……..

……………….
அற்புதமான, மிக விவரமான, மிகத்தெளிவான ஒரு பேட்டி ….
தமிழ்நாடு என்பது எப்படிப்பட்ட மண், அதன் சரித்திரம்,
அரசியல் – பின்னணி என்ன ….
தான் யார், எதற்காக வந்திருக்கிறோம் என்பதை மிகத்தெளிவாக
புரிந்து கொண்டிருக்கிறார்….. இந்த பேட்டியின் மூலம், தமிழகத்திற்கும், தமிழகத்திற்கு வெளியே உள்ள மற்றவர்களுக்கும் புரிய வைக்கிறார்
அண்ணாமலை …
நான் பாஜக கட்சிக்காரனல்ல… ஆதரவாளனும் அல்ல –
நான் சுதந்திரமானவன், நாளையே கூட பாஜகவை விமரிசிப்பேன்.
(பேட்டியில் அண்ணாமலை சொல்லும் சில கருத்துகள் கூட,
எனக்கு உடன்பாடானவை அல்ல….)
இருந்தாலும் சொல்கிறேன் –
” தமிழ்நாட்டில் இன்றைய தினம் இருக்கும்
அரசியல்வாதிகளுள், தலைசிறந்த,
மிகத் தகுதிவாய்ந்த நபர் அண்ணாமலை …. “
மிக நீளமான பேட்டி- அதுவும் ஆங்கிலத்தில் …. 1 மணி 55 நிமிடங்கள்…
ஆனாலும், தமிழகத்தின் எதிர்காலத்தை புரிந்து கொள்ள –
பகுதி பகுதியாகவாவது – அவசியம் பாருங்கள்.
………………..
.
………………………………………………..
இப்பேற்பட்டவர்கள் தமிழக முதல்வர் ஆனால் நமக்கு பெருமை.
ஆனால் நமக்கு வாய்த்தது ஹூம் நம் தலையெழுத்து.
நான் அண்ணாமலையின் பல காணொளிகள், நேரலைகள், நிருபர்களின் கேள்விகளுக்குப் பதில் கொடுப்பது போன்றவைகளைக் கண்டிருக்கிறேன். மிகவும் பண்பாகப் பேசுகிறார். Dominatingஆக பொதுக்கூட்டங்களில் நடந்துகொள்வதில்லை. கேட்ட கேள்விகளுக்குச் சரியான பதிலை மிகவும் விளக்கமாகக் கூறுகிறார். இது அவரின் ஆழ்ந்த அறிவைக் காண்பிக்கிறது. இதுபோல விஷயம் தெரிந்தவர்கள் தமிழக அரசியலில் இல்லை, அல்லது அவர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை. ஒருவேளை PTR தியாகராஜன் விஷயம் தெரிந்தவராக இருக்கலாம் ஆனால் அவர் தனித்து வெளிப்பட அவருக்கு சந்தர்ப்பங்கள் இல்லை (அல்லது ஆளும் கட்சி என்பதால் எதையும் வெளிப்படையாகப் பேச முடிவதில்லை). வேறு எந்த அரசியல்வாதியும் படித்தவர்களா, விஷயம் அறிந்தவர்களா என்பதில் எனக்கு மிகுந்த சந்தேகம் உண்டு (நமக்குக் கிடைத்தவர்களெல்லாம் சாராய வியாபாரி, கல் எறிவதில் கில்லாடிகள், அமுக்கமாக கொலை செய்பவர்கள், நாடக நடிகர்கள், துண்டுச் சீட்டில் என்ன இருக்கு என்பதே தெரியாமல் அப்படியே வாசிப்பவர்கள்தாம்.
அண்ணாமலைக்கும் ஆளும் கட்சி ஏற்பாடு செய்த `கவர்` ஊடகவியலாளர்களால் வேண்டும் என்றே விதண்டாவாதம் பேசி, அண்ணாமலையைக் கோபப்படுத்தி அதன்மூலம் அவர் இமேஜை சிதைக்க முயலும் நிகழ்வுகள் பல நடந்துள்ளன. அவற்றையும் சமாளித்தே அவர் வளர்ந்துகொண்டு வருகிறார்.
இவருடைய சிறப்பாக நான் கருதுவது, மிகுந்த புரிதலுடன் கேள்விகளை அணுகுவது, மாணவர்களிடையேயான பேச்சு என்றால் அரசியல் கலவாதது, ஆன்மீக மேடை என்றால் அந்த சப்ஜெக்ட் மாத்திரம் பேசுவது என்று அனைவரையும் கவரும் போக்கு. அண்ணாமலையால்தான் பாஜக (துரைமுருகன், திமுக மணி-ஹிஹி மூத்த பத்திரிகையாளர்…. போன்றவர்களால்) பயங்கரமாக வளர்ந்துவருகிறது என்று பலரும் சொல்லும்படியாக அண்ணாமலையின் வீச்சு இருக்கிறது. இதில் கடை விரித்தால், சம்பாதித்த பணம் மாத்திரம்தான் செலவழியும் என்று புரிந்துகொண்ட `நடுநிலை` வேஷதாரிகள், காங்கிரஸ்/திமுகவுக்கு முட்டுக்கொடுக்க இடைத்தேர்தலைச் சாக்காக வைத்து ஓடுகிறார்கள்.
அண்ணாமலையின் சவாலாக இப்போது முன் நிற்பது, குறுகிய கால வெற்றிகளுடன் கூடிய (அதிமுக கூட்டணி), வளர்ச்சியா இல்லை, தனித்து நின்று பாஜகவின் கெத்தைக் காண்பித்து அதன் மூலம் இடப் பகிர்வை குறிப்பிடத்தக்க அளவில் பெற்று, தனிக்கட்சியாக முன்னேறுவதா என்பதுதான். இவருக்கு இடைஞ்சலாக இருப்பது அதிமுகவின் மூன்று பிளவுகள்தாம்.
சம்பந்தமில்லாத ஒரு நிகழ்வை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
1650களில் கோல்கொண்ட கோட்டை அவுரங்கசீப்பினால் முற்றுகையிடப்பட்டது. பல மாதங்கள் சென்றும் கோட்டையைப் பிடிக்க இயலவில்லை. அனுபவம் வாய்ந்த கோல்கொண்டா தளபதி ஒருவன் (முகரப்கான்?) ஔரங்கசீப் பக்கம் சாய்ந்தான் (defected). அதுபோல கடும் முற்றுகை, போரின்போது கோல்கொண்டா இராணுவத்தில் இருந்த சரண்டஸ்கான்? கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட்டான். இந்த இரண்டு செயல்களும் ஔரங்கசீப் கடைசியில் வெற்றிபெறக் காரணமாக இருந்தன. வெற்றிபெற்ற பிறகு ஔரங்கசீப் செய்த காரியம், இத்தனை நாள் உன்னைப் பார்த்துக்கொண்ட அரசனுக்கே துரோகம் செய்து எங்களுக்குச் சார்பாக திரும்பிய நீங்கள், நாளை எங்களுக்கே அந்த துரோகத்தைச் செய்யமாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம் என்று சொல்லி அந்த இருவரையும் கொன்றான் என்பது சரித்திரம். உடனே நீங்கள், சொந்த மனைவிக்கு ………………………………………………………………………………………………………………………………………………………….என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.
புதியவன்,
வருந்துகிறேன்……………. உங்களது அசிங்கமான,
கீழ்த்தரமான கற்பனைக்கும்,
அதனை இங்கே எழுதியதற்கும் ….
எனவே நான் அதை நீக்க வேண்டிய கட்டாயத்திற்கு
உள்ளானதற்கும்.
-காவிரிமைந்தன்
அதனால் தவறில்லை (நீக்கியதில்). இது வீரப்பன் பேட்டியின்போது (சந்தனக்கடத்தல்), வீரப்பன் கூறிய உதாரணம். (இந்தியா இலங்கைப் பிரச்சனையில் தலையிடுவதைப் பற்றி). எனக்கு அது மனதில் பதிந்துபோனது. அதை இங்கு எழுதினேன். ரசனைக்குறைவான உதாரணம் ஆனால் சரியாகப் பொருந்துவதாக என் மனதுக்குத் தோன்றியது. அதிமுகவை அழிக்க நினைப்பதால் ஓபிஎஸ் மீது அவ்வளவு வெறுப்பு எனக்கு.