வித்தியாசமான ராகுல் …. -இண்டர்வியூ -Kamiya Jani of “Curly Tales”

……………………………………..

……………………………………………….

நாம் அறிந்த ராகுல் காந்தி வேறு….
இங்கே காட்சியளிக்கும் ராகுல் வேறு –

அரசியல்வாதியாக அல்ல – ஒரு தனி மனிதனாக,
ராகுல் காந்தி எப்படிப்பட்டவர், அவர் பிறப்பு, வளர்ப்பு, படிப்பு,
தொழில், அனுபவம், பயணங்கள், பழக்க வழக்கங்கள், எதிர்பார்ப்புகள்,
ஆகியவற்றைப்பற்றி, அவருடன் விவாதிக்கிறார் காமியா ஜனி
என்னும் யூ-ட்யூப் ஜர்னலிஸ்ட்…..

இந்த சந்திப்பு நிகழ்ந்தது ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா
ராஜஸ்தான் எல்லையில் இருந்தபோது … அவர் இரவில் தங்கியிருக்கும்
கன்டெயினர் டிரக்கின் முன் போடப்பட்டுள்ள ஒரு டைனிங்க் டேபிளில்
அமர்ந்து –

ரிலீஸானது ….2 நாட்களுக்கு முன்னர்….!!!

சுவாரஸ்யமான அந்த பேட்டியிலிருந்து சில பகுதிகள் கீழே….
…………….

“Just a loving person who’s intelligent” —
Rahul Gandhi shares his thought about
marriage, partner….
………….

Congress leader Rahul Gandhi spoke on various topics with “Curly Tales” editor-in-chief Kamiya Jani over
dinner during the interview –

“Just a loving person who’s intelligent,” Rahul says when asked what kind of girl he’d like to marry.

During the course of the interview, Rahul further
talks about his solo biking trip across Spain, and
being a scuba diver. He also talks about his
schooling, early life, ‘fights’ with his sister
and more. He reveals that he meditates while
walking during the Yatra which began in September.

He clarifies that he’s “very strict” with his food
at home and doesn’t eat a lot of things. He calls
his diet “boring” and “controlled”. “But here
I don’t have much choice.” Rahul says Telangana,
for example, was a “little bit spicy” for his
palate. “The chillies were a bit over the top.
I don’t eat that much chillies.”

At home, he has desi food for lunch and dinner is
“some sort of continental stuff”.

In Delhi, his favourite restaurants are Moti Mahal, Sagar and Sarvana Bhavan….!!!

He also likes tandoori food and a “good omelette”,
does not like rice or roti and usually drinks just
one cup of coffee in the morning.

Homeschooled after Indira’s death –

While explaining where he comes from, Rahul says
that he’s a “Kashmiri Pandit who moved to Uttar Pradesh.”

“Our family was from Kashmir but they moved to Allahabad. My grandfather-papa’s papa- was Parsi.
So I’m a complete mix,” he says.

He then says that he had to be homeschooled after
his grandmother, former PM Indira Gandhi, was assassinated and he was taken out of boarding
school due to security concerns.

“It was a big shock to me as I was in boarding
school. Then one day before Dadi’s (Indira’s) death,
we were taken out of there. When Dadi died, they
didn’t allow us to go back.”

In school, Rahul reminisces, some teachers were
“overly nice” to him while some were “really nasty”, because of the family he came from.

“The political position that my family used to take
was quite a pro-poor position. And so a lot of the people who were teachers, I don’t think they
appreciated that. But there were others who were
sort of nice. So it was a balance,” he says.

Jani then says that there are a lot of colleges
listed against his name on the Internet and asks
him for details.

Rahul says that he went to St. Stephen’s for a year
and studied history,
and then entered Harvard University where he
studied international relations and politics.
After that, he says, he had to transfer from there following his father’s death, again due to security concerns.

Thereafter, he went to a college in Florida,
Rollins College, where he studied international relations and economics. He also has a Masters
degree in development economics from Cambridge University, UK.

Unlike in school, Rahul says, he received a
“neutral perspective” in college.

Giving details of his first paycheck, he says that
he had a corporate job in London at the age of
24-25 with a strategic consulting company
called Monitor.

He got paid about 2,500-3,000 pounds a month,
Rahul said, adding that he felt “strange” about
it since it was “a lot” of money.

Apart from his college life, Rahul says that the
death of his father also changed his relationship
with his younger sister, Priyanka Gandhi Vadra,
now Congress general secretary.

“We grew up with a whole bunch of violence around us.
A lot of that was internally causing stress and
stuff. So, we used to fight a lot. Then after
Papa died, it just stopped.”

The Beard –

Jani also goes on to ask Rahul a question about his
“new look” that everyone has been seeking an
answer to. She was referring to Rahul’s beard that
has been a political and comical talking point
since the Yatra began.

“I just felt like I shouldn’t shave my beard
or cut my hair during the Yatra. It’s nice.
It’s a bit big now, it’s getting bigger. It makes
life a little complicated when you’re eating,”
Rahul jokes.

He also says that many within the party have
asked him to shave it off but he’s not relented.
“It’ll change,” he says when asked if he likes
the look.

………………………..

ராகுலைப்பற்றி, தொடர்ந்து நமது டெல்லி மீடியாக்கள்
உருவாக்கி வரும் தோற்றத்திற்கும் –

நிஜத்திற்கும் ரொம்ப தூரம் என்பது இந்த பேட்டியில் –
அவரது, சொற்கள், உடல்மொழி ஆகியவற்றிலிருந்து நன்கு புரிகிறது.

நான் 8-10 வருடங்களுக்கு முன்னதாக பார்த்த ராகுலுக்கும்,
தற்போதைய ராகுலுக்கும் எக்கச்சக்கமான வித்தியாசங்களை
பார்க்கிறேன்.

தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வமும்,
அதற்கான உழைப்பும், வில்-பவரும் இருந்தால்,
யாரும் மாறலாம் என்பதற்கு ராகுலின் இந்த வித்தியாசங்கள்
ஒரு மிகச்சிறந்த உதாரணம்.

2024 – பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு –
ஒரு வலுவான,
கணிசமான மக்களின் ஆதரவுடன் கூடிய –
எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் உருவாகக்கூடும் ….!!!

.
………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to வித்தியாசமான ராகுல் …. -இண்டர்வியூ -Kamiya Jani of “Curly Tales”

 1. புதியவன் சொல்கிறார்:

  நமக்கு ஒரு வலிமையான எதிர்கட்சி தேவை. அதற்கு காங்கிரஸ் சரியான தேர்வாக இருக்கும். ஆனால் காங்கிரஸை ராகுல் மற்றும் சோனியா நடத்தும் விதம், நம்பிக்கைக்குரியதாக இல்லை. Personally சோனிய மற்றும் அவருடைய குழந்தைகள் ராகுல், பிரியங்கா are tainted persons. ஊழலுக்காகவே அவதாரம் எடுத்தவர்கள்.

  இப்போதுகூடப் பாருங்கள்.கூசாமல் பொய்களை அவிழ்த்துவிடுகிறார். கௌல் பிராமணன் இப்போது காஷ்மீர் பண்டிட்டாக ஆகிவிட்டார். நான் கேட்கிறேன், நேரு சொன்னது, தான் பிறப்பால் இஸ்லாமியன், சிந்தனையில் மேற்கத்தையவன் என்றார். அவருடைய பெண்ணிற்கும் இஸ்லாமியரைத்தான் திருமணம் செய்துவைத்தார். அவருக்குப் பிறந்த ராஜீவ் காந்தி, கிறித்துவரைத் திருமணம் செய்தார். அவர்களுக்குப் பிறந்த பிரியங்கா, கிறித்துவரை மணம் புரிந்து கிறித்துவ மதத்தைப் பின்பற்றும் குழந்தைகளைப் பெற்றுள்ளார். ராகுலும் கிறித்துவர்தான். இப்போது எதற்காக அவர் காஷ்மீர் பண்டிட் என்றெல்லாம் வேஷம் போடுகிறார்?

  அவர் சொல்லும், அவர் படிப்புகளைப் பாருங்கள். பார்த்த வேலைகளையும் பாருங்கள். கொஞ்சமாவது சம்பந்தம் இருக்கிறதா? அவருக்கும் அவரது சகோதரிக்குமான சொத்துக்கள், சோனியாவின் பில்லியன் டாலர் சொத்துகள் எப்படி வந்ததாம்?

  அவரது இளமைக்காலத்தைப் பற்றி அவர் சொல்வது சரியானதுதான். மிகப் பிரபலக் குடும்பங்களில் பிறந்தவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள்தாம், சௌகரியங்கள்தாம். இவை எப்படி அவரை தேசியக் கட்சியின் தலைவராக ஆக்கும்? இப்போதுகூடப் பாருங்கள், ஒரு பொம்மையைத்தான் (80+) காங்கிரஸ் தலைவராக ஆக்கியிருக்கிறார்கள்.

  ராகுலின் நடைப்பயணம் அவருக்கான நல்ல அறிமுகமாக இருக்கும். ஆனால் மக்கள் எவ்வளவு தூரம் அவரை ஏற்றுக்கொள்வார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கணும். இதற்கு முக்கியக் காரணம், மாநிலக் கட்சிகளின் வளர்ச்சியும், அவர்கள் வளர்ச்சியில் தேய்ந்த காங்கிரஸும். மாநிலக் கட்சிகளை வளர்த்ததே இந்திராதான். அதாவது தகுதி உடையவர்களை அலட்சியப்படுத்தி காங்கிரஸை விட்டு வெளியேற்றுவது. அதைத்தான் சோனியா தொடர்ந்தார். இப்போதும் ராகுல் அதைத்தான் செய்தார் (வாசனை, ஜோதிராதித்யா மற்றும் பலரை வெளியேறுமாறு செய்தது). பிறகு யாரை வைத்து அவர் காங்கிரஸை வளர்க்கப்போகிறார்?

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  .
  புதியவன்,

  ஆக மொத்தம் – காங்கிரஸ் எதிர்க்கட்சியாக
  வருவது கூட உங்களுக்குப் பிடிக்கவில்லை….!!!

  அதுவும் சரி தான்….
  உங்களுக்கெல்லாம் “தீதி” – தான் சரி….😃

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • புதியவன் சொல்கிறார்:

   கா.மை. சார்,

   ஆக மொத்தம் காங்கிரஸுக்கு சோனியா கும்பலை விட்டால் வேறு கதியில்லை, வேறு யார் வந்தாலும் உங்களுக்குப் பிடிக்காது என்று நான் சொல்வது சரியாக இருக்குமா?

   காங்கிரஸ் தலைமை சோனியா கும்பல்களிடமிருந்து வெளியேற வேண்டும். சோனியா கும்பல்கள் நாட்டை வெளிநாட்டு சக்திகளுக்கு விற்பனை செய்பவர்கள். இவர்களது வியாபாரம் வெளிநாடுகளில். இவர்களது ரகசிய டீலிங் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன்.

   இவர்களால் காங்கிரஸ் எப்படித் தழைக்கும்? தீதி, முலயாம், போன்று எந்த மாநிலத்தின் தலைவரை எடுத்துக்கொண்டாலும் அவர்கள் காங்கிரஸ்காரர்கள். அவர்களைத் துரத்தியது யார்? தெலுகு தேசம் வந்ததற்குக் காரணம் என்ன? சமீபத்தில் ஜெகனைத் துரத்தி தனக்குத்தானே ஆப்படித்துக்கொண்டது சோனியா/ராகுலின் திறமை அல்லவா? திறமைசாலிகளைக் கழற்றிவிட்டுவிட்டு, ஜால்ரா கோஷ்டிகளை வளர்த்து, காங்கிரஸை வளர்ப்பேன் என்று சொல்வது கேலிக்கூத்தல்லவா? அவர்களுக்கு பினாமிகள்தாம் தேவை. ஒரு சிவகுமார், கார்கே போன்றவர்கள்தாம் சோனியாவிற்குத் தேவை. ஒரு நல்ல தலைவர் வருவார். அந்த பிரசவ வேதனையை அந்தக் கட்சி அனுபவித்து பிறகு பாஜகவுக்குப் போட்டியாக காங்கிரஸ் வரும் என்றே நான் நம்புகிறேன்.

   அது சரி… தீதி இப்போது அடங்கிக்கிடக்கிறாரே… நீங்கள் கவனிக்கவில்லையா?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.