……………………………………

கெட்டிக்காரன் பொய்யும் புரட்டும் எத்தனை நாளைக்கு…..???
……….
அதானி குழுமத்தைச் சோ்ந்த 7 முக்கிய நிறுவனங்கள் –
- தங்களது நிதிநிலையை உண்மைக்குப் புறம்பான முறையில்
வலுவாகக் காட்டியது, ( அதாவது …………. ???) - அதன் மூலம் பங்குச் சந்தையை ஏமாற்றி –
லாபம் பாா்த்தது, - வெளிநாடுகளில் ஷெல் நிறுவனங்களை உருவாக்கி
அவற்றின் மூலம் சட்டவிரோத பணப் பரிவா்த்தனையில்
ஈடுபட்டது …… (அதாவது பனானா ரிபப்ளிக்’குகளில்
கருப்புப்பணத்தை ஒளித்து வைப்பது ….??? ) - உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் அதானி குழுமம்
ஈடுபட்டிருப்பதாக “ஹிண்டன்பா்க் ரிசா்ச்” நிறுவனம் கடந்த
புதன்கிழமை வெளியிட்ட தங்களது ஆய்வு அறிக்கையில்…..
குற்றம் சாட்டியது.
பங்குச் சந்தையில் எதிரொலித்த இந்த மோசடிப் புகாரின்
விளைவாக அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்தன –
அதானி என்டர்பிரைசஸ்,
அதானி பசுமை எரிசக்தி,
அதானி துறைமுகம்,
அதானி எரிசக்தி,
அதானி ஒட்டுமொத்த எரிவாயு என அதன் அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் இறங்குமுகமாகவே உள்ளன.
ஒப்புக்கொள்வார்களா -உலகின் 3-வது பெரிய பணக்காரர்கள்…?
பதிலுக்கு, இந்த மோசடிப் புகார் குறித்து அதானி குழுமத்தின்
சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் –
தவறான குறிக்கோளுடன் – போதிய ஆய்வு செய்யாமல்
ஹிண்டன்பா்க் ரிசா்ச் நிறுவனம் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடா்பாக அந்த நிறுவனத்தின் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை
எடுப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அதானி
குழுமத்தின் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டிருந்தது….
சவாலை சந்திக்கத் தயார்….!!!
இதற்கு பதிலளித்து ட்விட்டரில் ஹிண்டன்பா்க் ரிசா்ச் நிறுவனம் தெரிவித்திருப்பது
- “எங்களது அறிக்கையில் முடிவில் அதானி குழுமத்துக்கு
88 நேரடி கேள்விகளை எழுப்பியிருந்தோம்.
ஆனால், 36 மணி நேரமாகியும் அதில் ஒரு கேள்விக்குக் கூட
பதில் வரவில்லை.
இது தொடா்பாக எங்கள் மீது வழக்குத் தொடரப்போவதாக
அதானி குழுமம் தெரிவித்துள்ளது. இருந்தாலும், இந்த விவகாரத்தில்
எங்களது நிலைப்பாட்டிலிருந்து துளியும் பின்வாங்கப் போவதில்லை.
எங்களது ஆய்வறிக்கையை சட்டரீதியில் எதிா்க்க வேண்டுமென்று
அதானி குழுமம் உண்மையிலேயே நினைத்தால், நாங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அமெரிக்காவிலுள்ள ஒரு நீதிமன்றத்தில்
அந்தக் குழுமம் வழக்கு தொடரலாம்.
அவ்வாறு தொடா்ந்தால், சட்டப்பூா்வ ஆய்வுக்காக நாங்கள் அதானி
குழுமத்தின் ஏராளமான முக்கிய ஆவணங்களைத் தருமாறு
நீதிமன்றத்தில் கேட்போம்.
நாங்கள் போதிய அளவில் ஆய்வு செய்யாமல் அந்த ஆய்வை வெளியிட்டுள்ளதாக அதானி குழுமம் கூறுவது தவறு.
2 ஆண்டுகளாகத் தொடா்ந்து ஆய்வு செய்து, பல்வேறு தகவல்களைத்
திரட்டி உண்மையைத் தெரிந்துகொண்ட பிறகே எங்களது
ஆய்வறிக்கையை வெளியிட்டோம் ” – என்று ட்விட்டரில் ஹிண்டன்பா்க்
ரிசா்ச் நிறுவனம் தெரிவித்திருக்கிறது….
(மேலேயுள்ளது தினமணி நாளிதழில் வெளிவந்துள்ள
செய்தியின் சாராம்சம்….)
லேடஸ்ட் செய்தி – பங்குச் சந்தையில் அதல பாதாளத்திற்கு
சென்று கொண்டிருக்கும் அதானி குழுமத்தை காப்பாற்ற –
கைதூக்கி விட – LIC நிறுவனத்திற்கு உத்திரவு போயிருக்கிறதாம்.
சரிந்துகொண்டிருக்கும் அதானி குழுமத்தில் விரைவில்
LIC நிறுவனம் பெரும் அளவில் முதலீடு செய்யவிருக்கிறதாம்….
(வங்கிகள் ஏற்கெனவே டேஞ்சர் நிலையை தாண்டி விட்டதால்,
இந்த தடவை LIC உதவிக்கு வருகிறது…… நண்பர்கள் இருக்கும்
வரையில் அதானிக்கென்ன கவலை….)
………………………………………
அதானி-க்கு செக் வைத்த செபி..
தோண்டி துருவி துவங்கியது.. மொத்தம் 17..!
2.1 லட்சம் கோடி ரூபாய்
( இரண்டு லட்சத்து பத்தாயிரம் கோடி) கடன் …..
மேலும் அதானி குழுமத்தின் அதிகப்படியான கடன்
இக்குழுமத்தை நிச்சயமற்ற நிதி நிலைக்குத்
தள்ளியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
டாப் 5 நிறுவனத்தில் மட்டும் அதானி குழுமம் சுமார்
2.1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடனை வைத்துள்ளது.
(இது குட் ரிடர்ன்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்….)
……………………………………..
கெட்டிக்காரன் பொய்யும் புரட்டும் எத்தனை நாளைக்கு…..???
இது குறித்து, சீனியர் ஜர்னலிஸ்ட் தராசு ஷ்யாம்
ஒரு பேட்டியில் தரும் விளக்கம் கீழே –
………………..
.
……………………………………………….
.
news today –
3 நாட்களில் எல்ஐசி-யின் இழப்பு -18,647 கோடி –
………….
-அதானி குழுமப் பங்குகளில் எல்ஐசி-யின்
மொத்த முதலீட்டு மதிப்பு ஜனவரி 24, 2022
அன்று 81,268 கோடி ரூபாயாக இருந்தது.
இதன் மதிப்பு ஜனவரி 27, 2022 அன்று
62,621 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
– 18,647 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டது.
https://tamil.goodreturns.in/news/lic-loses-rs-18-000-crore-due-to-adani-group-stock-fall-check-here-full-details/articlecontent-pf187294-033560.html
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டேயிருக்குது
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம
வேடிக்கை பார்த்துக்கொண்டேயிருக்குது
.
இங்கே திருடனா பார்த்து
திருந்தவும் மாட்டான்….
இந்த திருட்டை ஒழிக்கவும் முடியாது…
திட்டம் போட்டு திருடற கூட்டம்
திருடிக்கொண்டே தான் இருக்கும் …!!!
“இன்னும் எத்தனை காலந்தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே….
நம் நாட்டிலே…சொந்த நாட்டிலே…”
.