிய காலத்தில் பிலியனரான அதானி, அம்பானி, மாறன், ….. அனைவருமே குறைந்தபட்ச நேர்மையைக்கூடக் கொண்டிருந்ததில்லை. இதில் லுலு போன்ற பலப்பல குழுமங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

            அதானி, அகில இந்திய மாறன்கள்.

          • Logan சொல்கிறார்:

            ஐயா.
            நான் அதானி அவர்களை நேர்மையான வழியில் உலக பணக்காரர்கள் ஆணார்கள என்று நான் கூறவில்லை. அவர்களை ஊழல் செய்து தான் உலக பணக்காரர்கள் ஆணார்கள. அதேபோல் திரு மோடி அவர்களுக்கு குஜராத் கலவரத்தில் பங்கு இல்லை என்று கூறவில்லை. ஆனால் இந்த இந்த செய்திகளை இப்போது பெரிதாக பேசுவது என்பது உள் நோக்கம் உடையது.அதற்காண பிண்ணனியை விளக்குவதே என் நோக்கம். குஜராத் கலவரம் நடந்து 20 ஆண்டுகள் கடந்து விட்டன. ஏன் கடந்த தேர்தல்களின் போது இவை பெரிதாக பேசப்படவில்லை? தற்போது பேசுவதன் நோக்கம் உலக வல்லாதிக்க சக்திகளின் அடிமடியில திரு மோடி அவர்கள் கை வைத்தது தான்.. நீங்கள் அமெரிக்கா டாலருக்கு மாற்றாக இந்தியா ரூபாயில் பெட்ரோலியம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது இந்தியாவிற்கு லாபமா அல்லது அமெரிக்காவிற்கு லாபமா?
            BBC மற்றும் மணி அவர்கள் பேசுவது என்பது இப்போது நடக்கும் information warfare ன் ஒரு அங்கம் என்பது எண் கருத்து. https://capitalisteric.files.wordpress.com/2022/06/nate_rothschild_message.jpg
            நன்றி

    • புதியவன் சொல்கிறார்:

      லோகன்…. We can’t match big countries. நம்முடைய வலிமை, மிகப் பெரும் மார்க்கெட். மிகப் பெரும் மக்கள் கூட்டம். ஜனநாயகம் என்ற பெயரால் குவிந்திருக்கும் பல்வேறு சுயநலங்கள் கொண்ட கூட்டம். அதனால்தான் நமக்கு மதிப்பு. மோடி அவர்களை முக்கிய நாடுகள் வெறுப்புடன் நோக்கிக்கொண்டிருக்கின்றன. அவரை காங்கிரஸ் அரசுபோல விலைபேச முடியவில்லை என்பதுதான் அவர்களின் எரிச்சல். போதாக்குறைக்கு மக்கள் ஆதரவு (அதாவது ஜனநாயக பெரும்பான்மை ஆதரவு). இதனால்தான் 24ல் அவரைத் தோற்கடிக்க பிபிசி போன்ற விலைபோகும் ஊடகங்கள், மற்றும் வெளிநாட்டு நிதியின் மூலம் கிறித்துவ மிஷனரிகள் மூலம் நாட்டில் வெறுப்புக் கருத்தை ஏற்படுத்துவது, பிளவுபடுத்துவது என்று செயல்படுகின்றன. அமெரிக்கா நினைப்பதை பிரிட்டன் செய்யும் என்பதால் பிபிசியின் வெறுப்புப் பிரச்சாரம். அவர்கள் கிறித்துவர்களின் நலனுக்கு உழைப்பதுபோல, மோடி இந்து நலனுக்கு உழைக்கிறார்.

      ஆனால் மோடி has a limit. When that is crossed or appear to be crossing, அமெரிக்கா போன்றவைகள் நமக்கு (இந்தியாவிற்கு) மிகப்பெரும் பிரச்சனையைக் கொண்டுவரத் தயங்காது. உலகின் நம்பிக்கைக்கு அற்ற நாடுகளில் முதன்மையானது அமெரிக்கா என்பது என் எண்ணம். காரணம், அதன் நலன் மட்டுமே அதற்கு முக்கியம். நியாயம் முக்கியமல்ல. அதனால்தான் சதாம், பின் லேடன்…..என்று மிகப் பெரிய லிஸ்டுகளை அது நீக்கியது.

      The moment dollor looses it’s importance America will collapse. அதனால் அதனை முயலும் எதையும் அமெரிக்கா அழிக்கும். இன்று சௌதி அரசர், அமெரிக்க எதிர்ப்பு நிலை எடுக்கிறார். ஆனால் down the line, எல்லோரையும் அமெரிக்கா வழிக்குக் கொண்டுவரும், especially all important Muslim nations. India must balance with USA. We should remember how it nurtured terrorists in Pakistan, just to give trouble to India, who was supporting or leaning towards USSR. We should also realize USA is always big brother, because of their clear cut methods, resources etc. அமெரிக்க மக்களைப் போன்று இந்தியர்கள் நாட்டை நேசிப்பவர்கள் அல்லர், என்பதையும் மறக்கக்கூடாது

      • Logan சொல்கிறார்:

        ஐயா.
        உங்கள் கருத்து எனக்கு ஏற்புடையது.அமரிக்கா கடாபி மற்றும் சதாம் உசேன் அவர்களை கையாண்ட விதத்தில் இந்தியா மற்றும் திரு மோடி அரசை கையாள முடியாது. எனவே அவர்களின் எதிர் வினை திரு மோடி அவர்களை இழிவு படுத்த வேண்டும். இதன் ஒரு அங்கமாக BBC மற்றும் பிற ஊடகங்கள் பரப்பும் செய்திகள்.
        திரு காவிரி மைந்தன் அவர்களுக்கு அளித்த பிண்ணூட்டத்தில் இணைத்த இடுகைகள் உலக அரசியல் நிகழ்வுகள் பற்றிய புரிதல் மற்றவர்களுக்கு ஏற்படும்.
        நன்றி

  2. புதியவன் சொல்கிறார்:

    1. Soft Hinduthva – வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் பாஜகவின் வாக்கு வங்கி, ஹிந்துக்கள், தங்கள் மத அபிமானத்தினால் தேர்ந்தெடுக்கும் கட்சியாகத் தன்னை வடிவமைத்துக்கொண்டதுதான். இதைத்தான் திமுக செய்கிறது. அதாவது 6 சதம் முஸ்லீம் வாக்குகள், 8 சதம் கிறித்துவ வாக்குகள் இவற்றிர்க்காகவே தன்னைச் சிறுபான்மையினருக்கு உரிய கட்சியாகவும், ஹிந்துக்களை அழிக்கும் கட்சியாகவும், ஹிந்துக்களுக்கும் கோயில்களுக்கும் ஹிந்து நடைமுறைகளுக்கும் எதிரான கட்சியாகவும் தன்னை உருவகப்படுத்திக்கொள்கிறது. அதனால்தான் உதயநிதியால் தான் கிறித்துவன் என்று வெளிப்படையாகச் சொல்லிக்கொள்ள முடிகிறது, ஸ்டாலினால், தான் ஹிந்து சமய நூல்களை வெறுக்கிறேன் என்று முஸ்லீம்களின் கூட்டத்தில் சொல்லமுடிகிறது.

    மணி சொல்கின்ற கருத்துக்களில், பாஜகவுக்குப் பதிலாக திமுக என்றும், இந்தியா என்பதற்குப் பதில் தமிழகம் என்றும், சிறுபான்மையினர் என்பதற்குப் பதில் ஹிந்துக்கள் என்று போட்டால், அதுபோல ஆர் எஸ் எஸ் என்ற இடத்தில் திக என்று போட்டால், அது தமிழகத்தின் உண்மை நிலையைத் தெரிவிக்கும். திக என்ன தமிழர்களின் பிரதிநிதியா? நான்சென்ஸ்…. என்றெல்லாம் உண்மையைத் தெரிவிக்கும் துணிபு அற்றவர் இந்த கொத்தடிமை மணி. மணி வாங்கின மணி இதனைச் சொல்லமாட்டார். அவன் இவன் என்று பிரதமரைப் பேசுகிற மணிக்கு பேட்டி அளிக்கும் யோக்கியதை இருக்கா என்பதை யோசிக்கவேண்டும். அடுத்த நாஞ்சில் சம்பத் இந்த மணி. (கொள்கையில்லாமல், நாக்கை வாடகைக்கு விட்டு, தன்னை நம்பியவர்களைக் கைவிட்டு, வீட்டிற்கும் பிரயோசனம் இல்லாமல், வாழ்ந்த வாழ்க்கைக்கும் அர்த்தம் இல்லாமல்)

  3. Logan சொல்கிறார்:

    ஐயா.
    உங்கள் கருத்து எனக்கு ஏற்புடையது.அமரிக்கா கடாபி மற்றும் சதாம் உசேன் அவர்களை கையாண்ட விதத்தில் இந்தியா மற்றும் திரு மோடி அரசை கையாள முடியாது. எனவே அவர்களின் எதிர் வினை திரு மோடி அவர்களை இழிவு படுத்த வேண்டும். இதன் ஒரு அங்கமாக BBC மற்றும் பிற ஊடகங்கள் பரப்பும் செய்திகள்.
    திரு காவிரி மைந்தன் அவர்களுக்கு அளித்த பிண்ணூட்டத்தில் இணைத்த இடுகைகள் உலக அரசியல் நிகழ்வுகள் பற்றிய புரிதல் மற்றவர்களுக்கு ஏற்படும்.
    நன்றி

  4. bandhu சொல்கிறார்:

    அதானி குழுமம் உத்தமமான ஒன்றாக தோன்றவில்லை. அரசின் முழு ஆசீர்வாதம் அந்த குழுவுக்கு இருக்கிறது என்பதும் தெளிவாக தெரிகிறது. அதே போல், ஹிண்டர்பர்க் ரிசெர்ச் நிறுவனத்தின் ரிப்போர்ட்டை பெரிதாக சந்தேகிக்க தோன்றவில்லை. இதற்கு முன் அவர்கள் வெளிக்கொணர்ந்த ENOB , ORA , EBIX நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியில் இருந்து மீளவில்லை. Welltower போன்ற சில நிறுவங்களின் பங்குகளில் பெரிதாக மாற்றம் ஏற்படவில்லை. பார்த்தவரை மாதம் ஒரு ரிப்போர்ட். sell orders வாங்கி ரிப்போர்ட் வெளியிட்டு பங்கு வீழ்ந்தவுடன் பெரிதாக காசு பார்க்கும் ஒரு நிறுவனமாக தோன்றுகிறது. அவர்கள் 88 கேள்விகள் கேட்டார்கள். ஒன்றுக்கும் பதில் சொல்லவில்லை என்பதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. இது போன்ற citreon ரிசெர்ச் போன்ற கம்பெனிகள் இருக்கின்றன. இவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல ஆரம்பித்தால் அதற்க்கு முடிவே இல்லை!

    அதானி குழும பங்குகளில் அரசு நிறுவனங்கள் பெரிதாக முதலீடு செய்திருக்கின்றன. பங்கு விலையின் வீழ்ச்சி தொடர்ந்தால் LIC போன்ற நிறுவனங்களுக்கும் சிறு முதலீட்டாளர்களுக்கும் பெரிய அளவு நஷ்டம் ஏற்படும். இந்த வீழ்ச்சி டெம்பரரி என்று நினைக்கிறேன். அவர்களுக்கு கடன் கொடுத்த நிறுவனங்கள் நெருக்கினால் வீழ்ச்சி தொடரும். பெரும்பாலான மக்களின் பணம் நேரடியாகவோ மறைமுகமாகவோ இதில் இருப்பதால் கடன் கொடுத்த அரசு நிறுவனங்கள் நெருக்கடி கொடுக்காது. ஒரு ஆறுமாத காலத்துக்குள் முதலீடு செய்த நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து இதிலிருந்து மீண்டுவிடும். யாருக்கு தெரியும்? பதானி குழுமம் என்று தொடங்கப்பட்டு அதில் முதலீடு மாற்றப்படலாம்!

    பிரிக்ஸ் பிளஸ் வளர்ச்சி அமெரிக்க அரசு கண்ணை உறுத்துகிறது. பிரிக்சில் இல்லாவிட்டாலும், பிரிக்ஸ் பிளஸ் -சில் இணைய பதினோரு நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. சவுதி அரேபியாவும் அதில் ஒன்று. நினைத்துப்பாருங்கள், உலக மக்கள் தொகையிலும், உலக சந்தையிலும் பெரும்பாலான நாடுகள் ஒரு ரிசர்வ் கரன்சியை ஆதரித்தால் டாலரின் நிலை அதோகதிதான்! பிபிசி , அதானி விவகாரங்கள் ஊதிப்பெருக்குவதில் மேற்கு நாடுகளின் தலையீடு இருக்க வாய்ப்புகள் மிக அதிகம்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s